உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

No comments:

Post a Comment