இயேசுவின் இருதயமே


இயேசுவின் இருதயமே 
என்றும் எரிந்திடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே 

இறைவனுக் கிதயமுண்டு
அந்த இதயத்தில் இரக்கமுண்டு
என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
எங்கள் அனைவருக்கும் வாழ்வு உண்டு 

 பாவிக்குப் பொறுத்தலுண்டு
அந்த பரலோக வாழ்வு உண்டு
நாங்கள் கூவிடும் குரலை கேட்பதற்கு
இந்த கோயிலில் தெய்வம் உண்டு 

வழிகாட்டும் என் தெய்வமே

வழிகாட்டும் என் தெய்வமே

துணையாக எனில் வாருமே (2)

நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே

நான் தடுமாறும் நிலை பாருமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி

துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி

எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே


1. எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்

உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்

நீரின்றியே மண்ணில் வளமில்லையே

நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே - எந்நாளும் ...

எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது

துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது

பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா


2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே

என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே

உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ

உன் பார்வைகள் என் வழியாகுமோ - என் பாதை...

இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா

ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே

விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே

நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காண வா

என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்

என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்

ஏற்றமிகு உன் படைப்பிலே

அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்

அர்ப்பணமாக நானும் வந்தேன் -2


1. நான் காணும் உயிர்கள் எல்லாம் நாளெல்லாம் அவரினிலே

நான் தேடும் அமைதி எல்லாம் நாதன் அவர் பெயரினிலே

எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான்  - அர்ச்சனைப் பூவாய் . . . .


2. எனைத் தெரிந்தாய் கருவினிலே

அணைத்துக் கொண்டாய் அன்பினிலே

தனை அறிய தரணி எல்லாம் தன் கரத்தில் தாங்கிக் கொண்டாய்

எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான் - அர்ச்சனைப் பூவாய்

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ ­கடந்திட நேர்ந்தாலும்

உன்னோடு நானிருப்பேன் - 2 அஞ்சாதே கலங்காதே (2)


1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்

பொன் விளை நிலம் போலே

பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை

உயர்ந்தது அவராலே (2)

பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே

மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே

அஞ்சாதே கலங்காதே


2. பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும்

தோன்றிடும் அவர் கையால்

வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்

மேன்மையை எவர் சொல்வார் (2)

பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார்

இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும்

அஞ்சாதே கலங்காதே

உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர

உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர

மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க - வாரும் இறைகுலமே (2)


1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு

நிலவாய் நிலமதில் நடந்தவனே

இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்

இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே

பாவம் நம்மிலே மறையாதோ தேவன்

பாதம் நம்மிலே பதியாதோ

சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்


2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்

கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்

ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்

விழிகளில் கருணை மழை பொழிந்தாய்

புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்

அன்பின் பலியினில் கலந்திடவே

ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்

நிலையான புகழுக்குரிய

நிலையான புகழுக்குரிய 

தூய இறை நன்மைக்கே,

எல்லா காலமும், 

தொழுகையும் புகழும் 

போற்றியும் மாட்சிமையும்

உண்டாகக் கடவது

வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

 வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

எங்கள் ஆரோக்கியத் தாய்மரியே நீ வாழ்க

எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்கே

எங்கள் தாயாக என்றும் இருப்பவளே


1. முடமாய் இருந்தவனை முழுவதும் குணமாக்கி

நடமாடச் செய்தவளே நாயகியே தாயே

குறைந்திட்ட பால் பெருக்கி குன்றாத நலம் புரிந்து

நிறைவு அடைந்திடச் செய்த எம் தாய்மரியே


2. செவ்வாய் இதழ்விரித்து செங்காந்தள் கரமுயர்த்தி

ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாய்

கத்தும் கடல் புயலடக்கி காற்றை நெறிப்படுத்தி

தரையில் அமைதியைத் தந்தவள் நீ தாயே