என்னை நேசிக்கின்றாயா ?


என்னை நேசிக்கின்றாயா ?
என்னை நேசிக்கின்றாயா ?
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் (2)
தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

பாவத்தின் அகோரத்தைப் பார்;;;
பாதகத்தின் முடிவினைப் பார்; (2)
பரிகாசச் சின்னமாய்ச் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

பாவம் பாரா பரிசுத்தர்;;; நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்; (2)
உன் பாவம் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா (2)
   (என்னை நேசிக்கின்றாயா.......)

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான் (2)
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ (2)

தொடும் என் கண்களையே


தொடும் என் கண்களையே
உம்மை நான் காணவேண்டுமே (2)
இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே (1)

தொடும் என் காதினையே
உம் குரல் கேட்கவேண்டுமே (2)
இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே (1)

தொடும் என் நாவினையே
உம் புகழ் பாடவேண்டுமே (2)
இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே (1)

தொடும் என் மனதினையே
மனப் புண்கள் ஆறவேண்டுமே (2)
இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே (1)

தொடும் என் உடல்தனையே
உடல் நோய்கள் தீரவேண்டுமே (2)
இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே (1)

தொடும் என் இதயத்தையே
உம் அன்பு ஊறவேண்டுமே (2)
இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே (1)

வீடியோ விளையாட்டுகளும் சிறுவர்களும்


நமது வாழ்வின் மிக மோசமான இக்காலத்தில் உயிருக்கு ஆபத்தான பாவங்களால் நிறைந்துள்ள அனைத்து விளையாட்டுகளை விளையாடும் போது நாம் நரகத்திற்கு போகாமல் இருக்க முடியாது. சிறப்பாக இளைய தலைமுறையினரும் சில வயதானவர்களும் ஒன்றுமில்லாத இந்த விளையாட்டிற்கு அடிமையாகி நெறிதவறி போகின்றனர்.

முதலாவதாக ஒரு மனிதன் மற்ற மனிதனையோ உயிரியையே பொழுதுபோக்கிற்காக கொல்ல கூடிய அல்லது துன்புறுத்த கூடிய எண்ணற்ற விளையாட்டுகள் உள்ளன. எடுத்துகாட்டாக Counter-strike, Halo, Grand Theft Auto, Starcraft, Modern Warfare, Gears of Wars, Tekken.  இம்மாதியான விளையாட்டுகளை  விளையாடுவது ஒரு நோய் மட்டுமல்ல இழிவானது.

இதை பற்றி சிந்திப்போம்.  நாம் வேடிக்கையாகவும் மகிழ்ச்சிகாகவும் மற்ற உயிர்களை கொலை செய்ய அல்லது காயப்படுத்த நம்மை தூண்டுகின்றன.      நமது செயல்களை காட்டிலும் எண்ணங்கள்தான் நமது வாழ்வை தீர்மானிக்கின்றன. நம் மனதளவிள் மற்றவரை கொல்வதில்அல்லது காயப்படுவதில் மகிழ்கிறோம்.

இரண்டாவதாக இவ்விளையாட்டுகளில் மற்றவர்கள் மீது வெறுப்பு, கட்டுபடுத்தமுடியாத கோபம், தற்பெருமை போன்ற ஆபத்துகளும் உண்டு.    தாங்கள் விளையாட்டில் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று நினைக்கும்போது அவர்கள் தற்பெருமை அடைவதும், அவர்களை யாராவது வென்றால் அவர்களது தற்பெருமையும் அகந்தையும் காயபடுவதும்  உண்டு.  இதனால் மனநிலை பாதிக்கபட்டு கோபமும் அகங்காரமும அடைகின்றனர் இணையதளத்தில் விளையாட்டுவோருள் யார் தான் இதை உணராமல் இருந்திருக்கிறார்கள்?  நிச்சயமாக ஒருவர் மட்டும் விளையாடுவதில் இவை நடப்பது பொதுவான ஒன்றல்ல. இணையதள விளையாட்டுகள் மோசமானது மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளை காட்டிலும் தீமைகள் நிறைந்து. அவை உங்களை மட்டுமல்ல உங்களோடு சேர்ந்து
விளையாடுவோரையும் பாதிக்கிறது. அனைத்து விளையாட்டுகளை காட்டிலும் இணையதள விளையாட்டுகள் ஏன் ஆபத்தானது என்பது இப்போது புரிகிறதா?


மூன்றாவதாக மந்திரங்களையும் தந்திரங்களையும் மையமாக கொண்ட விளையாட்டுகள் அதிகமாக உள்ளன. எடுத்துகாட்டாக  World of Warcraft, Diablo, Oblivion இன்னும் சில.  ஒவ்வொரு விளையாட்டிலும் மந்திரத்தாலும் வித்தைகளாலும் எதிராளிகளை கொலை செய்கிறது அல்லது காயப்படுத்துகிறது.

ஒருமுறை விளையாடியவர்களை பலமுறை விளையாட தூண்டி அடிமைப்படுத்துகின்றது.  குடும்ப உறவுகளும் மாணவர்களின் கல்வியும் உடல்-மன நலமும் பெரிதும் பாதிப்படைகின்றன.   

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் - 4

இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் - 2
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2

பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் - 2
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் - 2
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2

தெய்வம் உன் அன்பில் பேரார்வம் கொண்டேன்

தெய்வம் உன் அன்பில் பேரார்வம் கொண்டேன்
தேடும் என் கண்ணில் பேராவல் கண்டேன் (2)
உன்னால் இதயம் புதியதானது
உறவால் வாழ்வு இனிமையானது (2)
எல்லாம் இங்கு நீயே என்று உள்ளம் பாடுது

நீ தானே என் சொந்தம் நீங்காது நம் பந்தம்
உன்னோடு என் வாழ்வு அழகானது
வரமாகும் உன் அன்பு வாழ்வாகும் உன் வாக்கு
உன்னாலே என் வாழ்வு உயர்வானது
உன் அன்பில் நனைந்தேன் உன்னோடு கலந்தேன்
உன் மாண்பைப் பகிர்ந்தே உனதாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா

அறம் சூழும் உன் வாழ்வு அருள் சேர்க்கும் உன் வாக்கு
இறைவா உன் பேரன்பு நிலையானது
அழகான உன் எண்ணம் மறையாது எனில் என்றும்
நிறைவான என் வாழ்வு மகிழ்வானது
உன் அன்பை உணர்ந்தேன் உன் பாதை நடந்தேன்
உன் பண்பின் ஈர்ப்பில் உன் வசமாகிறேன்
என் அகம் வாழ்பவா எனை ஆள்பவா
இறைவா என் நிறைவானவா

காணிக்கை தரும் நேரம் கடவுளே

காணிக்கை தரும் நேரம் கடவுளே உன் திரு முன்னே
அன்பென்னும் பலியாக அள்ளி தரும் நேரம்
என்னை படைத்தேன் என்னை படைத்தேன்
இன்றும் என்றும் உந்தன் உகந்த காணிக்கையாய்

வாழும் வாழ்வை பலியாய் தந்தேன்
வரமே தருவாய் நீ
போதும் என்ற மனமே தந்து
பொறுத்துக்கொள்வாய் நீ
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

உள்ளம் விரும்பும் இறைவன் நீரே
உவந்து தர வந்தேன்
மீதி வாழ்வை திருமுன் தந்து
நிம்மதி பெறுகின்றேன்
என்னன்பு தேவனும் நீ என் வாழ்வின் ஜீவனும் நீ

உயிர் தரும் உணவே இறை வா

உயிர் தரும் உணவே இறை வா
என் உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா…
நல் ஆற்றலாய் என் னுள்ளம் வா வா

வா வா இறைவா வாழ்வின்
உறவாய் என்னுயிர் இயேசுவே வா வா…

உயி ருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா
நிரந்தர வா..ழ்வே என் தேவா
நிம்மதி வா..ழ்வாய் எனில் வா வா

வா வா ….  உயிர்தரும்….

அழி யாத உணவே என் இறைவா
ஆ..ன்ம ஒளியாய் என்னில் வா வா 2
அன் பின் பகிர்வே என் தேவா 2
அனுதின உணவாய் எனில் வா வா 2

வா வா …. உயிர்தரும்….