தெய்வம் உன் அன்பில் பேரார்வம் கொண்டேன்
தேடும் என் கண்ணில் பேராவல் கண்டேன் (2)
உன்னால் இதயம் புதியதானது
உறவால் வாழ்வு இனிமையானது (2)
எல்லாம் இங்கு நீயே என்று உள்ளம் பாடுது
உன்னோடு என் வாழ்வு அழகானது
வரமாகும் உன் அன்பு வாழ்வாகும் உன் வாக்கு
உன்னாலே என் வாழ்வு உயர்வானது
உன் அன்பில் நனைந்தேன் உன்னோடு கலந்தேன்
உன் மாண்பைப் பகிர்ந்தே உனதாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா
அறம் சூழும் உன் வாழ்வு அருள் சேர்க்கும் உன் வாக்கு
இறைவா உன் பேரன்பு நிலையானது
அழகான உன் எண்ணம் மறையாது எனில் என்றும்
நிறைவான என் வாழ்வு மகிழ்வானது
உன் அன்பை உணர்ந்தேன் உன் பாதை நடந்தேன்
உன் பண்பின் ஈர்ப்பில் உன் வசமாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா