அன்னையின் தாழ்ச்சி
சூரிய காந்தி என்ற தமிழ்த்திரைப்படத்தின் இறுதியில் ஒரு காட்சி. சிறந்த தம்பதியரைத் தெரிவு செய்வதற்கான போட்டி ஒன்று நடந்தது. நிறைய இடங்களில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்ட தம்பதியினர் வந்திருந்தார்க்ள. முதலில் அரையிறுதிப்போட்டி நடந்தது. அதில் 5 தம்பதியர் சிறந்த தம்பதியினர் என தெரிவுசெய்யப்பட்டார்கள். இப்போது இறுதிப்போட்டி நடக்கவிருந்தது: இந்த 5 தம்பதியரில் சிறந்த தம்பதியர் யார்? எனப்போட்டி. அரையிறுதிப்போட்டியில் தெரிந்தெடுக்க 5 தம்பதியரில் 5 கணவன்களே உள்ளே (பெரிய அரங்கத்தின்) அவர்கள் விருப்பம்போல உட்கார்ந்து கொள்ளச்சொன்னார்கள். அதுபோல் அனைவரும் அமர்ந்துகொண்டனர். இந்த 5 கணவன்களுடைய மனைவியரின் கண்களை துணியால் மறைத்துவிட்டார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையிலே இந்த 5 மனைவியரும் உள்ளே சென்று தங்கள் கணவர்களை கண்டுபிடித்து அவர்கள் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர வேண்டும். எல்லோரும் ஆர்வமாகப்பார்க்கின்றனர். போட்டி ஆரம்பித்துவிட்டது. 5 மனைவியரும் நெருங்குகின்றனர். பக்கத்தில் வந்து விட்டார்கள். எல்லரும் அமர்ந்து விட்டார்கள். எல்லாரும் தவறாக அமர்ந்துவிட்டார்கள். ஆனால் முதலில் இருக்கையில் உட்கார்ந்த கணவனுடைய மனைவிமட்டும் சரியாக தன்னுடைய கணவனை கண்டு பிடித்து உட்கார்ந்துவிட்டாள். பயங்கரக் கைத்தட்டல். அரங்கமே அதிர்ந்துவிட்டது. போட்டி முடிந்தபிறகு பேட்டி காண்பவர் அவரை அணுகி எப்படி நீங்கள் சரியாக உங்கள் கணவனைக்கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அம்மா” எனக்கு அப்பவே தெரியும் எங்க வீட்டுக்காரர் முதலிருக்கையில் தான் அமர்ந்திருப்பார்னு. எதுக்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொள்வது என்பது அவருடைய உடன்பிறவா குணம்.
முந்திக்கொள்வதும், முதலிடத்தைப்பிடிப்பதும் போட்டிக்கு வேண்டுமென்றால் உதவும்: வாழ்க்கைக்கு உதவாது.
(மாப்பிள்ளை நாளையிலிருந்து அழுவார்)
கலகலப்பில் தொடங்கிய திருமண வாழ்வு கைகலப்பில் முடிவடைகிறது. திருமணத்திற்கு முன் அவள் ஓர் “ஏஞ்சல்”: திருமணத்திற்குப்பின் அவள் ஓர் “இடைஞ்சல்”: திருமணத்திற்கு முன்பு “உனக்கும் எனக்கும் ளழஅநவாiபெ- ளழஅநவாiபெ : திருமணத்திற்கு பின்பு, “உனக்கும் எனக்கும் ழேவாiபெ- ழேவாiபெ. காரணம், தலைக்கனம், ஆணவம, தான் என்ற அகந்தை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை.
“குடும்பத்தில் யார் கை ஓங்குகிறது? அப்பா கையா? அம்மா கையா?” என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்: அப்பா கை ஓங்குகிறது: அம்மா கை வீங்குகிறது. குடும்ப வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால் “நீயா? நானா?” என்ற பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, ‘நீயும் நானும்’ என்ற சமரசப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல் பெண்ணும், பெண்ணில்லாமல் ஆணும் வாழ முடியாது. எனவே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து இனியதோர் இல்லறம் நடத்த வேண்டும்.
ஒரு கணவர் தன் மனைவியிடம், ‘இன்னும் 10 நிமிடத்தில் குளிக்கச் சுடுதண்ணீர் கொடுக்காவிட்டால், என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது’ என்றார். மனைவி அவரிடம், ‘சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்க முடியாது என்ன நடக்கும்?’ என்று கேட்டார். அதற்குக் கணவர் ‘அப்படியானால் நான் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிப் புட்டிப் பாம்பாக சுருண்டு விட்டார்.
ஒரு பங்குத் தந்தையிடம் ஒரு கணவர் வந்து, “என் மனைவி என்னை மதிப்பதில்லை: எனக்குக் கீழுப்படிவதில்லை: அவளை அடக்குவது எப்படி என்று சொல்லித் தாங்க சுவாமி”! என்று கேட்டார். அதற்கு அவர், “அது தெரிஞ்சா நான் ஏப்பா சாமியார் ஆனேன்”? என்றாராம்!. “அவளை அடக்கு, அல்லது அவளுக்கு அடங்கு” என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், “அவளுக்கு விட்டுக் கொடு: அவளுக்கு அதிகாரத்தைப் பிட்டுக்கொடு” என்ற நிலைப்பாட்டை எடுப்பதுவே சாலச்சிறந்தது.
வீட்டிலே அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா? என்று ஆசிரியர் கேட்டபோது, ஒரு மாணவர் “நிச்சயமாக அம்மாதான் பெரியவங்க. என் அப்பா அவரது தொழிற்சாலையில் ஆயிரம் ஆண்களை அடக்குகிறார். ஆனால் விPட்டில் என் அம்மா தனியாக என் அப்பாவை அடக்குகிறார்” என்றான்.
ஒரு மனைவி தன் கணவரிடம், “ஏழு ஏழு சென்மத்துக்கும் நீங்கள் தான் எனக்குக் கணவராக இருக்க வேண்டும்”என்றார். அதைக் கேட்ட கணவர் மிக்க மகிழ்ச்சியுற்று அதற்கான காரணத்தை மனைவியிடம் கேட்டபோது, “உங்களைவிட இளிச்சவாயன் வேறு யாரும் எனக்குக் கிடைக்க முடியாது” என்றாள் மனைவி. என்னே அவரது பதிபக்தி!
தம்பதியர் ஒருவர் மற்றவரைத் தரக் குறைவாக எண்ணாமல் மதித்து வாழவேண்டும். மரியாவும் யோசேப்பும் ஒருவர் மற்றொருவரை மதித்து வாழ்ந்தனர். யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தைதான். ஆயினும் அவர் திருக்குடும்பத்தில் முதல் இடத்தில் இருந்தார். மரியாள் தம் கணவர் யோசேப்பின் மீது வைத்திருந்த மரியாதையையும் அவருடைய வார்த்தைகள் சுட்டுகின்றன. எனவேதான், பன்னிரண்டு வயதில் காணாமற்போன இயேசுவை ஆலயத்தில் கண்டபோது மரியா அவரிடம், “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக். 2:48) என்றார். தம் கணவர் யோசேப்புக்குத்தான் மரியா முதலிடம் கொடுத்தார். “உன் தந்தையும் நானும்” என்று கூறித் தம்மைவிட யோசேப்பை முன்னிலைப்படுத்தினார். இது மரியாள் யோசேப்பின்மீது வைத்திருந்த மிகுந்த மரியாதையைக் காட்டுகிறது. இவ்வுலகில் எந்த மனைவியும் தம் கணவரை அன்பு செய்யாத அளவுக்கு மரியாள் யோசேப்பை அன்பு செய்தார்.
“கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்” (எபே. 5:23-28). “கணவர்களே உங்கள் மனைவியருக்கு மதிப்புக் கொடுங்கள்” (1பேது. 3:7).
“மனத்தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்… கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்” (பிலி 2:3-5).
ஒரு வீட்டிலே மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே எப்போதும் பயங்கர சண்டை நடக்கும். ஒருநாள் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. மருமகள் தன் கணவரிடம், “இந்தாங்க! இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும், அல்லது உங்கள் அம்மா இருக்க வேண்டும். உடனடியாக முடிவு சொல்லுங்கள்” என்றாள். அதற்குக் கணவர், “நீயும் வேண்டாம்: என் அம்மாவும் வேண்டாம். வேலைக்காரி மட்டும் இருந்தால் போதும்” என்றார். இதைக்கேட்டு மாமியார், மருமகள் இருவருமே அதிர்ச்சியுற்றனர்.
திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒருவர் ஒருவரை மதித்து அன்புக்கு அடிமையாகினர். திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும், மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தவில்லை. அவர்களிடம் ‘EGO’ பிரச்சினை இல்லை கடவுள் வாழ்ந்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி நிலவியது.
இன்று உலகில் நடக்கும் பல போர்களுக்கும். சண்டைகளுக்கும் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள். உண்ண உணவில்லையென்றா, உடுத்த உடை இல்லை என்றா, அல்லது இருக்க இடமில்லையென்றா, மாறாக நான் பெரியவனா நீ பெரியவனா என்ற அதிகார போட்டியினாலும் ஒருவருக்கொருவர் தாழ்நது போகும் தன்மையில்லாததாலும் விட்டுக்கொடுக்கும் மனம் நம்மிடையே இல்லாததினாலும் தான்.
திருமுழுக்கு யோவான், தன்னை மெசியாவாக ஏற்று கேட்டு வந்த பரிசேயர்களிடம், நீங்கள் நினைப்பது போல், நான் மெசியாவோ, எலியாவோ அல்லது இறைவாக்கினரோ அல்ல, என்று உண்மையை மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள்… என்று பாலைவனத்தில் ஒலிக்கும் குரல் நான் என்று கூறுகிறார். இறைவன் மட்டுமே நிஜம், தான் வெறும் நகல் என்றும், இறைவனே வாக்கு என்றுணர்ந்து தன்னை ஒலி என்றும் சொல்கிறார்.
அவர் எனக்குப்பின் வருபவராக இருந்தாலும் என்னிலும் முன்னிடம் பெற்றவர் என்று முழங்கி தன்னை அனுப்பிய இறைவனை வெளிப்படுதி இறைவனின் தன்னிகரற்ற முன்னிடத்தை நிலை நாட்டி தன்னைப் படிப்படியாக பின்னடைய செய்து மறைந்து மங்கிப்போகவே விரும்புகிறார். அவரது செல்வாக்குப் பெருக வேண்டும். எனது செல்வாக்கோ குறைய வேண்டும் என்று சொல்லி அவரைப்பற்றி எடுத்துரைக்கும் பணியிலேயே தன்னை கரைத்துக்கொள்கிறார். இவ்வாறு அவர் தான் யார் என்பதையும், தனது பணி என்ன என்பதையும் தெளிவாக உணர்ந்து செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், தன்னை எவ்வாறு தாழ்த்துகிறார் என்றால், அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட நான் தகுதியுள்ளவன் என்று கூறுகிறார்.
Humility goes before honour என்று சொல்லுவார்க்ள. இந்த பழமொழிக்கேற்ப “அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என்று கூறுமளவுக்கு தன்னைத் தாழ்த்திய புனித திருமுழுக்கு யோவானை யேசு அனைவரையும் விட மேலாக உயர்த்துகிறார். “உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று கூறி அவரை உயர்த்துகிறார்.
அவர் நமக்கு கூறுவதென்ன? நான் தான் ஞானத்தின் சிகரம், அறிவுக் களஞ்சியம், போதிக்கவும், புதுமை செய்யவும், பேய்களை ஓட்டவும், நோய்களை குணமாக்கவும், பரவசப்பேச்சு பேசவும் என்னிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று யேசு நம்மிடம் கேட்கவில்லை. மாறாக, “நான் மனத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உடையவன். ஆகவே என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று நம்மை பார்த்துக் கேட்கின்றார்.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்க இணையாய் இருக்கும் நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார் என்று புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:5 முதல் 8 வரை உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
தாழ்ச்சிக்கு சிகரமான நமது அன்னை மரியாளைப் பாருங்கள். “மரியாவிடம் விஞ்சி நிற்பது கன்னிமையா? அல்லது தாழ்ச்சியா என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்து, மரியாளையே அப்பட்டிமன்றத்திற்கு நடுவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டால், “மரியாளிடம் விஞ்சி நிற்பது தாழ்ச்சியே” என்று அவர் திட்டவட்டமான, தெளிவான அறுதியான உறுதியான தீர்ப்பு வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
இத்தீர்ப்பை நற்செய்தியில் மரியாய் ஏற்கெனவே வழங்கி விட்டார்.
இறைவன் மரியாளின் கன்னிமையைக் கண்ணோக்கினாள் என்று கூறாமல், அவர் தம் தாழ்ச்சியைக் கண்ணோக்கினார் என்று கூறுகிறார். மரியாள் “நான் ஆண்டவரின் அடிமை என்று தம்மைத் தாழ்த்தியதால்தான் இறைவன் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினாள்.
பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா 18முறை 1958 பிப்ரவரி 11 ஆம் நாள்முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார்.
ஒருமுறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா.
எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார்.
நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலிNடீயாரை அரியiணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). நம் தாழ்ச்சிநிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக,
புனிதமடைய மூன்று படிகள் உள்ளன, முதல் படி தாழ்ச்சி, இரண்டாவது படியும் தாழ்ச்சி, மூன்றாவது படியும் தாழ்ச்சி என்று கூறுகிறார் புனித அகுஸ்தினார்.
காதலின் வலிமையைப்பற்றி பாரதியார், காதல் காதல் காதல் காதல் காதல் போயின சாதல் சாதல் சாதல் என்று பாடுகிறார். பாரதியின் பாணியில் புனித அகுஸ்தினார், தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி போயின் வீழ்ச்சி வீழ்ச்சி வீழ்ச்சி என்று பாடுகிறார்..

இவையனைத்தும் எங்கோ நடக்கின்ற ஒன்றல்ல. நம் மத்தியிலும் இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
• இவ்வளவு நாட்களாக பங்கு பேரவை தலைவராக இருந்த என்னை இப்போது எப்படி இவர்கள் மாற்ற முடியும். இன்p நான் ஒத்துழைப்பு தரமாட்டேன் என்று சொல்லும் போது,
• காலம்காலமாக எங்கள் குடும்பம்தான் இந்த ஊருக்கு பஞ்சாயத்து பேசும், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆலோசித்துத்தான் பங்கு தந்தை எதை வேண்டுமானாலும் செய்யலாம். பங்கு தந்தையை அடுத்து எங்கள் குடும்பம்தான் இந்த ஊரில் என்று கூறும்போதெல்லாம் நாம் ஆணவம் பிடித்தவர்களாகிவிடுகிறோம்.
• இந்த ஊரில் நான் தான் அதிக படிப்பு படித்துள்ளேன். ஆகவே அனைவரும் என்னை அதிகம் மதித்து நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும்போது,
• நீ வேண்டுமானால் எனக்கு அண்ணனாக இருக்கலாம, ஆனால் நான் தான் உன்னைவிட அதிகம் படித்தவன. ஆதலால் நீதான் என்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது,
• நீ இந்த வீட்டிற்கு நேற்று வந்தவ: நீ தான் நான் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார் மருமகளை பார்த்து கூறும் போதும்,
• நீ காலம் கடந்த வயதான கிழவி உன் ஆட்சி முடிந்துவிட்டது. இன்p நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மருமகள் மாமியாரை பார்த்து கூறும்போதும் நாம் தலைக்கணம் பிடித்து அலைகிறோம்.
(கிளி கதை)
ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: “நானும் என்னுடைய கணவரும் விவாகரத்து வாங்கிவிட்டோம்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் உடமைகளையெல்லாம் என்ன செய்தீர்கள்?” முதல் பெண் சொன்னார்: “எங்களுக்கு நான்கு பிள்ளைகள், நாங்கள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம்! இரண்டுபேர் கணவருடன் சென்றுவிட்டனர்! இரண்டுபேர் என்னுடன் வந்துவிட்டனர்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் சொத்துக்களையெல்லாம் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன்!” முதல் பெண் சொன்னார்: “அதுவா? எங்கள் சொத்துக்களை என்னுடைய வக்கீலும் என் கணவருடைய வக்கீலுமாகச் சேர்ந்து சரிசமமாகப் பிரித்து எடுத்துக்கொண்டார்கள்!”
திருமணமான ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவ்வீட்டின் உரிமையாளரைப் பார்த்து, “இவர்தான் என் வீட்டுக்காரர்” என்று அவர் கேலியாகச் சொன்னது பெரிய சண்டையில் முடிந்தது. “வீட்டுக்கார்” என்று அவர் கூறியதின் பொருள்: இவர் இந்த வீட்டின் சொந்தக்காரர்: ஆனால் “வீட்டுக்காரர்” என்ற சொல்லைக் “கணவர்” என்ற பொருளில் எடுத்துக் கொண்டதால் பெரிய புயல் கிளம்பிவிட்டது! நமது வீட்டுக்காரர் யார்? கிறிஸ்துவே நமது வீட்டுக்காரர். நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டியவர், கிறிஸ்து நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டுமென்றால், சக்கேயு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது போல நாமும் நமது ஆணவம், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும். அதற்கு நாம் தயாராய் இருக்கின்றோமா?
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேரவேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும். தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து
பெத்லேகமில் யேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப் நேட்டிவிட்டி என்றழைப்படும் பெரிய பேராலயம் ஒன்று அமைந்துள்ளது. நமது ஊர்களில் உள்ள பெரிய ஆலயங்களையும் அதனுள்ளளே அடக்கி விடும் அளவுக்கு அது மிகப்பெரிய கோயில். ஆனால், அதனுடைய முகப்பில் உள்ள நுழைவு வாயிலின் கதவு மிகச் சிறியது. யாருமே குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும், அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நாம் தாழ்ந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும். இறைவன் யேசுவைக் காண முடியும். அது Door to Humility.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துவிழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள் எச்சரிக்கை(கலா 5:15).

ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப் படுத்துகின்றது… ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினாள்- லூக் 1:46-48.
இறைவன் மரியாளின் கன்னிமையைக் கண்ணோக்கினாள் என்று கூறாமல், அவர் தம் தாழ்ச்சியைக் கண்ணோக்கினார் என்று கூறுகிறார். மரியாள் “நான் ஆண்டவரின் அடிமை என்று தம்மைத் தாழ்த்தியதால்தான் இறைவன் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினாள்.
பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா 18முறை 1958 பிப்ரவரி 11 ஆம் நாள்முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார்.
ஒருமுறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா.
எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார்.
நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலிNடீயாரை அரியiணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). நம் தாழ்ச்சிநிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக,
ஆண்டவரே நான் பாவி. பாவி என்மேல் இரக்கமாயிரும்என செபித்த ஆயக்காரனின் வேண்டுதல்தான் இறைவனால் கேட்கப்படுகிறது (லூக் 18:11-13). தாழ்ச்சியும் பணிந்த மனமும் மிகுதியான ஆசீர்வாதங்களை இறைவனிடமிருந்து பெற்றுத்தருகிறது.
புனிதமடைய மூன்று படிகள் உள்ளன, முதல் படி தாழ்ச்சி, இரண்டாவது படியும் தாழ்ச்சி, மூன்றாவது படியும் தாழ்ச்சி என்று கூறுகிறார் புனித அகுஸ்தினார்.
காதலின் வலிமையைப்பற்றி பாரதியார், காதல் காதல் காதல் காதல் காதல் போயின சாதல் சாதல் சாதல் என்று பாடுகிறார். பாரதியின் பாணியில் புனித அகுஸ்தினார், தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி தாழ்ச்சி போயின் வீழ்ச்சி வீழ்ச்சி வீழ்ச்சி என்று பாடுகிறார்..
இன்று உலகில் நடக்கும் பல போர்களுக்கும். சண்டைகளுக்கும் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள். உண்ண உணவில்லையென்றா, உடுத்த உடை இல்லை என்றா, அல்லது இருக்க இடமில்லையென்றா, மாறாக நான் பெரியவனா நீ பெரியவனா என்ற அதிகார போட்டியினாலும் ஒருவருக்கொருவர் தாழ்நது போகும் தன்மையில்லாததாலும் விட்டுக்கொடுக்கும் மனம் நம்மிடையே இல்லாததினாலும் தான்.
இவையனைத்தும் எங்கோ நடக்கின்ற ஒன்றல்ல. நம் மத்தியிலும் இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
• இவ்வளவு நாட்களாக பங்கு பேரவை தலைவராக இருந்த என்னை இப்போது எப்படி இவர்கள் மாற்ற முடியும். இன்p நான் ஒத்துழைப்பு தரமாட்டேன் என்று சொல்லும் போது,
• காலம்காலமாக எங்கள் குடும்பம்தான் இந்த ஊருக்கு பஞ்சாயத்து பேசும், எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆலோசித்துத்தான் பங்கு தந்தை எதை வேண்டுமானாலும் செய்யலாம். பங்கு தந்தையை அடுத்து எங்கள் குடும்பம்தான் இந்த ஊரில் என்று கூறும்போதெல்லாம் நாம் ஆணவம் பிடித்தவர்களாகிவிடுகிறோம்.
• இந்த ஊரில் நான் தான் அதிக படிப்பு படித்துள்ளேன். ஆகவே அனைவரும் என்னை அதிகம் மதித்து நடக்க வேண்டும் என்று நாம் நினைக்கும்போது,
• நீ வேண்டுமானால் எனக்கு அண்ணனாக இருக்கலாம, ஆனால் நான் தான் உன்னைவிட அதிகம் படித்தவன. ஆதலால் நீதான் என்னை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பொழுது,
• நீ இந்த வீட்டிற்கு நேற்று வந்தவ: நீ தான் நான் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார் மருமகளை பார்த்து கூறும் போதும்,
• நீ காலம் கடந்த வயதான கிழவி உன் ஆட்சி முடிந்துவிட்டது. இன்p நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று மருமகள் மாமியாரை பார்த்து கூறும்போதும் நாம் தலைக்கணம் பிடித்து அலைகிறோம்.
(கிளி கதை)
ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: “நானும் என்னுடைய கணவரும் விவாகரத்து வாங்கிவிட்டோம்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் உடமைகளையெல்லாம் என்ன செய்தீர்கள்?” முதல் பெண் சொன்னார்: “எங்களுக்கு நான்கு பிள்ளைகள், நாங்கள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம்! இரண்டுபேர் கணவருடன் சென்றுவிட்டனர்! இரண்டுபேர் என்னுடன் வந்துவிட்டனர்!” அப்பெண் கேட்டார்: “உங்கள் சொத்துக்களையெல்லாம் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன்!” முதல் பெண் சொன்னார்: “அதுவா? எங்கள் சொத்துக்களை என்னுடைய வக்கீலும் என் கணவருடைய வக்கீலுமாகச் சேர்ந்து சரிசமமாகப் பிரித்து எடுத்துக்கொண்டார்கள்!”
திருமணமான ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவ்வீட்டின் உரிமையாளரைப் பார்த்து, “இவர்தான் என் வீட்டுக்காரர்” என்று அவர் கேலியாகச் சொன்னது பெரிய சண்டையில் முடிந்தது. “வீட்டுக்கார்” என்று அவர் கூறியதின் பொருள்: இவர் இந்த வீட்டின் சொந்தக்காரர்: ஆனால் “வீட்டுக்காரர்” என்ற சொல்லைக் “கணவர்” என்ற பொருளில் எடுத்துக் கொண்டதால் பெரிய புயல் கிளம்பிவிட்டது! நமது வீட்டுக்காரர் யார்? கிறிஸ்துவே நமது வீட்டுக்காரர். நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டியவர், கிறிஸ்து நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டுமென்றால், சக்கேயு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது போல நாமும் நமது ஆணவம், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும். அதற்கு நாம் தயாராய் இருக்கின்றோமா?
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேரவேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும். தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து
கனிவையும் மனத்தாழ்மையையும்(மத் 11:29) கற்றுக் கொள்வோம்,
நாம் குழந்தைகளாக மாறாவிட்டால் விண்ணரசில் நுழைய முடியாது(மத் 18:3).
பெத்லேகமில் யேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப் நேட்டிவிட்டி என்றழைப்படும் பெரிய பேராலயம் ஒன்று அமைந்துள்ளது. நமது ஊர்களில் உள்ள பெரிய ஆலயங்களையும் அதனுள்ளளே அடக்கி விடும் அளவுக்கு அது மிகப்பெரிய கோயில். ஆனால், அதனுடைய முகப்பில் உள்ள நுழைவு வாயிலின் கதவு மிகச் சிறியது. யாருமே குனிந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும், அதனுடைய அர்த்தம் என்னவென்றால், நாம் தாழ்ந்து சென்றால் தான் உள்ளே நுழைய முடியும். இறைவன் யேசுவைக் காண முடியும். அது Door to Humility.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக