பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 23-10-2011


முன்னுரை:
பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, மன்னிப்பு ஆகிய அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் இணைத்து நிறைவுறச் செய்யும். மனித வாழ்வின் அச்சாணி அன்பு. ஒவ்வொரு மனிதனும் அன்புக்காக ஏங்கி தவிக்கிறான. அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல், அடுத்தவர்களின் பெயரை கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும். இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரது பிரசன்னம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் வெளிப்படுகிறது. எனவே நம்மை சூழ்ந்து வாழும் ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழக் கூடிய தியாக உள்ளத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று தொடரும் கல்வாரிப் பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: வி.ப.22:20-26
ஏழை எளியவர்களுக்கும, விதவை அனாதைகளுக்கும, தீங்கிழைக்காமல் நற்செயல்கள் செய்வதற்கான அழைப்பை யாவே இறைவன் நமக்கு முன்வைக்கிறார். எனவே நற்செயல் புரிவதற்கென்றே நம்மை இறைவன் படைத்திருக்கிறார்,அழைத்திருக்கிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1தெச1:5-10
புனித பவுல் தெசலோனிக்க நகர் மக்களைப்பற்றி பெருமையாகப் பேசுகின்றார். எதற்காக என்றால, அவர்கள் தங்கள் நம்பிக்கையின் வழியாக கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழ்ந்ததற்காக. ஆண்டவரின் வார்த்தை அவர்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தது மாசிதோனியாவிலும, அக்காயாவிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பரவியது. நம்பிக்கையினால் ஆட்கொள்ளப்படும் மக்கள் நற்செய்திப் பணியின் தூதுவர்களாக மாற ஆரம்பிக்கின்றனர் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்
  1. அன்பின் இறைவா, உம் அன்பு திருச்சபையை காத்து வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், அனைவருக்கும் உடல் உள்ள சுகத்தை தந்து திருச்சபையை திறம்பட வழிநடத்த தூய ஆவியானவரின் அருட்கொடைகளை நிறைவாகப் பொழிந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்பிலும், விசுவாசத்திலும், ஞானத்திலும், ஆன்மீகத்திலும் அழைத்து செல்ல வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. வழியும் உண்மையுமான இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். பணம், பட்டம, பதவி என்று தங்களுடைய விருப்பத்தை தேடாமல், மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி நாட்டில் பல்வேறு நலன்களை அவர்களுக்கு கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அடையவும, அன்பு செய்து வாழ வேண்டிய நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பு இறைவா, எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து இறைபக்தியில் சிறந்து விளங்கிட தூய ஆவியை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் என்கே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும்,  இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக