நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து 
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார். 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே lyrics

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிஜமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது

1. என் அன்னையின் கருவில்
என்னை நீ என்னை நீ தெரிந்தெடுத்தாய்
உன் கண்ணின் கருவிழிப் போல்
கருத்தாய் கருத்தாய் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்கச் செய்தாய்
வானின் மழையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது

2. என் உறவென்னை வெறுக்க
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்று நீ மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பமில்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே Lyrics

என் இனிய இயேசுவே
நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே
என் ஆன்மாவின் ஆயனே 
என்னை காக்கும் இனிய
மேய்ப்பனே
உன் அன்பை பாடுகிறேன் -2
நிறைகள் நான் கண்டேன் 
குறைகள் இனி இல்லையே
வசந்தம் நான் கண்டேன்
வாழ்வில் பயம் இல்லையே

பசும்புல் மேய்ச்சலில் 
இளைபாற செய்தீர்
வாழ்வில் வசந்தம் 
மலர்ந்திட கண்டேன் 
அமைதியில் நீர் நிலை
புத்துயிர் அளித்திட 
என்னை அழைத்தீர் 
நீதியின் வழியினிலே 
சாவின் இருளினிலே 
பள்ளதாக்கின் நடுவினிலே 
நான் என்றும் அஞ்சாமல் 
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால் 

எதிரிகள் காண
விருந்தொன்றை செய்தீர்
வளங்கள் வாழ்வில்
நிறைந்திட கண்டேன்
தலையில் நறுமண
தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பி
வழிய கண்டேன்
உந்தன் பேரன்பிலே
அருளும் நலம்பெறவே
நான் என்றும் அஞ்சாமல்
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால்

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம் lyrics

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம் -/1
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம் -/1 (அன்பு-1)

1.வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
இறைவனே தம்மையே இறைவனே தம்மையே மனிதர்க்கு அளிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே -/1 (அன்பு-1)

2.நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
அப்பமும் இரசமுமே அப்பமும் இரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நமை மறை உடலாக்கும் -/1 (beginning)

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள் lyrics

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்

இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள் (2)
வருவோம் சமத்துவ உறவிலே
பெறுவோம் இறைவனின் அருளையே (2)

1. பாலை நிலத்திலே பசியைப் போக்கவே
மண்ணில் வந்தது மன்னா உணவு (2) இங்கு
வாடும் மக்களின் துயரைப் போக்கவே
தேடி வந்தது இந்த தெய்வீக உணவு - வருவோம்...

2. இறுதி இரவிலே இயேசு தந்த உணவு
விடுதலையைத் தந்திட பலியான உணவு (2) இன்று
வீதி எங்குமே வாழ்வு மலர்ந்திட
ஆற்றலாகிடும் இந்த உயிருள்ள உணவு - வருவோம்...