இதயக் கதவை திறந்து வைத்தேன்

இதயக் கதவை திறந்து வைத்தேன்
இனிமை நிறைக்கும் இயேசுவே
உதயம் தேடும் நேரமேல்லாம்
உந்தன் உறவே நாடுதே
இயேசுவே - 6
I
ஏழை மனிதரில் உன் முகம் காணவே
ஏங்கிடும் இதயத்தில் உன் அருள் நினைக்கவே - 2
உண்மை அன்பு வாழ்வு ஓங்கிட - 2
உந்தன் உயிரே தியாகமாகுதே - 2
புதிய அன்பு வெள்ளம் எங்கும்
பொங்கி பாயும் நேரமே
இருளின் ஆட்சி முடியுமே
அருளின் ஆட்சி விடியுமே
II
நீதி தேடிடும் அன்பின் பணியிலே
சமத்துவ வாழ்வினை சத்தியமாக்குவேன் - 2
மனித நேயம் காக்கும் பொறுப்பிலே
புதிய பயணம் தினமும் செல்லுவேன் - 2
நீதி நேர்மை உணர்வு தேட
ஆதிசபை பகிர்வு காண
இதயம் உன்னை வாங்குவேன்
உலகம் வாழ தாங்குவேன்

இறைவனின் புதுகுருவே

இறைவனின் புதுகுருவே
நீ நானிலம் எங்கும் செல்வாய்
நல்லாயன் நற்செய்தியை
நீ நயம்பட எடுத்துரைப்பாய்
சொல்லால் உந்தன் செயலால்
வாழ்வால் உந்தன் மொழியால்
I
ஆண்டவர் ஆவி என் மேலே
என்னை அபிஷேகம் செய்துள்ளார்
எளியோர்க்கு நற்செய்தி கூறிடவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைற்திடவும்
குருடர் பார்வை பெற்றிடவும்
ஆண்டவர் அருளாண்டை அறிவிக்கவும்

நினைவாக செய்யுங்கள்


நினைவாக செய்யுங்கள்
நினைவாக செய்யுங்கள், நிறைவாக வாழுங்கள்
நிலையான என் அன்பிலே
உறவாக மலருங்கள் உருமாற்றம் காணுங்கள்
இறையரசின் சாட்சியாகவே
பகிர்வதே ஆனந்தம் பகிர்வதே பேரின்பம் - 2
நினைவாக செய்யுங்கள்...

I
ஐந்து அப்பம் இரண்டு மீனை அதிசயமாய் பழுகச் செய்து
பகிர்ந்து அளித்து பசித்தீர்த்தாரே
வாழ்வு தரும் உணவு என்றார் வற்றாத ஊற்று என்றார்
வான் சேர்க்கும் அப்பம் என்றாரே
ஓருடலாய் மாற திருக்கிண்ணம் நாம் பகிர்வோம்
ஓர்குலமாய் வாழ வேற்றுமைகள் களைவோம்
மனிதம் மலர அன்பில் வாழுவோம்
நினைவாக செய்யுங்கள் ...

II
சமபந்தி விருந்துக்கென எளியோரை வரவழைத்து
சமத்துவத்தை வாழச் செய்தாரே
நீதியின் பால் பசித்தாகம் கொண்டவர்கள் நிறைவடைவார்
நீதி நெறியில் நிலைத்திருப்போமே
தன்னுயிரை தந்து நாம் வாழ்ந்திட செய்தார்
தன்னுடலை ஈந்து நாம் வளர்ந்திட வைத்தார்
தியாக வாழ்வில் நாமும் வளரவே - 2
நினைவாக செய்யுங்கள் ...

இதோ இதோ என்னை தந்தேன் இறைவா


இதோ இதோ என்னை தந்தேன் இறைவா
இதோ இதோ என்னை தந்தேன் இறைவா
இதோ இதோ எல்லாம் தந்தேன் இறைவா
பொன்னை தரவா பொருள் தரவா
என்னை தருவேன் எல்லாம் தருவேன்
I
அனைத்து உலகின் இறையவனே
உம் அருட்பெருக்கின் கொடை தரவந்தோம்
நிலத்தின் விளைவையும் உழைப்பையுமே
அப்பமாய் இரசமாய் தருகின்றோம்
II
தீமை எமக்குச் செய்தவரை 
தினம் மன்னித்து பலி தர வருகின்றோம்
தேவ கிருபை மழையாகும் 
இத்தியாக பலிதனை தருகின்றோம்

ஓ பரிசுத்த ஆவியே

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்
I
என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி
பணிவேன் என் இறைவா - உந்தன்
திருவுளப்படி என்னை நடத்தும்

ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே
ஆட்கொள்ள வருவீர் ஆவியே
I
வருவீர் அனலாய் உருமாற்ற
வருவீர் துணையாய் வழிநடத்த
II
வரங்கள் கனிகள் பொழிந்திடுவீர்
வளமுடன் வாழ வரம் தருவீர்
III
சோதனை அனுகா காத்திடுவீர்
சோதிக்கும் சாத்தானை வென்றிடுவீர்

ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்

ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன் - 2 ஆ...
இறைவா உந்தன் பேரன்பை என்றென்றும் நினைந்து நான் பாடுவேன் - 2
நீரே உண்மை என உணர்ந்து உள்ளம் மகிழந்து போற்றுவேன் - 2
இறைவா உந்தன் ...
I
என் ஊழியன் தாவீதை கண்டுப்பிடித்தேன்
என் திருத்தைலத்தால் அவனுக்கு திருப்பொழிவு செய்தேன்
என் கை எப்பொழுதும் அவனோடிருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்
ஆண்டவரே போற்றிப்பாடுங்கள் அவர் பெயரை என்றும் வாழத்துங்கள்
அவரது மாட்சியை எடுத்துக்கூறுங்கள்
II
என் வாக்கு பிறழாமை அவனோடிருக்கும்
என் பெயரால் அவன் வலிமை உயர்திடப்படும்
நீரே என் தந்தை நீரே இறைவன்
என் மீட்பின் பாறை என்று அவன் என்னை அழைத்திடுவான்
விண்ணுலகம் மகிழ்வதாக மண்ணுலகம் களிக்கூறுக
கடலும் அதில் நிறைந்த யாவும் உறங்கட்டும் - 2
இறைவா உந்தன்...