நீயே எனது ஒளி

நீயே எனது ஒளி நீயே எனது வழி
நீயே எனது வாழ்வு இயேசையா - 2
1.
நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் - 2
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் - 2
உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் - நீயே

2.
துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் - 2
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் - 2
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே

உம் சிறகுகள் நிழலில்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா
1.
பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்

2.
வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

எனில் வாரும் என்யேசுவே

எனில் வாரும் என்யேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே
இங்கு நீர் தானே எம் எல்லையே
1.
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்புத் தாயாக என்னாளும் என்னைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்துவா
தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன்
உறவை தேடியே (எனில்.)

2.
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமை எல்லாம் சுகமாக பகை எல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா
தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன்
உறவைத் தேடியே (எனில்)

இயற்கையில் உறைந்திடும்

இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு
நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா 2
1.
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ 2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா 2
2.
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ 2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா 2

இயேசு வந்த வீட்டிலே

  1. இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே
இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷமே
  • இயேசு வந்த வீட்டிலே சண்டை இல்லையே
  • இயேசு வந்த வீட்டிலே சமாதானமே
  • இயேசு வந்த வீட்டிலே கவலை இல்லையே
  • இயேசு வந்த வீட்டிலே துன்பம் இல்லையே

சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே
அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே
1.
வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
வழி அதை சுமந்தழைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.

2.
சாத்தான் சோதித்திட - தேவ
உத்தர வுடன் வருவார்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்

2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்

3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்

4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! - தந்

5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் -
தந்தானை