Sermons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sermons லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புத்தாண்டு விழா

முன்னுரை
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இந்த நாள் இனிய நாள். இன்று புத்தாண்டு விழாவையும், அன்னை மரியா இறைவனின் தாய் என்ற விழாவையும் இணைத்து திருச்சபை கொண்டாடுகிறது. புதிய நாளை காண வாய்ப்புக் கொடுத்த ஆண்டவரைப் போற்றுவோம், நன்றி கூறுவோம். கடந்த ஆண்டு இறைவன் வழியாக பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைவு கூறுவோம். நம் உறவுகளுக்கு உறுதியூட்டுவோம் ஒவ்வொரு கணமும் ஆண்டவரின் அருள் தரும் நாளாக மாற ஆண்டவரை இறைஞ்சுவோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், இன்ப துன்பங்களை சமமாக பார்த்து சரித்திரம் படைக்கவும், அமைதியான உலகை உருவாக்க அன்னையின் துணையை வேண்டி இக்கல்வாரி பலியில் ஒன்றிணைவோம்.
முதல் வாசகம் (எண் 6:22-27)
ஆண்டவர் அனைவருக்கும் ஆசீர் வழங்குகின்றார் அதை நாம்தான் உணரவில்லை. ஆண்டவரின் ஆசீர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அமைதியை தருகிறது. அருள் பொழிகிறது என விளக்கும் முதல் வாசகத்தை திறந்த மனதுடன் கேட்போம்.
இரண்டாம் வாசகம் (கலா 4:4-7)
சட்டத்திற்கு அடிமையாகி, சுதந்தர வாழ்வை இழந்து வாழ்ந்த நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார். கடவுள் தம் ஆவியை பொழிந்ததினால் நாம் அவரை அப்பா என அழைக்கும் உரிமை பிள்ளைகளானோம். இறை பிள்ளைகளாய் வாழ இரண்டாம் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இறைமக்களின் வேண்டல்

1. அன்பின் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் சமாதான கருவிகளாய் திகழவும், இறையரசின் விழுமியங்களை நிலைநாட்ட தேவையான உடல், உள்ள நலனை தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானம் அளிக்கும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, நாடுகளிடையே சமூக உறவை வளர்க்க தேவையான பரந்த மனதை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் பொழியும் தலைவா! உலக மக்கள் சுயநலத்தை விடுத்து, பிறர் நலம் காக்க சுற்றுபுற சுகாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவும், சமூக பாகுபாடுகள் ஒழிந்து சமத்துவம் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி மக்கள் புதுவாழ்வு பெற வேண்டிய வரங்களை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் நல்தெய்வமே! புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 2: 16-21)

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று தாய் திருச்சபை இரண்டு விழாக்களை இணைத்து கொண்டாடி மகிழ்கிறது. 1. அன்னை மரியா இறைவனின் தாய் 2. புத்தாண்டு விழா. ஜானஸ் என்ற உரோமை கடவுளின் பெயரில் இருந்து ஜனவரி என்ற மாதம் உருவானது. இந்த உரோமை கடவுளுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும், இது எதை குறிக்கிறது? நாம் கடந்து வந்த காலம், விட்டு வந்த தடங்கள், மகிழ்ச்சியான நேரங்கள், கசப்பான அனுபவங்கள், சாதனைகளை திரும்பி பார்த்து நினைவு கூறவும், வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நம் கண்முன் நிற்கும் சவால்களை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அன்னை மரியா - இறைவனின் தாய்
மரியா, இயேசுவின் தாய், இறைவனின் தாய் என்னும் உண்மை, விவிலியத்திலும், வரலாற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்படமுடியாத ஓர் உண்மை. தொடக்க காலத்திலிருந்தே, மரியாவை இறைவனின் தாய் என போற்றி வணங்கி வந்தனர். கி.பி.429 ம் ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமையன்று கான்ஸ்ந்தாந்தி நோபிள் என்ற நகரில் நெஸ்டோரியஸ் என்ற ஆயர் தன்னுடைய மறையுரையில் மரியா மனித தன்மையில் இருந்த இயேசுவின் தாயேயன்றி, இறைவனின் தாயல்ல என்று குறிப்பிட்டு, யார் யாரெல்லாம் மரியாவை இறைவனின் தாய் என்கிறார்களோ அவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இதை மறுத்து கி.பி.431ல் எபேசு நகர் பொது சங்கம் theotokos (தெயோடோகோஸ்) என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தி, மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தியது. தெயோஸ் என்றால் கடவுள், டோக்கோஸ் என்றால் ஈன்றெடுத்தவர் என்பது பொருள்.

புதிய ஆண்டிலே அடி எடுத்து வைக்கின்ற நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் ஆண்டவர் கூறுவது: எனது ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. இந்த ஆண்டு முழுவதும் உனக்கு அமைதி தருவேன் என்கிறார். இன்றைய முதல் வாசகம் (எண் 6:22-27) குருத்துவ ஆசிமொழிகள் பற்றி குறிப்பிடுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெற ஒவ்வொரு மனிதரும் விரும்புகின்றனர். மக்கள் செல்வங்களில் ஆண்மக்கள் ஆசீர், பெண்மக்கள் சாபம் என்ற கருத்து மக்கள் மனதில் இருந்தது. தால்மூத் என்னும் யூத விளக்கவுரை நூல் எண் 6:24 க்கு இவ்வாறு விளக்கமளிக்கிறது.

ஆண்டவர் உனக்கு ஆண்பிள்ளை என்னும் ஆசி வழங்கி, பெண் பிள்ளையினின்று உன்னை காப்பாராக என்கிறது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் ஆபிரகாமிடம் உனக்கு ஆசி வழங்குவேன் … நீயே ஆசியாக விளங்குவாய்… உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்றார் (தொநூ 12:2-3). யாக்கோபு ஆற்றுத்துறையில் ஒரு நபரோடு போராடியபோது, நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடமாட்டேன் என்று கூறினார் (தொநூ 32:26).

புதிய ஏற்பாட்டில், பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தினை பெற்ற மரியா (லூக் 1:42) கடவுளின் திருவுளத்தை செயல்படுத்த துன்பம் ஏற்ற ஓர் உண்மையான அடியவராக விளங்கினார்.

ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திபா 121:8ல் பார்க்கிறோம். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார்: வரும்போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னை காப்பார்.” ஆண்டவரின் கரம் நம்மைக் காத்து வழி நடத்தும் போது நமது வாழ்வில் அமைதி நிலைக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலா 4:4-7), பெண் வழியாக எவ்வாறு மனித குலத்திற்கு அழிவு வந்ததோ, அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்தது. கிறிஸ்து மனிதனாகவில்லை, கடவுளாக மட்டுமே இருந்தார். வானவர் போன்று காட்சி தந்தார் என்னும் கருத்தை எதிர்த்து, அவர் உண்மையில் மனித நிலையை ஏற்றார் என வலியுறுத்துகிறது. அவர் மனித இயல்பில் மட்டும் பங்கு கொள்ளாமல், எல்லா மனிதரைப் போல சட்டத்திற்கும் கட்டுப்பட்டார்.

கிறிஸ்து மேற்கொண்ட மீட்பு பணியின் இரு நோக்கங்களும் கூறப்படுகிறது. 1.திருச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்பது 2. இறைவனின் பிளைளைகளாக்குவது. யூதர் தம் தந்தையரை அன்போடு அழைக்க ‘அப்பா’ (யுடிடிய) என்னும் அரமேயச் சொல்லை பயன்படுத்துவர். ஆனால் இதே வார்த்தையை கொண்டு தந்தை கடவுளை அழைக்க எந்த ஒரு யூதனும் துணியமாட்டான். இயேசுவோ அப்பா என அழைப்பதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் அவ்வாறு அழைக்கும் உரிமையை கொடுத்தார். நாம் அவரின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் ஆவியை பொழிந்துள்ளார். எனவே நாம் அடிமையல்ல அவரின் உரிமை மக்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் (லூக் 2:16-21) இடையர்கள் வியப்பு மிக்கவர்களாய் பெத்லகேமிற்கு சென்று தூதர் கூறிய ஒவ்வொன்றும், வார்த்தைக்கு வார்த்தை உண்மையாயிருப்பதை கண்டனர். தங்களுக்கு தூதர் அறிவித்ததை; யோசேப்புக்கும், மரியாவுக்கும், மக்களுக்கும் தெரிவித்தனர். மக்கள் வியந்தனர். அதோடு மறந்திருக்க கூடும். ஆனால் ஒரு பெண் மட்டும் மறக்கவில்லை அவர்தான் மரியா. அதையும் உள்ளத்தில் சிந்தித்தார். இறைவன் விரும்பிய விதத்திலே மரியா இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்.
குழந்தைக்கு பெயர் கொடுப்பது தந்தையின் உரிமையாகும். இங்கு கடவுளே தூதர் வழியாக “யாவே மீட்கிறார்” என பொருள்படும் இயேசு என்ற பெயரை கொடுக்கிறார்.

இறையேசுவில் பிரியமானவர்களே! இந்த நன்னானில் அண்டவரின் ஆசிரும், அமைதியும் நமக்கு நிறைவாய் கிடைக்க ஜெபிப்போம். கடந்த காலத்தில் ஆண்டவர் அன்னை மரியா வழியாக செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். வருகின்ற ஆண்டிலே நாம் செய்யும் செயலை இறைவன் நிறைவாய் ஆசிர்வதிக்கவும், அனைத்தும் வெற்றியடையவும் நம் விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.

அமைதி என்பது சண்டை, சச்சரவு இன்றி வாழ்வது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த தூய வாழ்வு வாழ்வதேயாகும். இறைவன் மட்டுமே அதை கொடுக்கமுடியும். யோவா 14:27ல் “அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்”, என்று இயேசு கூறினார். அமைதியை பெற்ற நாம் அதை எல்லா இடங்களிலும் நிலைநாட்ட வேண்டும். நம்முடைய குடும்பங்களில், உறவு நிலைகளில், அமைதியை ஏற்படுத்துவது நமது கடமை, ஏனெனில் ஆண்டவர் இயேசு பிறந்த போதும், இறந்து உயிர்த்த பின்னும் அவர் நமக்கு விட்டு சென்றது அமைதி. இந்த புதிய ஆண்டில் இறைவனை மையப்படுத்தி நம் செயலை தொடங்கும் போது நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.

- பெ. யூஜின் அருண்குமார்

திருக்குடும்பத் திருவிழா 30-12-2011

இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!

இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல.  மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது.  குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது.  தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.  

தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான்.  அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம். 

மனிதனை மனிதனாக்குவது

மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள்.  வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது.  அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.  

காலங்கள் மாறுகின்றன.  நாகரீகங்கள் மறைகின்றன.  ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது.  அதை எவராலும் அழிக்க முடியாது.  காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227).  கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார்.  அப்படியே மனிதனும்.  அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான்.  எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.  இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது.  இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.  

நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
  1. புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.  (மத். 1:24)
  2. அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும்.  (மத். 2:14, 19-23)
  3. புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2) 
  4. ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும்.  (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
  5. குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.  (லூக் 2:51-52, கொலோ 3:20)
  6. குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும்.  (சீ. ஞா 3:7)
  7. பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும்.  (கொலே. 3:21)
  8. குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.  (கொலே 3:12)
  9. குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
  10. அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15). 
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர்.  இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல.  இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள்.  நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது.  ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர்.  இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார்.  மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்! 

திருத்தொண்டர் ராபர்ட்

இயேசு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு Easter Tamil Sermon


Click to listen to Fr. Arul Prakasam Sermon on Easter Vigil 2011
(உயிர்ப்பு ஞாயிறு மறையுரை ஒலி வடிவில்)



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்
பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்.
பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்.

எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், ஆதியும் அந்தமுமாய் 
‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் வரையுமாய் ஊனாய் உயிராய் உண்மையாய் ஒளியாயிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா வாழ்த்துகள்.

உண்மைக்கு இல்லை உறக்கம். 

அன்பிற்குரியவர்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள செயல்வீரர்களாக, வெற்றியின் விழா நாயகர்களாக நாம் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் யோவான் குறிப்பிடுகின்ற ஒவ்வொரு அடையாளங்களும் வார்த்தைகளும் அதிக இறையியல் அர்த்தமுள்ளதாகவும் தினந்தோறும் இயேசுவின் உயிர்ப்பு நம்மில் நிகழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

‘வாரத்தின் முதல் நாளான்று’ என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வார்த்தை யூத மக்களின் பழக்கமான தொழுகைக் கூடத்தில் கூடுவதையும் கடவுள் முதல் நாளன்று (தொநூ 1, 3) ‘ஒளி தோன்றுக’ என்றார்.  உடனே கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கடவுளின் நாளாக  அனுசரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கிறிஸ்துவ மக்கள் யூதர்களைப் போல் ஆலயத்தில் கூடுகின்றோம்.  அப்போது நாம் உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கிறோமா அல்லது உணர்கிறோமா என யோசிக்க வேண்டும். 

‘விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்’.  இவ்வார்த்தையை ஆழமாக சிந்தித்து பார்த்தோமென்றால் இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும். அதாவது இயேசுவின் சீடர்களுக்கும் மகதலா மரியாவுக்கும் இயேசு தான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னது மறந்து போனதால் அவர்களுக்குள் ஓர் அச்சம் நிலவியிருக்கலாம். காரணம் இயேசுவின் உடலை மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள் எங்காவது எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிடுவார்களோ என்றும் அல்லது திருடர்கள் கல்லறைக்குள் தங்க ஆபரணங்களோ விலைமதிப்பு மிக்க பொருளோ ஏதாவது இருக்கும் என்று எண்ணி நுழைந்து இயேசுவின் உடலை திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அச்ச உணர்வால் அவர்கள் உள்ளம் இருள் சூழ்ந்திருக்கலாம். மேலும் இயேசுவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் செய்ய கல்லறைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டதோ கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது. எனவே இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா என்ற மாபெரும் மகிழ்ச்சியுணர்வு அவளுக்குள் ஏற்பட்டு அவளுள் படர்ந்திருந்த இருளை நீக்கி, ஒளியினால் பேருவகை அடைந்திருக்கலாம்.  மேலும் இயேசு இருள் படர்ந்திருந்த போதே உயிர்த்திருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது இருளுக்கும் ஒளிக்குமான போராட்டம், சாவுக்கும் உயிர்ப்புக்குமான போராட்டம், கெட்டதுக்கும் நல்லதுக்குமான போராட்டம், சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையிலானப் போராட்டத்தில் இயேசு என்னும் ஒளியானவர் சாவை பாவத்தை வென்று இருளின் ஆட்சியை பாவத்தின் கொடுக்கை பிடுங்கியுள்ளார் என்பது விளங்குகின்றது. 

மகதலாமரியா இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது அது அவர்களுக்குள் ஒரு தேடலையும், விசுவாச உறுதிப்பாட்டையும், இறையனுபவத்தையும் பெற உதவியாக அமைந்திருக்கிறது என்பதை (யோவா 3-8) பார்க்கிறோம். 

பேதுருவும், இயேசுவின் அன்பு சீடருமான யோவானும் ஒருமித்து இலக்கு நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் அன்பு சீடர் இயேசுவின் கல்லறையை முதலாவதாக அடைந்தார் என வாசிக்கிறோம். இடையில் பேதுருவுக்கு என்னவாயிற்று. ஒருவேளை பேதுரு ஓடும்போது இயேசுவை மும்முறை மறுதலித்தேனே இப்போது எந்த முகத்துடன் பார்ப்பது என்ற கலக்கமான இறுக்கம் அடைந்த மனநிலையுடன் ஓடியிருப்பார்.  ஆனால் பேதுருவுக்கு பாவத்தின் குற்ற உணர்வை விட  இயேசுவின் மீதிருந்த அன்பு அவரை கல்லறைக்கு உந்திக்தள்ளியது.  யோவான் வெறும் கல்லறைக்கு சாட்சியாக வெளியில் நிற்கிறார். ஆனால் பேதுருவோ இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக கல்லறையினுள் செல்கின்றார். 

இயேசுவின் மீதிருந்த  துணி அப்படியே இருக்க இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார். எனவே உயிர்த்த இயேசுவுக்கு மனித உடலா? கடவுளின் உடலா? என்கிற விவாதத்தை விட நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதை உறுதியாக்கிக் கொள்வோம்.  இயேசு ஏன் தன் தலைமீதிருந்த துண்டை ஓரிடத்தில் தனியாக சுருட்டி வைத்திருந்தார்?

நம் தமிழ்கலாச்சாரத்தில் கிராமப்புறங்களில் பார்த்தோமென்றால் ஏதாவது அவமானமோ நஷ்டமோ ஏற்பட்டால் தலைமீது துண்டுபோட்டுக் கொண்டு செல்வர். ஆனால் இயேசுவின் உயிர்ப்பு அவமானத்திற்குரியதோ நஷ்டத்திற்குரியதோ அல்ல, நாம் தலைநிமிர்ந்து நிற்க, இயேசு அறிவித்த இறைவார்த்தை உயிருள்ளதாய், ஆற்றல்மிக்கதாய் நம்மிடையே உள்ளது என்பதை அர்த்தமாக வாழ அடையாளமாய் உள்ளதாகக் கொள்ளலாம். 
பேதுரு தான் கண்ட உயிர்த்த இயேசுவின் காட்சிக்கு சாட்சியாய், பிற இனத்தவர் மத்தியில் சென்று அறிவிக்கிறார். கொர்னேலியு ஓர் அரசாங்க அதிகாரியாய், வேற்றினத்தவனாய் இருந்தும் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை நம்பியதால் இயேசு என்னும் ஒளி அவனுள்ளும், அவன் குடும்பத்தாரோடும் என்றும் இருக்கவும், இயேசுவின் சாட்சியாய் திகழவும், பாவத்தை வென்றவரை அறிக்கையிடவும் திருமுழுக்கு பெறுகின்றனர் என்று இன்றைய முதல் வாசகமும் விவரிக்கிறது. 

திருமுழுக்கு பெற்ற நாம் இறைவனோடு இணைக்கப்பட்டவர்கள், கிறிஸ்து என்னும் ஒளியின் பங்காளிகளாக மறைமுகமாக அவருடன் உள்ளுக்குள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். எனவே இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்ற ஒளியாகிய இயேசுவுக்கு ஏற்ற சீடர்களாய் மாட்சி பெற்றவராய் நாம் தொடர்ந்து வாழ அவருக்குரியவற்றை நாம் நாட வேண்டும் என இரண்டாம் வாசகமும் வலியுறுத்துகின்றது. 

இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  அவனை/அவளைப் பற்றி தெரியதா? அவன்/அவள் தப்பனாவள், ஊர் ஏமாற்றி பிழைத்தவள் என தவறான சந்தேகங்களை விட்டுக் கொடுக்கும்போது நாம் இயேசுவில் உயிர்த்தவர்களாகிறோம். 

இயேசுவின் உயிர்ப்பு
மகதலா மரியாவின் சந்தேகத்தை போக்கியது
இறைஅனுபவத்தைத் தந்தது
பேதுருவின் கலக்கத்தை போக்கியது
மனதிடத்தை தந்தது
யோவானுக்கு அன்பை உறுதியாக்கியது

நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம்.

இருளைத் தவிர்ப்போம்
ஒளியில் வாழ்வோம்
ஏனெனில்
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - ஆனால் தருமம் மறுபடியும் வெல்லும்
உண்மைக்கு இல்லை உறக்கம்.


- இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

புனித வெள்ளி Good Friday Tamil Sermon


கடவுள் இறந்துவிட்டார்.

எங்கே நீதி இல்லையோ. எங்கே உண்மை இல்லையோ, எங்கே அன்பு இல்லையோ, எங்கே சமாதானம் இல்லையோ, எங்கே தியாகம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டான்.

அன்புக்குரிய இறைமக்களே,

எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்து பிறகு இறந்து விடுகிறார். நான் வெளியூரில் இருப்பதால் அடக்க சடங்கிலே கலந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். எனது தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் போது எனக்கான, எனக்குரிய செய்திகளை என் உடன் பிறந்த சகோதரர்களிடம் விட்டுச் சென்றிருப்பார். நான் ஊருக்கு சென்றவுடன் என் சகோதரர்கள், தந்தை எனக்காக விட்டுச் சென்ற செய்திகளை அறிவுரைகளை என்னிடம் கூறுவார்கள். நானும் இந்தச் செய்தியினை, அறிவுரைகளை பின்பற்றி வாழுவேன். நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவேன். 2000 ஆண்டுகளுக்கு முன் நமக்காக, நமது பாவங்களுக்காக இறந்த கடவுள், நமக்கான செய்திகளை, வழிமுறைகளை மூன்று சகோதரர்கள் வழியாக விட்டுச் சென்றிருக்கிறார். 

1. முதலாவது சகோதரர் எசாயா இறைவாக்கினர் வழியாக மூன்று வித செய்திகளை தருகிறார்.
  1. இயேசுவின் துன்பங்களுக்கு முழுக்காரணமும் நமது பாவங்கள்  அதாவது நீங்களும் நானும் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். (எசா 53, 5 )
  2. நமக்காக, இறைவன் நிலையிலிருந்து தாழ்ந்து மனித நிலைக்கு வந்து சிலுவைச் சாவை ஏற்கிறார். (எசாயா 53, 2-3)
  3. அடுத்தவரின் நலனுக்காக நாம் செய்யும் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. (எசாயா 53, 11).

2. இரண்டாவது சகோதரர் பெயர் தெரியாத அன்புச் சீடர்.  அவர் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி. 
  1. நம்மில் யாரும் இயேசுவைப் போல் துன்பப் பட்டதில்லை. இனி அவ்வாறு துன்பப் பட போவதுமில்லை.
  2. மனிதனாக பிறந்த இயேசுவுக்கும் நம்மைப் போல் சோதனைகள் வந்தன. நமக்கும் இயேசுவுக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர் சோதனைகளை வெற்றிக்கண்டார். நாம் சோதனைகளை வெற்றிக் கொள்ள மறுக்கிறோம்.

3. மூன்றாவதாக இன்றைய நற்செய்தியாளர்.....
தன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இயேசு அநீதியை தட்டிக் கேட்க தயங்கவில்லை. நான் பேசியது தவறு என்றால் தவற்றை சுட்டிக் காட்டுங்கள் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டாலும் தந்தையின் விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் தன்னை கையளிக்கிறார்.  இந்த மூன்று சகோதரர்களும் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி எல்லோருடைய வாழ்க்கையிலும் சோதனைகள், துன்பங்கள் கண்டிப்பாக வரும்.  குறிப்பாக சமுதாய நலன்களுக்காக பாடுபடும் உள்ளங்களுக்கு துன்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே வரும். துன்பங்களை கண்டு விலகிவிடக் கூடாது. மாறாக இயேசுவைப் போல் வெற்றி பெறும் வரை,  இறுதிவரை போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காக இயேசுவைப் போல் நாமும் தாழந்து போக வேண்டும்.
நம் எதிரிகளை மன்னிக்க வேண்டும். குறிப்பாக நாம் இறக்கும் போது நமக்கென எதிரிகள் யாரும் இருக்க கூடாது. இயேசு இறக்கும் தருவாயில் கூட தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று தன் பகைவர்களை மன்னிக்கிறார்.

இறுதியாக இயேசுவைப் போல், தியாக வாழ்வு வாழ அழைக்கப் படுகிறோம். நமது வாழ்க்கையில் தியாகம் என்பது எடுத்த உடனே வந்து விடாது. தனிமனித உதவியிலிருந்து சமுதாய உதவிக்கும் பிறகு ஒட்டுமொத்த உலகத்தின் உதவிக்கும் நமது வாழ்வை மாற்றும் போதுதான் தியாக வாழ்வானது நமது வாழ்வில் பிறப்பெடுக்கும்.

எடின்பர்க் என்றொரு நகரம். அதன் எதிரே மற்றுமொரு அழகிய நகரம். இரண்டுமே சுற்றுலாத்தலங்கள். இரண்டு நகரங்களுக்கிடையே ட்ரே என்றொரு மிகப்பெரிய ஆறு. சுற்றுலாத்தலமாதலால் இரண்டு நகரங்களையும் இணைக்க இரயில் பாலம் கட்டியிருந்தார்கள். அந்தப் பெரிய ஆற்றலே தினசரி கப்பல் போக்குவரத்தும் உண்டு. கப்பல் போகும் போது பாலம் மேலே திறந்து கொள்ளும். இரயில் போகும் போது பாலம் சமநிலைக்கு வந்துவிடும். சரியான நேரத்தில் பாலத்தை திறக்கவும், மூடவும் ஒரு நபர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தன் பணியினை செவ்வனே செய்து கொண்டிருந்தார். 1898-ம் வருடம் ஜூன் மாதம் ஒரு நாள் இரயில் வருவதற்கான நேரம். பாலம் திறந்திருக்கிறது. சமநிலைக்கு கொண்டு வரவேண்டும். அதை இயக்குகின்ற இயந்திரம் திடீரென்று பழுதாகி விட்டது மிகவும் போராடி, சரி செய்தாகிவிட்டது. இரயிலும் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த விசையினை அழுத்த தாயராகிறார். அப்பொழுதுதான் தெரிய வருகிறது. அதுவரையில் அந்த அறையில் விளையாடிக்கொண்டிருந்த தன் அன்புக் குழந்தை 5 வயது சிறுவன் நடுவில் செங்குத்தாக நின்று கொண்டிருந்து. 

பாலத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தான். மகனைக் காப்பாற்றினால் இரயிலில் உள்ள நூற்றுக்கணக்காண சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றிலே மூழ்கி இறந்து போவார்கள்.  ஒரே நேரத்தில் இரண்டையும் காப்பாற்றவும் முடியாது. இரயிலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடிப் பொழுதுதான் யோசித்தார். அடுத்த விநாடி அந்த இரயில் அழகாக மறுகரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இரயிலில் இருப்பவர்களுக்கு தெரியாது, தாங்கள் உயிரோடு இருப்பது ஆற்றில் மிதக்கும் அந்த பிஞ்சுக் குழந்தையாலும் அதன் தந்தையின் தியாகத்தாலும் என்று.....

அன்பார்ந்த இறைமக்களே!

மற்றவர்கள் இரயிலும் கப்பலும் பயணம் செய்ய உதவிக் கொண்டிருந்த அந்த நபர் இறுதியில் அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு துன்பமே வராமல் பாதுகாக்கிறார் அதற்காக அவர் செய்த தியாகம் தன் மகனின் உயிர். மற்றவருக்கு துன்பமே வராமல் பாதுகாக்க முடிவெடுத்தால் கண்டிப்பாக நாம் தியாகம் செய்தாக வேண்டும். துன்பங்களை சந்திக்க வேண்டும். சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும். இதையேத்தான் நமக்காக துன்பப்பட்டு இறந்த இயேசுவும் தன் வாழ்க்கையில் செய்தார். 

பற்பல உதவிகளை, புதுமைகளை செய்தார் இயேசு. நோய்களை குணமாக்கினார், ஏழைகளுக்கு இரங்கினார். பசித்தோருக்கு உணவளித்தார். இறுதியாக நமது பாவங்களுக்காக, நம்மை மீட்க சிலுவைச்சாவை ஏற்கிறார். இதற்காக அவர் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், சோதனைகள் ஏராளம். அவரது வாழ்க்கையில் உண்மையிருந்தது, அன்பிருந்தது, அவரது செயல்களில் நீதி இருந்தது, சமாதானம் இருந்தது, அவரிலே தியாகம் இருந்தது. அதனால்தான் இயேசுவில் இறைவனும் இறைவனில் இயேசுவும் வாழ்ந்தார்கள்.

நமது வாழ்க்கையில் எங்கே உண்மையில்லையோ, அன்பில்லையோ, தியாகமில்லையோ, நீதி இல்லையோ, சமாதானம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டார்.

நாம் கடவுளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது அனுதினம் சாகடித்துக் கொண்டிருக்கிறோமா?


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

புனித வியாழன் மறையுரை Holy Thursday Tamil Sermon



Click to listen to Fr. Arul Prakasam's Sermon on Holy Thursday 2011
(பெரிய வியாழன் மறையுரை ஒலி வடிவில்)


மறைந்த நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் சொந்த நாடான போலந்து கம்யூனிச ஆதிக்கம் ஓங்கியிருந்த நாடு. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் மாக்சிமிலன் கோல்பே என்னும் ஒரு கத்தோலிக்க குருவானவருடன் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைதிகளில் யாரோ தப்பிவிட்டான் என்று திடீரென தலைவன் வந்து பத்து பேரை பிடித்து கொல்லப் போவதாக அறிவித்தான். அந்தப் பத்து பேரில் ஒருவன் ஐயோ என் மனைவி மக்களை யார் காப்பாற்றுவது யாருமில்லையே எனக்கதறி அழுது புலம்ப ஆரம்பித்து விட்டான். கேட்டுக்கொண்டிருந்த இந்த குருவானவர் மாக்சிமில்லன் கோல்பே முன்னே சென்று அவரை விட்டு விடுங்கள் அவரிடத்தில் நான் சாகத் தயார் என்று கூறினார் பின் அவர் விடுவிக்கப்பட்டு, குருவானவர் கொல்லப்பட்டார் கொடூரமாக.

இறை இயேசுக் கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய முதல் வாசகத்தில், எப்படி இந்த பாஸ்காவைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதைக் கேட்போம். இதன் இறுதியில் ஆண்டவர்: “நீங்களோ அந்நாளை, நினைவு கூற வேண்டிய நாளாகக் கொண்டு அதை உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவருடைய திருவிழா என்று எக்காலமும் கொண்டாடி வருவீர்கள்” என்று விடுதலைப்பயணப் புத்தகத்தில் அதிகாரம் 12, 14ல் படிக்க கேட்டோம். அதனையே கட்டளையாகவும் இறைவன் கொடுக்கின்றார். அதன்படியே யூதர்கள் அனைவரும் ஆண்டுதோறும் இந்த பாஸ்காவைக் கொண்டாடி வந்தனர்.
றைமகன் இயேசுவும் 32 ஆண்டுகளாக இதையேதான் கொண்டாடினார்.  ஆனால் பழைய பாஸ்காவானது தன்னிலே ஒரு நிறைவடைந்தாகத் தெரியவில்லை. ஆனால் இயேசுவின் பாஸ்காவானது ஏதோ ஒரு முழுமையாக மாபெரும் ஒரு பாஸ்காவை சுட்டிக் காட்டியது.

இந்த முன் குறித்த மகத்தான பாஸ்காவை நிகழ்த்தப் போகும் நோக்கத்தோடுதான் பாஸ்காவுக்கு தயார் படுத்தும்படி இயேசு கூறியதாக புனித லூக்கா நற்செய்தியில் அதிகாரம் 22, 8-11, விவரிக்கின்றார். இந்த இறுதி பாஸ்கா உணவில் பழைய பாஸ்காவை இயேசு உருமாற்றுகிறார். அன்று இரவு பிடிபட்டு, கொடூரமாக மரிக்கப் போகும் நிலையை உணர்ந்து என்றுமே தன் பிரசன்னம் நிலைக்கவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அந்த புளியாத அப்பத்தையும் இரத்தததையும் தன் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றிவிட்டார். இதுதான் விசுவாசத்தின் மறைபொருள், ஆண்டவரே தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுக்கிறோம் என்று இன்றைய இரண்டாம் வாசகமாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் கூறுவதைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியில் நடுப்பகுதியில் அறிக்கையிடுகிறோம். கிறிஸ்துவே தமது திருஇரத்ததால் நம்மை தந்தைக் கடவுளோடு இணைக்கும் இணைப்பாளராக உள்ளார். கிறிஸ்துதான் இந்த புதிய உடன்படிக்கையின் பலிப்பொருள், பலிப்பீடம், பலியிடும் குரு.

இந்த உன்னத பலியின் மூலம் கிறிஸ்து தாமே கடவுளின் தலைமை குருவாக இருக்கிறார். அதே சமயம் அவர் பாவத்தைத்த தவிர மற்ற அனைத்திலும் மனிதர்களைப் போல இருந்தார். அவர்களை சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவுமில்லை (எபி 2, 11) நம்மோடு இப்படி உறவாட வந்த அவர் கொடுத்த இந்த சமத்துவமும், உரிமையும்தான் மற்ற மனிதர்களை அதாவது நம்மை அவரின் உன்னத குருத்துவத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பளிக்கிறது. வழியும் செய்கிறது.

எப்படி இந்த குருத்துவத்தில் இறைமக்கள் நாம் அனைவரும் பங்கெடுப்பது, புனித பேதுரு எழுதிய முதல் கடிதம் 2, 4-5 சொல்வது போல் இறைமக்கள் அனைவரும் தங்களையே கடவுளுக்கு உகந்த ஞானபலியால் காணிக்கை பங்கு பெரும் உரிமை பெற்று, அழைக்கப்பட்டிருகிறோம். 

இந்த பொதுக் குருத்துவத்தைத்தான் அதே கடிதம் முதல் பேதுரு 2 , 9ல் படிக்கக் கேட்கிறோம். எதில் இந்த பொதுக் குருத்துவம் அடங்கி இருக்கின்றது? ஏற்கெனவே பார்த்தது போல வாழ்க்கை பலியில் அடங்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை பலி என்பதென்ன?

இதற்கு அதே கடிதம் முதல் பேதுரு 2, 9ல் மேலும் நற்செய்தியின் மதீப்பீடுகளை வாழ்வதும், இறைவனின் வல்ல செயல்களுக்கு வாழ்வில் சான்று பகர்வதும் தான் வாழ்க்கைப்பலி.
  1. குழந்தை இறந்துவிடும் போலிருக்குங்க, கையில காசு இல்ல... ஒரு 1000 ரூபாய் கொடுத்தா திருப்பி கொடுத்திடுறேன் என்று கேட்டு ஒருவர் கண்ணீர் விடும்போது சாப்பாட்டுக்கு வைத்திருக்கும் பணத்தையும் கொடுப்பதுதான் வாழ்க்கைபலி.
  2. சம்பளம் மேசை மேல், கிம்பளம் மேசைக்கடியில், என்று இருப்பவர் மத்தியில் நான் கிறிஸ்தவன், சம்பளத்திற்கு உகந்த வேலை செய்வேன் என்பது வாழ்க்கைபலி.
  3. இருக்கும் உணவையெல்லாம் தன் 4, 5 குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, வெறும் சோற்று நீரைக் குடித்துவிட்டு படுத்துவிடும் தாய் செய்வது வாழ்க்கைபலி.
  4. என்னைத் தரக்குறைவாக அனைவர் முன்னாடி பேசிவிட்டானே, இருந்தாலும் நான் அவனை மனதார மன்னிக்கிறேன் என்பது வாழக்கைபலி.
அன்றாடம் நாம் சந்திக்கும் இந்த உண்மைகளை செயல்படுத்துவதுதான் வாழ்க்கைபலி. கிறிஸ்து நம் மீது அன்புகொண்டு, தன் உயிரையும் கையளித்ததைப் போல நாமும் அயலானுக்காய் அவ்வாறு செய்யும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். அவர் கடவுளின் மகனாய் இருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்தது. நாம் மனிதர்கள் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் மறையுரையின் துவக்கத்தில் கேட்ட அந்த உண்மை சம்பவத்தில் தன் உயிரை விட்டது ஒரு சாதாரண குருதான். எப்படி முடிந்தது?

மனிதபலம் மனித சக்தி இதனை நிறைவேற்ற முடியாது. இதற்கு சக்தியும் வல்லமையும் அளிப்பதுதான் இந்த நற்கருணை எனும் ஒப்பற்ற திருவருட்சாதனம்தான் இந்த வாழ்க்கை பலியை நிறைவேற்றும் முயற்சியில் மனிதனுக்கு பொது குருத்துவத்திலிருந்து பணிக்குருத்துவத்தை இறைமகன் இன்று ஏற்படுத்தினார்.  ஆகவே அரச குருத்துவ திருக்கூட்டமாக கூடியுள்ள நாம் இந்த வாழக்கை பலியை வாழ, வலிமையும், வல்லமையும் தரும் இந்த கல்வாரி பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

குருத்து ஞாயிறு Palm Sunday Tamil Sermon


ஒரு தந்தையும் மகனும் பிழைப்பு தேடி காட்டு வழியே பயணம் செய்தனர். காட்டு வழியில் கற்களும் முட்களும் சிறுவனின் கால்களை பதம் பார்த்தன. கால்களில் ஏற்பட்ட வலி, அவனது வேகத்தை குறைத்தது. அதோடு பசியும், களைப்பும், சோர்வும் வாட்டின. தந்தை அவனை சிறிது நேரம் அமர வைத்தார். மகனின் வலியை சகிக்க முடியாத தந்தை, அவனை சிறிதுநேரம் தோளில் தாங்கினார். அவருக்கும் களைப்பு தட்டவே, தன் மகனிடம் கூறினார், தம்பி நான் முதலில் நடக்கிறேன் பிறகு நீ என் பாதச்சுவடுகளை, தடங்களை பின்பற்றி அதிலேயே உன் கால்களையும் வைத்து நடந்த வா.அப்போது கற்களும், முட்களும் உன் கால்களைத் தீண்டாது என்று கூறி தந்தை முன் நடந்த கற்களின் கடுமையையும், முட்களின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு மகனை பத்திரமாக அழைத்துச் சென்றார். 

தன் சுகத்தை, மகிழ்ச்சியை, சந்தோசத்தை ஏன் தன்னையே மறந்து, தன் பிள்ளை கஷ்டப்படாமல் கரை சேர கொடுமைகளை தாங்கினார் தந்தை. அதுபோலதான் தன் அவஸ்தை, பெருமையை, தெய்வம் என்ற நிலையை வலிந்து பிடித்துக் கொள்ளாமல் (பிலிப் 2, 6-11) ஒரு அடிமை போல, நாமெல்லாம் கஷ்டப்படாமல் விண்ணகம் சேர துன்ப, துயர, கரடுமுரடான வழி நடந்து நம்மை மீட்டவர்தான் இயேசு. அவரின் பாடுகளின் துவக்கம் தான் இந்த குருத்து ஞாயிறு. நமக்காக பாடுகள், வேதனைகள், துன்பங்கள் பட, ஏன் சாவதற்கு இயேசு தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இந்த நாள். 

நமக்காக கொல்லப்பட கழுதை மீது ஏறிச்செல்கிறார். திருவிழாவிற்கு சமையலுக்காய் கொல்லப்படப்போகும் ஆடு எவ்வாறு மாலை மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறதோ, அப்படி மேள தாளத்துடன், ஓசான்னா பாடி அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு. என்னே இயேசுவின் துணிச்சல் !

அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கபட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது. நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோ 10,11) என்று சொல்லி மனமுவந்து பாடுகளை, சாவைச் சந்தித்தவர் இயேசு. 

தான் கொண்ட இலட்சியத்திற்காக, தான் வந்த நோக்கத்திற்காக, துன்பங்களைக் கண்டு பின்வாங்கவில்லை. ஓடி ஒளிந்து கொள்ளவில்லை எதிர்த்துப் பேசவில்லை, அழுது புலம்பித் தள்ளவில்லை அவர். ஆனால் அவைகளைச் சந்திக்க கழுதைமீது ஏறுகிறார்.

இன்றைய முதல் வாசகம் இதை தெளிவுபடுத்துகிறது. நான் கிளர்ந்தெழவில்லை, விலகிச் செல்லவுமில்லை அடிப்போருக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை (எசா 50, 6). என்னே இயேசுவின் துணிச்சல். எருசலேமில் பாடுகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். கொன்று விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். இன்று குருத்தோலை ஏந்தி ஓசான்னா பாடுபவர்கள் ஓரிரு நாட்களில் இவனை சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தும் துணிந்து செல்கிறார். ஏன்? இலட்சியத்தை நிறைவேற்ற, நாம் மீட்படைந்து விண்ணகம் சேர. யாராவது பாடுகள் படுவதற்கு, துன்பப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு ஆரவாரத்தோடு, மகிழ்ச்சியோடு பவனி செல்வார்களா? ஆனால் இயேசு சென்றாரே, அந்த துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா? துன்ப துயரங்கள், பிரச்சனைகள் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறோமே சீடர்களைப் போல (மாற் 14, 50-52). துன்பங்களைத் தாங்குபவன், சந்திப்பவன், எதிர்கொள்பவன் தான் என் சீடன் என்பதை இயேசு பலமறை உரைத்திருக்கிறாரே (மத் 16,24), யோ 12, 24, 15,13, 16,33). 

துன்பங்களைத் தாங்க தூயவர் இயேசு துணிச்சலுடன் பயணிக்கிறார். இதுவே குருத்து ஞாயிறு துணிந்து நடக்க நாம் தயாரா? இதுவே குருத்து ஞாயிறு நம்மிடம் தொடுக்கும் கேள்வி?


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

யாரைத்தேடி வந்தீர்கள் (யோவான் 18:4)

இயேசுவின் பிரியமானவர்களே,

ஆத்திகன் முதல் நாத்திகன் வரை, அமெரிக்கா முதல் அண்டை வீட்டு மனிதன் வரை படித்தவன் முதல் படிக்காதவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, பெரியவர் முதல் சிறியவர் வரை.  .  .   ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றை தன் வாழ் நாளில் தேடிக்கொண்டிருக்கிறான்.   சிலர் பொன்னையும் பொருளையும்,  பலர் மண்ணையும்-மனிதத்தையும் ,  அநேகர் பணத்தையும் பதவியையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.   இப்படிப்பட்டவர்கள் மத்தியில் நீங்களும்-நானும் எதைத் தேடி? யாரைத் தேடி? இந்த தேவாலாயத்திற்க்கு வந்திருக்கிறோம்.   நிச்சயமாக நாம் அனைவரும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தேடித்தான் வந்திருப்போம்.   அப்படி என்றால் எந்த நோக்கத்திற்க்காக இயேசுவைத் தேடி குடும்பமாக கணவன்-மனைவியாக,  பெற்றோர்-பிள்ளையாக,  தனிமனிதனாக வந்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க இன்றைய வாசகமும் வழிபாடு தமக்கு அழைப்பு விடுக்கின்றது.

விவிலியத்தில் பக்கங்களை புரட்டிப்பாருங்கள் ஒவ்வொரு மனிதனும் இயேசுவைத் தேடி இருக்கின்றார்கள்.   ஆனால் அந்த தேடுதலின் நோக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது.  
  • மத்தேயு 2:13 பெத்தலகேமில் பிறந்த குழந்தை இயேசுவை மன்னன் ஏரோது தேடுகிறான் அந்த குழந்தையை கொன்று விட வேண்டும் என்பதற்காக மெத்த படித்த பரிசேயரும் சதுசேயரும் இயேசுவை தேடுகிறார்கள் எப்படி சூழ்ச்சியின் வலையில் சிக்க வைக்கலாம் என்று.  
  • மத்தேயு 20:20 தனது இரு பிள்ளைகளையும் இயேசுவின் வலமும் இடமும் அமர வைத்துவிட செபதேயுவின் மணைவி இயேசுவை தேடி செல்கிறாள்.
  • யோவான் 18:4 கெத்சமணி தோட்டத்திலே தன் தலைவரை தேடிச்சென்றான் யூதாசு 30 வெள்ளி காசுக்கு காட்டிக்கொடுப்பதற்காக.

இன்றைய நற்செய்தியிலும் மக்கள் கூட்டம் இயேசுவைத் தேடி கப்பர்நாகுமுக்கு வருகின்றன.   காரணம் இயேசுவை பிடித்து தங்களது அரசனாக அமைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலே.   எதற்க்காக இயேசுவை தங்கள் சொந்த அரசனாக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்? ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலா அல்லது ஆண்டவர் தாம் எங்களது பாவ வாழ்வுக்கு ஒளியும் வழியும் அவரே எங்களது கற்பாறை அரணும் என்பதை உணர்ந்து கொண்டதாலா? இல்லை.   அன்பார்ந்தவர்களே,  அவர்களுடைய ஒரே நோக்கம் எல்லாம் இயேசுவை அரசனாக ஆக்கிவிட்டால் அன்றாட நாம் கஷ்டப்படாமல் உணவு உண்ணலாம் என்று தான் அவரைத்தேடி வந்து அரசராக்க விரும்புகிறார்கள்.   இதை அறிந்துதான் இயேசு இன்றைய நற்செய்தியில் நீங்கள் நான் செய்த அரும் அடையாளங்களை கண்டதால் அல்ல,  மாறாக  அப்பங்களை வயிறாற உண்டதால்தான் என்னை தேடி வந்தீர்கள் என்கிறார்.

ஆம்! ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐந்தாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்த இயேசுவை ''அன்றாட உணவு கொடுக்கும் மனிதனாக எண்ணி தேடி வந்தார்களே ஒழிய,  வாழ்வு தரும் உணவை கொடுக்க கூடிய மனிதன் தம்மிடையே இருக்கிறார்:அவர் தருகின்ற ஆன்மீக உணவு என்றென்றும் அழியவே அழியாது'', என்ற எண்ணத்திலே இயேசுவைத்தளடி வரவில்லை.  ஆகவேதான் வசனம் 27-ல் தொடர்ந்து சொல்லுகிறார் அழிந்து போக்க்கூடிய அப்பத்திற்க்காகவும் மீனுக்காகவும் நீங்கள் உழைக்க வேண்டாம் அழியாத நிலைவாழ்வு தரக்கூடிய உணவுக்காக உழையுங்கள்.   இத்தகைய உணவுக்காக தேடுங்கள் என்று சொல்லுகின்றார்.   சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அவர்களின் மூதாயரின் வாழ்க்கை சுவடுகளை சுட்டிக்காட்டுகின்றார்.  அதாவது இஸ்ராயல் மக்கள் பாலைவனத்தில் பயணித்த போது உணவு கொடுத்தவர் என் தந்தையே என்று,  இதைதான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றது.   யோசேப்பின் கலத்திலே இஸ்ராயல் மக்கள் கல்லாம் எகிப்தில் ஏகபோக வாழக்கை வாழ்ந்தார்கள்.   ஆனால் எப்போது யேசேப்பு இறந்தாரோ அப்போது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையிலே இழப்பு ஏற்ப்படுகின்றது.   விடிதலை பயணம் 1:8-ல் வாசிக்கிறோம்.   யோசேப்பு இறந்த பிறகு,  அறியந்திராத புதிய மன்னன் எகிப்தில் தோன்றுகிறான்.   அவன் இஸ்ரயேல் இனம் பெருகுவதைப் பார்த்து அவர்கள் மேல் பொறாமை கொண்டு அடிமையாக மாற்றுகிறான்.   3. 3 என்று இருந்த இனம் இயல்பு இழந்து போய் இன்னலுருகிதே என்று கடவுளுக்கு கத்திராக ஒப்பாறி வைக்கின்றார்கள்.   அப்போது தான் ஆண்டவர் மோயிசன், ஆரோன் வழியாக அவர்களை எகிப்திலிருந்து கூட்டி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்க்கு அவர்களை அழைத்து செல்கின்றார்.

இவ்வாறு செல்லுகின்ற வழியிலே தான் இஸ்ரயேல் மக்கள் மொயிசனையும், ஆரோனையும் பர்த்து ''பசியால் மாண்டு போகவா எங்களை அழைத்து வந்தீர்'' எகிப்தில் நாங்கள் இறைச்சில் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து அப்பம் உண்டு நிறைவடைந்து சந்தோசமாக இருந்திருப்போமே! என்று தங்களது அடிமை வாழ்விலே தான் ஆனந்தம் கொள்ள நினைத்து அதையே மீண்டும் தேடினார்களே ஒழிய,  தன்னை சுதந்தர மனிதனாக மாற்றி,  தனகென ஒரு நாட்டை எடவுள் ஒடுத்திருக்கிறார் என்று அதை தேடி போகாமல், போக விருப்பம் இல்லாமல் இங்கே முணுமுணுக்கின்றார்கள்.   இருந்தபோதும் கடவுள் மன்னாவையும், காடையையும் கொடுக்கின்றார்.   உணர்கிறார்களு ஆனால் நிலைவாழ்வு பெறாமல், கானான் தேசத்தை தன் கண்களாலே காணாமலே பலர் வழியிலே இறந்து போயினார்கள்.   ஆம்! உணவு உண்பதற்க்கு தேடிய மக்கள் அந்த உணவையும்,  நிறை வாழ்வையும் தர வல்ல இறைவனை தேட மறந்தார்களே,  வாழ்வை இழந்தார்கள்.

இதுதகைய நிலமை தன்னை தேடி வந்த மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத் நான் ''வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவர்க்கு பசியே இராது,  என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவர்க்கு தாகமே இராது'' என்று சொல்லி அத்தகைய உணவிற்க்காக என்னைத் தேடுங்கள் என்கிறார்.   இன்று நீங்களும் நானும் ஆண்டவரைதேடி ஆலயத்திற்க்கு வந்திருக்கின்றோம். எதற்க்காக? எத்தகைய நோக்கத்திற்க்காக?


அருள்பணி ஆரோக்கியதாசு
திரு இருதய குருமடம்
கும்பகோணம்

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

(எசா 60: 1-6; எபே 3: 2-3, 5-6; மத் 2:1-12)
முன்னுரை
வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம் (எசா 60: 1-6)
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (எபே 3: 2-3)
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

இறைமக்கள் வேண்டல்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்;தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் நுpiphயலெ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாhர்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (நுpiphயnயை) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்கள், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது.
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.

- அ. இராயப்பன்

ஆண்டவரின் திருமுழுக்கு (III Year)

(எசா 42: 1-4, 6-7; திப 10: 34-38; மத் 3:15-16,21-22)

அன்புக்குரியவர்களே! கிறிஸ்துவில் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க ‘ஞானஸ்தானம்’ என்ற திருவருட்சாதனம் முழு பலனை நமக்கு தருகிறது. “கிறிஸ்தவன்” என்று தலைநிமிர்ந்து நாம் சொல்ல ஞானஸ்தானமே நமக்கு ஊட்டச்சத்து. இன்று ஆண்டவரின் ஞானஸ்தான விழாவை கொண்டழாடுகின்றோம். இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயலாகும். இயேசுவின் ஞானஸ்நானம் விளிம்பு நிலைமக்கள், பாவிகள், தொழுநோயாளர் இவர்களுடன் நெருக்கமான உறவையும், தோழமையையும் எடுத்துக்காட்டும் செயலாகும். நாமும் வாழ்வில் விளிம்பு நிலைமக்கள் வலிமைபெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (எசா 42: 1-4, 6-7)
இஸ்ராயேல் மக்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இறைவனின் வருகைக்காக, பல விதமாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்காக கூறுகிறார். இறைவாக்கினர் எசாயா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்டவர், நீதி, உண்மை அறத்தை நிலைநாட்ட வருகிறார். திருமுழுக்கில் இ.றைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் ஊழியனைப் போல வாழ்கிறோமா என் எசாயா கூறுவதைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (திப 10: 34-38)
கிறிஸ்து ஒருவரே ஆண்டவர் என் அறிக்கையிடும் நாம் அனைவரும் தூய ஆவியானவரின் அருளைப் பெற்று, இயேசுவைப் போல் தீயஆவியை வென்று, நம்மில் யாரும் வேற்றுமை பாராட்டாமல் இவ்வுலகில் நிலையான அமைதியைக் கொண்டுவர ஒற்றுமையுடன் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுப்பதை கவனமுடன் கேட்போம்.

இறைமக்கள் மன்றாட்டு
1. அருளின் ஊற்றே இறiவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்களின் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, இறைவிருப்பத்தின்படி நடந்து மக்களi தூய ஆவியின் வழியில் நடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வார்த்தையில் சவை தந்திடும் இறைவா! எங்கள் பங்கு மக்கள் அனைவரும் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பித்து இறுதிவரை இறையன்பிலும் பிறரன்பிலும் அமைதியிலும் நிலைத்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 3:15-16,21-22)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை 6ம் சின்னப்பர் இயேசு பாலஸ்தின நாட்டிற்க திருப்பயணம் சென்றார். இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதிக்கரையில் முழந்தாள் படியிட்டார். யோர்தான் தண்ணிரில் கைகளை நனைத்து நம்பிக்கை அறிக்கை செபத்தை சொன்னார். ஏனெனில் நமது கிறிஸ்தவ மறையின் அடிப்படை உண்மைகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. இறைமகன் இயேசு திருமுழுக்கு யோவான் கையால் திருமுழுக்கு பெற்ற இதே நதியில்தான் இறைவன் ஒரேகடவுள், ஆள் வகையில் மூவராக இருக்கிறார் என்ற மறை உண்மை வெளிப்படுத்தப்பட்டது. யோர்தான் என்றால் “இறங்குகிறவர்” என்று பொருள். இயேசு திருமுழுக்கு பெற்றது நான்கு நற்செய்தி நூல்களும் குறிப்பிடுகின்றன. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம் தூய்மை நிலமாகிய புண்ணிய பூமியின் கையப் பகுதியாகும். யோர்தான் நதியில் மேற்குக் கரையில் பெத்தபெரா என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம், யோசுவா இஸ்ரயேல் மக்களை இறைவனால் கூறப்பட்ட புண்ணிய பூமிக்கு அழைத்துக் கொண்டு கடந்த சென்ற இடம் என்றும் யூதர்கள் கூறுகின்றனர்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற இடத்தில் முக்கோண வடிவில் அமைந்துள்ள கற்பாறை மேடை இன்றும் அடையாளமாக விளங்குகின்றது. இயேசுவின் மீது தூய ஆவி, புறா இறங்குவதுபோல இறங்கிய இடமும் யோர்தான் நதிக்கரையில் அடையாளமாக விளங்குகின்றது. இதன் இரு கரைகளிலும் பலவகை மரங்கள் உள்ளன (எரே 12,5, 50,44).
இயேசுவின் திருமுழுக்கை 3 விதமான நிலைகளில் நாம் அறிந்துக் கொள்ளலாம். 1. வானம் திறந்தது 2. தூய ஆவியின் அருட்பொழிவு 3. வானகத்தில் ஒலித்த தந்தையில் குரல்.

1. வானம் திறந்தது.
இயேசு திருமுழுக்குப் பெறும்போது தந்தையோடு ஒன்றிணைந்திருந்தார் என்பது வெள்ளிடை மலையாகும். வானம் திறந்தது என்பது இறையுறவின் ஒன்றிப்பில் என்பது தெளிவாகிறது. மகனும், தந்தையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். வானம் திறக்கப்படுதல் என்றால் விண்ணும் மண்ணும் ஒன்றிணைக்கப்படுவதின் அடையாளச் செயல் எனலாம். அதாவது இறைவன் இனி அணுகமுடியாத தொலைவில் இருப்பவர் அல்ல மாறாக அண்மையில் மக்களின் அருகில் மக்களோடு என்றும் இருப்பவர் என்பது பொருளாகும். மக்களது வாழ்வில் பின்னிப் பிணைந்திருப்பவர், மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர். இதைத்தான் மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகின்றன என்று எசாயா 55:10 கூறுகிறது. இது ஓர் அடையாளச் செயலாகிறது.
2. தூய ஆவியானவரின் அருட்பொழிவு
கடவுள் உலகத்தை படைக்கும் போது, கடவுளின் ஆவி நீர்திரளின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது (தொநூ 1,2) மேலும் அந்த ஆவியானவர் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தி வந்தார் என்று பார்க்கிறோம். அதே ஆவியானவர் இயேசுவின் மீது வல்லமையுடன் இறங்கி வந்ததால் மானிட வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய காலம் புதிய படைப்பின் காலம் தொடங்கியது எனலாம். இதுவரை இருந்த பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு பதிய வாழ்க்கை இம்மண்ணில் புலரும் என்பதன் அடையாளம் தான் இதுவாகும். காலம் நிறைவேறிவிட்டது, “இறையாட்சி நெருங்கி விட்டது” (மாற் 1,15) என் இயேசு கற்பிக்க தொடங்குகிறார்.
தூய ஆவியின் வல்லமையைப் பெற்ற இயேசு ஏழை, பணக்காரர் என்று பாராமல் அனைவருக்கும் இறையரசை போதிக்கிறார். அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையிலே தன்னுடைய போதனைகளை தொடர்கிறார். பணிவாழ்வில் அனைவருக்கும் முன் அவரவருடைய நிறை, குறைகளை எடுத்துக்கூற தூய ஆவி அவருடைய உள்ளத்தில் உறுதியைத் தருகிறார். எதை உண்பது, எதை உடுப்பது என்று கவலை கொள்ளமல் நேர்மையை நோக்கி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்.
3. வானத்தில் ஒலித்த தந்தையின் குரல்.
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3,22) என்று வானத்திலிருந்து ஒலித்த குரல், தந்தை இயேசுவின்மீது வைத்திருந்;த ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுகிறது.
திருமுழுக்கு பெற்றநாம் ஒவ்வொருவரும், நம்முடைய இதயத்தில் தூய ஆவி வழிநடத்த இடமளிப்போம். தூய ஆவியின் வழியில் நாம் நடக்கும்போது அனைத்து தடைகளையும் இறைஇயேசுவைபோல் எதிர்த்து செயல்பட முடியும். நீரே என் அன்பார்ந்த மகன் (லூக் 3,22) என்று தந்தை மகனாகிய இயேசுவை உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் திருமுழுக்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று உறுதிப்படுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் திருமுழுக்க பாவமன்னிப்பைக் கொடுக்கவில்லை, இயேசுவின் திருமுழுக்கு பாவ மன்னிப்பைக் கொடுக்கிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு மனந்திரும்பதலை காட்டுகிறது (மத் 3,11). அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட திருமுழுக்கு அது இயேசுவுக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் இன்று நாம் பெறும் திருமுழுக்கு இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிப்பதில் அடங்கியிருக்கிறது. அதனை வாழ்வில் வெளிக்காட்டுவோம்.
- சகோ.N. சின்னப்பராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு (2009)

ஆண்டின் பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (III Year)

(நெகே 8: 2-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21)
முன்னுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள் அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல் இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை. இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய வேண்டும. இன்றைய முதலாவது மற்றும் நற்செய்தி வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள இறைவார்த்தைகள் அடங்கிய எட்டுச்சுருள் வாசிக்கப்பட உயிற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர் பெறுகின்றன. அழுகின்ற நேரமல்;ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன. அதற்கு அடிப்படையாக இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
இறைவார்த்தையின் முழு நிறைவான இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும், இப்பலியில் வரம் கேட்போம் என்றும் நம் குடும்பங்கள் திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும் ஆவியின் அருட்கொடைகளால் புதுப்பிக்கப்பட்டு வாழவும் அருள் வேண்டுவோம். ஏன்னில் இன்று இறைவார்த்தை நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ்வுடன் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம் (நெகே 8: 2-6,8-10)
கி.மு. 587ல் பாபிலோனிய மன்னன் நெபுகத்தனேசர் எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல் யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536ல் சைரசு என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். தாங்கள் இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவும், திருச்சட்ட நூலின் படி வாழவும் உறுதி எடுக்கின்றனர். அப்போது குருவாய் இருந்த எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அணைவரும் தண்ணீர் குளத்திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல் வாசிக்கப்படுவதை கேட்போம்.

இரண்டாம் வாசகம் (1கொரி 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குபெற்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இனமக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின் அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மக்களிடையே ஏற்றத்தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை உணர்ந்த திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள் பலருக்கும் பலவேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும், அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்க்கு செவிக்கொடுப்போம்.

இறைமக்களின் வேண்டல்
1. என் மந்தையின் ஆடுகளை பேணிகாக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் என்று கூறிய இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் இறைவார்த்தையின் மீது முழுநம்பிக்கை உடையவர்களாக மக்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்க தேவையான அருளை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானத்தின் இறைவா! நாட்டையாளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் பொதுநலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சுயநலம் இன்றி மக்களின் தேவையை நிறைவேற்றும் நல்தலைவர்களாய் செயல்பட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கண்பார்வையற்ற பர்த்திமேயுவை பார்த்து நீ போகலாம் உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று என்று மொழிந்த இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் நட்சத்திரங்களாக செயல்பட்டு இறையாட்சியின் விழுமிங்களான அன்பு, நீதி, சமாதானம் அகியவற்றை வாழ்வாக்கி உமது இறைவார்த்தையை நிறைவேற்ற தேவையான சக்தி தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்புற்ற இஸ்ரயேலை நோக்கி நான் ஆறுதல் அளித்து, உங்களை நீரோடைகள் ஓரமாக வழிநடத்தி செல்வேன் என்று கூறிய இறைவா! எம் பங்கிலும், இவ்வுலகிலும் வாழும் ஏழைகள், எளியோர், அனாதைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் உடல நோயாளிகள் அனைவரையும் உமது ஆறுதலளிக்கும் கரங்களால் தொட்டு ஆசிரை பொழிந்தருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 1:1-4; 4:14-21)

சிலர் அடிப்படையான ஒரு கொள்கையை தங்களுக்கே உரித்தான தனிப்பெருங்கொள்கையாக வைத்திருப்பார்கள். இது போன்று விவிலியத்தில் ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடுவரை, படைப்பு முதல் இறுதிவரை நாம் காணும் ஒரு அடிப்படை உண்மை “இறையன்பு”. இறைவன் தனது அன்பரசை உலகிலும், மனிதர் உள்ளத்திலும் அமைக்க எடுக்கும் முயற்சி கிளைப்போல் மீட்பு வரலாற்றில் இன்றும் ஓடுவதை நாம் காணலாம். இந்த அடிப்படையான இறையன்பு நமக்கு கிடைக்க இறைநம்பிக்கை வேண்டும்.
யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறத் தீர்மானித்தது இயேசு எடுத்த முதல் முக்கியமான முடிவு என்றால், இரண்டாவது முக்கியமான முடிவு இயேசுவின் எண்ணத்தையும், நோக்கத்தையும் நமக்கு தெளிவாக்குகிறது. எல்லாரும் யோர்தானில் பாவங்களை அறிக்கையிட்டுத் திருமுழுக்குப் பெற்று அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதன் வழியாக இஸ்ரயேலைக் காத்திட இயேசு நினைக்கவில்;லை. அவர் தேவை என்று கண்டது இன்னொன்று, அதாவது ஏழைகள், பாவிகள், பிணியாளர் போன்றவர்களிடம் அக்கறை காட்டுவது. இஸ்ரயேலில் தவறிப்போன ஆடுகளைத் தேடித் செல்வது - இதுவே இயேசு எடுத்த இராண்டாவது முக்கியமான முடிவு.
யோவான் திருமுழுக்குப் பெற்று மானமாற்றம் அடைய மக்களை அழைத்தார். இயேசுவோ அனைத்துத் தீமைகளிலுமிருந்து மக்களை விடுவிக்கக் தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
திருமுழுக்கு யோவான், மனமாற்றத்திற்கான திருமுழுக்கை வலியுறுத்தினார். இயேசுவோ அதற்கு பதிலாக நம்பிக்கையின் வலிமையை அழுத்திப் பேசினார்.
திருமுழுக்கு யோவான் பாவிகளுக்குப் போதித்தார் இயேசுவோ பாவிகளோடு தம்மை ஒன்றுப்படுதிக் கொண்டார்.
தொழுகைக் கூடத்தில் இயேசு, எசாயா நூலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து விளக்கம் அளித்தாரா என்பதன்று பிரச்சனை. இயேசுவின் பணியை மிகவும் பொருத்தமாக விவரிக்கின்ற பகுதிகள் இவை, எனவே இப்பகுதிகளைத் தெரிந்தெடுத்து இயேசுவின் பணி எத்தகையதாய் இருந்தது என்று விளக்கிட லூக்கா முனைந்தது முற்றிலும் சரியே.
எசாயா நூல் பகுதிகளில் வருகின்ற காதுகேளாதோர், பார்வையற்றோர், காலூனமுற்றோர், வாய் பேசாதோர், ஒடுக்கப்பட்டோர், உள்ளம் உடைந்தோர், சிறைப்பட்டோர், கட்டுண்டோர் ஆகிய அனைவருமே “ஏழைகள்” மற்றும் “ஒடுக்கப்பட்டோர்” ஆவர். வௌ;வேறு விதங்களில் எழைகளாக இருப்பவர்களுக்கும் வௌ;வேறு வகையில் ஒடுக்கப்பட்டிருந்போருக்கும் இறைவன் எந்தெந்த வழிகளில் நலம் கொணர்வார் என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன.
மத் 9,2 “இயேசு அவர்களுடைய நம்பிக்.கையைக் கண்டு முடக்குவாத முற்றவரிடம், மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.”
முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மத் 9,29 “பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்.”
பார்வையற்றோரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மாற் 1,41-42 “இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.”
தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது போன்று, நமது வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்றால் இறைவார்ததையின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அப்படி இல்லை என்றால் நமது வாழ்க்கையில் கண் இருந்தும் குருடர்களாக, கால் இருந்தும் முடவர்களாக, காது இருந்தும் செவிடர்களாக தான் இருப்போம்.
பிரியமாணவர்களே, இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம், நமது வாழ்க்கையிலும் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேற வைப்போம்.

- அ. தாமஸ் சைமன் ராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு - 2009

விவிலிய ஞாயிறு - 2010 - “இறைவார்த்தையும் இளைஞர்களும்”

முன்னுரை
வாழ்வு தரும் இறைவார்த்தையின்மீது வற்றாத அன்பு கொண்ட இறைமக்களே, இருபால் இளம் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் புனித யுஸ்ரீதா ததேயு பங்கின் 2010 - ஆம் ஆண்டிடுக்கான திருவிவிலிய ஞாயிறு நல்வாழ்த்துகள்.
முன்மதியுடன் முன்னுரிமை அளித்து முன்னேற்றப் பாதையில் அடிவைக்கப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், நம் நாட்டின், சழூகத்தின் மற்றும் திருச்சபையின் விலை உயர்ந்த சொத்துக்கள்.
அகிலத்தை அறநெறியில் பயணிக்கச் செய்ய முற்படும் ஐ.நா. சபை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அனைத்துலக இளைஞர்களுக்கான ஆண்டை பிரகடனப்படுத்தியது. நம் வாழ்வை நாயகர் இயேசுவின் ஒளியில் நாளும் நடத்தி, நாம் அனைவரும் புத்துலகு படைக்கும் சிற்பிகள் என பறைசாற்றிக் கொண்டிருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையும் அனைத்துலக கத்தோலிக்க இளைஞர் ஆண்டு என அதை ஏற்று சிறப்புச் செய்தது.
ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ வளர்ச்சித் திட்டங்கள் இளைஞர் வாழ்வை ஏற்றம்பெறச் செய்துள்ளன. இன்னும் அவர்களை எவ்வழியில் முயன்று முன்னேற்றலாம் என்பதை துருவி ஆய்ந்து, துணைநின்று, கடமை ஆற்ற தமிழக ஆயர் பேரவை இவ்வாண்டை இளைஞர் ஆண்டு என அறிவித்துள்ளது. இதனால் இவ்வாண்டு விவிலிய வாரம் மேலும் சிறப்புப் பெற்றுள்ளது.
இவ்வாரம் முழூவதும் இளைஞர்களை மையப்படுத்தி பல்வேறு சிறப்புக் கருத்துகளில் இறைவார்த்தையை வாழ்வாக்க எடுத்த இளைஞர்களுக்கு முத்தாய்ப்பாக இன்று இறைவார்த்தையும் இளைஞர்களும் என்ற மையக்கருத்தில் திருப்பலிக் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்க இருக்கிறோம். நாம் அனைவரும,; குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இறைவார்த்தையில் தாகம்கொண்டு வாழ, அதன் ஒளியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள, அதைச் சான்றுடன் முழக்கமிடும் வாய்ப்பைப் பெற்று வளமாக வாழச் செபிப்போம். இதன் வழியாகத் தலத் திருச்சபையும், இல்லங்களும் இறைவார்த்தைச் சழூகமாக மாற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

மன்னிப்பு வழிபாடு
1. தடைகள் அகற்றி தலைநிமிரச் செய்யும் இறைவா!
உம் இறைவார்த்தைப் பணிகளைச் செய்வோரை உதாசீனம் செய்து, அதற்குச் சான்றுரைப்போரை ஏளனம் செய்து எமக்கு நாங்களே தடைகளாக இருந்துவிட்டோம். இதயக் கதவைத் தட்டி எழு, விழி, ஒளிகொடு என எமக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை எங்களில் பலர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. செவிகொடுத்தும் கேட்கவில்லை. முன்சார்பு எண்ணத்துடன் இறைவார்;த்தைகள் எமக்கு பெரிய முன்னேற்றத்தை அளிக்கப்போவதில்லை என்று பல நேரங்களில் ஒதுங்கி வாழ்ந்து விட்டோம். இக்குற்றங்களை உணர்ந்து இப்போது மன்னிப்பு வேண்டுகின்றோம். எங்களை மன்னித்து உம் உறவில் இணைத்திடும் இறைவா.

2. ஊடகங்களின் பயன்களை உணர்த்திடும் இறைவா!
உள்ளத்தை ஈர்த்து, உணர்ச்சிக்குத் தீனிபோட்டு உருக்குலைக்கும் ஊடகங்கள் பற்றி பல்வேறு சேவை மையங்கள் எடுத்துரைத்தும் பண்பாட்டைச் சீரழிக்கும் ஊடகங்களின் தூண்டுதலால் காலம், பொருள், நற்பெயர், அனைத்தையும் வீணடித்து எங்களில் பலர் உம் அருள் இழந்து நிற்கின்றோம்;. குடும்பத்தை உயர்த்தும் குறிக்கோளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வரட்டுக் கௌரவம் என்ற போலி வாழ்வில் பற்றுக்கொண்டு கண்ணிருந்தும் குருடர்களாய் எங்களில் பலர் வாழ்ந்து வருகின்றோம். உமது வார்த்தை ஒளியில் மனம் வருந்துகின்றோம்;. எம்மை மன்னித்து பயன்தரும் ஊடகங்களில் பற்றுக்கொண்டு வாழ அருள்புரியும்.

3. ஒளிவீசிக் களிகூர உரிமையுடன் அழைக்கும் இறைவா!
திறமைகளை வெளிப்படுத்தவும், தீமைகளை எதிர்க்கவும் அறப்பணிகள் ஆற்றவும் அன்றாடம் எமக்கு ஏராளமான வாய்ப்புகளை நீர் அளிக்கின்றீர். எங்களில் பலர் அவற்றைப் பயன்படுத்தி சாதனைகள் புரிவதற்குப் பதிலாக சுகந்திரம் என்ற போர்வையால் சோம்பலை அணிந்து கொண்டு உள்ளத்தில் ஊனமுற்று வாழ்ந்துவிட்டோம். ஆன்றோரின் அறிவுரையை அகமேற்க மறுத்துவிட்டோம். தான்தோன்றித் தனமாக தவறுக்குமேல் தவறு செய்தோம். எங்களில் பலர் ஒளிவீசி களிகூர விரும்பாமல் மனம்போன போக்கில் இலக்கின்றி வாழ்கின்றோம். இத்தயை குற்றங்களை நினைத்து மனம் வருந்துகின்றோம். எம்மை மன்னியும்.

முதல் வாசக முன்னுரை (நீதி மொழிகள் 3:1-12)
மேன்மைமிக்கோரின் அறிவுரையை ஆன்ம தாகத்தடன் கேட்டு, ஆண்டவரை மனத்தில் வைத்து செயல்படும்போது நமக்கு அனைத்து நலன்களும் கிட்டும். அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவதற்கு முழுமனத்தோடு நம்மை அர்ப்பணிக்கும்போது நாம் வளமான வாழ்வைப் பொறுவோம் எனக்கூறும் இவ்வாசகத்தை நீதி மொழிகள் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (1திமொத்தேயு 4:6-16)
இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டிய நற்பண்புக்ள பல. அவை விளைவிக்கும் நற்பண்புகள் பல. கடமையைச் செய்து உரிமையைக் கோருதல் உவகை தரும். நம்பிக்கையுடன் ஒப்படைத்த நற்பணிகளைக் செவ்வென செய்து நற்பேறு பெற்றவர்களாய் வாழ அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் பொன்மொழிகளுக்குச் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுகள்

1. காரிருள் நீக்கிபேரருள் புரியும் கருணைக் கடலே இறைவா!
இறைவார்த்தைக்குத் தங்களை அர்ப்பணித்து சான்று வாழ்வாலும் சமத்துவ உணர்வாலும் திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது பேரருளைப் பொழியும். மேலும் அவர்கள் இறைவார்த்தையில் எப்பொழுதும் பற்றுள்ளவர்களாக விளங்க அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. இம்மை வாழ்வைச் செம்மைப்படுத்தும் இனிய இயேசுவே!
‘உம் ஒழுங்கு முறைகள் எக்காலமும் நீதியுள்ளவை’ என்ற உமது வார்த்தைகளை நாங்கள் திருப்பாடல்கள் நூலில் வாசிக்கின்றோம். எமது வாழ்வு எல்லா விதங்களிலும் ஏற்றம் பெற வேண்டும் என்று விரும்புகின்ற நாங்கள் முறையாக நேர்வழியில் உயர்நிலையை அடைய வேண்டும். குறுக்கு வழியிலோ குதர்க்க நிலையிலோ முன்னேற்றத்தை நாடாமல் உம் வழிகளையும் நெறிகளையும் பின்பற்றி வாழும் மனப்பக்குவத்தை எமக்கு அருளும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுடன் எம்மை வழிநடத்தும் வானகத் தந்தையே இறைவவா!
இளைஞர் ஆண்டைக் கொண்டாடும் எம் பங்கின் இருபால் இளைஞர்களுக்கு உம் வார்த்தைகளே மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்களை உமது மதிப்பீடுகளின்படி வழிநடத்தவும், அவர்கள் தங்கள் எதிர்காலப் பணிகளைத் தெரிந்து கொள்வதிலும், சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதிலும் துணைநிற்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. சாதனைகள் வழி சரித்திரம் படைக்கும் இறைவா!
எம் பங்கு மக்கள் உம் வார்த்தையின் வல்லமையால் தீமைகளை வெல்லவும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி உலகு, சமூகம், திருச்சபை ஆகியவற்றிற்கு தங்களால் ஆன நம்மைகளைச் செய்யவும், தங்கள் குடும்பங்களில் நல்லுறவுடன் வாழ்ந்து, தங்களது மனமுவந்த பங்கேற்புச் செயல்பாடுகளால் புத்துலகுப் படைக்கும் கருவிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. நலன்களுகெல்லாம் ஊற்றான நல்ல தந்தையே இறைவா!
இவ்வாண்டு திருவிவிலிய ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்கும் நாங்கள் அனைவரும் நீர் படைத்து வழிங்கியுள்ள தொடர்பு ஊடகங்களின் பயன்பாட்டை நன்கு அறிந்துகொண்டு அவற்றை எமது ஒருங்கிருணைந்த வளர்ச்சிப் பயன்படுத்தவும், அவற்றின் தீமைகளை ஏற்ற முறையில் பிறருக்கு எடுத்துரைக்கவும், இயற்கைப் பேரழிவு ஏதுமின்றி வளமான வாழ்வைப் பெறவும் மேலும் எம் குழந்தைகள் உமது வார்;த்தையின் ஒளியில் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. உறவு வாழ்வின் ஊற்றே இறைவா!
‘ழூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்’ என்ற செம்மொழி தமிழ் உணர்த்தும் ழூதுரைப்படி ஆன்றோர், சான்றோர் கூறும் அறவுரை மற்றும் அறிவுரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஏற்று, மதித்து, கடைபிடித்து வாழவும், எல்லா நிலையினருடனும் வேறுபாடு காட்டாமல் நல்லுறவு கொண்டு வாழவும், அமைதி விரும்பிகளாவும், ஆக்க சக்திகளாகவும் திகழ அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

Prepared by
I Year Theology Students (2010)
Good Shepherd Seminary
Coimbatore

விவிலிய ஞாயிறு

திருப்பலி முன்னுரை

“திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போல், விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது” என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளின் கூற்றிற்கு இணங்க, இறை வார்த்தைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய் இன்று நாம் விவிலிய ஞாயிறை சிறப்பிக்கின்றோம். மனித மீட்புக்காய் மனுக்குலம் வந்த மாபரன் இயேசு தன் திருவுடலை மட்டுமல்ல தமது திரு வார்த்தைகளையும் நமக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆகவே இறைவார்த்தையானது பல இன்னல்களும், இடையூறுகளும் நிறைந்த நமது அன்றாட வாழ்விற்கு வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் இருக்கின்றது. திருமுழுக்கின் மூலம் கடவுளின் பிள்ளைகளான நாம், இயேசுவின் உண்மையான சகோதரர்களாக மாற வேண்டுமென்றால் ‘இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்’ (லுக் 8:21). மாறிவரும் இன்றைய சூழலில் பல்வேறு சோர்வுகளையும், களைப்புகளையும், தளர்ச்சிகளையும் சந்திக்கும் நாம் இன்று நற்செய்தியி;ல் ‘உமது சொற்களின்படியே வலைகளைப் போடுகிறோம்’ என்று சொன்ன பேதுருவின் மனநிலையை நம்மிலே உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆகவே இறைவார்த்தையின் படி வாழவும், அது காட்டும் திசையிலே பயணிக்கவும் வேண்டிய அருளை இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகமுன்னுரை: ( எசா 55: 1, 8-11)

இறைவார்த்தை என்பது ஏதாவது ஒரு நோக்கத்திற்காக ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அது அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பி செல்லாது எனக்கூறும் எசாயாவின் இறைவாக்கிற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை: (1பேது 1:22-25)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் புது பிறப்பை அடைந்துள்ளோம். இந்த புதுப்பிறப்பானது அழியக்கூடிய வித்தினால் கிடைத்ததல்ல. மாறாக, உயிருள்ள, நிலையான, அழியாத வித்தாகிய கடவுளின் வார்த்தையால் கிடைத்தது என்று கூறும் புனித பேதுருவின் சொற்களுக்கு செவிமெடுப்போம்.

மன்னிப்பு மன்றாட்டு
'என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்'.

1. “சிலவிதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன”.
வார்த்தையான இறைவா! உம்முடைய இறைவார்த்தை எங்கள் உள்ளங்களில் விதையாக விதைக்கப்பட்ட போது, நாங்கள் அதைக் கேட்டு புரிந்து கொள்ளாமலும், அதன் உண்மையான பொருள் மறையுரைகளில் எடுத்து சொல்லப்பட்டப் போது கேட்காமலும் இருந்த நேரங்களுக்காய் மனம் வருந்துகிறோம் மன்னித்தருளும் இறைவா.

2. “ சிலவிதைகள் மண் இல்லாப் பாறை பகுதியில் விழுந்தன. அவைக் காய்ந்து வேரில்லாமையால் கருகிப்போயின”
வழிகாட்டும் இறைவா! நாங்கள் பாறை நிலம் போல் உமது வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எங்கள் வாழ்வில் இன்னலோ, வேதனையோ அடையும்போது இறைவார்த்தையை மறந்து, உதரித்தள்ளியிருக்கிறோம். ஆகவே உம்முடைய வார்த்iதையில் நிலைத்து நிற்காத நேரங்களுக்காய் மனம் வருந்துகிறோம் எங்களை மன்னியும் இறைவா.

3. “சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன”.
வாழ்வளிக்கும் இறைவா! முட்செடிகளின் இடையே விழுந்த விதைகளைப் போல், நாங்கள் உலக கவலைகளாலும், செல்வமாயையைகளாலும் நாங்கள் நெருக்கப்பட்டு பயன் அளிக்காமல் போன நேரங்களை நினைத்து மனம் வருந்துகிறோம் எங்களை மன்னியும் இறைவா.

விசுவாசிகள் மன்;றாட்டு

1. திருவிவிலியம்
“புல் உலர்ந்துபோம்;, பூ வதங்கி விழும், நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்” (எசா40:8).
அன்பின் இறைவா! எங்கள் திருஅவையை வழிநடத்தும் திருதந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், எங்கள் ஆயர் மேதகு. தாமஸ் அக்குவினாஸ், ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், என்றென்றும் நிலைத்திருக்கும் உமது வார்த்தையை தங்கள் மனதில் பதித்து, அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வரம் அருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. ஒளி
“ என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே” (திபா 119:105).
நீதியின் இறைவா! எங்கள் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள், உம்முடைய வார்த்தையை அவர்களின் பாதைக்கு ஒளியாக கொண்டு, நீதி, உண்மை, நேர்மை போன்ற உயரிய மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் ஏற்று வாழ வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தண்ணீர்
“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” (யோவா 6:68).
இரக்கத்தின் இறைவா! தண்ணீர் ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்பதுபோல், உம்முடைய வார்த்தையே எங்களுக்கு நிலைவாழ்வை அளிக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டு, எங்கள் வாழ்வில் இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும் போது உம்மைவிட்டு விலகி செல்லாமல், உம்மை நாங்கள் நாடி வர வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அப்பம்
“வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிக்கொண்டார்” (யோவா 1: 14).
வல்லமையுள்ள இறைவா! மனிதனாக உருவெடுத்த நீர் எங்களிடையே குடிகொள்ள இந்த அப்பத்தைத் தேர்ந்தெடுத்தீர். இந்த அப்பத்தை உமது திருவுடலாக மாற்றுகின்ற எங்கள் பங்கு குருக்களுக்காவும், மற்றும் ஏனைய குருக்களுக்காவும் நாங்கள் இப்போது மன்றாடுகின்றோம். அவர்கள் அனைவரும் உமது இறைவார்த்தையின் சாட்சிகளாக வாழ வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Prepared by
I Year Theology Students (2010)
Good Shepherd Seminary
Coimbatore

அன்னையின் அமல உற்பவம்

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு. இவளது மேன்மை இவளது இறைத்தாய்மையிலிருந்தாலும், இத்தாய்மைக்காக இறைவனாலேயே சிறப்பான விதத்தில் காக்கப்பட்டதால், மாந்தரனைவரும் அடையவேண்டிய இலக்கான மங்களத்தின் நிறைவான மாசற்ற அமலத்துவத்தில்தான் பரிமளிக்கிறது என்றால் இக்கூற்று மிகையல்ல.
மரியாள் அமலியாக அவதரித்தவள். இவள் அமல உற்பவி. ஆதிப்பெற்றோரின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த தூய நிலையிலேயே இவ்வவனியில் அருமையாக அவதரித்தவள். இத்தகு பெருமையால் மரியாள் இறைவனால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், இந்த ‘அமலி’ என்னும் அங்கீகாரம் வரலாற்றில் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றை நோக்கும்போது, நூற்றாண்டுகளையல்ல, ஆயிரமாண்டுகளைக் கடந்து, அறிவு, நம்பிக்கை, விசுவாசம், போராட்டம், பகிர்வுகளைக்கடந்து பலமான எதிர்பார்ப்புகள் மற்றும் மக்களின் ஏக்கங்களுக்கிடையேதான் மறைக்கோட்பாடாக முழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மறைக்கோட்பாடு கடந்து வந்த வரலாறு மற்றும் பாரம்பரியப்பயணம் அதி நீளமானது. இதனை ஆழமாக நோக்குமுன், மரியாள், “அமலி” என்று அழைக்கப்படுமளவிற்கு அவளை உயர்த்திய, மக்களுக்கு உணர்த்திய சில விவிலிய மற்றும் விசுவாசக்கலவைகளையும் அவற்றின் பயணங்களையும் அவற்றின் பொருளையும் புரிந்துகொள்ள விழைவது நன்மை பயக்கும்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கடவுளின் அருட்கொடைகள் மனிதனுக்கு தடைப்பட்டன. ஊற நிலை பாதிக்கப்பட்டது. தந்தை கடவுள் மனிதனோடு கொண்டுள்ள் உறவைச் சரிசெய்ய, புதுப்பிக்கக் கன்னிமரியாளைக் கருவியாகவும், பாலமாகவும், பயன்படுத்தினார்.
இறைவனின் மீட்புத்திட்டத்தின் தொடக்கத்திலேயே மரியா தோன்றுகிறார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன்தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). பெண்ணின் வித்துக்கும் அலகையின் வித்துக்கும் இடையே நடைபெறும் மாபெரும் தொடர் போரில் பெண்ணின் வித்து நிச்சயமாக வெற்றி அடையும். இதுதான் தவறிய மனிதனுக்கு இறைவன் வழங்கிய முதல் நற்செய்தியாகும்.
திருமுழுக்கு வழியாக ஒருவருடைய சென்மப்பாவம் நீக்கப்படுகிறது. ஆனால் மரியாவைச்செனமப்பாவம் தீண்டாதபடி இறைவன் பாதுகாத்தார். மீட்பரின் தாய் மரியர் பாவத்தின் ஆட்சிக்கு ஒரு நொடியும் உட்பட்டிருப்பது, ‘மீட்பரின் தாய்’ என்னும் அவருடைய தனிச்சிறப்பான அழைத்தலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அவரை ‘அருள் மிகப்பெற்றவராக’ (லூக் 1:28) அதாவது, சென்ம பாவக்கறையின்றி இறைவன் படைத்தார்.
இதனைத்தான் வானதூதர் கன்னி மரியாளிடம்
அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்
என வாழ்த்தொலியாக லூக்கா 1:28இல் என்று வாழ்த்துகிறார். மரியா அன்றும் இன்றும் என்றும் “அருள் மிகப்பொற்றவர்”.
தூய பவுல்,
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்
(எபே. 1:4) என்கிறார். உலகம் உருவாகும் முன்பே ஒவ்வொரு கிறித்தவரையும் இறைவன் கிறிஸ்து வழியாகத் தேர்ந்துகொண்டது உண்மை என்றால், இவ்வுண்மை மீட்பரின் தாய் மரியாவுக்கு இன்னும் எவ்வளவோ அதிகமாகப்பொருந்தும்!
மரியா மீட்பரின் தாய் என்றாலும் அவரும் இயேசுவின் இறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்கப்பட்டார். மரியாவுக்கு இயேசு கொண்டுவந்த மீட்பை இறைவன் முன்னரே வழங்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டே மரியா அமல உற்பவியாகப்பிறந்தார். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், “தம் மகனின் பேறு பலன்களை முன்னிட்டு அவர் உன்னத முறையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப்பெற்றிருக்கிறார்… ஆயினும் அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப்பெறவேண்டிய மக்கள் அனைவருள் அவரும் ஒருவராகின்றார்”. (திருச்சபை எண்.53). திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “மீட்பரின் தாய்” என்னும் தமது மறைத் தூது மடலில் மரியா ‘அருள் நிறைந்தவர்’ என்பதற்கு ஆழமான விளக்கம் தருகிறார் (மீட்பரின் தாய், எண்கள் 8-11).
மரியாவைப்பொருத்தமட்டில், சென்மப் பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் சென்மப்பாவம் நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.
ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு ,நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும்.
இவ்வாறு மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.
புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.
மரியாவின் அமல உற்பவத்திற்கு ஓர் இறையியல் வல்லுநர் கூறியுள்ள இரத்தினச் சுருக்கமான காரணம்:
இறைவன் அதைச்செய்ய முடிந்தது: அது ஏற்புடையதாக இருந்தது: எனவே அவர் அதைச் செய்தார்
ஒரு முறை ஒருவர் என்னிடம், ”ஃபாதர், சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாய் கண்ணகியின் சிலைவரை ஓடிவருகிறது: பிறகு திரும்பவும் பின்நோக்கி ஓடுகிறது: இவ்வாறு பலமுறை அந்நாய் செய்கிறது. ஏன்? ஏன்று கேட்டார். நான் பல காரணங்களைச் சொல்லியும் அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல், “அது அந்த நாயின் இஷ்டம்” என்று நாயைவிடப்பயங்கரமாகக் கடித்தார்.
இது ஒரு ‘கடிஜோக்’. ஆனால் இதில் பொதிந்துள்ள உண்மை என்ன? ஒரு நாய்க்குக் கூட அதன் விருப்பப்படி நடக்க உரிமை உண்டு. அப்படியானால் மனிதருக்கு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளுக்கு தாம் விரும்புவதைச்செய்ய உரிமை இல்லையா? திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையின் இறுதியில் நிலக்கிழார் தமக்கு எதிராக முணுமுணுத்தவர்களிடம்,
எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப்பொறாமையா?
(மத் 20:15) என்கிறார். எனவே, இறைவன் மரியாவின் அமல உற்பவத்தை விரும்பினார். அதை அவரால் செய்ய முடிந்தது. எனவே. அவர் அதைச் செய்தார். கடவுளின் செயலைக் கேள்விக்கு உட்படுத்த நாம் யார்?
அருள்மிகப்பெற்றவரும் அமல உற்பவியுமான மரியா நமக்கு வழங்கும் நற்செய்தி: நாம் அனைவரும் மரியாளைப்போன்று அமல உற்பவமாகப் பிறக்கும் பேறு கிடைக்கவில்லையென்றாலும், நம்மாலும் மாசற்றவர்களாக வாழ முடியும். அதற்குண்டான ஆற்றலை நாம் திருமுழுக்கின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளோம். நாம் மாசற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இறைமகன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இதனைப் புனிதப் பவுல் அடிகளார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும் படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே, கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்ற எபே. 1:4இல் குறிப்பிடுகிறார்.
ஓய்வு பெற்ற ஜெயில் அதிகாரி ஒருநாள் அதிகாலையில் கைவண்டி இழுத்துக்கொண்டு போகும் ஒரு நபரை சந்தித்தார். உற்றுப்பார்த்தபோதுதான் தெரிந்தது அவன் பல திருட்டுக்களை செய்துவிட்டு அடிக்கடி சிறைக்கு வந்தவன் என்று. இவருக்கு நன்றாகத் தெரிந்தவன். இப்போது கஷ்டப்பட்டு கைவண்டி இழுத்து அவன் பிழைப்பது பார்த்து அவனைப் பாராட்டினார். “தம்பி உன்னைப் போலவே எல்லோரும் திருந்தி உழைக்க ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு அவன், “சார் உங்களிடத்தில் சொல்ல என்ன இருக்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் மாற வில்லை. இப்போது கூட இந்த கைவண்டியைத் திருடிக்கொண்டுதான் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போனான்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம் என்று ஒரு பாடல் வரி சொல்கிறது.
தூய பவுல்,
நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத்தெரியாதா?
(1 கொரி 3:16) என்று கேட்கிறார்.
ஒரு ‘குண்டு’ அம்மா பங்குத்தந்தையிடம் “நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு , பங்குத்தந்தை அவரிடம், “நீங்கள் பரிசுத்த ஆவியின் பசிலிக்கா என்றாராம்.
ஓர் ஆலயத்தை எவ்வளவு புனிதமாக போற்ற வேண்டுமோ அவ்வளவு பனிதமாக நம் உடலையும் போற்ற வேண்டும். தூய ஆவி நமது உள்ளத்தில் சுடர் விட்டெரியும் பேரொளி. அப்பேரொளியை, உண்மையின் ஒளியை நமது கனமான பாவத்தால் அணைத்து விடுகின்றோம். ஆகவே தான்,
தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்
(1கொரி 5:19), அதாவது தூய ஆவியை அணைத்து விட வேண்டாம் என்று எச்சரிக்கிறார் தூய பவுல். நமது உள்ளத்தின் இனிய விருந்தினரான தூய ஆவியை நாம் அன்புடனும் பண்புடனும் நடத்த வேண்டும். தூய ஆவி நமது தீய நடத்தையால் மிகவும் வருந்துகின்றார்.
கடவுளின் தூய ஆவியார்க்கு துயரம் வருவிக்காதீர்கள்
(எபே 4:30) என்று அறிவுருத்துகின்றார் தூய பவுல்
ஒரு கிறிஸ்தவர் பொய்யை விலக்கி உண்மை பேச வேண்டும்: சினம் கொள்ளக்கூடாது: திருடக்கூடாது: கெட்டவார்த்தையை தவிர்க்க வேண்டும். மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல, பழிச்சொல் ஆகியவைகளை விட்டொழித்து பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டி பிறரை மன்னிக்க வேண்டும். (எபே 4:25-32).
கோபம் வருவது இயல்பு கோபத்தை சரியான விதத்தில் வெளிப்படுத்தலாம். தீய வார்த்தைகள் சொல்ல தேவையில்லை. எப்போதும் கெட்ட கெட்ட வார்த்தைகளை மிகவும் சரளமாக பொரிந்து தள்ளும் ஒரு பாட்டியிடம் பங்கு தந்தை “பாட்டி இனிமே கெட்ட வார்த்தை சொல்லாமல் நாயே பேயே பன்றி குரங்கு வெண்டக்கா சுண்டக்கா வெறிநாய் சொறிநாய் என்று திட்டுங்கள் என்றார் அதற்கு அந்த பாட்டி அந்த வார்த்தையெல்லாம் என் வாயிலிருந்து வராது கெட்ட வார்த்தை சர்வீஸ் ஆயிடுச்சு சாமி என்றார். அடிக்கடி அவர் தம் சர்வீசை புதுபித்து கொள்கின்றார். “கெட்டவார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றார். (எபே 4:29).
சிலருக்கு குடிப்பழக்கம் நல்ல சர்வீஸ் ஆயிடுச்சு அதை தவிர்க் அவர்களால் இயலவில்லை. ஒரு மாணவன் ‘வாழைப்பழம்’ என்று சொல்வதற்குப்பதிலாக ‘வாயப்பயம்’என்றான். அவனுடைய தந்தையை ஆசிரியர் அழைத்து ‘ஏன் அவரின் மகன் அவ்வாறு சொல்கிறான்’ என்று கேட்டதற்கு அவர் “அது எங்க பயக்க வயக்கம்’ என்றார். ஒருசிலர் ஒருசில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பின்னர் அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்படுகின்றனர்.
கணவர் பயங்கரக் குடிகாரர். அவருடைய மனைவி அவரைப் பற்றிப் பங்குத் தந்தையிடம் முறையிட்டார். ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணிக்கு பங்குத் தந்தை பேய் வேடம் போட்டுக் கொண்டு அக்குடிகாரர் வீட்டிற்குச் சென்றார். அப்போதும் அவர் நன்றாகக் குடித்துவிட்டு மனைவி. மக்களை அடித்துக் கொண்டிருந்தார். பேய் வேடத்தில் வந்திருந்த பங்குத் தந்தையைக் கண்ட குடிகாரர் சிரித்துக் கொண்டு அவரிடம், “நீ பேய்தானே நான் கூடப் பங்கு சாமியார் என்று நினைத்து பயந்திட்டேன்” என்றார்.
குடிப்பழக்கமும் அத்துடன் இணைந்துள்ள பக்க வாத்தியங்களும் தூய ஆவிக்கு மனவருத்தம் விளைவிக்கும் பாவங்களாகும். குடி குடியை கெடுக்கும் என்பது மட்டுமல்ல குடி கோமகன் கோயிலையும் இடிக்கும் என்பது உண்மையே.
ஒரு பெண் குரஙகு குட்டியொன்றை ஈன்றது: அக்குட்டியைப் பார்த்து அழுதது, ஏன்? என்று ஆண்குரங்கு கேட்டதற்கு, அப்பெண் குரங்கு, ‘நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக்கொண்டிருக்கிறது’ என்றது. அதற்கு ஆண் குரங்கு, கவலைப்படாதே போகப்போக நம் முகம் வந்துவிடும்’ என்று அதைத்தேற்றியது. மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர், மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது, வேதனைக்குரியது.
நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவாரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்
(கால 5:15).
புனித அகுஸ்தினார் ஒர் ஊரில் ஆட்டம் போட்டுக் கொணடிருந்த பேயைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார். சக்திபடைத்த புனிதா. ஆகவே பேய் வாயைப் பொத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. வழியில் ஒரு கோயில். புனிதர் சிறிது நேரம் ஜெபித்துவிட்டு வர எண்ணி கோவிலுக்கருகில் இருந்த மரத்தில் பேயைக் கட்டினார்.
அங்கே பக்கத்தில் ஒரு தாய் பசுவிடம் பால் கறந்துகொண்டிருந்தாள். அருகில் அவளது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். “அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது” என்று பேய்க்கு கட்டளையிட்டுவிட்டு புனிதர் செபிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் பேய் சிறுவனிடம் பேச்சுக்கொடுத்தது. ஒரு குச்சியை எடுத்து பசுமாட்டின் பின்புறம் குத்தச் சொன்னது. சிறுவன் பேயின் பேச்சைக் கேட்டு குச்சியை எடுத்துக் குத்த மாடு மிரண்டு எட்டி உதைத்துவிட்டு கயிறு அறுத்துக்கொண்டு ஓடிப்போனது. பால்பாத்திரம் கீழே விழுந்து பால் தரையில் சிந்தியது.
ஆத்திரமடைந்த தாய் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு சிறுவனை துரத்திக்கொண்டிருந்தாள். புனிதர் ஜெபம் முடித்து வெளியே வந்தார். நிலைமை மாறியிருப்பதைப் பார்த்தார். பால் கொட்டிக்கிடக்கிறது. யாரையும் காணவில்லை. “நீ ஏதாவது செய்தாயா?” என்று கேட்க பேய் “இல்லை” என்று தலையாட்டியது. சாத்தான் எதுவும் செய்வதில்லை. ஆனால் செய்யத் தூண்டுகிறது. மனிதர்கள் அதன் சோதனைக்கு மடிகிறார்கள்.
மனமாற்றத்திற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு சக்கேயு. ஆவர் குறுக்கு வழியில் சென்று கொள்ளை அடித்து குபேரர் ஆனார். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை அவர் மனசாட்சி குடைந்து கொண்டே இருந்தது. புhவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும் பாவங்கள் அவர்களை விடுவதில்லை. சக்கேயு இயேசுவை காண விரும்பி ஒரு மரத்தில் ஏறினார். இயேசு கண்ணாலே கண்டால் போதும் என்றிருந்தார் அவர் ஆனால் இயேசுவோ அவர் வீட்டிறடகே சேன்நார் அவருடன் விருந்துண்டார். ஓளிந்து கொண்டிருந்தவனை ஒளிக்கு கொண்டு வந்தார். கள்ளனை நல்லவனாக ஆக்கினார். உடல் அளவில் குட்டயனை உள்ளத்தில் நெட்டயனாக உயர்த்தினாh.
ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டைவிட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை “உன் மகன் நாசமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது ! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு, தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!
உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும், இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்
(எசா1:18).
முதல் திருவிருந்திற்குத் தயாரிப்பாகச் சிறுவர் சிறுமியருக்கு மறைக்கல்வி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் பங்கத்தந்தை. ஒரு சிறுனியிடம், “iஷ்னி? நீ சாவான பாவத்துடன் இறந்துபோனால் எங்கே போவாய்?” என்று கேட்டார். “நரகத்தக்குப்போவேன் ஃபாதர்! என்றாள். “நரகத்துக்குப் போனபின் அங்கே நீ செய்யும் முதல் காரியம் என்னவாயிருக்கும்? என்று பங்கத்தந்தை கேட்டார். “நான் பாவசங்கீர்த்தனத்திற்குப் போவேன்” ஃபாதர்” என்றாள் “நரகத்திலா, பாவசங்கீர்த்னத்திற்கா?” என்று ஆச்சரியப்பட்ட அவர் “நரகத்தில் யாரிடம் பாவசசங்கீர்த்தனம் செய்யப்போவாய்? “என்று சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டார். “உங்களிடம்தான் ஃபாதர்? “ என்று உறுதியாகச்சொன்னாள் சிறுமி. பங்குத்தந்தைக்குத் தூக்கி வாரிப்போட்டது.

- யாக்கோபின் இறையனுபவ ஏணி (தொ. நூ. 28:12)
- மோசேயின் பாலைவன அனுபவத்தால் கருகாமல் எரியும் புதர் (வி. ப. 3:2-3)
- இனிமைமிகு பாடலில் காணப்படும், தாவீதின் கோபுரம் (இ. பா. 4:4)
- அதே புத்தகத்தில் காணப்படும் வாயில் மூடப்பட்ட தோட்டம் (இ. பா. 4:12)
- யாவேயின் நகரம் (தி. பா. 87: 1-3)
- இறைமாட்சிமை விளங்கும் ஆலயம் (1அர. 8:10-11)
- இறைவனின் புனித பேழை (வி. ப. 31:1-11)
- ஞானத்தின் பிம்பம் (நீதி மொழிகள் 8:22-36)
முதுகில் கோணிப்பையைப் போட்டுக்கொண்டு ஒரு சாலையோரத்தில் குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த ஒருவனை பார்த்து ஒரு செல்வந்தன் கேட்டான். “எல்லாம் எடுத்து போட்டுக்கொண்டிருக்கிற,, உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு? சற்று சுதாரித்து திரும்பி குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த அவன் செல்வந்தனைப் பார்த்து “யாரைப் பார்த்து பைத்தியம் என்ற சொன்னாய்? நான் நினைத்தால் இதோ இந்தக் கோணியில் சேர்த்து வைக்கிற இவற்றை இப்போது கூட தூக்கி எறியலாம். ஆனால் நீ உன் உடம்பு முழுவதும் சேர்த்துக் குவித்து வைத்திருக்கிறாயே வஞ்சனை, நேர்மையற்றதனம், சுயநலம், இந்தக் குப்பைகளைத் தூக்கி எறிய முடியுமா? செல்வந்தன் அரண்டு போனான். இதே கேள்விக்கணை நம்மை நோக்கிய வண்ணம் இருப்பதை உணர்வோம். இயேசு அட்டவணையிட்டுக் காட்டும் பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை , தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகிய கறைகள் நம்மில் படிந்திருக்கிறதா? என்று ஒரு கணம் நினைத்துப்பார்ப்போம்.
அருள்மிகப்பெற்றவரும் அமல உற்பவியுமான மரியா நமக்கு வழங்கும் நற்செய்தி: பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ. 3:15). பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20). கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31). உலகம் உருவாகும் முன்பே இறைவன் நம்மையும் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டார் (எபே. 1:4). திருச்சபையானது மாசு மறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27). நாமும் மரியன்னையுடன் இறை மாட்சிமையில் பங்கு பெறுவோம் (உரோ. 8:28-30).
இவ்வுண்மைகளை நாம் திறந்த உள்ளத்துடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து தீமையின் அச்சாணியை முறித்து, புனிதம் கமழும் புத்துலகைப்படைப்பதே நாம் நம் தாய்க்குப்பாடும் தன்னிகரில்லாத் தாலாட்டு ஆகும்.

இந்தக் கடவுளின் மீட்புத் திட்டத்தை இறைமகன் இயேசுவும், கன்னி மரியாளம் பற்றுதியோடுச் செய்து முடித்தனர். இன்றைய முதல் வாசகம் (தொ. நூ. 3:4-15,20) கீழ்ப்படியாமையால் ஆதாம் ஏவாள் எப்படி இறைவனின் அருட்கொடையை இறந்தனர் என்பதைப் பறிறியும், இந்த நிலை ஒரு பெண்ணால் மீண்டும் புதுபிக்கப்படும் என்பது பற்றியும் தெளிவாகக் கூறியது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்தான் கன்னி மரியாள். கீழ்ப்படியாமையால் விளைந்தத் தீமை, கீழ்ப்படிதலால் சரிசெய்யப்பட்டது. குன்னி மரியாயும், இறைமகன் இயேசுவும் கீழ்ப்படிதல் மூலம் இறைத்திட்டத்திற்குப் பணிந்தனர்.
நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்க நிகழட்டும்
லூக்கா, 1:38-இல் என்று மரியாவும்
ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உம் விருப்பப்படியே
என்ற லூக்கா. 22:42-இல் இயேசுவும் கூறி இறைத்திட்டத்தை நிறைவேற்றினர்.
நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். குன்னி மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்.
இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கியோம்? இன்றைய உலகம் பால உணர்வு என்றால என்ன என்பதை மறந்கு கொண்டு வருகிறது. எதை வேண்டுமானாலும் செய்யலம் என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்கம் கொஞ்சமாகக் முழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் வாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்க மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள். அனைத்தையும் பொறுத்கக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை நமது சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும். இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம் தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும் கன்னி மரியாளிடமும் தொடர்ந்து செபிப்போம்.