கிறிஸ்துமஸ் பாடல் - பெத்லகேம் நகரிலே
பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே
1
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்
2
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக