ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா (இரண்டாம் ஆண்டு)(08-01-2012)


முன்னுரை:  வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை:  இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (எசாயா 60:1-6)

எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுதுää நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (எபேசியர் 3:2-3,5-6)

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மத் 2:1-12)

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ; என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ; என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். ; நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் ; என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.

திருட்காட்சி ஆங்கிலத்தில் Ephiphany என்று அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (Epiphania) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.

பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.

மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.

ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.

மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது. ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.

கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.

எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு டிசம்பர்-31


இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே, கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த கணக்கிட முடியாத நன்மைகளுக்கு உளமாற அவருக்கு நன்றிசொல்லவும், கடந்த ஓர் ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், வருங்காலம் நமக்கு வசந்த பாலமாக அமைய இறைவனின் அருள் வேண்டி நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். எனவே இந்த வழிபாட்டிலே நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.

ஆண்டவருக்கு ஆராதனை செலுத்துவோம்

அன்பார்ந்தவர்களே, நம் இறைவன் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாத இறைவன். நம் இறைவன் காலங்களுக்கும், யுகங்களுக்கும் தலைவரான ஆண்டவர். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை சீரும் சிறப்புமாய் வழிநடத்திய நம்இறைவனை, நம் வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டைக் கொடுக்கப்போகிற இறைவனை நாம் இப்போது ஆராதித்து புகழ்வோம். என்றும் வாழும் நம் ஆண்டவரை போற்றும் வண்ணமாக இந்தப் பாடலை அனைவரும் சேர்ந்துப் பாடி அவரை ஆராதிப்போம்.

பாடல்: ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்... அல்லது தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம்.. (பொருத்தமான பாடலைத் தேர்வுசெய்து கொள்ளலாம்) அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் மௌனம் காக்கவும்.
கண்ணீர் அஞ்சலி: கடந்த ஆண்டு நோய்களினாலும், பல்வேறுப்பட்ட விபத்துக்களினாலும், தீவிரவாத தாக்குதலாலும், இயற்கையின் சீற்றத்தாலும், மதவெறிதாக்குதலாலும் உயிரிழந்த நம் சகோதரர்கள் இறைவனின் பதம் சேந்தருள வேண்டுமென்று இப்போது உருக்கமாக செபிப்போம்.

இறையருள் பெற மன்னிப்பு வேண்டுவோம்: நம் இறைவன் கருணையே உருவானவர். நம்மை தேடிவந்து அன்பு செய்யும் தேவன். அத்தகைய இறைவனிடம் கடந்த ஆண்டு முழுவதும் அவரக்கு எதிராகவும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும், நமக்கு நாமே செய்த பாவங்களுக்கு இவ்வேளையில் மன்னிப்பு மன்றாட்டுகளை இறைவனிடம் எழுப்புவோம்.

பல்லவி: நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே.
  1. உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அவை உறைபனிபோல வெண்மையாகும். எசாயா 1:18. என்று சொன்ன இறைவா, நாங்கள் உம்மிலே எங்கள் மனதைச் செலுத்தாமல் உலகப்போக்கின்படி வாழ்ந்ததற்காக, எங்களை மன்னித்து உம் அருளை எங்கள் மேல் பொழிந்தருளும் ஆண்டவரே.
  2. நானும் தீர்ப்பிடேன் இனி பாவம் செய்யாதே, சமாதானமாய்ப் போ. யோவான் 8:11. என்று சொன்ன இறைவா, நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளை அநியாயமாய் தீர்ப்பிட்டு அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நேரங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  3. காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவரே, எங்களுக்கு கொடுக்க்ப்பட்ட வாய்ப்புகளையும், நேரத்தையம், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  4. உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. எபேசி 6:2. என்று மொழிந்த இறைவா, எங்கள் பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படியாமல் அவர்களின் அறிவுரைகளை, நல்லொழுக்கங்களை அலட்சியம் செய்தமைக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  5. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். எபேசி 6:4. என்று மொழிந்த இறைவா, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சிறந்த முன்மாதிரிகையாய் இருக்க தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: கருணைமிக்க நம் இறைவன் நம் பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அவரது அன்புறவில் சேர்த்துக்கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைக்ளுக்கு இப்போது நன்றிகூறுவோம்.

வாசகம்: 1தெச 5:16-18
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 105:1-8
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் (இதனை பாடுதல் சிறந்தது)

இப்போது நமது நன்றி மன்றாட்டுக்களை இறைவான்பால் எழுப்ப அனைவரும் எழுந்து நிற்போம். பின்வரும் ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் பின்வரும் பல்லவியை பாடவும்.
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா 
நாவாலே துதிக்கிறோம் நாதா
  1. கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எங்களை நல்வழியில் நடத்தி சென்றமைக்காக நன்றி கூறுகின்றோம்.
  2. கடந் ஆண்டு எங்களை நோய் நொடியிலிருந்து காத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  3. கடந்த ஆண்டு நல்ல மழையைக் கொடுத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  4. வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  5. எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  6. எம் பங்கையும், பங்கு மக்களையும், பங்கு குருவையும், கன்னியர்களையும் நல் வழியில் காத்து வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  7. எம் பங்கு குழந்தைகள் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், ஞானத்திலும் வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  8. இந்ந வருடத்திற்கு சிறந்த விளைச்சலையும், வருமானத்தையும் தந்தமைக்காக இறைவா நன்றி கூறுகின்றோம்.

இறைவனின் ஆசிரைப் பெறுவோம்
இறைவனின் ஆசிரைப் பெற அனைவரும் முழந்தாளிட்டு ‘மாண்புயர்’ கீதம் பாடுவோம்.

புத்தாண்டு விழா

முன்னுரை
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இந்த நாள் இனிய நாள். இன்று புத்தாண்டு விழாவையும், அன்னை மரியா இறைவனின் தாய் என்ற விழாவையும் இணைத்து திருச்சபை கொண்டாடுகிறது. புதிய நாளை காண வாய்ப்புக் கொடுத்த ஆண்டவரைப் போற்றுவோம், நன்றி கூறுவோம். கடந்த ஆண்டு இறைவன் வழியாக பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைவு கூறுவோம். நம் உறவுகளுக்கு உறுதியூட்டுவோம் ஒவ்வொரு கணமும் ஆண்டவரின் அருள் தரும் நாளாக மாற ஆண்டவரை இறைஞ்சுவோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், இன்ப துன்பங்களை சமமாக பார்த்து சரித்திரம் படைக்கவும், அமைதியான உலகை உருவாக்க அன்னையின் துணையை வேண்டி இக்கல்வாரி பலியில் ஒன்றிணைவோம்.
முதல் வாசகம் (எண் 6:22-27)
ஆண்டவர் அனைவருக்கும் ஆசீர் வழங்குகின்றார் அதை நாம்தான் உணரவில்லை. ஆண்டவரின் ஆசீர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அமைதியை தருகிறது. அருள் பொழிகிறது என விளக்கும் முதல் வாசகத்தை திறந்த மனதுடன் கேட்போம்.
இரண்டாம் வாசகம் (கலா 4:4-7)
சட்டத்திற்கு அடிமையாகி, சுதந்தர வாழ்வை இழந்து வாழ்ந்த நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார். கடவுள் தம் ஆவியை பொழிந்ததினால் நாம் அவரை அப்பா என அழைக்கும் உரிமை பிள்ளைகளானோம். இறை பிள்ளைகளாய் வாழ இரண்டாம் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இறைமக்களின் வேண்டல்

1. அன்பின் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் சமாதான கருவிகளாய் திகழவும், இறையரசின் விழுமியங்களை நிலைநாட்ட தேவையான உடல், உள்ள நலனை தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானம் அளிக்கும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, நாடுகளிடையே சமூக உறவை வளர்க்க தேவையான பரந்த மனதை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் பொழியும் தலைவா! உலக மக்கள் சுயநலத்தை விடுத்து, பிறர் நலம் காக்க சுற்றுபுற சுகாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவும், சமூக பாகுபாடுகள் ஒழிந்து சமத்துவம் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி மக்கள் புதுவாழ்வு பெற வேண்டிய வரங்களை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் நல்தெய்வமே! புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 2: 16-21)

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று தாய் திருச்சபை இரண்டு விழாக்களை இணைத்து கொண்டாடி மகிழ்கிறது. 1. அன்னை மரியா இறைவனின் தாய் 2. புத்தாண்டு விழா. ஜானஸ் என்ற உரோமை கடவுளின் பெயரில் இருந்து ஜனவரி என்ற மாதம் உருவானது. இந்த உரோமை கடவுளுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும், இது எதை குறிக்கிறது? நாம் கடந்து வந்த காலம், விட்டு வந்த தடங்கள், மகிழ்ச்சியான நேரங்கள், கசப்பான அனுபவங்கள், சாதனைகளை திரும்பி பார்த்து நினைவு கூறவும், வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நம் கண்முன் நிற்கும் சவால்களை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அன்னை மரியா - இறைவனின் தாய்
மரியா, இயேசுவின் தாய், இறைவனின் தாய் என்னும் உண்மை, விவிலியத்திலும், வரலாற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்படமுடியாத ஓர் உண்மை. தொடக்க காலத்திலிருந்தே, மரியாவை இறைவனின் தாய் என போற்றி வணங்கி வந்தனர். கி.பி.429 ம் ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமையன்று கான்ஸ்ந்தாந்தி நோபிள் என்ற நகரில் நெஸ்டோரியஸ் என்ற ஆயர் தன்னுடைய மறையுரையில் மரியா மனித தன்மையில் இருந்த இயேசுவின் தாயேயன்றி, இறைவனின் தாயல்ல என்று குறிப்பிட்டு, யார் யாரெல்லாம் மரியாவை இறைவனின் தாய் என்கிறார்களோ அவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இதை மறுத்து கி.பி.431ல் எபேசு நகர் பொது சங்கம் theotokos (தெயோடோகோஸ்) என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தி, மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தியது. தெயோஸ் என்றால் கடவுள், டோக்கோஸ் என்றால் ஈன்றெடுத்தவர் என்பது பொருள்.

புதிய ஆண்டிலே அடி எடுத்து வைக்கின்ற நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் ஆண்டவர் கூறுவது: எனது ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. இந்த ஆண்டு முழுவதும் உனக்கு அமைதி தருவேன் என்கிறார். இன்றைய முதல் வாசகம் (எண் 6:22-27) குருத்துவ ஆசிமொழிகள் பற்றி குறிப்பிடுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெற ஒவ்வொரு மனிதரும் விரும்புகின்றனர். மக்கள் செல்வங்களில் ஆண்மக்கள் ஆசீர், பெண்மக்கள் சாபம் என்ற கருத்து மக்கள் மனதில் இருந்தது. தால்மூத் என்னும் யூத விளக்கவுரை நூல் எண் 6:24 க்கு இவ்வாறு விளக்கமளிக்கிறது.

ஆண்டவர் உனக்கு ஆண்பிள்ளை என்னும் ஆசி வழங்கி, பெண் பிள்ளையினின்று உன்னை காப்பாராக என்கிறது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் ஆபிரகாமிடம் உனக்கு ஆசி வழங்குவேன் … நீயே ஆசியாக விளங்குவாய்… உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்றார் (தொநூ 12:2-3). யாக்கோபு ஆற்றுத்துறையில் ஒரு நபரோடு போராடியபோது, நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடமாட்டேன் என்று கூறினார் (தொநூ 32:26).

புதிய ஏற்பாட்டில், பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தினை பெற்ற மரியா (லூக் 1:42) கடவுளின் திருவுளத்தை செயல்படுத்த துன்பம் ஏற்ற ஓர் உண்மையான அடியவராக விளங்கினார்.

ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திபா 121:8ல் பார்க்கிறோம். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார்: வரும்போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னை காப்பார்.” ஆண்டவரின் கரம் நம்மைக் காத்து வழி நடத்தும் போது நமது வாழ்வில் அமைதி நிலைக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலா 4:4-7), பெண் வழியாக எவ்வாறு மனித குலத்திற்கு அழிவு வந்ததோ, அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்தது. கிறிஸ்து மனிதனாகவில்லை, கடவுளாக மட்டுமே இருந்தார். வானவர் போன்று காட்சி தந்தார் என்னும் கருத்தை எதிர்த்து, அவர் உண்மையில் மனித நிலையை ஏற்றார் என வலியுறுத்துகிறது. அவர் மனித இயல்பில் மட்டும் பங்கு கொள்ளாமல், எல்லா மனிதரைப் போல சட்டத்திற்கும் கட்டுப்பட்டார்.

கிறிஸ்து மேற்கொண்ட மீட்பு பணியின் இரு நோக்கங்களும் கூறப்படுகிறது. 1.திருச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்பது 2. இறைவனின் பிளைளைகளாக்குவது. யூதர் தம் தந்தையரை அன்போடு அழைக்க ‘அப்பா’ (யுடிடிய) என்னும் அரமேயச் சொல்லை பயன்படுத்துவர். ஆனால் இதே வார்த்தையை கொண்டு தந்தை கடவுளை அழைக்க எந்த ஒரு யூதனும் துணியமாட்டான். இயேசுவோ அப்பா என அழைப்பதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் அவ்வாறு அழைக்கும் உரிமையை கொடுத்தார். நாம் அவரின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் ஆவியை பொழிந்துள்ளார். எனவே நாம் அடிமையல்ல அவரின் உரிமை மக்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் (லூக் 2:16-21) இடையர்கள் வியப்பு மிக்கவர்களாய் பெத்லகேமிற்கு சென்று தூதர் கூறிய ஒவ்வொன்றும், வார்த்தைக்கு வார்த்தை உண்மையாயிருப்பதை கண்டனர். தங்களுக்கு தூதர் அறிவித்ததை; யோசேப்புக்கும், மரியாவுக்கும், மக்களுக்கும் தெரிவித்தனர். மக்கள் வியந்தனர். அதோடு மறந்திருக்க கூடும். ஆனால் ஒரு பெண் மட்டும் மறக்கவில்லை அவர்தான் மரியா. அதையும் உள்ளத்தில் சிந்தித்தார். இறைவன் விரும்பிய விதத்திலே மரியா இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்.
குழந்தைக்கு பெயர் கொடுப்பது தந்தையின் உரிமையாகும். இங்கு கடவுளே தூதர் வழியாக “யாவே மீட்கிறார்” என பொருள்படும் இயேசு என்ற பெயரை கொடுக்கிறார்.

இறையேசுவில் பிரியமானவர்களே! இந்த நன்னானில் அண்டவரின் ஆசிரும், அமைதியும் நமக்கு நிறைவாய் கிடைக்க ஜெபிப்போம். கடந்த காலத்தில் ஆண்டவர் அன்னை மரியா வழியாக செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். வருகின்ற ஆண்டிலே நாம் செய்யும் செயலை இறைவன் நிறைவாய் ஆசிர்வதிக்கவும், அனைத்தும் வெற்றியடையவும் நம் விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.

அமைதி என்பது சண்டை, சச்சரவு இன்றி வாழ்வது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த தூய வாழ்வு வாழ்வதேயாகும். இறைவன் மட்டுமே அதை கொடுக்கமுடியும். யோவா 14:27ல் “அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்”, என்று இயேசு கூறினார். அமைதியை பெற்ற நாம் அதை எல்லா இடங்களிலும் நிலைநாட்ட வேண்டும். நம்முடைய குடும்பங்களில், உறவு நிலைகளில், அமைதியை ஏற்படுத்துவது நமது கடமை, ஏனெனில் ஆண்டவர் இயேசு பிறந்த போதும், இறந்து உயிர்த்த பின்னும் அவர் நமக்கு விட்டு சென்றது அமைதி. இந்த புதிய ஆண்டில் இறைவனை மையப்படுத்தி நம் செயலை தொடங்கும் போது நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.

- பெ. யூஜின் அருண்குமார்

புத்தாண்டு இரவுத் திருப்பலி 01-01-2012


திருப்பலி முன்னுரை:
குழந்தை இயேசுவை மகிழ்ச்சியோடு உள்ளத்திலே வரவேற்றிருக்கும் அன்பார்ந்த இறைமக்களே! எவ்வாறு இயேசுவின் வருகையை பழைய ஏற்பாட்டு நூல்கள் சுட்டிக்காட்டி கடவுளின் மகனை இவ்வுலகிற்கு தந்ததோ அதே போல் இன்றைய நாளும் நாம் கடந்து வந்த நல்ல பாதைகளுக்கு நன்றியாகவும் இடறலான காலங்களை நினைந்து அவற்றிலிருந்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளவும் எதிர் காலத்தை சரியான விதத்திலே முழுமையாக பயன்படுத்தத் தேவையான மன பலத்தையும் நமக்கு கொடுக்க இத்திருப்பலியில் குழந்தை இயேசுவின் மூலம் கடவுளைப் போற்றி நன்றி கூறவும் தாய் மரியாளும் வளர்ப்புத் தந்தை யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் தங்களை கடவுளிடம் எவ்வாறு முழுமையாக ஒப்படைத்தார்களோ அதுபோல இன்று நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைப்பதன் மூலம் புதிய வாழ்வை இப்புதிய ஆண்டிலே பெற இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசகமுன்னுரை:
கடவுள் இஸ்ராயேல் மக்களை பராமரிக்கும் நிலையையும் அவர்களுக்கு அவர் தருகின்ற அருள் வரங்களையும் ஆசிரையும் மோசேயிடம் விவரிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் முதல்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுள் தம் ஒரே அன்பு மகனை அனுப்பி நாம் அவரின் பி;ள்ளைகளாக திருவுளம் கொண்டார் என்றும் இதனால் நாம் அனைவரும் கடவுள் மீது பிள்ளைகள் என்ற முறையில் முழு உரிமை கொண்டவர்களாக இருக்க முடியும் என்ற மேலான கருத்தை விவரிக்கும் இறைவார்த்தைக்கு செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. எங்கள் திருச்சபையை இறையன்பில் வழிநடத்தி வருகின்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவும் அதன் வழியில் சென்று இறைப்பணி செய்திட அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. உண்மையின் ஊற்றாகிய எம் இறைவா! எங்களி;ன் நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நாட்டை சொந்தமாக்கி கொள்ளாமல் நாட்டிற்காக தொடர்ந்து உழைக்க அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. நலன்களை வழங்கும் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களை எல்லா வித நன்மைகளிலும் தீமைகளிலும் காத்து வழி நடத்தினீரே. அதேப்போல் புலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டிலும் எங்களை உமது அருளால் வழிநடத்தி செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. சமாதானத்தின் இறைவா! உலக சமாதானத்திற்காகவும் எங்கள் குடும்பங்களில் இருப்பவர்களுக்காகவும் வேண்டுகிறோம். நீர் அளித்;த சமாதானம் எங்களின் வாழ்விற்கு ஒளியாக மலர அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஓற்றுமையின் உறைவிடமே இறைவா! இந்த புதிய ஆண்டில் எங்களிடையே உள்ள தீய குணங்களை வெறுத்து பிறரோடு அன்பு ஒற்றுமை பகிர்வு ஆகிய உயரிய குணங்களோடு நல் வாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

புத்தாண்டு காலைத் திருப்பலி 01-01-2012

திருப்பலி முன்னுரை:

அன்பான இறைமக்களே இன்று நம் அனைவர்க்கும் மகிழ்ச்சியான நாள். ஏனெனில் கடந்த ஓர் ஆண்டாக எல்லா துன்பங்கள் மத்தியிலும் இறைவனுடைய அன்புகரம் நம்மை வழிநடத்தியது. அதற்காக நன்றி செலுத்த இந்த பலிபீடத்தை சுற்றி குழுமியிருக்கிறோம். இன்றைய திருவழிபாடானது அன்னைமரியாள் இறைவனின் தாய் என்கிற பெருவிழாவை சிறப்பிக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பங்கள் போராட்டங்களும் நிச்சயம் உண்டு. ஆனால் கடவுளின் குழந்தைகளான நாம் நம்பிக்கையோடு அப்பா என்று அழைத்தவர்களாய் உரிமையோடு இறைவனை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது அவருடைய ஆசிரை வழங்கி நம்மை காப்பார். எனவே வருகின்ற நாட்களில் நம் அன்னை மரியாளைப் போல இறைவனின் அன்பையும் நன்மைத்தனத்தையும் மனதில் சிந்தித்தவர்களாய் வாழ முயற்சி எடுப்போம். அன்னையின் பரிந்துரையால் இறைபாலகனின் ஆசீர் பெற தொடரும் பெருவிழாவில் பங்கெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா எம்; திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்ன இயேசுவே எம் நாட்டை வழிநடத்தும் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம் இவர்கள் இப்புத்தாண்டிலே புது பிறப்பு எடுத்து நன்கு மக்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
  3. இரக்கத்தின் இறைவா! உலகில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வில் மன நிம்மதியின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களை உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். ஆவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மை காண தேவையான அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நல்லாயனே எம் இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பே உருவான இறைவா! கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

திருக்குடும்பத் திருவிழா 30-12-2011

இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!

இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல.  மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது.  குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது.  தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.  

தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான்.  அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம். 

மனிதனை மனிதனாக்குவது

மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள்.  வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது.  அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.  

காலங்கள் மாறுகின்றன.  நாகரீகங்கள் மறைகின்றன.  ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது.  அதை எவராலும் அழிக்க முடியாது.  காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227).  கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார்.  அப்படியே மனிதனும்.  அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான்.  எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.  இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது.  இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.  

நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
  1. புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.  (மத். 1:24)
  2. அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும்.  (மத். 2:14, 19-23)
  3. புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2) 
  4. ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும்.  (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
  5. குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.  (லூக் 2:51-52, கொலோ 3:20)
  6. குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும்.  (சீ. ஞா 3:7)
  7. பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும்.  (கொலே. 3:21)
  8. குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.  (கொலே 3:12)
  9. குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
  10. அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15). 
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர்.  இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல.  இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள்.  நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது.  ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர்.  இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார்.  மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்! 

திருத்தொண்டர் ராபர்ட்

கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி 24-12-2011


திருப்பலி முன்னுரை:

விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உருவிலே இம் மண்ணிலே பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்து இன்று இந்த இரவிலே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கு தாயாம் திருச்சபை அன்புடன் வரவேற்கிறது. தந்தையாம் இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் பாவத்திலிருந்து நம்மை மீட்க திருவுளம் கொண்டார். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடவுள் நிலையை விட்டு இறங்கி அடிமையின் வடிவை ஏற்று அன்னை மரியிடமிருந்து நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார்.

மனிதப் பிறப்பின் மூலம் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் அன்பு தியாகம் ஏழ்மை தாழ்ச்சி ஆகியவற்றைக் நாம் கடைபிடித்து வாழும் போது நம் வாழ்விலே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் இருப்பார். இதோ இத்தியாகப் பலியினிலே இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வடிவிலும் நம் உள்ளத்திலே பிறக்க இருக்கிறார் இயேசுபாலன். இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. நம் மேல் பேரொளி வீச உள்ளது. விண்ணகத் தூதரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதி என்று பாலனுக்கு பாடல் பாட இருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து இயேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இயேசு பாலனே என் உள்ளத்திலே நீ பிறக்க வேண்டும். உம்மைப் போல நான் வாழ வேண்டும். உம் பிறப்பு என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிறைவையும் தர வேண்டும் என்று மன்றாடி பக்தியோடும் பெருமகிழ்ச்சியோடும் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகமுன்னுரை:
காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. இயேசு பாலகனே எம் இறைவா! எம் திருச்சபையை ஆளும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோரை ஆசிர்வதித்தருளும். அவர்கள் உம் மந்தையை விசுவாசத்திலும் செப வாழ்விலும் நாளும் வழி நடத்திச் செல்ல தேவையான அருள் வரங்களால் நிரப்பி அவர்களை நிரப்ப குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. அனைவருக்கும் மீட்பளிக்கும் எங்கள் அன்புத் தெய்வமே! நாட்டு நலப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் உம்மைப் போன்று செல்லும் இடமெல்லாம் மக்கள் குறையைக்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய தாராள மனதை தந்தருள குழந்தை இயேசுவே  உம்மை மன்றாடுகிறோம்.
  3. பாதை காட்டும் பரமனே! எம் பங்கு இளைஞர்கள் அனைவரும் பாதைகள் மாறி பாவ வழியில் சென்றிடாமல் உண்மையும் வாழ்வுமான உமது வழியில் நடந்து தூய்மையான வாழ்க்கை நடத்த தூய ஆவி துணைபுரிய குழந்தை இயேசுவே வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  4. வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஏழ்மையில் பிறந்த எம் இறைவா! உலகில் உள்ள ஏழைகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையை காண மகிழ்ச்சியில் என்றும் வாழ குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி 25-12-2011


திருப்பலி முன்னுரை:
நல்லவர்கள் இறந்தால் கடவுளிடம் செல்கிறார்கள். நல்லவர்கள் வாழ்ந்தால் கடவுள் அவர்களைத் தேடி வருகிறார். அதுபோலவே வரலாற்றின்படி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தாலும் அவற்றின் நினைவு தினமான இன்று தகுந்த தயாரிப்பிற்கு பி;ன் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உள்ளங்களிலே குழந்தை பாலன்  இயேசுவை முழுமையாக பெற காத்திருக்கும் இறைமக்களே! கடவுள் மனிதனை படைத்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்று கடவுளைப்போன்று சுதந்தரமாக வாழ்வது ஆனால் அதை புறக்கணித்த ஆதிப்பெற்றோர்கள் மூலம் வந்த பாவத்தை போக்கவே கடவுள் தாம் அன்பு கொண்ட இவ்வுலகத்திற்கு தம் அன்பு மகனை அன்போடு அனுப்பும் நாள் இந்நாள். எனவே இந்நாளிலே ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலே பிறப்பது நம் மட்டிலா மகிழ்ச்சிக்காக மட்டுமல்;ல. மாறாக பாவத்தை போக்கி அதன் மூலம் வரும் மட்டில்லா மகிழ்ச்சியைப் பெற என சிந்தித்தவர்களாய் கடவுளுக்கு நன்றி பலி செலுத்துவோம்.
முதல் வாசக முன்னுரை:
எசாயா புத்தகத்தி;ன் கடைசி பகுதி நெறிதவறியோர்க்கு எச்சரிக்கைகளையும் உண்மை வழி நடப்போருக்கு மகிழ்ச்சியான வாக்குறுதிகளையும் கொடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் மீட்பு வருகின்றது என்ற மகிழ்ச்சியின் வாக்குறுதி தரப்படுகிறது. மனக்கதவை திறந்து வைத்து கவனமுடன் வரவேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பல வகையான தீமைகளாலும் தீய நாட்டங்களாலும் அடிமையாக இருந்த நமக்கு தந்தை கடவுள் இரக்கம் காட்டினார். நம்மை புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் தூய ஆவியாரினாலும் மீட்க அவர் திருவுளம் கொண்டார். இந்த மீட்புச் செயலை தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து வழியாக அருளி நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை நமக்கு சொந்தமாக்கினார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. அன்பின் இறைவா! எங்கள் திருதந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் பிறந்த குழந்தை இயேசுவின் ஆசீரோடு திருச்சபையை நன்கு வழிநடத்த கிருபை தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  2. அன்பின் இறைவா! எங்கள் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டவர்களாய் மக்கள் தேவைகளை பூர்த்திச் செய்கின்ற நல்ல ஊழியர்களாக இருக்க உமது ஞானத்தை அவர்களுக்கு தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! இன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் வெறும் ஆடம்பரத்தை முன் வைக்காமல் கிறிஸ்து வருகையின் நோக்கத்தை நன்கு புரிந்துக் கொண்டவர்களாக இனிவருகின்ற நாட்களில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க உமது நிறைவான ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பின் இறைவா! இன்று எத்தனையோ பேர் வறுமையின் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் உண்மையான மகிழ்ச்சியை கண்டுணர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பின் இறைவா! சமுதாயத்தில் உள்ள அனாதைகள் கைவிடப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்கள் மதிப்பற்றவர்கள் அவர்கள் தங்களின் அரசர் பிறந்துள்ளார் என்ற மனநிறைவைப் பெற்றுக் கொள்ள உமது ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

இடையர்கள் தந்த காணிக்கை போல

 இடையர்கள் தந்த காணிக்கை போல

இருப்பதை நானும் எடுத்து வந்தேன்

கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்

கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)


1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க

அடிமையின் தன்மையை எடுத்தவனே

உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து

மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு...


2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து

நிம்மதி தந்திட வந்தவனே

வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல

மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...

திருவருகைக்கால 4ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 18-12-2011


முன்னுரை:  அன்புக்குரிய சகோதரமே, நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுகக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.

இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16)

அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27)

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்பு தெய்வமே இறைவா, எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. கருணையின் தெய்வமே, எம் பங்கு பணியாளரை நிறைவாக ஆசீர்வதியும், பங்கின் முன்னேற்றப் பணிகளில் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், பங்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நீதியின் இறைவா, எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இறைவா! உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்

இயேசுவும் ஞானமும்


முன்னுரை
மனித வாழ்வை முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்வதற்க்கு இறைஞானம் அவசியம் என்பதை உணர்ந்து இறைஞானத்தின் வழியில் புத்துலகம் படைப்போம் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டை தொடங்கியிருக்கும் பெஸ்கி தமிழ்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய மனிதன் அறிவை மட்டும் பயன்படுத்தி நிறைவான வாழ்வு வாழ முயற்சிக்கிறான். ஆனால் துரதிஷ்டவசமாக நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு அறிவை மட்;டும் பயன்படுத்திக் கொடக்கபடும் தீர்வுகள் சரியான தீர்வுகளாக அமைவதில்லை. மாறாக வாழ்வையும் வாழ்வின் பிரச்சனைகளையும் இறைஞானத்தோடு அனுகும்போதுதான் கொடக்கப்படும் தீர்வுகள் சரியான தீர்வுகளாக அமைகின்றன. இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவின் ஞானத்தை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்;ள விழைகின்றேன்.
நான் என்னுடைய உறையில் முதலாவதாக ஞானம் என்பது என்ன? என்றும் அடுத்ததாக இயேசுவின் ஞானத்தைப் பற்றியும்; இந்த ஞானம் இறைவனின் அன்பை வெளிப்படத்துகின்றது. இது கொடைகளிலெல்லாம்  மேலானது இந்ந ஞானத்தை தேடி அடைவோம் இந்த ஞானம் நம்மைத் தேடுகிறது என்றும் மூன்றாவதாக இந்த ஞானத்தை எப்படி பெற முடியும்? 
ஏன்பதையும் கடைசியாக இந்த ஞானத்தை பெற்றால் நமக்கு கிடைக்கும் பலன்கள் யாவை? ஏன்பவற்றைப் கூறி என்னுடைய உரையை பொருத்தமான முடிவுரையோடு முடித்துகொள்ள விரும்புகின்றேன்.

ஞானம் என்பது என்ன?
ஞானம் என்பது இறைவின் வல்லமை இறைவனின் செயலாற்று நிலை. இறைவனின் வெளிப்பாடே ஞானம் என்று விவிலியம் கூறுகிறது. நம்மைத் தீமையை விட்டு விலகி நல்வழியில் நடத்திச் செல்லும் தூய ஆவியாரே ஞானம். நம் துன்ப துயரங்களில் நமக்குப் பற்றும் பரிவும் காட்டித் திடமளிக்கும்; இறைவனின ஆவியாரே ஞானம். (சா.ஞா.7:22) சொல்கின்றது ஞானம் ஆற்றல் கொண்டது. அறிவுடையது. தூய்மையானது. தனித்தன்மை வாய்ந்தது. உண்மையானது. உயிரோட்டம் உள்ளது. தெளிவு மிக்கது. மாசு படாதது. வெளிப்படையானது. உண்மையை விரும்புவது. கூர்மையானது. ஏதிர்க்க முடியாதது. மனித நேயம் கொண்டது. நிலை பெயராதது. உறுதியானது. எல்லாம் வல்லது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. கடவுளின் ஆற்றலிருந்து புறப்படும் ஆவி. ஏன்றுமுள்ள ஒளிச்சுடர். கடவுளது செயல் திறனின் கறைபடியாக் கண்ணாடி. ஓன்றே என்றாலும் எல்லாம் செய்ய வல்லது. அனைத்தையும் புதுப்பிக்கிறது. கதிரவனைவிட அழகானது. விண்மீன் கூட்டத்தில் சிறந்தது. ஓளியைக் காட்டிலும் மேலானது.

இயேசுவும் ஞானமும்

கி.பி முதல் நுற்றாண்டில் வாழ்ந்த இயேசு பாலஸ்த்தீன நாட்டைச் சேர்ந்த ஒரு யுத மனிதர். அவர் கலிலேயப் பகுதியிலுள்ள நாசரேத்தில் வளர்ந்தார். வெளிச்சத்திற்க்கு வராத இந்த சின்ன கிராமத்தில் ஒளிவடிவான இறைமகன் இயேசு குழந்தை பருவத்திலேயே ஞானத்தால் நிறைந்திருந்தார் என விவிலியம் கூறுகிறது. லுக்கா 2:40 சொல்கின்றது “குழந்தையான இயேசு வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்;தது”. ஏன்று அழகாக இயேசுவின் ஞானத்தை வர்ணிக்கின்றது. மேலும் 12 வயதில் காணாமற்போய் 3 நாட்களுக்குப் பின் ஆலயத்தில் மரியா கண்டு கொண்டபின் இயேசு நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்;களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று சிறுவயதிலேயே ஞானத்தோடு பதில் கூறுவதை திருவிவிலியத்தில் நாம் பார்க்கின்றோம்.
லூக். 2:52 “இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்ததாய் வாழ்ந்து வந்தார்” என்பது ஆணித்தரமாக கூறுகின்றது. வெளிப்படையான அவரது பிற்கால வாழ்விலே தெளிவும் திறனும் மிக்க இந்த ஞானம் பளிச்சிடுவதைப் பலமுறை நாம் பார்க்கின்றோம். அவருடைய போதனைகளிலும் உவமைகளிலும் கேள்விகளிலும் அளவிட முடியாத ஞானம் ஒளிர்ந்தது. அவன் தொழுகைத் கூடத்தில் கற்பித்த போது அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்து “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? ஏன்னெ இவருக்கு அருளப்பட்ட ஞானம் என்று மாற். 6:2 சொல்;கின்றது.
இப்படிப்பட்ட ஞானம் தான் அநேக நேரங்களில் இயேசுவை மடக்கப் பார்க்கும் பரிசேயருக்கு சாட்டையடி கொடுக்கவைக்கிறது. உதாரணமாக யோவா. 8:3-11 ல் விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணை இயேசு முன் நிறுத்தி அவளை கல்லால் எறிய வேண்டுமா? வேண்டாமா? நீர் என்ன சொல்கிறீர் எனக் கேட்டபோது “உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியப்படட்டும் என கூறவைத்தது அவரது ஞானமே.
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த மனிதருக்கு அவர் ஒரு ஞானியாகத் தோற்றமளித்தார். பழமொழிகள் கதைகள், உவமைகள், அறிவுரைகள், போற்றல, தூற்றல், எச்சரித்தல் போன்ற பல வழிவகைகளைப் பயன்படுத்தி அவர் ஒரு போதகராக விளங்கினார். மேலும் கடவுளின் ஆட்சி வரவிருக்கின்றது என்று  இயேசு அறிவித்ததால் அவரை மக்கள் அழிவுகாலப் போதகராகப் பார்த்திருப்பர். கடவுளின் மக்களை மனமாற அழைப்பு விடுத்து கடவுளின் ஆட்சியை ஏற்றிட அவர்களை தயாரிக்க முயற்சி செய்ததால் அவரை மக்கள் ஒர் இறைவாக்கினராக பார்த்தருப்பர். இயேசுவை நெருக்கமாக பின்பற்றிய அவரது சீடர்கள் இயேசுவை மெசியாவாக பார்த்திருப்பர். ஆனால் லூக். 11:49 “இயேசுவை கடவுளின் ஞானம்”  என்று சித்தரிக்கின்றது. 
சா.ஞா 9:9 “ஞானம் கடவுளோடு இருக்கின்றது” என்று கூறுகின்றது. யோ.1:1 “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” அப்படியென்றால் இயேசுகிறிஸ்து கடவுளும் கடவுளாக இருக்கின்றவர். ஆதலால் இயேசு கிறிஸ்து தான் அந்த ஞானம்.
சீ.ஞா.1:1 “ஞானம் எல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து  கடவுளால் அனுப்பபட்டவர் கடவுளிடம் இருந்து வந்தவர் . அதனால் தான் அவர்,  “என்னை கண்டவர் தந்தையை காண்கிறார். ஏன்று கூறுகிறார். எனவே இயேசுகிறிஸ்வே அந்த ஞானம்.
நீ.மொ.2:6 “ஞானத்தை அளிப்பவர் ஆண்டவர். கடவுள் தான் இயேசுவை அனுப்பி வைத்தவர். ஆதலால் இயேசுவே அந்த ஞானம். 
சா.ஞா. 7:25 “ஞானம் கடவுளின் ஆற்றலில் இருந்து புறப்படும் தூய ஆவி. லூக்.1:35 “தூய ஆவியின் வல்லமையால் மரியாள் கருத்தாங்கினாள்” என்று கூறுகின்றது. எனவே இயேசு ஞானத்தால் ஆட்கொள்ளப்பட்டு பிறந்தார். ஞானமே இங்கு ஆவி வடிவில் இறங்கி வந்தது. எனவே இயேசுவே அந்த ஞானம். அதனால் தான் ஞானிகள் என்று அழைக்கப்பட்ட மூவருமே இந்த ஞானத்தின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள’ என்று மத். 2:11 கூறுகின்றது.

அடுத்ததாக சா.ஞா.7:22 “ஞானம் என்றும் உள்ள ஒளி” என்று வரையறுக்கிறது. ஆனால் இயேசு நானே உலகின் ஒளி என்று கூறுகிறார். எனவே இயேசுவே அந்த ஞானம். இந்த ஞானம் இறைவனின் அன்பை வெளிப்படத்துகின்றது.
இயேசுவின் ஞானம் இருக்கும் இடத்தில் தூய ஆவியார் இருக்கிறார். தூய ஆவியாரே ஞானம். ஞானம் பரிவு காட்டும் இறை ஆவி. நம்மை பயிற்றுவிக்கும் பரிசுத்த ஆவி. தூய ஆவியாரின் பலன்களிலெல்லாம் மிகவும் சிறந்தது அன்பு (கலா. 5:22). எனவே ஞானமுடையோனிடம் அன்பு சிறந்திருக்கும். அன்பு  இருக்குமிடத்தில் தான் அன்பு அளிக்கப்படும் அன்பு வளரும். ஆதனால் தான் இயேசு மத்தேயு நற்செய்தியில் தம்மைதாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டம் என்று பணிக்கிறார்.

இது கொடைகளிலெல்லாம் மேலானது
இறைவன் உலகிற்க்கு அளித்த கொடைகளே இவ்வுலகப் படைப்புகள். கடல் மீன்கள் வானத்து பறவைகள் நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் படைத்து மனிதனிடம் ஆளுங்கள் என்றார். இவை எல்லாவற்றையும் விடச் சிறப்பான கொடையாக இறைவன் நமக்களித்தது ஞானம். ஏனெனில் படைப்பு பொருள்கள் நம்மை தீமைக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் ஞானமோ  எப்போதும் நம்மை நன்மைக்கே, வழி நடத்திச் செல்லும். ஏனெனில் இயேசுவே ஞானம் ஆதலால் நன்மையை தவிர வேறு எதுவும் அவர் நமக்கு கொடையாக அளியார். எனவே அவர்தரும் இந்த ஞானம் கொடைகளிலெல்லாம் மேலானது.

இந்த ஞானத்தை தேடி அடைவோம்
ஞானத்தின் பிறப்பிடமான இயேசு சொல்கிறார். நீங்கள் நம்மை தேடுவீர்கள். முழு இதயத்தோடு நம்மைத் கண்டடைவீர்கள். ஆம் மெய்யாகவே நம்மை கண்டைவீர்கள்  என்ற இயேசுவின் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. திருக்குறள் 616 சொல்கின்றது “முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும். லூக்.11:9 “தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள். எனவே ஞானத்தின் மேல் அன்பு கொள்வோம். அவ்வன்பால் தூண்டப்படும் விடாமுயற்ச்சியோடு ஞானத்தை தேடுவோம்.

இந்த ஞானம் நம்மைத் தேடுகிறது
நம்முடைய முயற்ச்சியினால் மட்டும் நாம் ஞானத்தை அடைந்திட முடியாது. அதே வேளையில் திருவிவிலியம் சொல்கின்றது இறை ஞானமும் தகுதியுள்ளவர்களைத் தேடிக்கொண்டு வருகிறது. என் எண்ணம் நீ! எல்லாம் நீ! என்ற முறையிலே ஆண்டவரைப்பற்றி இடையறாது சிந்திப்பவரை ஞானம் தேடுகிறது. தேடுங்கள்  கண்டடைவீர்கள் என்று சொன்ன ஆண்டவரை தேடி அலையும் மக்களை ஞானம் தேடுகிறது. எளிய உள்ளம் எளிய தன்மையுடையோரை ஞானம் தேடுகிறது. பிறர் பால் அன்பும் நீதியும் காட்டுவோரை ஞானம் தேடி அலைகின்றது. தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் பிறர் நலன் விழைவோரை நீதி நியாயம் நிலவ உழைப்போரை ஞானம் தேடுகிறது.

இந்த ஞானத்தை எப்படி பெற முடியும்? 
ஞானத்தை அடைவதற்கு முதலில் அதை அன்பு செய்யவேண்டும். ஞானத்தை அன்பு செய்வோர் அதை கண்டடைவர் என்று விவிலியம் பல இடங்களில் பறைசாற்றுகின்றது. இன்றைய நவநாகரீக மனிதன் பணம், புகழ், பதவி, செல்வம், செல்வாக்கு முதலியவைதான் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று சொல்லி அதை அன்பு செய்கிறான்.  அவற்றை தேடி அலைகிறான். ஆனால் இவைகளெல்லாம் கானல் நீர் போன்றவை. நிலையானாலும், நிறைவானாலும் ஞானம் மட்டுமே என்று மிகத்தெளிவாக சுட்டிக்தாட்டுகிறது. நீ.மொ.8:11ல் “பவளத்திலும் ஞானம் சிறந்தது என்றும் பொன்னைவிட ஞானத்தை பெறுவது மேல் என்றும் வாசிக்கின்றோம். எனவே எல்லாவற்றையும் விட ஞானத்தை யார் அன்பு செய்கிறார்களோ அவர்கள் 
அதை கண்டுகொள்ள முடியும்.

இரண்டாவதாக செபத்தின் மூலம் நாம் ஞானத்தை அடையலாம். ஏனென்றால் இறைவனால் மட்டுமே நமக்கு ஞானத்தை கொடுக்க முடியும். திருவிவிலியத்தில் “உங்களில் ஞானம் குறைவாக உள்ளவன் அதை கடவுளிடம் கேட்கட்டும். அதை அவர் அவனுக்கு தருவார் என்று பாhக்கின்றோம். இவ்வாறு இறைவனிடம் இருந்து ஞானத்தைப் பெற வேண்டுமானால் செபத்தின் வழியாக அவரை தேடக் கூடியவர்களாக நாம் இருப்பது அவசியம்.

மூன்றாவதாக விழித்திருப்பதன் மூலம் நாம் ஞானத்தை பெற முடியம். முன்மதியுடையவர்களாய் விழிப்பாயிருந்தவர்களாய் இருந்த 5 கன்னியர்கள் கடவுளின் ஞானமாக விளங்கும் கிறிஸ்துவை கண்டுகொண்டனர். ஆனால் அறிவிலிகளோ ஞானத்தை கோட்டை விட்டனர். நிகழ்காலத்தில் வாழ்ந்து அதற்குரிய கடமைகளைச் செய்யாமல் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ வாழ்ந்தோமென்றால் அதுவே விழிப்பற்றதன்மை என்றழைக்கப்படுகிறது. மாறாக விழிப்பாயிருந்து தற்போது செய்கின்ற காரியத்தில் நம்முடைய மனத்தையும் கவனத்தையும் முழுமையாக செலுத்தி அவற்றை நன்றாக செய்வதின் மூலம் ஞானத்தை அடையலாம்.
இந்த ஞானத்தை பெற்றால் நமக்கு கிடைக்கும் பலன்கள் யாவை?

(ச.உ.7:9) ஞானம் வலிமை தரும். முகத்தை ஒளிரச்செய்யும். ஞானம் இறந்த காலத்தை அறியும். எதிர்க்காலத்தை உய்த்துணரும். உறைகளின் நுட்பங்களை புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் காலத்தின் பயன்களையும் முன்னறியும். துன்பத் துயரங்களிலிருந்து விடுதலை தரும். தன் மக்களை மேன்மைப்படுத்தும். தன்னை தேடுவோர்க்கு துணை நிற்கும். எல்லாவற்றிற்க்கும் மேலாக மக்களிடம் அடித்தளம் அமைந்துள்ளதோ அவர்களிடம் நீங்காது நிறைந்;திருக்;கும்.

முடிவுரை
நம்முடைய சமுதாய பெருளாதார ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதற்கு திட்டமிடல் அவசியம். இந்தத் திட்டமிடல் சரியானதாக இருக்க வேண்டுமானால் இறைஞானம் அவசியம். இந்த இறைஞானத்தின்படி நம்முடைய வாழ்வின் திட்டங்களை அமைத்து கொள்ளும் போது நம் வாழ்வு வளம் பெறுகிறது. எனவே ஞானமுள்ளவர்களாக வாழ முயற்சிப்போம். ஞானமே கடவுளின் இருப்பிடம். இயேசுவின் ஞானவிளக்கை ஏற்றி இச்சமுதாயத்தில் ஒளிர்வோம். நன்றி.

சகோ. ஈ.எடிசன்ராஜ்
முதலாம் ஆண்டு இறையியல்
மங்களுர்


LECTIO DIVINA


INTRODUCTION
       Lectio Devina literally means ‘the divine reading’ or the method of prayerful reading of the scripture. St. Benedict of Nursia, Italy, (480-542 CE) the father of western monasticism, may be credited with the idea of Lectio Divina. The Holy Father, Pope Benedict XVI says on Lectio Divina as one of the many fruits of the biblical springtime.[1]  Lectio Divina involves five stages or spiritual degrees:

i) LECTIO (READING)
       Lectio Divina begins with an attentive reading or a rereading several times of the text in which we want to hear what God says. The chosen text needs to be read over and over until it becomes familiar, almost learned by heart, emphasizing the main elements. We are supposed to reply the question in this stage: What is the real meaning of the passage I have read?

ii) MEDITATIO (MEDITATION)
        Once we discover the meaning of the biblical text we try to become involved personally by applying the meaning to our own life. The question that arises in the mind is “what is the text saying to me?  Meditation on what we have read helps us to make it our own by confronting it with ourselves. Here, another book is opened; the book of life. We pass from thought to reality. The text that we have read and understood becomes the norm of life. We find an answer to the question ‘what must I do to put it into practice or what must I do to give its meaning to my own life? [2]    

iii) ORATIO (PRAYER)
         The aspiration to know what God wants from us leads naturally to prayer. In this way a burning desire arises for what daily life should become. When we pray we don’t ask so much for what we lack but rather for what God has enabled us to see and understand. We need to ask ourselves: what do we say to the Lord in response to His word? Hence, we have to use the phrases or verses in the text to respond to God in our own words and express our burning desire to do God’s will which must be the object of our prayer.

iv) CONTEMPLATIO (CONTEMPLATION)
            The desire to do God’s will leads gradually and unconsciously to adoration, silence praise and a humble surrender to Him. We look at the person of God with the eye of our heart and wait patiently and silently for the Lord to infuse us with His love.  We desire to have a deep union with God and long for it with our whole heart. God will give it to us. Let us ask ourselves what conversion of mind, heart and life is the Lord asking of us?[3]

v) ACTIO (ACTION)
          We take a practical resolution that emanates from the text that we have considered in the Lectio Divina and let that resolution move us to make our lives gifts for others in charity.

CONCLUSION  
          St. Jerome declares that ignorance of the scripture is the ignorance of Christ. Therefore, let us take effort to nourish and thrive in holiness through the word of God by practising the Lectio Divina that serves as the cornerstone of the interpretation of the Word of God. 

BIBLIOGRAPHY
Egan, Keith. J. ed. Carmelite Prayer: A Tradition for the 21st Century. Mysore: Dhyanavana Publications, 2005.
Pazheparamphil, Thomas P.A. Lectio Divina: A Prayerful Reading of the Bible. Bangalore: Asian Trading Corporation, 2006.
Morello, Antony Sam. Lectio Divina  and the Practice of Therasian Prayer. Trivandrum: International Publishing House, 2004.
Benedict XVI, Verbum Domini: Post- Synodal Apostolic Exhortation. Trivandrum: Carmel Publishing House, 2011.
Document of the Pontificial Biblical Commission, The Interpretation of the Bible in the Church. Bangalore: NBCLC Publication, 1994.


[1] Pazheparamphil, Thomas P.A. Lectio Divina: A Prayerful Reading of the Bible. Bangalore: Asian Trading Corporation, 2006 p 13

[2] Morello,  Sam. Lectio Divina  and the Practice of Therasian Prayer. Trivandrum: International Publishing House, 2004 p 42

[3] Benedict XVI, Verbum Domini: Post- Synodal Apostolic Exhortation. Trivandrum: Carmel Publishing House, 2011 p 143

BRO. E.Edison Raj I Th.
ST.JOSEPH’S INTERDIOCESAN SEMINARY
MANGALORE




மாந்தருள் மாணிக்கம்- இயேசு

நற்பண்புகளை ஒருங்கே கொண்டிருக்கும் நல்ல மனிதர்கள் நாளும் வளமையோடு போற்றப்படுவர். மனிதருள் மாமனிதர் எனவும் போற்றப்படுவர். எல்லா சமயத்தவரும் சமய நம்பிக்கையற்றோரும் சிறந்த மனிதரை என்றும் மானிட வாழ்வுக்கு உயர்ந்த எடுத்துக்காட்டாக என்றும் ஏற்றுக்கொள்வர். இயேசுவை இறைவனாகப் போற்றும் அனைவரும் அவரை சிறந்த மனிதனாகவும் இவ்வுலக வாழ்விற்கு இணையற்ற மாதிரியாகவும் கருதுகின்றனர். பிலாத்து இயேசுவைக் காட்டி, “பாருங்கள், இதோ! மனிதன்” எனக் கூறினார். (யோவன் 19:5). இயேசு தம் வாழ்நாளில் அவரது மக்கள் பணி தொடர்ந்தது மூன்று  ஆண்டுகள் எண்ணற்ற மக்கள் அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்டனர். அவரது இலட்சிய வாழ்வால் ஈர்க்கப்பட்டு அவரைப்பின் தொடர்ந்த சீடர்கள் பலர். கோடான கோடி மனிதர்களை நெறிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த இயேசு தன் ஆளுமையால் மாபெரும் மானிடராய் விளங்கினார். அவரது வாழ்க்கை பண்புநலன்கள் குறிந்து விரிவாக அறிந்து கொள்ள முற்படுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

இயேசுவின் ஆளுமை
ஒருவருடைய ஒருங்கிணைந்த நற்பண்புகளையே ஆளுமை என்பர். இயேசுவின் நற்பண்புகளே அவரது ஆளுமை. 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இயேசுவின் வாழ்க்கை வரலாறு பல உளவியல் பாணியில் அவரது ஆளுமையை விவரிக்க முயன்றாலும் அவை எழுதியோரின் ஆளுமையையே வெளிப்படுத்துவதாக அமைந்தள்ளது. இயேசுவின் ஆழ்மன ஆளுமையின் உட்கூறுகள் நற்செய்தியில் நேரடியாக பேசவில்லை என்பது உண்மை. எனினும், புதிய ஏற்பாட்டில் வரலாற்றில் வாழ்ந்த இயேசுவின் சொற்களைக் காணலாம். அதில் அவருடைய செயல்களை காண்கின்றோம். வாழ்வு நிகழ்ச்சிகள், பணிகள் உறவுகள் மற்றும் இலட்சிய ஈடுபாடுகளின்வழி அவரது ஆளுமையை நாம் ஊகித்து அறியலாம்.

இயேசுவின் நற்பண்புகள்
இவ்வுலகில் சாதாரண மனிதரைப்போல் அல்லாமால் மாந்தரின் உள்ளார்ந்த நல்ல உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நற்குணத்தை இயேசு பெற்றவர். அவரது உள்ளம் கருணையே வடிவாகக் கொண்டு, தம்மைச் சுற்றி உள்ளோரின் வாழ்க்கை வளத்திற்காக பாடுபட்டார். இவ்வுலகில் `யாருக்கு என்ன நடந்தால் எனக்கு என்ன?’ எனும் குறுகிற சிந்தனைக்கு இடம் தராமல் பரந்த நெஞ்சத்தைக் கொண்டிருந்தார். அவரது உணர்வுகள் மெல்லியவை, ஆழமானவை; ஏழை எளியவரின் இன்ப துன்பங்களை, துயரங்களைத் தமதாக்கிக் கொண்ட தொண்டுள்ளம் கொண்டவர்.

இயேசு பிறர் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து தம் இதயத்தை விசாலமாக்கினார்; அவர்களுடைய கண்ணீரிலும் கவலையிலும் தம் உள்ளத்தைக் கரையவிட்டார். வாடிய பயிரையும் துன்புறும் உயிர்களைக் கண்டபோதெல்லாம் தனது உள்ளத்தால் வாடினார். பச்சிளம் குழந்தைகளின் சிரிப்பைக் கண்டு தாமும் சிந்தை நெகிழ்ந்தார். சிரித்து மகிழ்ந்தார்; அடிமையாக்கப்பட்டோரின் வாழ்வு சிறக்க நாளும் முயன்றார். உரிமைக்கேட்டு உடைக்கப்பட்ட ஏழைகளின் குருதியால் தம் உள்ளத்தையம் உணர்வுகளையும் தோய்த்தவர்.

உணர்ச்சிகளுக்கு இயேசு அடிமையாகவில்லை; உணர்ச்சி வேகத்திலோ, வெறியிலோ அவர் செயற்பட்டதில்லை. மலையாக எழுந்து மறுநிமிடமே அலைபோல் வீழ்ந்துவிட்டவை அல்ல அவருடைய உணர்ச்சிகள். அவரது மக்கள் ஈடுபாட்டு அனுபவத்திலிருந்து பிறந்தன; அவருடைய இதயத்தின் ஆழத்தில் நிறைந்தன, நின்று நிலைத்தன. அவருடைய உறுதியான உள்ளத் தெளிவும் இலட்சியங்களும் அவரது தீவிரத் தியாகச் செயல்களாக வடிவெடுத்தன. வெறும் உணர்ச்சி மட்டுமன்று அவரது வாழ்வு. பொங்கிவந்த உணர்ச்சிகளை அவர் ஆற்றுப்படுத்தினார்; ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தினார். அவருடைய உணர்ச்சிகளே அவரது சக்திக்கும் சாதனைக்கும் பிறப்பிடமாக அமைந்தது. அவரது உணர்ச்சியின் வெளிப்பாடுகள் நாடறிந்த உண்மை எனலாம். அவரது உணர்ச்சிகளுள் ஆழமானது, அடிப்படையானது அவரது இரக்கம். மனிதரின் துன்பத்தைக் காணும்போது மனமிளகினார். தொழுநோயளியைக் கண்டு அவர் மனமிரங்கினார் (மாற் 1:41); தன் ஓரே மகனைப் பறிகொடுத்த கைம்பெண்ணின் கண்ணீரைக் கண்டு அவர் உள்ளம் உருகினார் (லூக் 7:13); நல்ல மேய்ப்பன் இல்லா ஆடுகள்போல் மக்கள் நலிவதைக் கண்டு மனம் வருந்தினார். (மாற் 6:34); மூன்று நாள் உணவின்றி வாடிய மக்களைக் கண்டு தானும் வாடினார். (மாற் 8:2). இவ்வாறு இயேசுவின் இரக்க உணர்வுபற்றி வெளிப்படையாகக் காணலாம். நற்செய்தி ஏடுகளை ஆழ நோக்கினால் அவரது மக்கள் பணிக்கு அடிவேராக இருந்தது ஏழைகளிடத்தில் அவர் கொண்டிருந்த இரக்க உணர்வே என்பது தௌளத் தெளிவாகத் தெரியவரும்.

துன்புறுவோருடன் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டார். “அவர் பிறர் பிணிகளை ஏற்றுக் கொண்டார்” (மத் 8:17). துன்புறுவோருடன் அவர் துவள்கிறார்; கண்ணீர் வடிப்போரின் துன்பத்தில் அவரும் பங்கேற்கிறார். அடுத்தவர் துயர்கண்டு அழுவது ஆண்மைக்கு இழுக்காகுமோ என அவர் எண்ணவில்லை. பிறரது வேதனை தம்மைத் அண்டாதவறு தம் இதயத்தை இறுக்கிக்கொள்வது நல்ல மனிதத்திற்கு இழுக்கெனக் கருதினார். (மத் 18:23 தெ.; லூக் 16:19 தொ.). இக்குணங்களைப் பெற்றிருப்பதால் அவர் தங்கள் சகோதரனின் கல்லறைக்கு முன் நின்று கண்ணீர்விட்டழுத மார்த்தாளையும் மரியாளையும் கண்டு “மனம் குமுறிக் கலங்கி, கண்ணீர் விட்டார்” (அரு 11:33,35).

கோபம்
துன்புறுவோர், துயருறுவோர்பால் இரக்கம் கொண்டாலும், ஏழையோர்க்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்குக் கொடுமை இழைபபவரைக் கண்டு அவர் பெரிதும் சினம் கொண்டர். மனிதம் சிதைந்து சீர்குலைந்து போவதைக் கண்டு மனம் கொதித்தார்; ஆதிக்கப்போக்குகளையும் அநீதிகளையும் கண்டு ஆத்திரமடைந்தார், ஆலயமுற்றத்தில் ஏழைகளைச் சுரண்டும் ஏமாற்று வேலையைக் கண்டு வெகுண்டெழுந்தார். அந்த ஏமாற்று வேலையைச் செய்த வியாபாரிகளை விரட்டி அடித்தார் (மாற் 11:15 தொ.) சட்டத்தின், சமய மரபுகளின் பெயரால் சாதாரண மக்கள்மீது சுமக்கவியலாத பாரங்களைச் சுமத்திய பரிசேயர், மறைநூல் அறிஞர், சட்ட வல்லுனர் போன்றோரின் பொய்களை, போலித்தனங்களை வன்மையாகச் சாடி கண்டித்தார் (மத் 23:13 தொ).

சமூதாயப் பார்வை
மனிதர்களைப் பற்றியும் சமுதாயத்தைப்பற்றியும் இயேசு கொண்டிருந்த கண்ணோட்டமும் கணிப்பும் மேலோட்டமானவையாகக் கொள்ளவியலாது. மேலாதிக்க வகுப்பினார் பார்வைகளையும் மதிப்பீடுகளையும் அவர் தமதாக்கிக் கொள்ளவில்லை அவரது பார்வை ஆழமானது, அடித்தட்டு மக்களின் நிலை சார்ந்தது. அவர் வீண் பகட்டுகளைக் கண்டு ஏமாறவில்லை, பரிசேயர் குணங்களை விரும்பவில்லை. எனினும், அரசியல்வாதிகளின் பொய்மைகளையும் சமயவாதிகளின் பக்திச் சாயங்களையும் இனம் கண்டார். அன்றைய சமூகம் நீதிமான்கள் எனக் கருதியவர்கள் எல்லாம் அவரது பார்வையில் நீதிமான்களாகப்படவில்லை; அன்றைய சமூகத்தால் பாவிகள் எனக் கருதியவர்களை அவர் பாவிகளாகக் கருதவில்லை. (லூக் 18:9-14;19:1-10;7:36-45). இறைவனது ஆசீபெற்றவர்கள் எனக் கருதப் பெற்ற அன்றைய செல்வர்களை நோக்கி அவர் “பணக்காரர்களே, உங்களுக்கு ஐயோ கேடு!” (லூக்6:24) என்றும்; இறைவனின் சாபத்துக்கு உள்ளானவர்கள் என எண்ணப்பட்ட ஏழைகளை நோக்கி “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்” (லூக் 6:20) என்றும் கூறுகிறார்.

இயேசுவின் அறிவு ஆழமானது மட்டுமன்று, கூர்மையானதும் கூட. அவர் வாதம் செய்வதிலும் பேச்சில் தம்மைப் பிடிக்கப் பார்ப்பவர்களின் வாயடைப்பதிலும் வல்லவராக இருந்தார். அதற்குப் பல தெறிவான எடுத்துக்காட்டுகள் நற்செய்தி ஏடுகளில் உள்ளன. செசாருக்கு வரி கொடுக்கலாமா எனும் கேள்விக்கு அவர் அளித்த பதில் (மாற் 12:12-17), உயிர்த்தெழுதல் உண்டா எனக் கேட்டோருக்கு அவர் தந்த மறுமொழி (மாற் 12:18-27), அவரது அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியோருக்கு அவர் விடுத்த எதிர் கேள்வி (மாற் 11:27-33), விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லெறிய வந்தோர்க்கு அவர் தந்த சொல்லடி (அரு 9:3-9) என்பன போன்றவையாகும்.

மனிதநேயப் பண்பாளர்
ஆண்களிடம் மட்டுமின்றி பெண்களிடமும் இயேசு இனிதாகப் பழகுகின்றார். அன்றைய ஆணாதிக்க யூத சமூகத்திற்கே உரிய தவறான எண்ணங்களை வெறுத்தார். சான்றோர்களும் சமயப் பெரியவர்களும் பெண்களுடன் பேசுவதும் பழகுவதும் இழுக்கானது எனக் கருதிய சமூகத்தில் அவர்களுடன் இயல்பாகவும் சுதந்தரமாகவும் பேசிப் பழகினார். அவர்களை அவர் மனித ஆட்களாக மதித்தார்; மனித நேயத்துடன் நடந்துகொண்டார். இவ்வாறு சமாரியப் பெண்ணிடம் அவர் தாமாகவே முன்வந்து தயக்கமின்றிப் பேசத் தெடங்குகிறார் (யோவா 4:5 தொ); கனானேயப் பெண் தம் சொல்லுக்குத் தக்க மறுப்பு சொல்வதைக் கேட்டு வியந்து மகிழ்ந்து பாராட்டுகின்றார், அவள் கேட்டதைச் செய்கின்றார் (மாற் 7:24-30); மார்த்தாளும் மரியாளும் உரிமையடன் தம்மிடம் உரையாடுவதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் (லூக் 10:38-42;அரு11:21தொ) தேவைப்படும்போது பெண்களைத் தொடவும் அவர் தயங்கவில்லை (மாற் 1:31; 5:41); பெண்கள் தம்மைத் தொடுவதையம் அவர் தவறாகக் கருதவில்லை (லூக் 7:36 தொ; மாற் 5:25 தொ). சில பெண்களைத் தம் சீடராகக் கொண்டதோடு அவர்களது பொருளாதார ஆதரவையும் ஏற்றுக்கொண்டார் (லூக்8:1-3).

அவருக்கு யாரும் பகையில்லை. பரிசேயர், சதுசேயரின் தவறுகளை அவர் கண்டித்தபோதிலும் அவர்களில் அவர் யாரையும் வெறுக்கவில்லை. பரிசேயரான நிக்கோதேமு இரவில் அவரைப் பார்க்கவந்தபொழுது அவரை இயேசு வரவேற்று உரையாடுகிறார் (லூக்7:3). இப்பண்பு “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் தமிழரின் உயர் மரபிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இயேசுவின் காலத்தில் இசுராயேல் சமூகமானது உரோமை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதன் ஆதிக்கத்தில் சமய, சமூக, பொருளாதார, பண்பாட்டு நசிவுக்கு ஆளாகி நின்றது. அத்தகைய சமூகத்தில் பிறந்து வளர்ந்தாலும் இயேசு அடிமையாகச் சிந்திக்கவில்லை, செயல்படவில்லை. மாறாக விடுதலை மனிதனாக வாழ்ந்தார்; அந்தத் தன்னுரிமை உணர்வையே ஏனையோருக்கும்தர முயன்றார். “நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்” எனும் வெற்றி உணர்வு அவருக்கு இருந்தது. நமக்கெல்லாம் தலைவன் இறைவனே, வேறு எவரும் இல்லை எனும் யூத சமய மரபுக்கு உரிய விடுதலைச் சிந்தனை அவரிடம் ஓங்கி நின்றது.

வாழ்விற்குப் பொருத்தமற்ற எத்தனையோ சமய மரபுகளையும் சமூகச் சட்டங்களையும் மீறத் துணிகிறார். ஊனமுற்ற நோயாளியைக் குணமாக்குவதற்காக ஓய்வுநாள் மரபினை மீறவும் துணிந்தவர். (மாற்3:1-6 2:23தொ); ஆசாரத் துப்புரவு முறைகளைத் தூக்கி எறிந்தவர் (மாற் 7:1 தொ,19); அன்றைய சமயவாதிகளின் நடைமுறைக்கு மாறாக அவர் பாவிகள் மற்றும் பெண்களுடன் நற்சிந்தனையுடன் பழகுகிறார்; அக்கால சமூகப் பழக்கவழக்கத்திற்கு, விதிக்கு மாறாக அவர் தொழுநோயளரைக்கூட தயக்கமின்றி சிறிதும் கூச்சமின்றி பிறர் தம்மை இழிவுபடுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொட்டார் (மாற் 1:41); பெரும்பாடு கொண்ட பெண் தம்மைத் தொட்ட நிகழ்வை ஊரறியச் சொல்லவைத்து அது தீட்டு அல்ல என ஊரறிய தெரியப்படுத்துகிறார். (மாற் 5:25 தொ).

பல யூத சமய-சமூக மரபுகளையும் சட்டங்களையும் நடைமுறையில் மீறியது மட்டுமன்று, கடவுளின் வார்த்தை எனக் கருதப்பட்ட யூத சமயத் திருநூலாகிய தோராவின் (பழைய ஏற்பாடு) சில பகுதிகளைக்கூட அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார் (மாற் 10:2-12; உபா24:1-4); தூய உணவு வகைகள் பற்றிய சட்டங்களை அவர் அடியோடு மாற்றுகிறார் (மாற் 7:14-23). மேலும் அன்றைய யூத சமயத்தின் மையமாக இருந்த எருசலேம் ஆலய வழிபாட்டையே கேள்விக்கு உள்ளாக்கி உண்மை மனித வாழ்வே உயர்ந்த வழிபாடு என்கிறார் (அரு 4:21-23). இறுதியாக அந்த ஆலயமே இடிக்கப்படும் என இறைவாக்கு உரைப்பதோடு (மாற் 13:1-2) அதை இடித்துவிடுங்கள் என அறைகூவலும் விடுத்தார் (அரு 2:19 ; மாற் 14:57-58).

சாதி, சமய, இன, மொழி எனும் வரம்புகளைக் கடந்தது அவரது மனிதநேயம். ஆண்-பெண், யூதன்-புற இனத்தான் எனும் வேறுபாடுகள் இன்றி எல்லார் நலனிலும் அவர் அக்கறை காட்டினார். தேடி வந்தவரையெல்லாம் வரவேற்று, தேவைப்பட்டோருக்கெல்லாம் உதவினார். அவர் சார்புறுதி எவர்மீதும் இன்றி சமச்சீராக எல்லாருக்கும் ஒரே வகையில் அன்பு செய்யவில்லை. ஏழை - பணக்கரார், சுரண்டப்படுவோர் - சுரண்டுவோர், அடக்கப்படுவோர் – அதிகாரம் உடையோர் எனும் இரு பிரிவுக்குமிடையில் நடுநிலையோடு, வறியவர் சிறியவர், நோயாளர் ஆதரவற்றோர் . தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடம் அவர் கொண்டுள்ள அக்கறை தனிச் சிறப்பானது. எல்லோருக்கும் தொண்டனாகவும் ஏழைகளுக்குத் தோழனாகவும், அனைத்து மனிதரிடமும் அன்புகாட்டி வறியோர், வாழ்விழந்தோர், போன்ற அனைவருக்கும் அன்பு காட்டியது அவரது உயர்ந்த நற்பண்புக்கு எடுத்துக்காட்டாகும்.

மனிதநேயம் உள்ளத்து அளவில் நின்றுவிட்ட உணர்ச்சியாக மட்டுமில்லாமல் அவரது முழமையான ஈடுபாடு, வாழ்வின் தொடர் செயற்பாடு என்றளவில் அது பேச்சுடன் முடிந்துவிட்ட வெறும் போதனையுமின்றி துன்புற்றோரின் துயரைக் களைந்து, கவலையுற்றோரின் கண்ணீரையும் துடைக்கின்றார். பாவம் செய்தவரை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவர்; நோயுற்றோருக்கு மருத்துவராகவும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோருக்கு உற்ற துணையாகவும்  விளங்குபவர்; அவருடன் சகோதரத்துவ சம பந்தியில் அமர்ந்து மகிழ்ந்தனர். ஒடுக்கப்படடோர் அவரிடம் உரிமைவாழ்வைப் பெற்றனர். “எளியோருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்” (லூக் 4:19) என்பது அவரது எண்ணம். அதுமட்டுமன்று; அதுவே அவரது பணிவாழ்வின் தொடக்கமும், நிறைவுமாகும். இதனால்தான் “எல்லாம் நன்றாகவே செய்திருக்கிறார்” (மாற் 7:37) என மக்கள் திரள் அவரைப் பாராட்டுகின்றது; “எங்கும் அவா நன்மை செய்துகொண்டே சென்றார்” (தி.துப10:38) என அப்போஸ்தலர் பணி அவரது வாழ்க்கை வரலாற்றையே சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

அன்பு மேல்நிலையில் நின்று அவர் காட்டும் கருணை நயம் அன்று. தம் நிலையை விட்டுவிடாது, தம் பாதுகாப்புகளை இழந்துவிடாது ஏழைகளுக்கு இரங்கி அவ்வப்போது இறங்கி உதவி செய்யம் வகையில் இயேசுவின் அன்புப்பணி அமையவில்லை. அவரது அன்பு தம்மையே வெறுமையாக்கியது. ஏழை எளியவருடன் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டது. “அவர் செல்வமிக்கவராய் இருந்தும்…. உங்களுக்காக ஏழையானார்” (2 கொரி 8:9). இறையியலார் மோல்ட்டமான் கூறுவதுபோல், “அவர் ஏழைகளின் சகோதரன், மக்களின் தோழன், கைவிடப்பட்டோரின் நண்பன், நோயுற்றோருக்கு இரங்கும் ஆதரவாளன். தம் அன்புறவால் தம் விடுதலையையும் நலமாக்கும் ஆற்றலையும் அவர்களுக்கு நல்குகிறார். அவரில் ஆண்களும் பெண்களும் சகோதரத்துவ மனிதனைக் கண்டுகொள்கின்றனர்.

சரித்திரப் பண்பாளர்
உயர் மனிதனாகக் கருதும் மரபு நோக்கும் சராசரி மனிதனகாக் கருதும் இன்றைய சிலரது நோக்கு ஏற்கக்கூடியவையல்ல. மரபு நோக்கில் அவர் இன்னொரு உலகைச் சார்ந்த மனிதன், இயல்புக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தனிப்பிறவி, பிறப்பிலேயே எல்லா அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தார். உண்மையில் பிரச்சினையோ, மனதில் குழப்பமோ, தயக்கமோ, பலவீனமோ, குறைபாடோ எதுவுமே இருந்ததில்லை. மரபு கற்பனை செய்துகொள்ளும் இயேசு, உண்மை மனிதனாக இருந்திருக்க முடியாது. நற்செய்தி ஏடுகளும் இத்தகைய கண்ணோட்டத்திற்கு எதிராக எழுப்பம் கேள்விகள் பல. இதற்கு மாறாக இன்று சிலர் அவரைச் சராசரி மனிதனாக மட்டுமே பார்க்கின்றனர். தொடக்கம் முதல் இறுதிவரை தாம் யார், தம் இலட்சியம் யாது? அதை நிறைவேற்றுவது எவ்வாறு என்பன பற்றித் தெளிவின்றி நின்றவர்; ஆயிரம் சந்தேகங்களுக்கிடையில் எது உண்மை, என்ன நிலைப்பாட்டினைத் தாம் எடுப்பது எனத் தெரியாது தயங்கியவர்; எனினும் திறந்த மனதுடன் என்றும் உண்மையைத் தேடிய சிறப்பு உடையவர் என்றே அவரை காண்கின்றனர். இந்த நோக்கும் ஏற்க முடியாததே. ஏனெனில் சராசரி வாழ்வு வாழ்ந்த ஒரு மனிதன், உண்மைத் தெளிவோ இலட்சிய உறுதிப்பாடோ இல்லாத ஒருவன் வாழ்ந்த காலத்திலும் சரி, வரலாற்றின் தொடர்ச்சியிலும் சரி இவ்வளவு பெரிய தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். நற்செய்தி ஏடுகள் இயேசுவை கேள்விகள், குழப்பங்களுக்கிடையிலும் இலட்சியத் தெளிவும் தீவிர செயல்பாடும் கொண்டவராகவே காட்டுகின்றன; எத்தனையோ சராசரி மனிதர்களுக்கு இடையே வாழ்ந்த இன்னொரு சராசரி மனிதன்.

முடிவுரை
இயேசுவின் பல்வேறு முக்கியப் பண்புகளை அவரது மூலமுதல் பண்புடன் இணைத்துப் பார்த்தால் நம் பார்வையில் பளிச்சிடுவது அவரது ஆளுமையின் முதிர்ச்சியே எனலாம். உளப்பக்குவத்திற்கு உன்னத எடுத்துக்காட்டாக, மனநலத்திற்குச் சிறந்த உதாரணமாகவே நம் கண்முன் நிலைத்திருக்கிறார். ஆளுமை வளர்ச்சியின் அடையாளங்கள் என உளவியலார் கருதும் பல கூறுகள் வியப்பளிக்குமளவு அவரிடம் நற்பண்புகள் ஆக்கம்பெற்று விளங்குகின்றன. இவற்றில் அவரது ஆளுமையின் ஒருங்கிணைந்த நற்பண்புகளையே குறிப்பிடத்தக்கதாகக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளும் இலட்சியங்களும் ஒன்றோடு ஒன்று மிக அருமையாக அவரிடம் ஒருங்கிணைந்து நிற்கின்றன. பசி, தாகம் எனும் இயல்பு நாட்டங்கள்கூட இறையரசுப் பணி எனும் இலட்சியத்தால் நிறைவுபெறுகின்றன (யோவா 4:34). அதுபோல் மிகச் சிறப்பாக அவரிடம் ஒருங்கிணைந்து நிற்பவை அவரது அகத்தன்மையும் புறத்தன்மையும். தனிமையில் மகிழ்கிறார், பிறரிடம் அன்புகாட்டும் நல்ல உறவுகளில் திளைத்து, ஆழ சிந்தித்து, ஆர்வமுடன் செயல்படுகிறார். எவ்வளவு அதிகமாகப் பணிசெய்கிறாரோ அவ்வளவு ஆழமான இறைசிந்தனையில் திழைப்பார். அவரது வாழ்வில் பணியும், செபமும் ஒன்றையொன்று ஆழப்படுத்துவதால் பணியா? செபமா? எனும் போலியான பிரச்சனை அவருக்கு இல்லை. மேலும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடில்லை. பிறருக்குப் போதித்ததைத் தம்வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டுகிறார். நமக்கு நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டி என்றும் போதிக்கிறார்.

ஒருங்கிணைந்த ஆளுமை அவர் பிறப்பிலேயே இருந்ததில்லை. அன்றாட வாழ்வின் அக-புற இழுபறியான சமூகம் போராட்டங்களிடையே அவரிடம் வளர்ந்த ஒன்றுதான் எனலாம். மக்கள் தம் வாழ்வில் சந்திக்கும் பல சிக்கல்களை; எதிர்மறைகளை தம்வாழ்வில் அன்றாடம் தாமும் சந்தித்தார். தம் பணிகளில் அவர் எத்தனையோ நெருக்கடிகளுக்கும், மனக் குழப்பங்களுக்கும், அக முரண்பாடுகளுக்கும் ஆளானார். சதாரண மனிதரைப் போல் அவரும் சோதனைத் துன்பங்களுக்கு உள்ளானார் (எபி 4:15). பணியின் துவக்கத்தில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் (மத் 41-11), மக்களும் சீடரும் யார் எனத் தம்மைக் கருதுகிறார்கள் என்று அறிய அவர் கேட்ட கேள்விகள் (மாற் 8:27-29), இறுதியில் கெத்சமெனியிலும் கல்வாரியிலும் அவருக்கு ஏற்பட்ட கலக்கங்கள் (மாற் 14:34 தொ.; 15:35) இதற்குத் தெளிவான சான்றுகளாகும். இத்தகைய தயக்கங்களிலும் மனக்குழப்பங்களிலும் தம் இறையரசு இலட்சியத்தையே முன்வைத்து அதன் அடிப்படையில் அவற்றிற்கு ஏற்ற முடிவைக் காண்கிறார்.

இயேசு ஒரு சாதாரண மனிதன், கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஓர் ஏழைத் தொழிலாளி என்றாலும் சராசரி மனிதனாக வாழவில்லை. வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு மனிதனின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த குறிக்கோளினை உள்ளத்தில் தெளிவுபடுத்தி தம் உழைப்பையும் உயிரையும் அதற்கு முழுமையாகத் தருகின்றார். மனிதர்கள் நாளும் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகள், தயக்கங்கள், குறைகள். குழப்பங்கள் போன்றவற்றையும் சந்திக்கின்றார். `எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்’ - எனும் இறையரசு இலட்சியத்தின் அன்பு சக்தியால், அர்ப்பணத்தால் அவற்றை மேற்கொள்ளுகின்றார். சராசரி மனிதரிடம் இல்லாத இந்தச் சாதனை காரணமாகத்தான் மாமனிதன் எனச் சரித்திரம் அவரைப் போற்றுகின்றது போலும். சராசரி மனிதரிடம் இல்லாத இந்த அன்பு வாழ்வால்தான்,  தியாக இறப்பால்தான் மனித தெய்வம் மாந்தருள் மாணிக்கம் என இன்றளவும் மக்கள் நாளும் வழிபடுவது இயல்பே.

சுருக்கக் குறியீடுகள் :
மத்.– மத்தேயு
மாற்.– மாற்கு
லூக்.– லூக்கா
அரு.– அருளப்பர்
யோவா – யோவான்
திதுப.– திருத்தூதர் பணிகள்
பிலி.– பிலிப்பியர்
கொரி.– கொரிந்தியர்
எபி.– எபிரேயர்

தி. மரியசீலன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
மொழியியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010