அன்னையின் தாழ்ச்சி
சூரிய காந்தி என்ற தமிழ்த்திரைப்படத்தின் இறுதியில் ஒரு காட்சி. சிறந்த தம்பதியரைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஒன்று நடந்தது. நிறைய இடங்களில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்ட தம்பதியினர் வந்திருந்தார்க்ள. முதலில் அரையிறுதிப்போட்டி நடந்தது. அதில் 5 தம்பதியர் சிறந்த தம்பதியினர் என தெரிவுசெய்யப்பட்டார்கள். இப்போது இறுதிப்போட்டி நடக்கவிருந்தது: இந்த 5 தம்பதியரில் சிறந்த தம்பதியர் யார்? எனப்போட்டி. அரையிறுதிப்போட்டியில் தெரிந்தெடுக்க 5 தம்பதியரில் 5 கணவன்களே உள்ளே (பெரிய அரங்கத்தின்) அவர்கள் விருப்பம்போல உட்கார்ந்து கொள்ளச்சொன்னார்கள். அதுபோல் அனைவரும் அமர்ந்துகொண்டனர். இந்த 5 கணவன்களுடைய மனைவியரின் கண்களை துணியால் மறைத்துவிட்டார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையிலே இந்த 5 மனைவியரும் உள்ளே சென்று தங்கள் கணவர்களை கண்டுபிடித்து அவர்கள் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர வேண்டும். எல்லோரும் ஆர்வமாகப்பார்க்கின்றனர். போட்டி ஆரம்பித்துவிட்டது. 5 மனைவியரும் நெருங்குகின்றனர். பக்கத்தில் வந்து விட்டார்கள். எல்லரும் அமர்ந்து விட்டார்கள். எல்லாரும் தவறாக அமர்ந்துவிட்டார்கள். ஆனால் முதலில் இருக்கையில் உட்கார்ந்த கணவனுடைய மனைவிமட்டும் சரியாக தன்னுடைய கணவனை கண்டு பிடித்து உட்கார்ந்துவிட்டாள். பயங்கரக் கைத்தட்டல். அரங்கமே அதிர்ந்துவிட்டது. போட்டி முடிந்தபிறகு பேட்டி காண்பவர் அவரை அணுகி எப்படி நீங்கள் சரியாக உங்கள் கணவனைக்கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அம்மா” எனக்கு அப்பவே தெரியும் எங்க வீட்டுக்காரர் முதலிருக்கையில் தான் அமர்ந்திருப்பார்னு. எதுக்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொள்வது என்பது அவருடைய உடன்பிறவா குணம்.
முந்திக்கொள்வதும், முதலிடத்தைப்பிடிப்பதும் போட்டிக்கு வேண்டுமென்றால் உதவும்: வாழ்க்கைக்கு உதவாது.
(மாப்பிள்ளை நாளையிலிருந்து அழுவார்)
கலகலப்பில் தொடங்கிய திருமண வாழ்வு கைகலப்பில் முடிவடைகிறது. திருமணத்திற்கு முன் அவள் ஓர் “ஏஞ்சல்”: திருமணத்திற்குப்பின் அவள் ஓர் “இடைஞ்சல்”: திருமணத்திற்கு முன்பு “உனக்கும் எனக்கும் ளழஅநவாiபெ- ளழஅநவாiபெ : திருமணத்திற்கு பின்பு, “உனக்கும் எனக்கும் ழேவாiபெ- ழேவாiபெ. காரணம், தலைக்கனம், ஆணவம, தான் என்ற அகந்தை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை.
“குடும்பத்தில் யார் கை ஓங்குகிறது? அப்பா கையா? அம்மா கையா?” என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்: அப்பா கை ஓங்குகிறது: அம்மா கை வீங்குகிறது. குடும்ப வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால் “நீயா? நானா?” என்ற பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, ‘நீயும் நானும்’ என்ற சமரசப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல் பெண்ணும், பெண்ணில்லாமல் ஆணும் வாழ முடியாது. எனவே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து இனியதோர் இல்லறம் நடத்த வேண்டும்.
ஒரு கணவர் தன் மனைவியிடம், ‘இன்னும் 10 நிமிடத்தில் குளிக்கச் சுடுதண்ணீர் கொடுக்காவிட்டால், என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது’ என்றார். மனைவி அவரிடம், ‘சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்க முடியாது என்ன நடக்கும்?’ என்று கேட்டார். அதற்குக் கணவர் ‘அப்படியானால் நான் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிப் புட்டிப் பாம்பாக சுருண்டு விட்டார்.
ஒரு பங்குத் தந்தையிடம் ஒரு கணவர் வந்து, “என் மனைவி என்னை மதிப்பதில்லை: எனக்குக் கீழுப்படிவதில்லை: அவளை அடக்குவது எப்படி என்று சொல்லித் தாங்க சுவாமி”! என்று கேட்டார். அதற்கு அவர், “அது தெரிஞ்சா நான் ஏப்பா சாமியார் ஆனேன்”? என்றாராம்!. “அவளை அடக்கு, அல்லது அவளுக்கு அடங்கு” என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், “அவளுக்கு விட்டுக் கொடு: அவளுக்கு அதிகாரத்தைப் பிட்டுக்கொடு” என்ற நிலைப்பாட்டை எடுப்பதுவே சாலச்சிறந்தது.
வீட்டிலே அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா? என்று ஆசிரியர் கேட்டபோது, ஒரு மாணவர் “நிச்சயமாக அம்மாதான் பெரியவங்க. என் அப்பா அவரது தொழிற்சாலையில் ஆயிரம் ஆண்களை அடக்குகிறார். ஆனால் விPட்டில் என் அம்மா தனியாக என் அப்பாவை அடக்குகிறார்” என்றான்.
ஒரு மனைவி தன் கணவரிடம், “ஏழு ஏழு சென்மத்துக்கும் நீங்கள் தான் எனக்குக் கணவராக இருக்க வேண்டும்”என்றார். அதைக் கேட்ட கணவர் மிக்க மகிழ்ச்சியுற்று அதற்கான காரணத்தை மனைவியிடம் கேட்டபோது, “உங்களைவிட இளிச்சவாயன் வேறு யாரும் எனக்குக் கிடைக்க முடியாது” என்றாள் மனைவி. என்னே அவரது பதிபக்தி!
தம்பதியர் ஒருவர் மற்றவரைத் தரக் குறைவாக எண்ணாமல் மதித்து வாழவேண்டும். மரியாவும் யோசேப்பும் ஒருவர் மற்றொருவரை மதித்து வாழ்ந்தனர். யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தைதான். ஆயினும் அவர் திருக்குடும்பத்தில் முதல் இடத்தில் இருந்தார். மரியாள் தம் கணவர் யோசேப்பின் மீது வைத்திருந்த மரியாதையையும் அவருடைய வார்த்தைகள் சுட்டுகின்றன. எனவேதான், பன்னிரண்டு வயதில் காணாமற்போன இயேசுவை ஆலயத்தில் கண்டபோது மரியா அவரிடம், “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக். 2:48) என்றார். தம் கணவர் யோசேப்புக்குத்தான் மரியா முதலிடம் கொடுத்தார். “உன் தந்தையும் நானும்” என்று கூறித் தம்மைவிட யோசேப்பை முன்னிலைப்படுத்தினார். இது மரியாள் யோசேப்பின்மீது வைத்திருந்த மிகுந்த மரியாதையைக் காட்டுகிறது. இவ்வுலகில் எந்த மனைவியும் தம் கணவரை அன்பு செய்யாத அளவுக்கு மரியாள் யோசேப்பை அன்பு செய்தார்.
“கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்” (எபே. 5:23-28). “கணவர்களே உங்கள் மனைவியருக்கு மதிப்புக் கொடுங்கள்” (1பேது. 3:7).
“மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்… கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி 2:3-5).
ஒரு வீட்டிலே மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே எப்போதும் பயங்கர சண்டை நடக்கும். ஒருநாள் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. மருமகள் தன் கணவரிடம், “இந்தாங்க! இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும், அல்லது உங்கள் அம்மா இருக்க வேண்டும். உடனடியாக முடிவு சொல்லுங்கள்” என்றாள். அதற்குக் கணவர், “நீயும் வேண்டாம்: என் அம்மாவும் வேண்டாம். வேலைக்காரி மட்டும் இருந்தால் போதும்” என்றார். இதைக்கேட்டு மாமியார், மருமகள் இருவருமே அதிர்ச்சியுற்றனர்.
திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒருவர் ஒருவரை மதித்து அன்புக்கு அடிமையாகினர். திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும், மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தவில்லை. அவர்களிடம் ‘EGO’ பிரச்சினை இல்லை கடவுள் வாழ்ந்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி நிலவியது.
இன்று உலகில் நடக்கும் பல போர்களுக்கும். சண்டைகளுக்கும் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள். உண்ண உணவில்லையென்றா, உடுத்த உடை இல்லை என்றா, அல்லது இருக்க இடமில்லையென்றா, மாறாக நான் பெரியவனா நீ பெரியவனா என்ற அதிகார போட்டியினாலும் ஒருவருக்கொருவர் தாழ்நது போகும் தன்மையில்லாததாலும் விட்டுக்கொடுக்கும் மனம் நம்மிடையே இல்லாததினாலும் தான்.
திருமுழுக்கு யோவான், தன்னை மெசியாவாக ஏற்று கேட்டு வந்த பரிசேயர்களிடம், நீங்கள் நினைப்பது போல், நான் மெசியாவோ, எலியாவோ அல்லது இறைவாக்கினரோ அல்ல, என்று உண்மையை மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள்… என்று பாலைவனத்தில் ஒலிக்கும் குரல் நான் என்று கூறுகிறார். இறைவன் மட்டுமே நிஜம், தான் வெறும் நகல் என்றும், இறைவனே வாக்கு என்றுணர்ந்து தன்னை ஒலி என்றும் சொல்கிறார்.
அவர் எனக்குப்பின் வருபவராக இருந்தாலும் என்னிலும் முன்னிடம் பெற்றவர் என்று முழங்கி தன்னை அனுப்பிய இறைவனை வெளிப்படுதி இறைவனின் தன்னிகரற்ற முன்னிடத்தை நிலை நாட்டி தன்னைப் படிப்படியாக பின்னடைய செய்து மறைந்து மங்கிப்போகவே விரும்புகிறார். அவரது செல்வாக்குப் பெருக வேண்டும். எனது செல்வாக்கோ குறைய வேண்டும் என்று சொல்லி அவரைப்பற்றி எடுத்துரைக்கும் பணியிலேயே தன்னை கரைத்துக்கொள்கிறார். இவ்வாறு அவர் தான் யார் என்பதையும், தனது பணி என்ன என்பதையும் தெளிவாக உணர்ந்து செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னை எவ்வாறு தாழ்த்துகிறார் என்றால், அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட நான் தகுதியுள்ளவன் என்று கூறுகிறார்.
Humility goes before honour என்று சொல்லுவார்க்ள. இந்த பழமொழிக்கேற்ப “அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என்று கூறுமளவுக்கு தன்னைத் தாழ்த்திய புனித திருமுழுக்கு யோவானை யேசு அனைவரையும் விட மேலாக உயர்த்துகிறார். “உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று கூறி அவரை உயர்த்துகிறார்.
அவர் நமக்கு கூறுவதென்ன? நான் தான் ஞானத்தின் சிகரம், அறிவுக் களஞ்சியம், போதிக்கவும், புதுமை செய்யவும், பேய்களை ஓட்டவும், நோய்களை குணமாக்கவும், பரவசப்பேச்சு பேசவும் என்னிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று யேசு நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, “நான் மனத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உடையவன். ஆகவே என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று நம்மை பார்த்துக் கேட்கின்றார்.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்க இணையாய் இருக்கும் நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார் என்று புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:5 முதல் 8 வரை உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
தாழ்ச்சிக்கு சிகரமான நமது அன்னை மரியாளைப் பாருங்கள். “மரியாவிடம் விஞ்சி நிற்பது கன்னிமையா? அல்லது தாழ்ச்சியா என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்து, மரியாளையே அப்பட்டிமன்றத்திற்கு நடுவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டால், “மரியாளிடம் விஞ்சி நிற்பது தாழ்ச்சியே” என்று அவர் திட்டவட்டமான, தெளிவான அறுதியான உறுதியான தீர்ப்பு வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
இத்தீர்ப்பை நற்செய்தியில் மரியாய் ஏற்கெனவே வழங்கி விட்டார்.
இறைவன் மரியாளின் கன்னிமையைக் கண்ணோக்கினாள் என்று கூறாமல், அவர் தம் தாழ்ச்சியைக் கண்ணோக்கினார் என்று கூறுகிறார். மரியாள் “நான் ஆண்டவரின் அடிமை என்று தம்மைத் தாழ்த்தியதால்தான் இறைவன் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினாள்.
பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா 18முறை 1958 பிப்ரவரி 11 ஆம் நாள்முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார்.
ஒருமுறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா.
எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார்.
நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலிNடீயாரை அரியiணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). நம் தாழ்ச்சிநிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக,
புனிதமடைய மூன்று படிகள் உள்ளன, முதல் படி தாழ்ச்சி, இரண்டாவது படியும் தாழ்ச்சி, மூன்றாவது படியும் தாழ்ச்சி என்று கூறுகிறார் புனித அகுஸ்தினார்.
காதலின் வலிமையைப்பற்றி பாரதியார், காதல் காதல் காதல் காதல் காதல் போயின சாதல் சாதல் சாதல் என்று பாடுகிறார். பாரதியின் பாணியில் புனித அகுஸ்தினார், தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி போயின் வீழ்ச்சி வீழ்ச்சி வீழ்ச்சி என்று பாடுகிறார்..

இவையனைத்தும் எங்கோ நடக்கின்ற ஒன்றல்ல. நம் மத்தியிலும் இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
• இவ்வளவு நாட்களாக பங்கு பேரவை தலைவராக இருந்த என்னை இப்போது எப்படி இவர்கள் மாற்ற முடியும். இன்p நான் ஒத்துழைப்பு தரமாட்டேன் என்று சொல்லும் போது,
• காலம்காலமாக எங்கள் குடும்பம்தான் இந்த ஊருக்கு பஞ்சாயத்து பேசும், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆலோசித்துத்தான் பங்கு தந்தை எதை வேண்டுமானாலும் செய்யலாம். பங்கு தந்தையை அடுத்து எங்கள் குடும்பம்தான் இந்த ஊரில் என்று கூறும்போதெல்லாம் நாம் ஆணவம் பிடித்தவர்களாகிவிடுகிறோம்.
• இந்த ஊரில் நான் தான் அதிக படிப்பு படித்துள்ளேன். ஆகவே அனைவரும் என்னை அதிகம் மதித்து நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும்போது,
• நீ வேண்டுமானால் எனக்கு அண்ணனாக இருக்கலாம, ஆனால் நான் தான் உன்னைவிட அதிகம் படித்தவன. ஆதலால் நீதான் என்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது,
• நீ இந்த வீட்டிற்கு நேற்று வந்தவ: நீ தான் நான் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார் மருமகளை பார்த்து கூறும் போதும்,
• நீ காலம் கடந்த வயதான கிழவி உன் ஆட்சி முடிந்துவிட்டது. இன்p நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மருமகள் மாமியாரை பார்த்து கூறும்போதும் நாம் தலைக்கணம் பிடித்து அலைகிறோம்.
(கிளி கதை)
ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: “நானும் என்னுடைய கணவரும் விவாகரத்து வாங்கிவிட்டோம்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் உடமைகளையெல்லாம் என்ன செய்தீர்கள்?” முதல் பெண் சொன்னார்: “எங்களுக்கு நான்கு பிள்ளைகள், நாங்கள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம்! இரண்டுபேர் கணவருடன் சென்றுவிட்டனர்! இரண்டுபேர் என்னுடன் வந்துவிட்டனர்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் சொத்துக்களையெல்லாம் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன்!” முதல் பெண் சொன்னார்: “அதுவா? எங்கள் சொத்துக்களை என்னுடைய வக்கீலும் என் கணவருடைய வக்கீலுமாகச் சேர்ந்து சரிசமமாகப் பிரித்து எடுத்துக்கொண்டார்கள்!”
திருமணமான ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவ்வீட்டின் உரிமையாளரைப் பார்த்து, “இவர்தான் என் வீட்டுக்காரர்” என்று அவர் கேலியாகச் சொன்னது பெரிய சண்டையில் முடிந்தது. “வீட்டுக்கார்” என்று அவர் கூறியதின் பொருள்: இவர் இந்த வீட்டின் சொந்தக்காரர்: ஆனால் “வீட்டுக்காரர்” என்ற சொல்லைக் “கணவர்” என்ற பொருளில் எடுத்துக் கொண்டதால் பெரிய புயல் கிளம்பிவிட்டது! நமது வீட்டுக்காரர் யார்? கிறிஸ்துவே நமது வீட்டுக்காரர். நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டியவர், கிறிஸ்து நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டுமென்றால், சக்கேயு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது போல நாமும் நமது ஆணவம், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும். அதற்கு நாம் தயாராய் இருக்கின்றோமா?
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேரவேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும். தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து
பெத்லேகமில் யேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப் நேட்டிவிட்டி என்றழைப்படும் பெரிய பேராலயம் ஒன்று அமைந்துள்ளது. நமது ஊர்களில் உள்ள பெரிய ஆலயங்களையும் அதனுள்ளளே அடக்கி விடும் அளவுக்கு அது மிகப்பெரிய கோயில். ஆனால், அதனுடைய முகப்பில் உள்ள நுழைவு வாயிலின் கதவு மிகச் சிறியது. யாருமே குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும், அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நாம் தாழ்ந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும். இறைவன் யேசுவைக் காண முடியும். அது Door to Humility.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துவிழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள் எச்சரிக்கை(கலா 5:15).

ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப் படுத்துகின்றது… ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினாள்- லூக் 1:46-48.
இறைவன் மரியாளின் கன்னிமையைக் கண்ணோக்கினாள் என்று கூறாமல், அவர் தம் தாழ்ச்சியைக் கண்ணோக்கினார் என்று கூறுகிறார். மரியாள் “நான் ஆண்டவரின் அடிமை என்று தம்மைத் தாழ்த்தியதால்தான் இறைவன் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினாள்.
பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா 18முறை 1958 பிப்ரவரி 11 ஆம் நாள்முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார்.
ஒருமுறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா.
எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார்.
நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலிNடீயாரை அரியiணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). நம் தாழ்ச்சிநிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக,
ஆண்டவரே நான் பாவி. பாவி என்மேல் இரக்கமாயிரும்என செபித்த ஆயக்காரனின் வேண்டுதல்தான் இறைவனால் கேட்கப்படுகிறது (லூக் 18:11-13). தாழ்ச்சியும் பணிந்த மனமும் மிகுதியான ஆசீர்வாதங்களை இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறது.
புனிதமடைய மூன்று படிகள் உள்ளன, முதல் படி தாழ்ச்சி, இரண்டாவது படியும் தாழ்ச்சி, மூன்றாவது படியும் தாழ்ச்சி என்று கூறுகிறார் புனித அகுஸ்தினார்.
காதலின் வலிமையைப்பற்றி பாரதியார், காதல் காதல் காதல் காதல் காதல் போயின சாதல் சாதல் சாதல் என்று பாடுகிறார். பாரதியின் பாணியில் புனித அகுஸ்தினார், தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி போயின் வீழ்ச்சி வீழ்ச்சி வீழ்ச்சி என்று பாடுகிறார்..
இன்று உலகில் நடக்கும் பல போர்களுக்கும். சண்டைகளுக்கும் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள். உண்ண உணவில்லையென்றா, உடுத்த உடை இல்லை என்றா, அல்லது இருக்க இடமில்லையென்றா, மாறாக நான் பெரியவனா நீ பெரியவனா என்ற அதிகார போட்டியினாலும் ஒருவருக்கொருவர் தாழ்நது போகும் தன்மையில்லாததாலும் விட்டுக்கொடுக்கும் மனம் நம்மிடையே இல்லாததினாலும் தான்.
இவையனைத்தும் எங்கோ நடக்கின்ற ஒன்றல்ல. நம் மத்தியிலும் இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
• இவ்வளவு நாட்களாக பங்கு பேரவை தலைவராக இருந்த என்னை இப்போது எப்படி இவர்கள் மாற்ற முடியும். இன்p நான் ஒத்துழைப்பு தரமாட்டேன் என்று சொல்லும் போது,
• காலம்காலமாக எங்கள் குடும்பம்தான் இந்த ஊருக்கு பஞ்சாயத்து பேசும், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆலோசித்துத்தான் பங்கு தந்தை எதை வேண்டுமானாலும் செய்யலாம். பங்கு தந்தையை அடுத்து எங்கள் குடும்பம்தான் இந்த ஊரில் என்று கூறும்போதெல்லாம் நாம் ஆணவம் பிடித்தவர்களாகிவிடுகிறோம்.
• இந்த ஊரில் நான் தான் அதிக படிப்பு படித்துள்ளேன். ஆகவே அனைவரும் என்னை அதிகம் மதித்து நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும்போது,
• நீ வேண்டுமானால் எனக்கு அண்ணனாக இருக்கலாம, ஆனால் நான் தான் உன்னைவிட அதிகம் படித்தவன. ஆதலால் நீதான் என்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது,
• நீ இந்த வீட்டிற்கு நேற்று வந்தவ: நீ தான் நான் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார் மருமகளை பார்த்து கூறும் போதும்,
• நீ காலம் கடந்த வயதான கிழவி உன் ஆட்சி முடிந்துவிட்டது. இன்p நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மருமகள் மாமியாரை பார்த்து கூறும்போதும் நாம் தலைக்கணம் பிடித்து அலைகிறோம்.
(கிளி கதை)
ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: “நானும் என்னுடைய கணவரும் விவாகரத்து வாங்கிவிட்டோம்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் உடமைகளையெல்லாம் என்ன செய்தீர்கள்?” முதல் பெண் சொன்னார்: “எங்களுக்கு நான்கு பிள்ளைகள், நாங்கள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம்! இரண்டுபேர் கணவருடன் சென்றுவிட்டனர்! இரண்டுபேர் என்னுடன் வந்துவிட்டனர்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் சொத்துக்களையெல்லாம் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன்!” முதல் பெண் சொன்னார்: “அதுவா? எங்கள் சொத்துக்களை என்னுடைய வக்கீலும் என் கணவருடைய வக்கீலுமாகச் சேர்ந்து சரிசமமாகப் பிரித்து எடுத்துக்கொண்டார்கள்!”
திருமணமான ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவ்வீட்டின் உரிமையாளரைப் பார்த்து, “இவர்தான் என் வீட்டுக்காரர்” என்று அவர் கேலியாகச் சொன்னது பெரிய சண்டையில் முடிந்தது. “வீட்டுக்கார்” என்று அவர் கூறியதின் பொருள்: இவர் இந்த வீட்டின் சொந்தக்காரர்: ஆனால் “வீட்டுக்காரர்” என்ற சொல்லைக் “கணவர்” என்ற பொருளில் எடுத்துக் கொண்டதால் பெரிய புயல் கிளம்பிவிட்டது! நமது வீட்டுக்காரர் யார்? கிறிஸ்துவே நமது வீட்டுக்காரர். நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டியவர், கிறிஸ்து நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டுமென்றால், சக்கேயு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது போல நாமும் நமது ஆணவம், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும். அதற்கு நாம் தயாராய் இருக்கின்றோமா?
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேரவேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும். தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து
கனிவையும் மனத்தாழ்மையையும்(மத் 11:29) கற்றுக் கொள்வோம்,
நாம் குழந்தைகளாக மாறாவிட்டால் விண்ணரசில் நுழைய முடியாது(மத் 18:3).
பெத்லேகமில் யேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப் நேட்டிவிட்டி என்றழைப்படும் பெரிய பேராலயம் ஒன்று அமைந்துள்ளது. நமது ஊர்களில் உள்ள பெரிய ஆலயங்களையும் அதனுள்ளளே அடக்கி விடும் அளவுக்கு அது மிகப்பெரிய கோயில். ஆனால், அதனுடைய முகப்பில் உள்ள நுழைவு வாயிலின் கதவு மிகச் சிறியது. யாருமே குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும், அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நாம் தாழ்ந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும். இறைவன் யேசுவைக் காண முடியும். அது Door to Humility.
வியாகுலத் தாய்
அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவள் உம்முடனேஎன்று வானதூதர் சொல்லக்கேட்ட அந்த நிகழ்வு மட்டுமே அன்னைக்கு ஒருவேளை மகிழ்ச்சியான நேரமாக இருந்திருக்கும். மரியாளுக்கு மங்கள செய்தி கிடைத்தாலும் எல்லாமே மங்களகரமாக இருந்ததா என்று பார்க்கும்போது இல்லையென்றுதான் தெரிகிறது.
நிறைமாதக் கர்ப்பிiணியாய் பெத்லகேமுக்குக் கணவருடன் போன போது இடமில்லை என்று எல்லோரும் கதவைச் சாத்திய போதும் சரி,
உன் உள்ளத்தை ஒரு வாள் ஊருவும்என்று சிமியோன் முன்னுரைத்ததைக் கேட்ட போதும் சரி, ஒரு கொலைகார அரசனுக்குப் பயந்து, பச்சிளம் குழந்தையோடு அந்நிய நாட்டிற்கு அகதியாய் ஓடியபோதும் சரி, மரியாள் கலங்கிப்போய்விட்டாள். கோயிலில் காணாமல் போன சிறுவன் இயேசு ‘ஏன் என்னைத் தேடினீர்கள் என்று கேட்டபோதும் சரி, தன் மகன் மயக்கத்தில் இருக்கிறான், புத்திமாறிப்போனான் என்று ஊரார் பேசியபோதும் சரி தன் ஒரே மகனை உலகம் பழிகாரனாக கொலைகாரனாக தேசத்துரோகியாக பார்த்தபோதும் சரி துடித்துப்போனாள். தன் மகன் சிலுவை சுமந்துகொண்டு வந்ததைக் கண்ட தாய் கலங்கிப்போனாள்.அன்னை மரியின் இதயத்தை வாள் ஊடுருவியது: இரத்தம் உள்ளுக்குள் கசிந்தது.
ஆசீர்வதிக்கப்பட்டவள் அவல நிலை காண்கிறாள்.
செருக்குற்றோரை சிதறடித்தார், தாழ்ந்தோரை உயர்த்தினார்என்று ஆனந்த பள்ளு பாடிய மரியாள் நிஜமான போர்க்களத்தில் தன் மகனை சந்திக்கிறாள். சென்ற இடமெல்லாம் நன்மை தவிர வேறெதுவும் செய்யாத தன் மகனை – அன்பைத் தவிர வேறெதுவும் அறியாத தன் மகனை இந்நிலையில் காணும் இந்தத் தாய் எப்படிப் பரிதவித்திருப்பாள்
தாயும் சேயும் சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டதாக எதுவுமே எழுதப்படவில்லை. பேசிக்கொள்ள என்ன இருக்கிறது? அவர்கள் கண்கள் கண்ணீரில் மறைந்து துயரத்தில் சந்திக்கின்றன. “மகனே, எங்களுக்கு ஏன் இவ்வாறு செய்துவிட்டாய்?” என்று ஆலயத்தில் கேட்ட அதே கேள்வியை அன்னை கேட்காமல் கேட்கின்றாள்.
அம்மா என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டுள்ளேனே தெரியவில்லையா?என்று அன்று சொன்ன பதிலை இயேசு சொல்லாமல் சொல்கிறார்”.
ஆனால் உலகில் எந்த தாய்க்கும் ஏற்படாத இதயத்தை பிளக்கும் கொடூரமான நிகழ்ச்சி சடலமான தனது மகனின் உடலை மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது: அத்தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்.
33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குளிர்ந்த இரவில் விரிந்த மொட்டு இப்போது வாடி வதங்கி உதிர்ந்து கிடப்பதைப்பார்த்து அன்னை கதறி அழுகிறாள். மடை திறந்தாற்போல பெருக்கெடுத்து வரும் தாயின் கண்ணீர் மகனின் உடலை நனைக்கிறது.
இறைவனின் வார்த்தையைக் கருத்தாய்த் தாங்கியவள், இறைமகனைக்கருவில் குழந்தையாய்த் தாங்கியவள், இப்போது அவரது உயிரற்ற உடலை மடியில் தாங்குகிறாள்.
இயேசுவின் பணி வாழ்வில் இனிதான பொழுதுகளில் இணைந்திருந்த சீடர்கள் இன்னல் வந்தபோது ஓடி விட்டார்கள். ஆனால் இயேசுவின் இனிய பொழுதுகளில் தன்னை வெளிக்காட்டி கொள்ளாத அன்னை மரியாள் இயேசுவின் கல்வாரி பாடுகளில் தன்னை முழுவதும் கரைத்துக்கொண்டார். சிக்கல்கள் வந்தபோது ஒதுங்கி கொள்ள வேண்டுமென்று மரியாள் நினைத்ததில்லை. கல்வாரிக் குன்றில் தன் கருணைமகன் காகிதத்துண்டுபோல் கிழிக்கப்பட்டபோது அந்த சிலுவையின் நிழலில் உடைந்த இதயத்தோடு மௌனமே வடிவமாய் மரியாள் நின்றார்.
தனது வியர்வைத் துளிகளாலும் உதிரத் துளிகளாலும், ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி உயர் நிலையில் உட்கார வைத்த தெய்வீகத்தின் மனித மொழிபெயர்ப்பாகிய அம்மாவை கண்கலங்க வைக்கும் மனிதர்களே கேளுங்கள். உங்களின் கொண்டாட்டங்களில் அவளை நீங்கள் சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் திண்டாடும்போது உங்கள் கண்ணீரைத் துடைக்கும் கருணை வடிவம் நீங்கள் ஓதுக்கித் தள்ளிய உங்கள் அம்மாதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவள் கண்விழித்த நாட்களை குழந்தைகள் அறியமாட்டார்கள். எனவேதான் முதுமைக் காலத்தில் அவளுக்காக குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. மனைவியைக் கண்ட மகிழ்ச்சியில் தூக்கி வளர்த்த அன்னையை தூர எறிகிற புதல்வர்கள், நாளைக்கு நடக்கப்போவதைப் பற்றி எண்ணுவதில்லை. வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்து ஒடாய்த்தேய்ந்துபோன பெற்றோர்கள் பிள்ளைகளாலேயே கைவிடப்பட்டு தெருக்களில் பிச்சையெடுப்பதை நாம் காண்பதில்லையா?
உறவுகளுக்கெல்லாம் முதன்மையான உறவு தொப்புள் கொடி உறவு. அதாவது தாய்-சேய் இரத்த உறவு. வீட்டிலும் தாலிக்கொடி உறவு வந்ததும் தொப்புள் கொடி உறவு தரையில் தள்ளப்பட்டு மிதிபடுகிறது. மனைவியின் பேச்சைக்கேட்டு ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை வீட்டை விட்டே விரட்டுகின்றனர். தங்களுடைய வீட்டுக்கு ‘அன்னை இல்லம்‘ என்று பெயர் சூட்டிவிட்டு தங்களுடைய அன்னையை அனாதை இல்லத்தக்கோ, முதியோர் இல்லத்துக்கோ விரட்டி விடுகின்றனர்.
ஒரு மாவட்ட ஆட்சியர் ஓர் அனாதை இல்லத்தைத் திறக்கச்சென்றபோது அங்கே தம் அப்பாவைக் கண்டு வெட்கத்தால் தலைகுனிந்தார். கொடுமையிலும் கொடுமை!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே. நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயின்றி வேறில்லை’ . காலையில் எழுந்ததும் கைதொழும் தேவதை அம்மா. அம்மாவின் அன்புக்கு முன் வானம் பூமி யாவும் சிறியதே…” இவை அனைத்தும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத வெறும் தத்துவப்பாடல்களாக நின்று விடுகின்றன.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள் நீடிக்கும்படி உன் தந்தையையும் தாயையும் போற்று (விப 20:12)மகன் தன் அப்பாவை அடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனான். அப்போது அப்பா அழுதுகொண்டு “மகனே, என் அப்பாவை வீட்டுக்கதவு வரை தான் இழுத்துக்கொண்டு போனேன். ஆனால், நீயோ என்னை வீதிக்கே இழுத்துக்கொண்டு போகிறாயே” என்றார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் பிறருக்கு முற்பகல் செய்யும் தீமை பிற்பகல் நம்மை வந்தடையும்.
ஒரு மனைவி தன் கணவரின் கல்லறைக்குச் சென்று அவரை வானளாவப் புகழ்ந்து பல அடைமொழிகள் கூறி அழுதாள். கணவரின் ஆவி அவளிடம்,”நான் உயிரோடு இருந்தபோது இப்படி என்னைப்புகழ்ந்திருந்தால் நான் இறந்திருக்கவே மாட்டேன்” என்றதாம். பலர் தங்களுடைய பெற்றோர் இறந்தபின் அவர்களை மேளதாளத்துடன் வாண வேடிக்கையுடன் பூச்சொரிந்து ஊரார் மெச்சும் வண்ணம் அடக்கம் செய்கின்றனர். இறந்த பெற்றோரின் ஆன்ம சாந்திக்காக ‘கிரகோரியார் திருப்பலி’ (30 நாள்களுக்குத் தொடர்ந்து) ஒப்புக் கொடுக்கின்றனர். பளிங்குக் கல்லறைகளைக் கட்டுகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் உயிரோடு வாழ்ந்தபோது அவர்களை மதிக்கவோ பராமரிக்கவோ இல்லை. இரண்டு கண்ணும் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு?
ஒரு பாட்டிக்கு நான நோயில் பூசுதல் அருளடையாளம் வழங்கினேன். அப்போது அப்பாட்டி தன்னுடைய ஒட்டிப்போன வயிறைக்காட்டி “பத்துப்பிள்ளைகளைப்பெற்ற வயிறு பட்டினியாகக் கிடக்குது” என்று சொல்லி அழுதார். ஒரு தாய் பத்துப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க முடிந்தது. ஆனால் பத்துப் பிள்ளைகளும் சேர்ந்து அத்தாய்க்குச் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. தாய் தன்னுடைய பிள்ளைகளைச் சுமையாகக்கருதவில்லை. ஆனால் பிள்ளைகள் தங்களுடைய தாயைச் சுமையாகக் கருதுகின்றனர். காலத்தின் கோலம்.
உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட. உன் தாயின் பேறுகாலத்துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து (சீஞா 7:27-28)முதுமையில் பெற்றோர் அறிவுத்திறன் குறைந்து, குழந்தைகளைப்போல செயல்பட்டு எரிச்சல் ஊட்டும் வகையில் நடக்கின்றனர். அந்நிலையில் அவர்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்.
உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. அவரை இகழாதே(சீஞா 3:12)பழைய ஏற்பாட்டில் நோவா என்பவர் குடிபோதையில் நினைவிழந்து ஆடையின்றி இருந்ததைக்கண்ட அவருடைய மகன் காம் என்பவன் தன்னுடைய இரண்டு சகோதர்களான சேம், எப்பேத்து என்பவர்களைக் கூப்பிட்டுத் தன் தந்தையின் நிர்வாணத்தைக்காட்டி ஏளனம் செய்தான். ஆனால், அவ்விரு சகோதரர்கள் தங்களுடைய தந்தையின் உடல்மேல் போர்வை ஒன்றைப் போர்த்தினர். நோவா நினைவு தெளிந்து, நடந்ததை அறிந்து, காம் என்பவனைச் சபித்தார். சேம், எப்பேத்து என்ற இருவரையும் ஆசீர்வதித்தார் (தொநூ 3:20-27). பெருந்தன்மை உடையவர்கள் மற்றவர்களுடைய குறைகளை மறைப்பர். ஆனால் சில்லறைப் புத்தியுள்ளவர்கள் பிறருடைய குறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவர்.
அன்னையின் அன்பு
வயதான தம்பதியர் ஒரு பூங்காவில் உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த ஒருவர் “இவ்வளவு காலம் ஆகியும் இந்த வயதான காலத்திலே அன்பாக சந்தோ~மாக பேசிக்கொண்டிருக்கிறார்களே!” என்று ஆச்சரியப்பட்ட அவர் அவர்களிடம் சென்று “பெரியவரே, உங்களுக்கு திருமணம் ஆகி எவ்வளவு வருடம் ஆச்சு?” என்று கேட்டார். “55 வருடம் ஆச்சு” என்று பெரியவர் பதில் சொன்னார். “இவ்வளவு சந்தோ~மாக இந்த வயதான காலத்திலும் இருப்பதன் இரகசியம் என்ன?” என்று வினவினார். அதற்கு அந்த பெரியவர் “எங்களுக்குள்ளே சண்டையே வந்ததில்லை” என்றார். “எப்படி சண்டையில்லாமல் வாழ முடிகிறது?” என்ற கேட்டதற்கு பெரியவர் சொன்னார். “எங்களுக்கு திருமணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் ஒரு குதிரையில் சென்று கொண்டிருந்தோம். சிறிது தூரம் போனதும் குதிரை முரண்டு பிடித்தது. நான் உடனே இறங்கி அந்த குதிரையைப் பார்த்து, ‘இது உனக்கு முதல் தடவை’ என்று மிரட்டிவிட்டு மீண்டும் குதிரையில் பயணம் செய்தேன். மறுபடியும் குதிரை முரண்டு பிடித்தது. நான் உடனே இறங்கி அந்த குதிரையை சாட்டையால் ஓர் அடி அடித்து ‘இது உனக்கு இரண்டாவது தடவை’ என்று மிரட்டினேன். சிறிது தூரம் சென்ற பின்பு குதிரை முரண்டு பிடித்தது. அப்போது ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தோம். நான் கீழே இறங்கினேன். என் மனைவியையும் கீழே இறங்கச்சொல்லிவிட்டு குதிரையை ஆற்றில் தள்ளிவிட்டு ‘இது உனக்கு கடைசி தடவை’ என்று சொன்னேன். அதைப்பார்த்து என் மனைவி பதறிப்போய் ‘அய்யோ பாவம்! என்ன இப்படி செய்துவிட்டீர்களே?’ என்றாள். நான் மெதுவாக என் மனைவியைப் பார்த்து, ‘இது உனக்கு முதல் தடவை’ என்றேன். அவ்வளவுதான், அதன்பின்பு ஒருநாள்கூட எங்களக்குள் சண்டை வந்ததில்லை” என்று சொன்னார் அந்த பெரியவர்.
பயத்தாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதாலும் வருவது உண்மையான அமைதியாகாது. உண்மையான அமைதி அன்பினால் மட்டுமே வரும். ஒருவருக்கொருவர் அடங்கி வாழும் குடும்பத்தை விட ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டு வாழும் குடும்பம் சிறந்த குடும்பமாகும். அன்பின் அடிப்படையில் தான் உயிர்களின் உறவுகள் அமைய வேண்டும். இல்லையேல் தொடர்பு மட்டும்தான் இருக்கும். எந்த குடும்பத்தில் அடுத்தவரின் மீது அன்பும், அக்கறையும் இருக்கிறதோ அந்த குடும்பம் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடையும்.
எல்லா உறவுகளுக்கும அடிப்படையாக இருப்பது அன்பே. நாம் யாரை அன்பு செய்கிறோமோ அந்த ஆளுக்கு ஏற்ப அன்பு பல வடிவங்களை எடுக்கின்றது. பல பெயர் களைப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக இரு நண்பர்களுக்கிடையேயுள்ள அன்பு நட்பு என்றும், பெற்றோர் பிள்ளைகள் மேல் காட்டும் அன்பு பாசம் என்றும், கணவன் மனைவியிடையேயுள்ள அன்பு காதல் என்றும், இறைவன் மேல் நாம் காட்டும் அன்பு பக்தி என்றும், இறைவன் நம் மீது காட்டும் அன்பு அருள் என்றும், தாய்மொழி மீது, தாய் நாட்டின் மீது நாம் காட்டும் அன்பு பற்று என்றும் பெயர். எனவே, அனைத்து உறவுகளுக்கும் அடிப்படை அன்பு என்பது புலனாகிறது.
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், ‘பாசத்திறற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?’ என்று கேட்க, மாணவன் ஒருவன்,” சார் நீங்க உங்க பொண்ணு மேலே வைச்சிருக்கிற அன்பு பாசம், உங்க பொண்ணு மேலே நான் வைச்சிருக்கிற அன்பு காதல்” என்று பதில் கூறினான்.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ‘இனிமேல் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபத்துக்காகவோ, சாவுக்காகவோ அன்றி, வேறு எந்தக்காரணத்திற்கும் விடுமுறை எடுக்கக்கூடாது’ என்றார். அப்போது ஓர் ஆசிரியர் ‘தனது சொந்தத்திருமணத்திற்குக்கூட ஓர் ஆசிரியர் விடுமுறை எடுக்கக்கூடாதா?” என்று கேட்டபோது தலைமை ஆசிரியர் ‘திருமணம் தான் விபத்தில் அடங்கிவிட்டதே” என்றார். திருமணம் ஒருசிலருக்கு ஒரு விபத்தாக அமையலாம்.
அரசமரத்திற்கு ஆணிவேர் எவ்வாறு அவசியமோ அரண்மனைக்கட்டடங்களுக்கு அஸ்திவாரம் எவ்வாறு மூலாதாரமோ அதுபோல ஒரு குடும்பத்திற்கு அன்பு அவசியம் ஆகிறது. குடும்பத்தின் அடித்தளம் அன்பு. குடும்பம் ஒரு கோவில். குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு குட்டி திருச்சபை என்று சொல்வார்கள். குடும்பத்தில் இறைவனைக் காண வேண்டும். குடும்பத்திலே நல்ல பண்புகள் கற்றுத் தரப்பட வேண்டும் குடும்பம் உறவுகளால் மணம்வீச வேண்டும்.சண்டை காரணமாக பிரிய எண்ணுகிற இறைவனையும், மனைவியையும் இணைக்கும் பேராற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு.
திருவிவிலியம் ஓர் அன்புக்காவியம். விவிலியத்தின் முதற்பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கடவுள் மனிதன் மீது கொண்ட எல்லையற்ற அன்பு இழையோடி நிற்பதைப்பார்க்கிறோம்.
அளவுகடந்த அன்பு காரணமாக ஆண்டவர் அழகு ஆடுகின்ற அவனியை உண்டாக்கினார். அனைத்தையும் படைத்த பின்னர் மனிதனைத் தமது சாயலாகப்படைத்தார். தமது அன்பிலும் நன்மைத்தனத்திலும் பங்கேற்கும் வாய்ப்பினைக்கடவுள் மனிதனுக்குக்கொடுத்தார். முதல் மனிதன் தவறியபோது ஆண்டவரே அவனைத்தேடிவந்தார். ஒரு தந்தை தன் மகனைத்தேடிச்செல்வதுபோல் ஆதாமைக்கூப்பிட்டு
எபி 1:1 இறுதியாக,காலம் நிறைவேற்றபோது பலமுறை பல்வேறு வகைகளில் முக்காலத்தில் இறைவாக்கினர் வழியாக தம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். ஆதைத்தான் தூய யோவான் தம் நற்செய்தி 3:16ல் “ஒரே பேரான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” என்கிறார். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் இறைத்தந்தையின் அன்பின் வெளிப்பாடே. நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் அன்பின் வழியாக நீங்கள் என் சீடர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.
+ காட்டிக்கொடுத்தவனையே தட்டிக்கொடுத்தது அன்பு
+ மனதார மறுதலித்தவரையே மன்னித்து தலைவராக்கியது அன்பு
+ நம்ப மறுத்தவர்களையும் நம்ப வைத்து நற்செய்தியின் தூதுவர்களாக்கியது அன்பு
+ அழிக்கத்துடித்தவர்களையும் அரவணைத்து ஆக்கப்பணிக்கு அனுப்பியது அன்பு
பிறரிடம் அன்போடு நடந்து கொள்கிறவர்கள் தான் உயிருள்ள மனிதர்கள், மற்றவர்கள் தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடுகள் தாம்” என்கிறார் வள்ளுவர்.
ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டை விட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை, “உன் மகன் நாசாமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!
இந்த அன்புக்கு இலக்கணமாக இருப்பவள்தான் தாய். “தாய்” என்றால் அன்பு என்று எல்லோருமே புரிந்து கொள்ள முடியும். இந்த தாயன்பு,
- தன்னையே அர்ப்பணிக்கும்
- தன்னையே மறந்து தன் பிள்ளைகளையே நினைக்கும்
- பிறருக்கு உதவி செய்யும்
- துன்பத்திலே பங்குகொள்ளும்
- பிள்ளைகளுக்காக பரிந்துபேசும்
இந்த குணநலன்கள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவள் தான் நம் அன்னை கன்னி மாயாள். இந்த அம்மாவின் அன்பு இறைவனின் அன்பைப்போன்றது. இவ்வுலகில் எல்லோரும் சுவைத்து இன்புறுவது நம் அன்னையின் அன்பை மட்டுமே.
ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: ‘சுவாமி என் மனைவி தங்கமானவள். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, அத்தான்-அத்தான் என தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15ஆம் தேதி ஆனபிறகு ‘போடா வாடா என்று கத்துவாள்’. காசு இருந்தால் அவன் அத்தான்: அது இல்லையென்றால் அவன் செத்தான்.
ஒருவர் தம் நண்பரிடம், ‘என் வீட்டில் ஒரே பிரச்சனை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை’ என்றார். நண்பர் அவரிடம், ‘நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு அவர், ‘நான் இரண்டு பேருக்கம் இடையே சமரசம் செய்கிறேன்’ என்றார்.
வேண்டாத மனைவி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல் ஒருவரை நமக்கு அடிப்படையில் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை எப்பொழுதும பிடித்துவிடும். ஒருவர் மீத வெறுப்புகொண்டோமென்றால் கருப்பு கண்ணாடி போட்டு பார்த்துகொண்டு எதைப்பார்த்தாலும் கருப்பாகத்தெரிவது போல மற்றவர்கள் நல்லது செய்தாலும் தீமையாகவே தோன்றும்.
50 ஆண்டுகால மணவாழ்க்கையை ஆடம்பரமாகக் கொண்டாடினர் தம்பதியர். பலர் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தனர். ஒருவர் கணவரிடம் தனியாக, “இத்தனை ஆண்டு திருமண வாழ்வில் உங்கள் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியது உண்டா?” என்று கேட்டார். அவர் சொன்னார். “இல்லவே இல்லை! என் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதேயில்லை. ஆனால் அவளைக் கொலை செய்துவிடவேண்டும் என்று பலமுறை தோன்றியுள்ளது. “விவாவகரத்து செய்துவிட வேண்டும் என்று தோன்றாவிட்டாலும் நம் நாட்டில் எத்தனைக் கணவர்கள் இந்தக் கணவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார்கள்! அப்படியில்லாவிட்டாலும் மனைவிக்குச் சமநிலை உரிமை தராமல் கொடுமைப்படுத்தும் கணவர்கள் எத்தனைப்பேர் நம்மிடையே உள்ளனர்.
அம்மா: ஏங்க, பையனை அடிக்கிறீங்க.
அப்பா: பாரு, நம்ம பயல. பரீட்சையில எருமைக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டிருக்காங்க. அதுக்குக் கூட பதில் எழுதத் தெரியல.
அம்மா: அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியல. உங்களுக்கு இன்னொரு வித்தியாசம் தெரியல.
அப்பா: என்ன சொல்ற
அம்மா: இது நம்ம பையன் இல்ல. பக்கத்து வீட்டு பையன்.

நீ எங்கே இருக்கிறாய்? என்று (தொ.நூ 3:9)அன்பு ததும்பக் கேட்டார்.
மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது (எசா 54:10)
உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன் (எரே 31:3)“இஸ்ராயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். அவர்களைக் கையிலேந்தியதும் நானே, பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து அன்புக் கயிறுகளால் கட்டி நடத்திவந்தேன்”.
எபி 1:1 இறுதியாக,காலம் நிறைவேற்றபோது பலமுறை பல்வேறு வகைகளில் முக்காலத்தில் இறைவாக்கினர் வழியாக தம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். ஆதைத்தான் தூய யோவான் தம் நற்செய்தி 3:16ல் “ஒரே பேரான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்” என்கிறார். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் இறைத்தந்தையின் அன்பின் வெளிப்பாடே. நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கும் அன்பின் வழியாக நீங்கள் என் சீடர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள்.
+ காட்டிக்கொடுத்தவனையே தட்டிக்கொடுத்தது அன்பு
+ மனதார மறுதலித்தவரையே மன்னித்து தலைவராக்கியது அன்பு
+ நம்ப மறுத்தவர்களையும் நம்ப வைத்து நற்செய்தியின் தூதுவர்களாக்கியது அன்பு
+ அழிக்கத்துடித்தவர்களையும் அரவணைத்து ஆக்கப்பணிக்கு அனுப்பியது அன்பு
பிறரிடம் அன்போடு நடந்து கொள்கிறவர்கள் தான் உயிருள்ள மனிதர்கள், மற்றவர்கள் தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடுகள் தாம்” என்கிறார் வள்ளுவர்.
ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டை விட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை, “உன் மகன் நாசாமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!
இந்த அன்புக்கு இலக்கணமாக இருப்பவள்தான் தாய். “தாய்” என்றால் அன்பு என்று எல்லோருமே புரிந்து கொள்ள முடியும். இந்த தாயன்பு,
- தன்னையே அர்ப்பணிக்கும்
- தன்னையே மறந்து தன் பிள்ளைகளையே நினைக்கும்
- பிறருக்கு உதவி செய்யும்
- துன்பத்திலே பங்குகொள்ளும்
- பிள்ளைகளுக்காக பரிந்துபேசும்
இந்த குணநலன்கள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவள் தான் நம் அன்னை கன்னி மாயாள். இந்த அம்மாவின் அன்பு இறைவனின் அன்பைப்போன்றது. இவ்வுலகில் எல்லோரும் சுவைத்து இன்புறுவது நம் அன்னையின் அன்பை மட்டுமே.
ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: ‘சுவாமி என் மனைவி தங்கமானவள். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, அத்தான்-அத்தான் என தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15ஆம் தேதி ஆனபிறகு ‘போடா வாடா என்று கத்துவாள்’. காசு இருந்தால் அவன் அத்தான்: அது இல்லையென்றால் அவன் செத்தான்.
ஒருவர் தம் நண்பரிடம், ‘என் வீட்டில் ஒரே பிரச்சனை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை’ என்றார். நண்பர் அவரிடம், ‘நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு அவர், ‘நான் இரண்டு பேருக்கம் இடையே சமரசம் செய்கிறேன்’ என்றார்.
வேண்டாத மனைவி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது போல் ஒருவரை நமக்கு அடிப்படையில் பிடிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை எப்பொழுதும பிடித்துவிடும். ஒருவர் மீத வெறுப்புகொண்டோமென்றால் கருப்பு கண்ணாடி போட்டு பார்த்துகொண்டு எதைப்பார்த்தாலும் கருப்பாகத்தெரிவது போல மற்றவர்கள் நல்லது செய்தாலும் தீமையாகவே தோன்றும்.
50 ஆண்டுகால மணவாழ்க்கையை ஆடம்பரமாகக் கொண்டாடினர் தம்பதியர். பலர் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தனர். ஒருவர் கணவரிடம் தனியாக, “இத்தனை ஆண்டு திருமண வாழ்வில் உங்கள் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியது உண்டா?” என்று கேட்டார். அவர் சொன்னார். “இல்லவே இல்லை! என் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதேயில்லை. ஆனால் அவளைக் கொலை செய்துவிடவேண்டும் என்று பலமுறை தோன்றியுள்ளது. “விவாவகரத்து செய்துவிட வேண்டும் என்று தோன்றாவிட்டாலும் நம் நாட்டில் எத்தனைக் கணவர்கள் இந்தக் கணவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார்கள்! அப்படியில்லாவிட்டாலும் மனைவிக்குச் சமநிலை உரிமை தராமல் கொடுமைப்படுத்தும் கணவர்கள் எத்தனைப்பேர் நம்மிடையே உள்ளனர்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச்செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது: அன்பு இழிவானதைச்செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். 1 கொரி 13:1-7
ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உம்மீது நீ அன்பு கூர்வது போல் உன் அயலான் மீதும் அன்பு கூர்வாயாக” என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது (கலா 5:13-14).
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில் அன்பு திரளான பாவங்களைப்போக்கும்” (1பேதுரு 4:8).குடும்பத்தில் கோலோச்சவேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு, பொறுமை, அனைத்திற்கும் மேலாக இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு (கொலோ 3:12-14).
அம்மா: ஏங்க, பையனை அடிக்கிறீங்க.
அப்பா: பாரு, நம்ம பயல. பரீட்சையில எருமைக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டிருக்காங்க. அதுக்குக் கூட பதில் எழுதத் தெரியல.
அம்மா: அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியல. உங்களுக்கு இன்னொரு வித்தியாசம் தெரியல.
அப்பா: என்ன சொல்ற
அம்மா: இது நம்ம பையன் இல்ல. பக்கத்து வீட்டு பையன்.
இறைவனை நம்பி வாழும் அன்னை
தாத்தாவுக்கு 110 ஆவது வயது பிறந்த நாள். அவரோட பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, “தாத்தா! ஆண்டவன் புண்ணியத்துல அடுத்த வரு~மும் உங்க பிறந்தநாளுக்கு உங்க ஆசீர்வாதம் பெறக்கூடிய பாக்கியம் எங்களுக்கு கிடைக்கணும்” னு ரொம்ப பணிவா சொல்ல, உடனே தாத்தா, “கவலைப்படாதீங்க, நிச்சயமா அது நடக்கும். ஏன்னா… நீங்களெல்லாம் சின்ன பிள்ளைதானே. அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது” ன்னாராம். நம்பிக்கைதான் வாழ்க்கை.
“யானைக்குப் பலம் தும்பக்கையில், மனிதனுக்குப் பலம் நம்பிக்கையில்” என்று ஆன்றோர் கூறுவது முற்றிலும் உண்மை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்று நம்பிக்கைகள் இருக்கவேண்டும். அவை தம் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, கடவுள் மீது நம்பிக்கை. தன்னம்பிக்கையில்லாதவர்கள் இருபது வயதில் அறுபதைக் கண்டு விடுவார்கள். மரணம் அவர்களை அடைவதற்கு முன் அவர்களே மரணத்தைச் சந்திப்பார்கள். மேலும் இத்தகையோர் தினந்தோறும் செத்து செத்து வாழ்வார்கள். அவர்கள் வாழ்வோ ஐயோ பரிதாபம்!
ஒருவனுக்கு தன்னம்பிக்கையைக் கொடுப்பது இறை நம்பிக்கையாகும். முனிதனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் முழு நிறைவை தம்மிலே காணமுடியாது. ஆனால் இறைவனில் நிறைவு காணமுடியும். ஏனென்றால், நாம் நிலையாக இம்மண்ணில் நிலைத்திருப்பதில்லை. ஒருநாள் முடிவு வரும். இறைவன் குறைகளே இல்லாதவர், என்றும் வாழ்பவர். ஆவரில் தான் நாம் நிறைவுகாண முடியும். எனவே அவரில் நாம் நம்பிக்கைக் கொள்ளவேண்டும்.
எவனொருவன் கடவுள் மீது நம்பிக்கையற்றவனாக இருக்கிறானோ அவன் நிச்சயமாக தன்மீது முழு நம்பிக்கைக் கொள்ளவும் மாட்டான், பிறர்மீதும் நம்பிக்கைக் கொள்ளமாட்டான். அத்தகையதோர் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாக மாறும்.
ஆனால் ஒரு கன்னி ஓர் ஆணின் (கணவனின்) துணையின்றி குழந்தையைப் பெறுவது இயலாத காரியம். எனவேதான் மரியாவோ வானதூதரிடம், ‘இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே’ என்று கேட்டார் (லூக். 1:34). சூசையின் துணையின்றியே தூய ஆவியினால் மரியா கன்னிமையில் இயேசுவை ஈனறெடுக்க முடியும்: ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற வானதூதரின் வார்த்தையை விசுவசத்து, ‘ஆகட்டும்’ என்று கூறி மரியா மீட்பின் தாயானார் (லூக். 1:35-38).
“கன்னி விசுவசத்தார்: கன்னி விசுவசித்துக் கருத்தரித்தார். உடலால் கருத்தரிக்குமுன் உள்ளத்தால் கருத்தரித்தார்” என்று அழகாகக் கூறியுள்ளார் புனித அகுஸ்தினார்.
மரியன்னையின் உண்மையான பேறு என்ன என்பதை எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அறிவிக்கின்றார். “ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும என்று விசுவசித்தவர் பேறு பெற்றவரே” (லூக். 1:45). மரியாவின் வாழவு முழுவதுமே ஒரு விசுவாசத் திருப்பயணம். இதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பேரிய சனிக்கிழமையன்றும் தனது நம்பிக்கையை இழக்காமல் இறைவன் மீது கொண்டிருந்த விசுவாசத்தில் அன்னை உறுதியாக இருந்தாள். இதற்காகவே கப்பூச்சின் சபையில் சொல்லப்படுகிற அன்னையின் மன்றாட்டு மாலையில் பெரிய சனிக்கிழமையன்றும் நம்பிக்கையோடு இருந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று சொல்கிறார்கள்.
“தூய கன்னியும் விசுவாசத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார்: தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பைச் சிலுவைவரை விடாது காத்து வந்தார்: இறைவனின் திட்டத்திற்கேற்பச் சலுவயின் அருகே நின்றார் (அரு. 19-25): தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற்றார்: தாம் பெற்றெடுத்த மைந்தனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார். தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் விசுவாச ஒளியில் நடந்து, விசுவாசத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். மரியாவின வாழ்வை நிர்ணயித்த இறையியல் சூத்திரம்: “கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை” (லூக்;.1:37).
இறைவனைவிட மேலானதும் உயர்வானதும் எதுவும் தன்னுடைய வாழ்வில் இல்லை என்று செயல்படுவதே உண்மையான விசுவாசம். ஆபிரகாம் தன் உயிரை விட மேலாகக் கருதி அன்பு செய்தது தன் தகன் ஈசாக்கை. ஆனால் அந்த மகனையும கடவுளின் சொற்படி எரிபலியாக்க முனைந்தது கடவுள் மீது அவர் கொண்ட விசுவாசத்தைக் காண்பிக்கிறது. எனவே தான் ‘விசுவாசத்தின் தந்தை’ என அழைக்கப்படுகின்றார்.
• இறைநம்பிக்கை கொண்டோர் நிறை உதவி பெற்று வாழ்வில் உயர்ந்துள்ளனர். “அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழுநம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும் அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை” (2அரச.18:5) என்று எசேக்கியா மன்னர் பற்றித் திருநூல் கூறுகிறது.
• அசீரிய படைத்தலைவன் தனது படைபலத்தை நம்பி அழிந்தான். எசேக்கியாவோ இறைநம்பிக்கை கொண்டிருந்ததால் அவனும் அவனுடைய நாடும் காப்பாற்றப்பட்டன. ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி ஒரே இரவில் ஓர் இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் அசீரிய படையினரைக் கொன்று குவித்தார்(2அரச. 19:35).
• நெடிதுயர்ந்து நின்ற கோலியாத்து தனது உடல் பலத்தையும் படைபலத்தையும் நம்பினான். தோல்விகண்டான். இளைஞன் தாவீதோ இறைவனில் நம்பிக்கை வைத்து மலைபோல் நின்ற கோலியாத்தை வீழ்த்தினான், நிலைகுலையச் செய்தான்.
எங்கெல்லாம் மக்களிடத்தில் விசுவாசம் இருந்ததோ அங்கெல்லாம் இயேசு புதுமை செய்தார். விசுவாசமில்லாத இடத்தில் அவரால் புதுமை செய்ய முடியவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள் பெரும்பாட்டினால் வருந்திய பெண் இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டுக் குணமடைந்தார். இயேசு அவரிடம், மகளே தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று’ என்றார்.(மத்.9:22)
புற இனத்தைச் சார்ந்த கனானனேயப் பெண்ணின் விசுவாசத்தைப் புகழ்ந்து, ‘அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்’ என்றார். அந்நேரமுதல் அவர் மகள் குணமாயிருந்தாள். (மத்.15:28).
இயேசுவைப் போல் கடலில் நடக்க முயன்ற இராயப்பர் கடலில் மூழ்கப்போகும் தருணத்தில் இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, ‘குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய்?” என்று அவரைக் கடிந்து கொண்;டார் (மத்.14:31).
இயேசு தமது சொந்த ஊராகிய நாசரேத்தில், “பிணியாளர் ஒரு சிலர் மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர, ஒரு வல்ல செயலையும் செய்ய முடியவில்லை, அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். (மாற்.6:5-6).
ஒர் ஊரில் ஒரு பெரியவா இருந்தார். ஒரு நாள் அவரைத்தேடி ஒருவர் வந்தார். வந்தவர் ‘ஐயா… நான் கடவுளை முழுமையாக நம்புகிறேன என்றார்’. ‘அந்த நம்பிக்கை எப்படி வந்தது?’ என்ற பெரியவர்கேட்டார். அதற்கு அவர் ‘எனக்கு 10 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தினமும் கடவுளிடம் செபித்தேன். இறைவனுடைய அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆதனால் கடவுளை நம்புகிறேன்’ என்றார்.
பெரியவர் அவரைப்பார்த்து ‘இருந்தாலும் உன்னுடைய நம்பிக்கை முழுமையான நம்பிக்கையாக தெரியவில்லையே’ என்றார். ‘எப்படி சொல்றீங்க?’ என்று கேட்டார். அந்த மனிதர் ‘மறுபடியும் இன்னொரு குழந்தை பாக்கியம் கேட்டு கடவுளிடம் செபியுங்கள்’ என்று கூறினார் பெரியவ். அவரும் அப்படியே செய்து பத்து மாதங்கள் கழித்து வந்தார். அவரிடம், ‘என்ன கடவுளை நம்புறீங்களா?’ என்று கேட்டார் பெரியவர்.
‘சும்மா இருங்க, கடவுளாவது, கத்திரிக்காயாவது! நூன் கடவுளை நம்பமாட்டேன்’ என்றார். ‘ஏன் கடவுளை நம்ப மறுக்கிறீங்க?’ என்று பெரியவர் கேட்க, நான் இரண்டாவது குழந்தையை கேட்டேன். கொடுக்கவே இல்லையே என்று கூறினார் அந்த மனிதர்.
‘கடவள் மீது நம்பிக்கை’ என்பது எதிர்பார்ப்புகளை மையமாக வைத்து அமைவது அல்ல. அது உள்ளத்தின் தேவையாக இருக்க வேண்டும். இயல்பாகவே இருக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு மனிதன் கடவுளிடம் ஒரு பூவையும் ஒரு வண்ணத்துப்பூச்சியையும் கேட்டான். ஆனால் கடவுள் ஒரு கள்ளிச் செடியையும், ஒரு கம்பளிப் புழுவையும்; தந்தார். கடவுள் ஏன் தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கவலை ஒரு பக்கம் அவனுக்கு இருந்தாலும் பொறுத்துக்கொண்டான். சிறிது நாட்கள் கழித்து கடவுள் கொடுத்த இரண்டையும் பார்க்க நினைத்தான். என்ன ஆச்சரியம்! கள்ளிச்செடியிலிருந்து ஓர் அழகான பூ பூத்திருந்தது. கம்பளிப் புழு அழகான வண்ணத்துப் பூச்சியாக உருவெடுத்திருந்தது.
அன்புக்குரியவர்களே! எதைத்தர வேண்டுமென்று இறைவனுக்குத் தெரியும். இன்றைய முட்கள் தான் நாளைய பூக்கள். நமக்கு என்ன தேவை என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை இறைவனிடம் கையளிப்பவர்களுக்கு சிறந்தவற்றை இறைவன் தருவார். இதுவே இறை திட்டத்திற்கு நம்மை கையளிப்பதன் தாரக மந்திரம்.
நம்பிக்கை என்பது ஒரு கொடை. இது வளர்க்கப்பட வேண்டும். இறைப்பற்றுடையவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், கல்வியறிவு அற்ற மக்களுக்கும் இறைவன் பால் நம்பிக்கையைத்தூண்ட வேண்டும். எடுத்துச் சொல்லாமல் தானே இது வராது. திருத்தூதர்கள் சாதாரண மீனவர்கள். இயேசு அவர்களைத் தெரிந்தெடுத்து, அநேக நற்செய்தி போதனையாலும்;, அருங்குறிகளாலும் அவர்களிடையே நம்பிக்கையை வளர்த்தார். அப்படி இருந்தும் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றவர் மறுதலித்தார். மூன்றாமவர் கண்ணால் காணாமல் நம்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். அப்படிப்பட்ட சிலர் இன்றும் உள்ளனர்.
இன்றைய முதல் வாசகத்தில் முதல் கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஒரு மனப்பட்டு விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் இறை வேண்டலிலும் அப்பம் பிட்குதலிலும் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்தனர் என்பதை அறிகிறோம். எனவே தான் இன்றைய திருச்சபைகளில், அன்பியங்கள் உருவாக்கப்பட்டு ஆதிக்கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையினை கைக்கொண்டு வாழ திருச்சபை அழைக்கிறது.
திருமணமான மூன்று குடும்பத்தலைவர்கள் திருமண வாழ்க்கை அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். மூவரும் தத்தம் மனைவியருடன் பார்த்த திரைப்படக் காட்சிகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். கர்ப்பிணி பெண்கள் பார்க்கும் திரைப்படங்கள் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
முதல் நபர் இருவரைப் பார்த்து, “நானும் என் கற்பிணி மனைவியும் “இரு மலர்கள்” என்ற திரைப்படத்திற்குச் சென்றிருந்தோம். என் மனைவிக்கு மலர்கள் போன்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன” என்றார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த இரண்டாவது நபர். “நான் கர்ப்பிணியாக இருந்த என் மனைவியை அழைத்துக்கொண்டு போய் “அம்பா, அம்பிகா, அம்பாலிகா” என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன், என் மனைவி மூன்று அழகிய பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்” என்றார்.
இரண்டு நபர்களும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது நபர் மயக்கமுற்றுக் கீழே விழுந்தான். மூச்சு தெளிந்து எழுந்தபோது, “என் மனைவி ஐந்து மாத கர்ப்பிணயாக இருந்தபோது நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு , ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்;’என்ற படத்தைப் போய் பார்த்தேன்’ என்றான். இதைக் கேட்டபோது மற்ற இருவரும் எவ்வளவு அதிர்ச்சியுற்றிருப்பர்?
ஒரு பாட்டி மிக்கேல் வானதூதரையும் தொட்டு வணங்குவார், அவருக்கு அடியில் இருக்கும் லூசிப் பேயையும் தொட்டு வணங்குவார். அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டதற்கு, அவர், “நான் செத்த பிறகு எங்கே போவேன் என்று எனக்குத் தெரியாது. மோட்சத்துக்குப் போனால் மிக்கேல் சம்மனசு கவனித்துக் கொள்வார். நரகத்துக்குப் போனால் லூசிப் பேய் கவனித்துக்கொள்ளும். இரண்டு பேரையும் கையிலே போட்டுக்கிறது நல்லது” என்றாராம்.
இஸ்ரயேல் மக்களிடம் இத்தகைய இருமனப்பட்ட நிலை குடிகொண்டிருந்தது. யாவே என்ற உண்மையான கடவுளையும் வழிபட்டனர். அதே நேரத்தில் பாகால் என்ற போலியான கடவுளையும் வழிபட்டனர். எனவே. இறைவாக்கினர் எலியா அவர்களிடம், “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால் அவரைப் பின்பற்றுங்கள். பாகால் கடவுள் என்றால் அவன் பின்னே செல்லுங்கள்” (1 அர 18:21) என்றார். சிலைவழிபாட்டைத் ‘தீட்டு’ என்றழைக்கிறார் கடவுள். “நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்” (எசேக் 36:25). கடவுள் அத்தகைய மூட நம்பிக்கைகளை ‘அருவருப்பான செயல்கள்;’ என்று கூறி அவற்றை வன்மையாகக் கண்டித்தார்.
சோனியா பிரதமர் ஆவார், வாஜ்பாய் பிரதமர் ஆவார் என்று நாட்டிலுள்ள சோதிடர்கள் ஒவ்வொரு விதமாக சோதிடம் சொன்னார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் சுத்தமான மன்மோகன்சி;ங் பிரதமரானார். இதற்குப் பின்னும் சோதிடத்தை நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் நெஞ்சுப் பொறுக்குதில்லையே!
ஒரு சோதிடர் ஒருவரிடம் “உங்கள் ஜாதகத்தில் தோ~ம் இருக்கிறது. உங்களுக்குத் திருமணம் நடந்தால் அந்தத் தோ~ம் போய்விடும்” என்றார். அவரும் திருமணம் செய்தார். சில மாதங்கள் கழித்துச் சோதிடர் அவரைப் பார்த்தபோது “உங்கள் தோ~ம் போய் விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆம் , சந்தோ~ம் போய்விட்டது” என்றார். தோ~த்திற்கு மாற்று மருந்து கடவுள் நம்பிக்கையே! “ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்: உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது” (திபா 91:9-10).
காதலர்கள் இருவர் நடந்து சென்றபோது, காதலியின் காலில் ஒரு முள் தைத்துவிட்டது. காதலன் அம்முள்ளைப் பிடுங்கி “சனியன் பிடிச்ச முள்ளே! உனக்குக் கண் இல்லையா? எப்படி நீ என் காதலியின் பூப்போன்ற காலில் குத்தலாம்?” என்று கூறிக் கோபத்துடன் அம்முள்ளை வீசி எறிந்தான். அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றதும், மூன்று மாதம் கழித்து அன்றைய காதலர்களான, இன்றைய கணவனும் மனைவியும் நடந்து சென்றனர். மனைவியின் காலில் முள் ஒன்று தைத்துவிட்டது. கணவன் மனைவியைப் பார்த்து, “சனியன் பிடிச்சவளே! உனக்குக் கண் இல்லையா? வழியிலே கிடக்கிற முள்ளைப் பார்த்து நடக்கத் தெரியலை?” என்று கோபத்துடன் திட்டினான். திருமணத்திற்குப் பின் இடம் பெயர்ந்து மனைவியிடத்தில் புகுந்துவிட்டது. இதுதான் சனி பெயர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு! மனிதர்கள் தான் மனிதர்களுக்குச் சனியன்கள்: சூலம் , இராகு காலம், எமன்கள்! நமது மனம் தூய்மையாக இருந்து நாம் அடுத்தவர்களுக்கு எப்போதும் நன்மை செய்தால் நமக்கு ஆயுள் முழுவதும் முகூர்த்தநாள்: சுபதினம்.
ஒருவர் நடந்து சென்றபோது அவரது வலது காலின் பெருவிரல் ஒரு கல்லின் மீது மோத அவ்விரலிருந்து இரத்தம் வந்தது. அவர்தன் தலைமீது அடித்துக்கொண்டு “எல்லாம் என் தலைவிதி” என்றார். அவ்வழியே வந்த மற்றொருவர் அவரிடம், “ஐயா! ஊங்கள் காலின் விரல் மிகவும் மென்மையானது: கல்லோ கடினமானது. மேன்மையான பொருள் ஒன்று கடினமான பொருள் ஒன்றி;ன் மீது மோதினால் மென்மையான பொருள் சேதமடையும். இது இயற்பியல் விதி. துலைவிதியல்ல” என்றார். இயற்பியல் விதிப்படி நடப்பதையெல்லாம் தலைவிதி என்று கூறுவது பகுத்தறிவாகாது. விதியையும் மதியால் வெல்லலாம்: முயற்சி திருவினையாக்கும்.
இன்ற பலரும் பல்வேறு மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாயிருக்கின்றனர். இன்றைய சமுதாயத்தில் மூட நம்பிக்கைகளிலும் குருட்டு மனப்பான்னையிலும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுகிறான். முகூர்த்தம்;, சகுனம், பதின்மூன்றாம் எண், எதிர் காலத்தைக் கணிக்க ஜோதிடம், நாடி ஜோதிடம் ,கை ரேகை பார்த்தல், வாரபலன் வாசித்தல், ஜாதகம் பார்த்தல், கிளிஜோதிடம் கேட்டல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வரிசையும் நீண்டு கொண்டே போகும். இவை அனைத்தும் குழப்பங்களையே அதிகரிக்கச் செய்யும். எதிர்காலத்தை முழுமையாக தெரிந்தவர் கடவுள் மட்டுமே. கடவுளே காலத்தை வென்றவர். காலத்துக்குமேற்பட்டவர்.
ஒரு சிலர் கடவுளின் மீது மிதமிஞ்சிய நம்பி;க்கை வைக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார் என்னும் அசட்டுத் தைரியத்துடன் வாழ்கின்றனர். இத்தகையவர்கள் கடவுளைச் சோதிக்கின்றனர்.
கிறிஸ்துவை அலகை கோபுர உச்சியிலிருந்து கீழே குதிக்கும்படி கேட்டபோது அதனிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என எழுதியுள்ளது” என்றார் (மத் 4:7), மருத்துவர் உதவியின்றிச் செபத்தினால் மட்டுமே நோயாளியைக் குணப்படுத்த முடியும் என்றால் எதற்காகக் கிறிஸ்து “{நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை” (மத் 9:12) என்று கூறினார்? ஏதற்கெடுத்தாலும் புதுமைகளை எதிர்பார்ப்பது விசுவாசக் குறைவே அன்றி, விசுவாச நிறைவு ஆகாது.
பலர் அகலக் கால் வைக்கின்றனர். வரவுக்குமேல் செலவழிக்கின்றனர். பேரிய தொழில் ஆரம்பிக்கின்றனர். கந்து வட்டிக்குக் கடன் வாங்குகின்றனர். ஆதன்பிறகு அவர்களால் வாழ்க்கையில் எழுந்து நிமிர முடிவதில்லை. கடவுள் அவர்களைச் சோதித்து விட்டதாகக் குறை கூறுகின்றனர். கடவுளா அவர்களைச் சோதித்தார்? இல்லை அவர்கள் தான் கடவுளைச் சோதித்தனர். மிதமிஞ்சிய நம்பிக்கை.
கடவுள் நம் வாழ்வில் துன்பமே வராமல் தடுக்கமாட்டார். மாறாகத் துன்பத்தின் நடுவிலும் நமது கரம் பிடித்து கரையேற்றவார். சுமைகளையும சுகமான சுமைகளாக மாற்றுவார் என்பது உறுதி. வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு தந்துள்ள மிகப் பெரிய கொடை. உலக முடிவைப் பற்றி கவலைப்படாமல் நமது வாழ்வின் முடிவை மனதில் வைத்து வாழ்வதற்குள் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்தால் நன்மை பயக்கும்.
6. அன்னையும் செபமும்
ரயிலில் நான்கு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டே~னில் ஒரு வயதான பெரியவர் ஏறினார். நான்கு நண்பர்கள் இருந்த பெட்டியில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவர் செபமாலையை எடுத்து செபிக்க ஆரம்பித்தார். இதைக்கண்ட இளைஞர்கள் ‘இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு ஆசாமியா?’ என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த பெரியவரிடம் “பெரியவரே! காலம் மாறிப் போச்சு! இது அறிவியல் காலம். கடவுளால் முடியாததுகூட மனுசன் செய்றான். இப்படிப்போய் நீங்க அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, சும்மா செபமாலை சொல்றீங்களே! உங்க அட்ரசை கொடுங்க. நாங்க நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு புத்தகமெல்லாம் அனுப்பி வைக்கிறோம்” னு சொல்லி அந்த பெரியவரை கேலி பண்ணுனாங்க.
அந்த பெரியவர் தனது முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தார். அதைப்படித்து பார்த்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “டாக்டர் லூயி பாஸ்டர், அறிவியல் ஆய்வு மையம், பாரீஸ்” னு எழுதியிருந்தது. இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
1208 ஆம் ஆண்டில் புனித தோமினிக் திருச்சபைக்கு தினமும் செபமாலை செபிக்கும் முறையை முதன முதல் கற்பித்தார். லூர்து நகரிலும், பாத்திமாவிலும் முக்கியமாக செபமாலை செபிப்பதை பரிந்துரைக்கவே அன்னை மரி காட்சிகளும் செய்திகளும அருளினார். அன்னைமரி புனித தோமினிக்கிடம் “செபமாலை உத்தரியம் இவைகளைக் கொண்டு நான் ஒருநாள் உலகைக் காப்பாற்றுவேன்” என்று வாக்களித்தார். அன்னைமரி புனித தோமினிக்கிடமும், முக்தி ஆலனிடமும் “தேவ இரகசியங்களை தியானத்துப் பக்தி உருக்கத்துடன் செபமாலை செபிப்பவர் துர்பாக்கியத்தால் மேற்கொள்ளப்படமாட்டார். இறைவன் அவரை தண்டிக்கமாட்டார். அகால மரணத்திற்கு ஆளாகமாட்டார். அருள் நிலையில் வாழ்ந்;து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவார்” என்று வாக்களித்திருக்கிறார். இறைவனின் சினத்தைத் தணித்து இரக்கத்தை இறக்கிக் கொள்ள செபமாலை ஒன்றே வழி.
தாவீது, குருவிடம் “உண்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்க, “தூய அப்பமே”என்று குரு பதிலளிக்க தாவீது மீண்டும் குருவிடம் “ஈட்டியோ, வாளோ உள்ளதா?” என்று கேட்க தன் கவணைக்கொண்டு கொன்று போட்ட பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள் இருப்பதை குரு சுட்டிக்காட்டினார். அதற்கு தாவீது “அவ்வாளுக்கு நிகரானது வேறல்ல. அதை எனக்குத் தாரும்” என்று கேட்டார். பழைய ஏற்பாட்டின் இந்நிகழ்வு செபமாலை பக்திக்கு ஒப்பிடப்படுகிறது. நாம் சோதனைகளை வல்லமையுடன் எதிர்கொள்ள ஈட்டியோ, வாளோ உள்ளதா என்று அன்னை மரியாவிடம் கேட்கிறோம். அன்னை மரி “அலகையின் தலையை தம் குதிங்காலால் நசுக்கிய பெண்ணின் வாள் இதோ” என்று செபமாலையை நமக்கு அளிக்கிறார்.
நரக சக்திகளின் தாக்குதல்களிலிருந்து போராடி வெற்றி பெற அன்னையின் பிள்ளைகளி;ன் கரங்களில் ஏந்த வேண்டிய வல்லமையான ஆயுதம்-செபமாலை என்ற வாள்தான்.
+ செபமாலையின் திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் செபமாலையைப் பற்றி 9 திருமடல்கள் எழுதினார்.
+ திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2002-2003ஐ செபமாலை ஆண்டாக பிரகடணம் செய்து ‘கன்னிமரியின் செபமாலை’ என்ற ஒப்பற்ற திருமடல் எழுதினார்.
+ தினமும் 15 செபமாலை செபிக்கும் பழக்கம் உள்ள திருத்தந்தை 23ஆம் அருளப்பர் 38 முறை அன்னை மரியைப் பற்றியும் செபமாலையைப் பற்றியும் மறையுரையாற்றியுள்ளார்.
+ உங்கள் உள்ளங்களில் இல்லங்களில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் எனில் தினமும் மாலையில் ஒன்றுகூடி செபமாலை செபிக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர்.
செபமாலை சமாதானத்துக்கான செபம் என்று திருத்தந்தையர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இப்போது உலகெங்கும் பயங்கரவாதமும் இரத்தம் சிந்தி மானிடர் மடிவதும் அன்றாட நிகழ்வுகள். செப்டம்பர் 11,2001 முதல் அலகையின் தீவரவாதம் அதிகரித்து புதிது பதிதாக வன்முறைகள் வெடித்து உலகம் அழிவை நோக்கி விரைந்து செல்கிறது. செபமாலை செபிக்கும் பழக்கம் திருச்சபையில் குறைந்துவிட்டது என்பதை சுட்டிக்காடடிய திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் திருச்சபை மீண்டும் செபமாலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். செபமாலை தேவ இரகசியங்களில் இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு, விண்ணேற்றம், இறையன்னையின் வாழ்வு, இறப்பு, விண்ணேற்பு இவற்றை தியானிக்கிறோம்.
ஆலயத்தின் பக்கம் அதிகம் செல்லாத கிறிஸ்தவ மீனவர் ஒருவர், ஒருமுறை மற்ற மதத்தைச் சார்ந்த தம் நண்பர்களோடு மீன்பிடிக்கச் சென்றார். கடலுக்குள் படகு சென்ற வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், பெரும் புயல் காற்றும் வீச ஆரம்பித்தது. படகில் பயணம் செய்தவர்கள் உயிருக்குப் பயப்பட ஆரம்பித்தனர். தங்கள் கடவுளை நோக்கி செபிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தக் கிறிஸ்தவரோ செபிக்கத் தெரியாததன் காரணமாக அமைதியாக இருந்தார். மற்ற மதத்தவர்கள் கிறிஸ்தவரைப்பார்த்து “நீயும் உன் கடவுளிடம் செபி, ஏதாவது உதவி கிடைக்கும்” என்றனர். அவரோ “எனக்கு செபித்துப் பழக்கமில்லை” என்றபோது மற்றவர்கள், “இது உயிருக்குப்போராடும் நேரம்: எதையாவது சொல்லிச்செபி” என்றனர். அவரும் “கடவுளே கடந்த பல ஆண்டுகளாக உம்மிடம் எதையும் கேட்டு நான் தொந்தரவு செய்ததில்லை. இந்தப் புயலை மட்டும் அடக்கிவிட்டீர் என்றால் அடுத்து வருகிற ஆண்டுகளிலும் நான் உம்மை தொந்தரவு செய்யமாட்டேன் என்று வாக்குறுதி தருகிறேன். எனவே, இந்தப் புயலை அடக்கும்” என்று செபித்தாராம்.
இந்த மீனவரைப்போலத்தான் நம்மில் பலரும்! துன்ப துயர நேரங்களில் தான் இறைவனை அதிகமாகத் தேடுகிறோம். ஓவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனிடம் செபிக்க தயங்குகிறோம். காலையிலும் மாலையிலும் தினந்தோறும் இயேசு செபித்தார். லூக்கா நற்செய்தியின்படி இயேசுவினுடைய பணி வாழ்வின் முதல் நிகழ்வும் (திருமுழுக்கு பெறுதல் லூக்கா 3:21) கடைசி நிகழ்வும் (“தந்தையே, உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” லுக் 23:46) செபம்தான். தொடக்கக் கிறிஸ்தவர்கள் தவறாது கோவிலில் கூடி இறைவேண்டலில் நிலைத்திருந்தனர் (திப 2:42, 46). புனித வின்சென்ட் தே பவுல் ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணி முதல் ஏழு மணி வரை செபித்தார். இவர்களைப்போல நாமும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செபிக்கத் தயாராக இருக்கிறோமா?
கிறிஸ்துவைப்போல் நமது வாழ்வையும் செப வாழ்வாக மாற்ற வேண்டும். இறைவனுடன் என்றும் உரையாடி இன்பகானம் எழுப்பும் இனிய வாழ்வாக மாற்ற வேண்டும். செபவாழ்வு என்பது ஏதோ சில குறிப்பிட்ட செபங்களைக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்வதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. செபவாழ்வு என்பது நமது இதயத்தை இறைவன் பால் எழுப்புவது. எந்நேரமும் இறைவன் முன்னிலையில் வாழ்வது. இறைவனுடன் என்றும் உரையாடுவது.
உருக்குலைய உழைக்கும் போதும் உறங்கும் போதும், நண்பர்களோடும் அன்பர்களோடும், உரையாடும் போதும் ஓய்வுபெறும் போதும் மகிழ்ச்சிக் கடலில் மகிழ்ந்தாடும்போதும் அமைதியற்றுத் தவிக்கும்போதும் கூட செபவாழ்வு வாழமுடியும். ஏன் நம் அன்றாட அலுவலுக்கிடையிலும் செபிக்கமுடியும். புனித பவுல் கூறுவது போல், ‘நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிமைக்காகவே செய்யுங்கள’ -1கொரி 10:31. அவ்விதம் செய்யும் போது உண்மையில் நாம் செபவாழ்வு வாழ்கிறோம். இறைவன் பால் நம் இதயத்தை எழுப்புகிறறோம்.
நமக்கு வேண்டிய வரங்களைக் கேட்பதுதான் செபம் என்பதல்ல, செபம் என்பது ஆண்டவரைப் புகழ்வதில் அவருக்கு நன்றி சொல்வதில், பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதில் அடங்கியிருக்கிறது. மன்றாட்டு முயற்சி செபத்தின் இறுதிப்படியே ஒழிய அதுதான் செபம் என்பதல்ல. வார்த்தைகள் இன்றிகூட செபிக்கமுடியும்.
ஆர்ஸ் நகர் பங்குக் கோவிலுக்கு ஒருவர் வழக்கமாக வந்து கோவிலில் திவ்ய நற்கருணைப் பேழைக்கு முன் நெடுநேரம் அசைவின்றி அமர்ந்திருப்பது வழக்கம். இதைக் கண்ணுற்ற பங்குத்தந்தை ஜான் மரிய வியான்னி அடிகளார் அம்மனிதனை நோக்கி இவ்வளவு நீண்ட நேரம் கோவிலில் என்ன செய்கிறீhகள் என்று கேட்டார். அம்மனிதன் கூறுவார், ‘நான் சேசுவை நோக்குகிறேன். சேசு என்னை நோக்குகிறார்’ என்று. வார்த்தைகள் எதுவுமின்றி தன் இதயத்தை இறைவன் பால் எழுப்பினார் அந்த எளிய மனிதர். இதுதான் உண்மையான உயர்வான செபவாழ்வு.
வுhயவ ளை றால வை ளை ழகவநn ளயனை வாயவ in pசயலநச வை ளை டிநவவநச வழ hயஎந hநயசவள றiவாழரவ றழசனள வாயn வழ hயஎந றழசனள றiவாழரவ hநயசவள.
கடவுளைவிட சக்தி வாய்ந்த மனிதரை எனக்கு தெரியும் - வியான்னி. அவர்தான் செபிக்கத்தெரிந்த மனிதர்.
தொடக்க கிறிஸ்தவர்கள் குழுக்களாகவும், தனித்தனியாகவும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்ததை லூக்கா ஆங்காங்கே எடுத்துரைக்கிறார். காரணம், முழுமையான கிறிஸ்தவ வாழ்விற்கு இவையிரண்டுமே அவசியமானவை. ஆலயத்தில் குழுவாகச் செபித்துவிட்டு வீட்டில் தனியாக செபிக்க மறுப்பதும், அல்லது வீட்டில் தனியாக செபிக்கிறேன் என்று சொல்லி ஆலயத்தில் மற்றவர்களோடு சேர்ந்து செபிக்க மறுப்பதும் சரியல்ல. எனவே தொடக்கக் கிறிஸ்தவர்களைப் போல இறைவேண்டலின் முக்கியத்துவத்தை நம் வாழ்வில் உணர்ந்து அதில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல: அவசியமானதும் கூட! ஒரு மனிதன் வேலைசெய்யும்போது அவன் மட்டுமே வேலை செய்கிறான். ஆனால் அதே மனிதன் செபித்துவிட்டு வேலைசெய்யும் போது கடவுளும் அவனோடு வேலை செய்கிறார் என்பதை உணர வேண்டும். அதுமட்டுமல்லாமல் செபிக்கின்றபோது வாழ்வின் துன்பங்களையும் துயரங்களையும் வெற்றி கொள்வதற்கான வழியைக் கண்டு கொள்கிறோம்.
மார்க்கோனி கடவுள் நம்பிக்கையில்லாதவராக வாழ்ந்த சூழ்நிலையில் செபிப்பவர்களை கேலி செய்வாராம். “எங்கேயோ இருக்கிற கடவள் நீங்கள் முணுமுணுக்கிற செபங்களை எவ்வாறு கேட்க முடியும்?” என்று சொல்வாராம். சிறிது காலம் கழித்து வானொலிப்பெட்டியை அவர் கண்டுபிடித்தார். பல மைல் தூரத்திற்கு அப்பால் அவர் பேசிய பேச்சை மக்கள் கேட்டனர். அப்போது தான் அவருக்கு ஓர் உண்மை உதயமாயிற்று. சாதாரண மனிதனாகிய தான் உருவாக்கிய இந்த வானொலிப்பெட்டி வழியாக பல மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களோடு உறவாட முடிகிறதென்றால் கடவுளும் மக்களுடைய செபத்தைக்கேட்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? ஷநமது செபம் கேட்கப்படுகின்றதா, இல்லையா என்ற சந்தேகத்தோடு செபிப்பவர்களுக்கு மார்க்கோனியின் நிகழ்வு ஒரு பதிலாக அமைகிறது.

அமைதியில் ஓர் அனுபவம்
ஒரு முதியவர் தன் பங்குத் தந்தையிடம் சென்றார். அவரைப் பார்த்து “தந்தையே என் வீட்டு அருகில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மூன்று நாட்களுக்கு முன் பவுல் அடிகளாரின் திருமடல்களை எல்லாம் இரவு முழுவதும் சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் தான் புனித சவேரியார் என்று நினைத்துக்கொண்டாள். பகலும் இரவும் விடாது போதித்துக்கொண்டேயிருந்தாள். உரத்த குரலில் இரவு முழுவதுமட பாடிக்கொண்டே இருந்தாள். என்னால் தூங்க முடியவில்லை. கண் மூடி ஒரு வாரமாகிறது. இந்தக் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் சுவாமி” என்று கெஞ்சி மன்றாடினார் அந்த முதியவர்.
பங்குத்தந்தை அவளைத் தன்னிடம் அனுப்புமாறு கூறினார். அவளை முதியவர் அழைத்து வந்தார். அவளிடம் மூன்று நிமிடம் தனிமையில் பேசி அனுப்பிவிட்டார். ஒரு வாரம் கழிந்தது. முதியவர் மலர்ந்த முகத்துடன் புன்முறுவலுடன் பங்குத் தந்தையிடம் வந்தார். “சுவாமி உங்களிடம் அழைத்து வந்தேனே அடுத்த வீட்டுப்பெண், அவள் பேசி ஒரு வாரமாகிறது. சத்தமே இல்லை, அமைதியாக இருக்கிறாள். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஓன்றே ஒன்று அறிந்து கொள்ள ஆசை. அவளிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார். பங்குத்தந்தை, “அவளை தான் கன்னிமரியாள் என்று நம்ப வைத்தேன்” என்று புன்னகையுடன் கூறினார்.
இந்த உலகில் பிறர் பேசி சாதித்ததை அன்னை பேசாமல் சாதித்தாள். கன்னி மரியாளின் வாழ்வைப் படிப்போமானால் அவள் அதிகம் பேசியதாகவே இல்லை. அமைதியாக இருந்தாள். இறைவனோடு ஒன்றித்து செபித்து வந்தாள். கர்த்தருக்குத் தாயாக வேண்டும் என்ற செய்த கன்னி மரியாளுக்கு அறிவிக்கப்படுகிறது. கன்னி மரியாளோ “இதோ ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்றாhள். இயேசு கன்னி மரியின் வயிற்றில் தூய ஆவியின் ஆற்றலால் கருவாகி உருவாகி பிறக்கிறார். வானோர் படைத்திரள்
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோர்க்குஅமைதி உண்டாகுக” என்று கடவுளைப் பார்த்து புகழ்;ந்தது.
இதனைக் கேட்ட இடையர் குழாம் விரைந்து மரியாளையும், யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றி தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். ஆனால் மரியாள் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தாள். யெருசலேம் வழக்கப்படி குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்கத் தூக்கிச் செல்கிறார்கள். சிமியோன் குழந்தையை கையில் ஏந்தி மரியாளை நோக்கி “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற அவ்வார்த்தைகளை அமைதியாகத் தியானிக்கிறாள்.
12 வயது சிறுவன் யெருசலேம் தேவாலயத்தில் காணாமல் போய் விடுகின்றார். மூன்று நாட்கள் அலைந்து கண்டுபிடிக்கிறாள் கன்னி மரியாள். மகனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்தாய், இதோ பார் உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள். இயேசு “ஏன் என்னைத் தேடினீர்கள்?” என்று கேட்கிறார். எப்படி இருக்கும் அத்தாய்க்கு! கன்னி மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
இயேசு பெருமான் மக்களோடும் சீடர்களோடும் உரையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு அவருடைய தாய் வந்திருப்பதை சீடர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “யார் என் தாய்?; என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் தந்தையும்” என்ற சொல்லைக் கேட்கும் கன்னி மரியாள் திகைத்துப்போனாலும் அமைதியாக தியானித்துக்கொண்டு இருக்கிறாள். இயேசுவைக் கொடியவர்கள் பிடித்து அடித்து துன்புறுத்திக் கொடுமைப்படுத்துகிறார்கள். தாயின் உள்ளம் தவிக்கிறது. அவரைக் காப்பாற்றத்துடிக்கிறது. எனினும் அனைத்தையும் கண்ணால் கண்டும் கூட அனைத்தையும் தியானித்தவராய் வீரத்தாயாக வெற்றி நடை போடுகிறாள்.
இந்நிலை சாதராரண நிலை அல்ல. ஆன்மீக வாழ்வின் உயரிய, உன்னத எழிலார்ந்த நிலை. நம் வாழ்விலும் என்ன நேர்ந்தாலும் இறைவார்த்தையை இதயத்தில் இருத்தி தியானித்தவாரே வாழக் கற்றக்கொள்ளும்போதுதான் நாமும் மகத்தான காரியங்களை சாதிக்க முடியும், சரித்த்pரம் படைக்க முடியும். சகாப்தத்தை உருவாக்க முடியும். சாதனை புரிவது, சரித்திரம் படைப்பது, சகாப்தத்தை உருவாக்குவது செயல்களால் மட்டுமல்ல ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தாலும் உருவாக்கலாம்.
ஒரு பெண்: என் வீட்டுக்காரர்ட்ட எந்த தலைப்பை கொடுத்தாலும் சரி. அந்த வி~யத்தைப் பற்றி ஒரு மணி நேரம் அழகா பேசுவார்.
மற்றொரு பெண்: அது என்ன பிரமாதம். என் வீட்டுக்காரர் வி~யமே இல்லாம நாள்பூரா பேசிக்கிட்டே இருப்பார்.
திருமணத்திற்குப்பின் அடுத்து வந்த முதல் மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்ததென்ன? முதல் ஆண்டு அவன் பேசினான், அவள் கேட்;டாள்;;: இரண்டாம் ஆண்டு அவள் பேசினாள், அவன் கேட்டான்: மூன்றாம் ஆண்டு இரண்டுபேரும் பேசினார்கள். ‘ஊரே கேட்டது. மூன்று ஆண்டுகளில் முத்தான காதல் முடிவடைந்து விட்டது: சத்தான காதல் செத்துவிட்டது.
இது இப்படியிருக்க, ஒருசிலர் பேசினாலே நமக்கு கேட்பதற்கு எரிச்சலாக இருக்கும்.
சிலர் பேசினால் சங்கீதமாக இருக்கும். சிலர் பேசினால் சங்கடமாக இருக்கும்.
சிலர் பேசினால் நம்மால் மறுக்கமுடியாது. சிலர் பேசினால் நம்மால் பொறுக்க முடியாது.
சிலர்; எதையாவது சாதிக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் யாரையாவது பாதிக்கவேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் எதையாவது ஆக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
சிலர் யாரையாவது தாக்க வேண்டுமென்று பேசுவார்கள்.
எப்படிப்பேசினாலும் சரி சிந்தித்து, நிதானமாக, என்ன பேசுகிறோம், எதைப்பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், எப்படிப்பேசுகிறோம் என்று சிந்தித்து பேசினால் நலமாக இருக்கும்.
ஓர் அரசியல்வாதி பொதுகு;கூட்டமொன்றில் “தோழர்களே, எண்ணிப்பாருங்கள். மீண்டும் மீண்டும் எண்ணிப்பாருங்கள்” என்று ஆசேவசத்துடன் கத்தினார். கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து நின்று “இந்த அரசியல் கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு கலா 50 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லிக்கூடட்டிகக்கொண்டு வந்தார்கள். மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்தேன். 40ரூபாய் மட்டுமே இருக்கிறது” என்றார்.
பலர் பணத்தை எண்ணுகின்றனர் சிலர் நேரத்தை, வயதை எண்ணுகின்றனர். வேறு சிலர் காதலை எண்ணுகின்றனர். திருமணம் செய்யாதவர்கள் திருமணத்தை எண்ணுகின்றனர். திருமணம செய்துகொண்டவர்கள் மணமுறிவை எண்ணுகின்றனர்.
மரியாள் எதை எண்ணினார்? ஏதைப்பற்றிச் சிந்தித்தார்? வுpவிலியம் கூறுவதென்ன?மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச்சிந்தித்துக்கொண்டிருந்தார்” (லூக் 2:19). “அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்தார்” (லூக் 2:51).
மரியா இயேசு கூறியதையும் தம் உள்ளத்தில் பதித்து வைத்து அவற்றைவப்பற்றியே சிந்தித்தார். மரியாவுக்கு எல்லாம் இயேசு மயம்: எண்ணும்போது இயேசு மயம்: உண்ணும் போதும் இயேசு மயம்: உறங்கும்போதும் இயேசு மயம்: எங்குமு; இயேசு மயம்:எதிலுமட் இயேசு மயம்:
மிகவும் மட்டமான வாழ்வு நடத்திய ஓர் இளைஞன் தன் ஆசிரியரைச் சந்தித்ததபோது ஆசிரியரிடம், “ நான் உங்கள் மாணவன் “{ என்று கூற, ஆசிரியர் அவனிடம் “நீ என் வகுப்பில் இருந்திருக்கலாம். ஆனால் நீ என் மாணவன் அல்ல” என்று வருத்தத்துடன் கூறினார்.
இயேசு இன்று கிறிஸ்தவர்களளைப் பார்த்து “ நீங்கள் கிறிஸ்தவ மதத்தில் இருக்காலாம். ஆனால் நீங்கள் என் சீடர்கள் அல்ல” என்று கூறுவார். கிறிஸ்தவராக இருப்பது முக்கியமல்ல: ஆனால் கிறிஸ்தவன் சீடராக விளங்குவதே முக்கியமாகும், இன்று இயேசுவுக்கு “விசிறிகள்” பலர் இருக்கின்றனர்: ஆனால் அவரின் சீடர்கள் மிகக் குறைவு.
மரியா இயேசுவின் தாய் என்பதைவிட இயேசுவின் சீடர் என்பதே முக்கியமானது. இயேசுவின் சீடராவது எவ்வாறு? “என் வார்;த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்” (யோ 4:31). எனவே இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களே அவருடைய உண்மையான சீடர்கள் ஆவர்.
“உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று தம்மிடம் கூறிய பெண்ணிடம் இயேசு “இறைவார்த்தையைக்கேட்டு அதைக்கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேற பெற்றோர்” என்றார் (லூக் 11:27-28). இவ்வாறு கூறியதால் மரியாள் பேறுபெற்றவர் என்பதை இயேசு மறக்கவில்லை: மாறாக மரியாள் இறைவனின வார்த்தையைக்கெட்டு அதைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதில் தான் உண்மையான பேறு அடங்கியுள்ளது என்பதை இயேசு வெளிச்சம்போட்டுக்காட்டினார்.
குருவாம் இயேசுவைக்கண்டு அவர் நாமத்தைச்சொல்லி , அவர் வார்த்தையைக் கேட்டு அவரின திருவுருவை என்றும் சிந்தித்து வந்த மரியள் உண்மையிலேயே இயேசுவின் முத்தான, முதன்மையான, முழுமையான சீடராகத் திகழ்கின்றார். எல்லாரையும் இயேசுவின் சீடராக்குவதே மரியாளின் ஒரே விருப்பம்.
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோ 2:5) என்று கானாவு}ர்த் திருமணத்தில் பணியாளர்களுக்குக் கொடுத்த கட்டளைதான் நற்செய்தியில் மரியாள் பேசும் இறுதி வார்த்தைகள். அக்கட்டளைதான் மரியாவின் இறுதிக்கட்டளை: இறுதிவிருப்பம்.
“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் “ என்ற மரியாளின் இறுதி விருப்பமும், “ஆண்டவர் கூறியபடியே அனைத்தையும் செய்வோம்” (வி.ப. 19:8) என்று சீனாய் மலை அடிவாரத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவனுக்கு அளித்த பழைய உடன்படிக்கையின் இறுதி வாக்குறுதியும், “நான் உங்ககளுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள் “ (மத் 28:20) என்று இயேசு கலிலேயா மலையில் தம் சீடர்களுக்குக் கொடுத்த இறுதிக்கட்டளையும் ஒன்றாக இருப்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இறைவனின் விருப்பத்தை கட்டளையை நிறைவேற்றுவதுதான் விவிலியத்தின் அடிப்படையான அம்சமாகும்.
கடவுளை நம்பாத நாத்திகர்களின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. ‘கடவுள் இல்லை’ என்று நிரூபிக்கக்கூடிய தங்களது ஆராய்ச்சி நூல்களை மேடையில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியிருந்தார்கள். அப்போது அங்கு வந்த கிறித்தவர், எல்லா ஆராய்ச்சி நூல்களுக்கும் மேலாக விவிலியத்தை வைத்து, “விவிலியமே தலை சிறந்த, உன்னதமான நூல், எல்லாவற்றிற்கும் மேலானது” என்றாராம். அங்கிருந்த ஒரு நாத்திகர் கோபத்துடன் விவிலியத்தை எடுத்து எல்லாப் புத்தகங்களுக்கும் அடியில் வைத்தார். உடனே அக்கிறித்தவர், “எல்லா புத்தகங்களுக்கும் அடிப்படையான, ஆதாரமான நூல் விவிலியம் என்பதை அவரது செயல் சுட்டிக்காட்டுகிறது” என்றாராம். மீண்டும் கோபமடையந்த அந்த நாத்திகர் விவிலியத்தை எடுத்து மற்ற புத்தகங்களுக்கு நடுவில் வைத்தார். கிறித்தவரோ இன்னும் விடாப்பிடியாக “விவிலியம் அச்சுப்போன்றது, அதை மையமாக வைத்தே எல்லாம் சுற்றுகின்றன என்ற உண்மையை இப்போது அவர் சுட்டிக்காட்டுகிறார்” என்றாராம்.
காலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கும் கடவுளின் வார்த்தை, வரலாற்றில் அளப்பரிய மாற்றங்கள் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. “மனித குலத்திற்கு கடவுள் வழங்கியுள்ள கொடைகளில் மிகச்சிறந்த கொடை விவிலியமே” என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.
மரியா இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டார் (லூக் 1:38). மரியா இறைவர்த்தையை மலைநாட்டடிற்கு எடுத்துச்சென்றார் (லூக் 1:39-44). மரியா இறைவார்த்தையைத்தம் உள்ளத்தில் பதித்துச்சிந்தித்தார் (லூக் 2:19). மரியா இறைவர்த்தையைக் கடைபிடிக்க கட்டளையிட்டார் (யோவா 2:5).
உயிருள்ள வார்த்தைளை வாசித்து, உயிரோட்டமாக வாழ்ந்திடுவோம்
நிலையான வாக்கினை தியானித்து, நிறைவான வாழ்வைப் பெற்றிடுவோம்.
ஒருபங்கில் திருவிழாவிற்கு தயாரிப்பாக நவநாட்கள் நடந்துகொண்டிருந்தன. சிறப்பு மறையுரைக்காக தாடி வைத்திருந்த ஒரு குருவானவரை அழைத்திருந்தார்கள். ஆக்குரு இறைவர்த்தையின் மீது இருந்த தாகத்தின காரணமாக மிகவும் வேகத்தோடு தன் தலையை இங்கும் அங்கும் ஆட்டி மறையுரை வைத்தார். ஓவ்வொரு நாள் பிரசங்கத்தின் போது; அக்கூட்டத்திலிருந்த பாட்டி ஒருவர் அழுதுகொண்டிருப்பார். தன்னுடைய பிரசங்கத்தால் தொடப்பட்டு, மனம்வெதும்பி அப்பாட்டி அழுவதாக அக்குரு நினைத்துக்கொண்டார் . அவர் நவநாட்கள் முடிந்து அவ்வூரைவிட்டு போவதற்குமுன்பாக அப்பாட்டியைச்சந்திக்க நேரிட்டது. ஆக்குரு பாட்டியிடம் மறையுரை நேரத்தில் அழுத்தற்கான காரணத்தைக்கேட்டபோது “சாம்p நர்ன ஒரு ஆடுவளர்த்தேன். அதுமீது என் உயிரையே வைத்திருந்தேன். ஆதற்கு உங்களை மாதிரியே ஒரு தாடி இருந்தது. குடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அது காணாமற்போய்விட்டது. ஊங்கத்தாடியைப்hர்த்தவுடன் அந்தஆடு ஞாபகம் வந்துவிட்டது. ஆதனால் தான் அழுதேன்” என்று அந்தப்பாட்டி சொன்னாராம்.
கடவுளுடைய வார்;த்தை நமக்கு அறிவிக்கப்படும்போது நாம் எந்த மனநிலையுடன் அதற்கு செவிமடுக்கிறோம் என்று சிந்தித்துப்பார்க்க இந்தக் கதையுமு; இன்றைய வாசகங்களும நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நூம் திருப்பலியில் பங்கெடுக்கும்போதும், கடவுளுடைய வார்த்தை பகிரப்படும்போதும், ஏன் நாமே விவிலியத்தை வாசிக்கும்போதும் இறைவார்த்தை நமக்குப் பறைசாற்றப்படுகிறது. இவ்வாறு பறைசாற்றப்படும் இறைவார்த்தைக்கு நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு செவிமடுத்து அவ்வார்;த்தை நம்முள் செயல்பட அனுமதிக்கிறோம் என்பது நாம் சிந்திக்கவேண்டிய ஒன்று.
‘நெஞ்சிலே செருக்குற்றோரை இறைவன் சிதறடிக்கிறார்’ (லூக் 1:51). ஏன்ற மரியாளின் கூற்றுபொய்யாகுமா. எனவே விவிலியத்தை திருச்சபையின் மடியில் அமர்ந்து படிக்கவேண்டும். விசுவாச ஒளியில் படிக்கவேண்டம். தாழ்ச்சியுடன் படிக்கவேண்டும், மரியாளை வழிகாட்டியாகக்கொண்டு படிக்க வேண்டும்.

மரியாளும் நற்கருணையும்
திருமண ஓலை எழுத வந்த மணமகனிடம் பங்கு தந்தை “நற்கருணையில் இருப்பது யார்?” என்று கேட்டதற்கு அவர், “பதுவை அந்தோணியார்” என்றார். பங்கு தந்தை அவருடைய அப்பாவைக் கூப்பிட்டு “என்ன, உங்க மகன் நற்கருணையில் பதுவை அந்தோணியார் இருப்பதாகச் சொல்றான்” என்றார். அப்பா மகனிடம் “ஏண்டா அறிவு கெட்ட முண்டம், நற்கருணையில் சகாய மாதா இருப்பது கூட உனக்குத் தெரியாதா?” என்ற கேட்டுக் கன்னத்தில் அறைந்தார். அப்பா நிலை இப்படி என்றால் மகன் நிலை எப்படி இருக்கும்?
எல்லாம் வல்ல இறைவனுக்குத் தாயாகவும் அவருக்கு மகளாகவும், நம் எல்லாருக்கும் தாயாகவும் இருக்கின்ற நிலை இது யார் நற்கருணை இறைமகன் இயேசுவை உண்மையாக இதயக் குடிலில் வைத்து வளர்த்து அந்த அனுபவத்தைப் பகிர்கின்றார்களோ அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குத் தாயாக, மகனாக, மகளாக, எல்லாருக்கும் தாயாக இருக்கமுடியும்.
காலம் சென்ற நமது திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2004 அக்டோபர் முதல் 2005 அக்டோபர் வரை உலகத் திருச்சபையின் கவனத்தை நற்கருணையில் செலுத்தக்கேட்டுக்கொண்டு திருச்சபை என்ன செய்ய வே;ணடும் என்று ஆயநெ ழேடிளைஉரஅ னுழஅiநெ ஆண்டவரே எம்முடன் தங்குவீர் என்ற மடல் வழியாக நம்மை ஊக்குவிக்கின்றார்.
இயேசுகிறிஸ்து உயிர்த்த பிறகு திருத்தூதர்களுக்குத் தோன்றி தான் உண்மையிலேயே அவர்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்தி, தனது பிரசன்னத்தை அவர்களில் ஆழப்படுத்தியதை விவிலியத்தில் நாம் காணுகின்றோம். எம்மாவுசுக்குச் செல்லும் வழியில் சீடர்களுக்குத் தோன்றி இறைவார்த்தையை ஒரு வழிப்போக்கன் போல அவர்களுக்கு எடுத்தியம்பி அவர்களின் இதயத்தை உருக்கியதையும் அப்பம் பிடுதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவை ஆண்டவர் என்று ஏற்று அதை மற்றச் சீடர்களுக்கு அறிவித்ததையும் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
நற்கருணை அருட்சாதனம் மற்ற அருட்சாதனங்களிலிருந்து வேறுபட்டது. மற்ற அருட்சாதனங்களில் அதாவது திருமுழுக்கு, பாவமன்னிப்பு, நோயில் பூசுதல், குருத்துவம் இவைகள் இந்த நேரத்தில் அந்த வசீகர வார்த்தையை உச்சரிக்கும்போதுதான் அருள் வழங்குகிறது. கிறிஸ்துவின் பிரசன்னம் கொண்டுவரப் படுகின்றது. ஆனால் அவர் நற்கருணையில் உன்னதமான முறையில் எப்பொழுதும் நின்று பிரசன்னத்தை நிரந்தரமாக்குபவராக இருக்கின்றார். எப்போது அருட்பொழிவுப்பெற்ற குரு வசீகர வார்த்தைகளைச் சொல்லி அப்பத்தையும் இரசத்தையும் அர்ப்பணம் செய்கின்றாரோ அப்பொழுதிலிருந்தே அதில் உண்மையாகவே கிறிஸ்து பிரசன்னமாகியுள்ளார்’என்பது திருச்சபை நமக்குக் கற்பிக்கின்ற சத்தியம்.
நற்கருணை திருச்சபையின் ஆதாரம், ஊற்று, மையம், நற்கருணையில் உண்மையாகவே கிறிஸ்து இருக்கிறார் என்பதைத் திருச்சபையின் ஆட்சிப்பீடம் திட்டவட்டமாகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. ஏனெனில் விவிலியத்தில் குறிப்பிடுவது போல் இயேசு கிறிஸ்துவே இதை நிறுவியுள்ளார்.
தூணிலும் துரும்பிலும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஏன் குறிப்பாக இந்த அப்ப வடிவில் இருக்கின்றார் என்பதை நம்ப வேண்டுமென்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனை ஏன் கோயில்களிலும் மற்றும் மதக்குருக்கள், பெரியவர்கள் சொல்கின்ற இடங்களிலும் தரிசிக்கின்றோம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பே. இதற்கு நமது இந்திய தமிழகச் சூழலில் ஒரு கதை சொல்வார்கள். பசுவின் இரத்தம் தான் பாலாகிறது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. இவ்வாறு பாலாகின்ற இரத்தம் பசுவின் உடல் முழுவதும் இருந்தாலும், பால் என்று வரும் போது பசுவின் கன்றோ அல்லது அதை வளர்க்கின்ற மனிதனோ, பாலைக் கறப்பது அல்லது பெறுவது பசுவின் உடலில் அவன் நினைக்கின்ற இடங்களிலெல்லாம் அல்ல. மாறாக பசுவின் மடியில் மட்டும்தான் பால் சுரக்கின்றது. அது பசுவின் மடியில் கை வைத்துக்கறக்கும்போது தான் அல்லது கன்று தன் தாய்ப்பசுவின் மடியை முட்டிச்சுவைக்கும்போது தான் பால் சுரக்கின்றது. கன்றுவின் பசி போகின்றது. இதே தான் மனிதனுக்கும் தாயின் மடியில் மட்டும்தான் பால், மற்ற இடமெல்லாம் இரத்தம்தான். அதேபோன்று இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நற்கருணையாக வசீகரிக்கப்பட்ட அப்பத்திலும் இரசத்திலும் உண்மையாகவே இருக்கிறார்.
அன்னை மரியாள் போன்று ஆண்டவரைத் தமது உடலில் வைத்து வளர்த்து ஆளாக்கி அந்த உலகம் வாழத்தம்மையே அர்ப்பணிக்கும் அவரின் கருவிகளாக நாம் வாழ்ந்தாலே நாமும் அன்னை மாயின் அன்புப் பிள்ளைகளாக இருந்து அகமகிழ்ந்து ஆர்ப்பரித்து ஆண்டவரின் அற்புதச்செயல்களை எடுத்துக்கூற முடியும். இதை இறை நற்கருணை அனுபவம் என்றும்; இயேசு அனுபவம் என்றும் கூறலாம். இந்த அனுபவம் பெற்றவர்கள் அன்னை மரியாளின் பக்தர்களாகத்தான் இருக்கமுடியும்.
இறைவனின் உண்மையான உருவை, உடலை, இரத்தத்தைத் தனது உடலில் வாங்கியவர் அன்னை மரியாள். எனவேதான் நற்கருணையின் முதல் அனுபவத்தைப் பெற்றவர் அன்னை மரியாள் என்று கூறமுடியும். தூய ஆவியின் நிழலால் இறைவனைத் தாங்கிய மரியாள் அகமகிழ்ந்து அக்களித்து ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு ஏற்றவாறு மலைநாடு சென்று அவரின் பிரசன்னத்தை மற்றவர்களுக்கு வெளிக்கொண்டு வருபவராகக் காட்சி தருகின்றார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)