உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4

இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2

பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2

தெய்வம் உன் அன்பில் பேரார்வம் கொண்டேன்

தெய்வம் உன் அன்பில் பேரார்வம் கொண்டேன்
தேடும் என் கண்ணில் பேராவல் கண்டேன் (2)
உன்னால் இதயம் புதியதானது
உறவால் வாழ்வு இனிமையானது (2)
எல்லாம் இங்கு நீயே என்று உள்ளம் பாடுது

நீ தானே என் சொந்தம் நீங்காது நம் பந்தம்
உன்னோடு என் வாழ்வு அழகானது
வரமாகும் உன் அன்பு வாழ்வாகும் உன் வாக்கு
உன்னாலே என் வாழ்வு உயர்வானது
உன் அன்பில் நனைந்தேன் உன்னோடு கலந்தேன்
உன் மாண்பைப் பகிர்ந்தே உனதாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா

அறம் சூழும் உன் வாழ்வு அருள் சேர்க்கும் உன் வாக்கு
இறைவா உன் பேரன்பு நிலையானது
அழகான உன் எண்ணம் மறையாது எனில் என்றும்
நிறைவான என் வாழ்வு மகிழ்வானது
உன் அன்பை உணர்ந்தேன் உன் பாதை நடந்தேன்
உன் பண்பின் ஈர்ப்பில் உன் வசமாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா

காணிக்கை தரும் நேரம் கடவுளே

காணிக்கை தரும் நேரம் கடவுளே உன் திரு முன்னே
அன்பென்னும் பலியாக அள்ளி தரும் நேரம்
என்னை படைத்தேன் என்னை படைத்தேன்
இன்றும் என்றும் உந்தன் உகந்த காணிக்கையாய்

வாழும் வாழ்வை பலியாய் தந்தேன்
வரமே தருவாய் நீ
போதும் என்ற மனமே தந்து
பொறுத்துக்கொள்வாய் நீ
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

உள்ளம் விரும்பும் இறைவன் நீரே
உவந்து தர வந்தேன்
மீதி வாழ்வை திருமுன் தந்து
நிம்மதி பெறுகின்றேன்
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

உயிர் தரும் உணவே இறை வா

உயிர் தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா…
நல் ஆற்றலாய் என் னுள்ளம் வா வா

வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…

உயி ருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
நிரந்தர வா..ழ்வே என் தேவா
நிம்மதி வா..ழ்வாய் எனில் வா வா

வா வா ….  உயிர்தரும்….

அழி யாத உணவே என் இறைவா
ஆ..ன்ம ஒளியாய் என்னில் வா வா 2
அன் பின் பகிர்வே என் தேவா 2
அனுதின உணவாய் எனில் வா வா 2

வா வா …. உயிர்தரும்….

லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே

லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (1)

1

உழைக்கும் மக்கள் யாவருக்கும் பாதுகாவல் நீரன்றோ

படிக்கும் பிள்ளைகள் யாவர்க்கும் உற்ற துணையும் நீரன்றோ

நீதிமானாய் நாங்கள் உம் போல் விளங்க செய்திடுவாய்

உழைப்பால் உயரும் தூய மனதை எமக்கு வழங்கிடுவாய்

லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (1)

2

நன்மை சோர்வு கவலைகள் எம்மை வாட்டும் தொழுதிலே

மீண்டும் என்னைத் தேற்றுவீர் கரத்தால் எம்மைத் தாங்குவீர்

உம்மாலன்றி வேறு யார் எந்தன் பக்கம் நின்றிடுவார்

பாசம் பொங்கும் விடியால் எந்தன் உள்ளம் காத்திடுவார்

லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)


வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே


நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே (2) 

நீ எந்தன் பாறை...

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தில் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே -2

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன் துணையில் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ
தடை கோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே -2

இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ
முடிவாக வெல்லுவதும் நன்மையன்றோ
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்
ஆனாலும் உன் வார்த்தை உண்டு
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே -2

அன்பெனும் வீணையிலே

அன்பெனும் வீணையிலே- நல்
ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன்
அருளினை பாடிடுவேன்
அகமெனும் கோவிலிலே - என்
தெய்வமாய் நீ இருப்பாய்-2
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்

வாழ்வெனும் சோலையிலே - நல்
தென்றலாய் நீ இருப்பாய்-2
தூய்மையெனும் மலரை- நான்
தான் மலர் படைத்திடுவேன்

தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க‌-2
இன்பமே மலர்ந்திடுமே- நான்
உன்னிலே வாழ்ந்திருக்க‌