புது வாழ்வுக்குப் புறப்படுவோம்

புது வாழ்வுக்குப் புறப்படுவோம்- இறை
ஆவியில் உயிர்ப்படைவோம்
ஆன்பும் நீதியும் ஆறாய்ப் பெருகும்
ஆனந்த அரசமைப்போம்
ஆனந்த இறையரசமைப்போம் - புதுவாழ்வுக்கு
ஆனந்தம் ஆஹா ஆனந்தம்
இயேசுவின் அன்பில் பேரானந்தம்-2
I
மாண்புறு தேவனின் மன்றத்திலே
பணிவோம் அவரை பணிவோம்-2
வான் படையாவும் வணங்கும் அவரை
தொழுவோம் நாளும் தொழுவோம்
வேந்தனவர் தரும் விடுதலை வாழ்வின்
நற்செய்திக்காய் நன்றி கூறிடுவோம்.
II
வானகத் தந்தையின் பிள்ளைகள் நாம்
தூய்மையில் அவர்போல் வாழ்வோம்-2
காணும் மாந்தர் யாவரும் நமது
சோதரர் என்றே அறிவோம்-2
அயலார்க்குத் தரும் இரக்கமும் அன்பும்
எந்நாளும் உயர் புகழ் பலியாம்

No comments:

Post a Comment