நோயில் பூசுதல்


நோயில் பூசுதல் - மறையறிவு

நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனமானது குணப்படுத்தும் திருவருள்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.

நாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.
இயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 : 12, 13)
இவ்விதம், நோயில் பூசுதல் திருவருள்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.

புனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்: உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 : 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருள்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)

இந்த அருள்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.



தொடக்க சடங்கு

குரு: ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.

குரு: (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுப்படுத்துவதாக.
அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.
உங்களுள் யாரேனும் நோயிற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அவரே.
எனவே, நோயிற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு

குரு: சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல்: எல்லாம் வல்ல இறைவனிடமும்...

குரு: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்.: ஆமென்.

இறைவாக்கு

சகோதரரே, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்,.. (மத். 8 ~ 5 - 13)

மன்றாட்டுக்கள்

குரு: சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ....க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு வேண்டிக் கொள்வோம்.
  1. ஆண்டவரே, இத்திருப்புசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.
  2. தீமை அனைத்திலுமிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் நீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குரு: உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு

குரு: எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல்
(குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது)
இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல்: ஆமென்.

குரு: செபிப்போமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற....
(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

ஆசீர்..........

குரு: தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: தூய ஆவி உம்மீது ஒளிவீசுவாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உள்ளத்துக்கு ஒளிதந்து உம்மை வானக வாழ்வுக்கு வழி நடத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: இங்கிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

திருக்குடும்பம் - வேளாங்கன்னி அன்னை HD படங்கள்


பதிவிறக்கம் செய்ய இணைப்பைச சொடுக்கவும்.



திருக்குடும்பம்


வேளாங்கன்னி அன்னை

வழிகாட்டும் என் தெய்வமே

வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே - வழிகாட்டும்

எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கின்றேன்
என்பாத நிழல் நாடும் மனம் கேட்கின்றேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒளிந்தாலும் விழிமூடி பயனேது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகையேது
பலனாக கை மீது வா இங்கு
புலனாகும் இறையாக வா - வழிகாட்டும்

என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான்
சுடர் வீச எனை ஏற்ற வா

ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண் வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள்
நில வாழ்வு பயன் காண வா வழிகாட்டும்

இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

முன்னுரை:
நற்கருணை என்பது உறவின் சாட்சியமாகவும், உரையாடலின் சாத்தியமாகவும், உள்ளுணர்வுகளின் சங்கமமாகவும், உடன்படிக்கையின் சகாப்தமாகவும் திகழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் ஆகும். நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை. இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்று புனித பவுல் அடிகளார் கூறுகிறார். இந்த உழைப்பு இறைவனின் உள்ளத்திலும் இதயத்திலும், மனித உள்ளமும், மனித இதயமும் குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்பு. வாழ்வின் உணவாக நற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும், பசியையும் போக்குகிறாh.; நம்மைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார். விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார். நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழ அகழத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார். நம்மோடு நெருக்கமான உறவுகௌ;ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடு வரவேற்போம்.
முதல் வாசக முன்னுரை: இணை 8; 2-3,14-16.
மோயிசன் வழியாக மக்களுக்கும் கடவுளுக்கும் நடந்த உடன்படிக்கை அவர்களுடைய வாழ்வில் பிரிக்கமுடியாத, மறக்கமுடியாத மன்னாவை தெய்வீக உணவாகவும், பாறையிலிருந்து புறப்பட்ட நீர் அவர்களுக்கு வாழ்வுதரும் நீராகவும் இருந்தது என்பது ஒரு நீண்டகால மரபும,; வரலாறும் இஸ்ரேயல் மக்களின் வாழ்வில் இருந்ததை இவ்வதசக்தின் வழியாக வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 1கொரி 10:16-17
இயேசு கிறிஸ்து நமக்கு உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி உணவாக தருவதோடு மட்டுமல்லாமல் இறைவன் தன்னையே மிகுந்த அன்போடு நமக்குத் தருகிறார், அவரது உணவிலே, உணர்விலே, உறவிலே நாம் ஒரே உடலாய் இருக்கிறோம் என்றுக் கூறும் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:
1. “ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்” என்று மொழிந்த வாழ்வின் நாயகனே, எம் தாய்திருநாட்டை ஆளுகின்ற தலைவர்கள் அதிகாரிகள் அனைவரும் உம்மக்களுக்கு வாழ்வு தருபவர்களாக மாறவும் அதனால் அவர்கள் வாழ்வில் உயர வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்ற எம் தலைவனே, எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவே பாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்ப துயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாக உம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கானிக்கை பவனியோடு கூடிய இறைமக்கள் மன்றாட்டுகள்:

1. அப்பம்
“எனது சதை உண்மையான உணவு” என்று மொழிந்தவரின் உடல் மென்மையாகவும், வெண்மையாகவும், ஒளிகொடுக்கக்கூடியதாகவும் இருந்தது நமக்கு தெரிந்த உண்மையாகும் அதேப்போன்று இந்த வெண்மையான அப்பம் எங்களுடைய பாவத்தைப்போக்கி சாத்தானின் அடிமையிலிருந்து விடுவித்து எங்கள் இதயத்தை வெண்மையாக்கவும் இருளை அகற்றி ஒளியை கொணர இந்த அப்பத்தை காணிக்கையாக்குகிறோம் இறைவா ஏற்றருள்வாய்.

2. திராட்சை ரசம்
“எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்” என்று கூறி திராட்சை ரசத்தை உம்முடைய இரத்தமாக மாற்றிய இறைவா எமது பாவத்தால் ஊறிபோன இரத்தத்தை உம்முடைய இரத்தத்தால் எங்;களைக் கழுவி சுத்தமாக்கிட இந்த இரசத்தை ஏற்றருள்வாய் இறைவா, எம்மை மாற்றிடுவாய் தலைவா.

3. விவிலியம்
ஆதிமுதல் தந்தையாம்; இறைவன் வார்த்தையின் வழியாக தம்மை வெளிபடுத்தினார். அவ்வார்த்தையின் அடக்கமே திருவிவிலியம். ஓளி உணடாகுக என்ற வார்த்தை ஆற்றலோடு உலகை உண்டாக்கியது. உலகில் உள்ளோரின் வாழ்வை மேன்மையாக்க அவ்வாறே மனிதனாகி மனிதனின் ஆன்மீகவாழ்விற்கு வழியும், உண்மையும,; வாழ்வுமாய் இருக்கிறது. அவ்வார்த்தையே தனிக்குருத்துவத்தில் பங்குபெறுவோரையும் பொதுக்குருத்துவத்தில் பங்குபெறுவோரையும் சாட்சிய வாழ்வுக்கு அழைக்கிறது அவ்வார்த்தையை வாழ்ந்து உலகெங்கும் பகிர அதன் மீது தணியாத ஆன்ம தாகத்தை ஊற்றெடுக்கச் செய்ய இவ்விலியத்தை காணிக்கையாக்குகிறோம்.

4. வெள்ளைத் துணி
அன்பை தொலைத்துவிட்டு அநீதியையும், அகிம்சையை தொலைத்துவிட்டு அக்கினிஏவுகனைகளையும,; சமாதானத்தை தொலைத்துவி;ட்டு போர்க்கருவிகளையும் கையிலேந்தி நிற்கும் இவ்வுலகம் ஆழ்ந்த இறைஞானம் பெற்றிட, நீதியாகவே எப்போதும் நடத்திட அன்பு நெறியை இம்மண்ணில் விதைத்திட அதனால் எங்கும் சமாதானக்காற்று வீசிட இவ்வெள்ளைத்துணியை காணிக்கையாக்குகிறோம்.

5. மெழுகுவர்த்தி, தண்ணீர்
இருளில் நடக்கிற மக்களை உண்மையின் ஒளிக்கு அழைத்துவர, பொய்மையிலிருந்து வாயிமையை இனம் கண்டுகொள்ள, ஒளியையும் பஞ்சப+தங்களில் தன்னிடம் தஞ்சம் புகும் அத்தனைப்பொருட்களையும் தன்மையமாக்கிக்கொள்ளும் நெருப்பைபோல் நாங்களும் உம் வார்த்தையை, நற்கருணை பிரசன்னத்தை எமதாக்கி எங்கும் மணம் கமழவும் ஆன்மதாகம் கொண்ட அத்தனைப்பேரும் “உம் சொற்கள் என்நாவுக்கு இனிமையானவை என் வாய்க்குத் தேனினும் இனியவை” என்று கூறிய சங்கீத ஆசிரியரைப்போல் சொல்லும் அளவுக்கு உம் வாக்கு எங்களில் இரண்டரகலக்க கரைய இந்நீரையும,; ஒளியையும் காணிக்கையாக்குகிறோம்.

6. விதைகள்
விதை விருச்சமானதுபோல் நாங்களும் உம்மில் வளரவும் மழையில் மடிந்துபோகாமலும் வெய்யிலில் வெந்துப்போகாமலும் உம் வாக்கில் நிலையாய் ஊன்றிவள்ர்ந்து தளிர்முதல் வேர்வரை அத்தனையும் அடுத்தவருக்கு பயன்படுவதுப்போல் நாங்களும் பயன்பட்டு எம்மை அழித்து உம் வாக்கை, உம் பிரசன்னத்தை வாழவைக்க அவ்வாக்கிற்கு நாங்கள் சாட்சிகளாய் நின்று வாழும் மக்களாய் இம்மண்ணில் பரவி படர்ந்துநிற்க இவ்விதைகளையும் காணிக்கையாக்குகிறோம்.

இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

முன்னுரை
இறையேசுவில் பிரியமானவர்களே, இன்று நாம் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழானைக் கொண்டாடுகின்றோம். நற்கருணை என்னும் அருட்சாதனம் மூலம் இக்கொடை நமக்கு அருளப்படுகிறது. எல்லா அருட்சாதனங்களிலும் மையமாய் விளங்குவது நற்கருனை, ஏனெனில் எல்லா அருளின் ஊற்றாம் இயேசு கிறிஸ்துவையே நமக்குக் கொடையாகத் தருவது இவ்வருட்சாதனம் மட்டுமே. திருச்சபை முழுநலத்துடன் அன்றாடம் வளர்வதற்கு உணவாக இது அமைகிறது. அப்பமும், திராட்சை இரசமும் தூய ஆவியால்தான் இயேசுவின் உடலாகவும,; இரத்தமாகவும் மாற்றப்பட்டு அவர் மனுவுரு பெற்று அவர் உடனிருப்பை நமக்குத்தருகிறார். அவர் மனுவுருவெடுத்ததின் குறிக்கோள் சிலுவையில் அவர் உடலை சிதைத்து, இரத்தத்தை சிந்தி உலகிற்கு நிறை வாழ்வு வழங்கவே. நற்கருணை கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பு என்னும் மறைபொருளை உள்ளடக்கியுள்ளது எனவேதான் நாம் இதனை விசுவாசத்தின் மறைப்பொருள் என்று அறிக்கையிடுகின்றோம். அவரை உட்கொண்டு வாழும் போதும் அவர் உடலும் நம் உடலும் ஒன்றாய் இணைகின்றன. அவர் இரத்தமும் நம் இரத்தமும் ஒன்றாய் கலக்கின்றன. இவரோடு இணைந்திருக்கும்போது தந்தையும் தூய ஆவியும் நம் அருகில் அமர்ந்திருப்பதையும், வானதூதர்களும், புனிதர் புனிதையரும் புடை சூழ நிறைந்திருப்பதையும் நம்மிலே நாம் உணர இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை
சுருக்கமாக சொன்னால் சீனாய் மலையில் செய்த உடன்படிக்கை இஸ்ரயேல் மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் ஒன்றிப்பை குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதை இவ்வாசகத்தின் வழியாக தெரிந்துக்கொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை
இயேசுவின் மனுவுருவெடுத்தலின் வழியாக இறைவன் தன் அன்பிரக்கத்தை நிறைவாக அபரிமிதமாக மக்கள் அனுபவிக்க உதவுகிறார் அதன் வழியாக அவர்களோடு உறவையும் ஒன்றிப்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார். கிறிஸ்து இரத்தத்தின் வழியாகச் செய்யும் உடன்படிக்கையின் மூலம் இந்த உறவு ஒன்றிப்பிற்கு நிலைத்த தன்மை கொடுக்கிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
1. “ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா, உம் திருச்சபையை வழிநடத்தும்; திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வாhத்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்” என்று மொழிந்த வாழ்வின் நாயகனே, எம் தாய்திருநாட்டை ஆளுகின்ற தலைவர்கள் அதிகாரிகள் அனைவரும் உம்மக்களுக்கு வாழ்வு தருபவர்களாக மாறவும் அதனால் அவர்கள் வாழ்வில் உயர வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்” என்ற எம் தலைவனே, எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவே பாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்ப துயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாக உம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன் அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்று மொழிந்தவரே எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறு குழுப்பொறுப்பாளர்கள்; அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள,; அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும் நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள் பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திருமணம்


திருமணம் - மறையறிவு

முன்னுரை:  அன்பும் பிணைப்பும்: கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு@ பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.

உடன்படிக்கை: கத்தோலிக்க திருமண அருள்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும்

வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருள்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது. 

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருள்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருள்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

திருச்சபையின் வழிகாட்டுதல்: குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48) 
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி,பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)

குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)

மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)

தயாரிப்பு: இத்திருவருள்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம். 

ஆலோசனைகள்:  ஆன்மீக தயாரிப்பு: திருமணம் என்பது வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி. என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இதற்கு நல்ல தயாரிப்புடன் பெற்றோரும் மணமக்களும் ஆயத்தம் செய்யவேண்டும். மணமகனும் மணமகளும் ஆன்மீக தயாரிப்பாக நல்ல பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் மணமக்கள் இதைச்செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மணமக்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வாய்ப்பு இருந்தால் அவர்களும் இந்திருவருள்சாதனத்தைப பெறுவது நல்ல காரியம். தங்கள் இல்வாழ்வு நன்றாக அமைய மணமக்கள் வேண்டுவதோடு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மற்ற எல்லா ஏற்பாடுகளை திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வது போல் திருப்பலிக்கும் செய்ய முன் வரவேண்டும்.

திருப்பலி தயாரிப்பு: முதன்முதலாக சரியான நேரத்திற்கோ அதற்கு முன்னதாகவோ மணமக்கள் ஆலயதிற்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். குருக்களையும் மற்றவர்களையும் நமது சௌகரியத்திற்காக காக்க வைப்பதை தவிற்க வேண்டும். அதற்காக பெற்றோர்கள் - சடங்குகள்,அழகு படுத்துதல், ஆசி பெறுதல், வாகன ஏற்பாடு, இசை முழக்குவோர், எல்லவற்றையும் தக்க நேரத்தில் தயாராக்க கவனமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலயத்தையும் அலங்காரம் செய்ய தகுந்த உறவினர்களையோ முடியாத பட்சத்தில் பூக்களை கொண்டாவது பீட அலங்காரங்களைச் செய்யலாம். வாசகங்களை மணமக்களே வாசிக்க முன்வரவேண்டும். அல்லது மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க முன்வரலாம். அதை முன்னரே பங்குத் தந்தையிடம் ஆலோசனை செய்து வாசகங்களை வாசித்துப் பழகி வரலாம். சிறப்பான விசுவாசிகள் மன்றாட்டை குடும்பத்தாரே தயார் செய்து பாடலாம் அல்லது வாசிக்கலாம்.(இந்த இணையத்தளத்தில் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது). மணமக்களும் அவர்களின் குடும்பத்தாரும் காணிக்கைப் பவனியில் கலந்து கொள்ளாம். மனக்கலக்கத்தோடும் சோகமான முகத்துடனும் வருவதை தவிற்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு புதிய வாழ்கையை இறைவனின் திருமுன்னிலையில் ஆரம்பிக்க போகிறோம் என்ற உணர்வுடன் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வரமுற்படவேண்டும். பராக்கைத் தவிர்த்து திருப்பலியில் அனைவரும் பக்தியோடு மணமக்களுக்காக ஜெபிப்பது மிக மிக முக்கியம். 

சம்பிரதாயச் சடங்குகள்: சடங்குகள் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் சிறுபிழைகள், எதிர்பாராத அசௌகரியங்கள், குறைகள் ஏற்படும போது அதை பெரிது படுத்தாமல், பெருந்தன்மையுடனும் விட்டுகொடுத்தும், நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமை பாராட்டாமல் இரு குடும்பத்தாரும் இணங்கிய முறையில் நடந்துகொள்வது மணமக்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதை நினைவில் இருத்தி திருமணவிழாவினை இரு குடும்பத்தாரும் அனைவரும் போற்றும் படியாக நடத்திக்காட்ட முன்வரவேண்டும்.



வருகைச் சடங்கு :

(குரு பூசைக்குரிய திருஉடைகள் அணிந்து பணியாளரோடு ஆலய வாசலிலே அல்லது வசதியைப் பொறுத்து, பீடக்கிராதியிலே நின்று வரவேற்கிறார் )

குரு : அன்புமிக்க மணமக்களே, திருமண அருள்சாதனத்தை முறையே நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற அவரது திருச்சன்னிதியை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களோடு இன்று திருச்சபையும் மகிழ்கிறது. பரமனின் திருமுன் பக்தியுடன் வருக! என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

(பணியாளர் முன் செல்ல, பின்னர் குரு, மணமக்கள், பெற்றோர், சாட்சிகள் என்ற வரிசையாக பவனி பீடத்திற்கு செல்லும். அப்போது மக்கள் வருகைப் பல்லவி பாடுவர்.)

வருகைப் பல்லவி (சங். 19  3,5)

ஆண்டவர் தம் திருத்தலத்தினின்று உங்களுக்குத் துணைசெய்வாராக. சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இதயம் விரும்புவதை அவர் உங்களுக்கு அருள்வாராக! உங்கள் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக!

பூசையின் தொடக்கச் சடங்குகள்:

வருகைப் பாடல்
  
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் 
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்


குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர் சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவரியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமேஎன் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். 
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்கள்: ஆமென்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.

(பாடல் திருப்பலியில்) 

உன்னதங்களிலே இறைவனுக்ககே மாட்சிமை உண்டாகுக. 
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே. 
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம். 
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். 
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே. 
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே. 
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. 
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே. 
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர். 
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர். 
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர். 
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர். 
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர். 
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர். 
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் 
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு :

குரு : செபிப்போமாக.
அனைத்துலகையும் ஆண்டு நடத்தும் இறைவா, திருமண இணைப்பை ஒரு மாபெரும் அன்பின் அருள்சாதனமாகவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள அன்புறவின் அடையாளமாகவும் ஏற்படுத்தியதற்காக உம்மைக் போற்றுகிறோம். உம்முடைய பிள்ளைகளாகிய... இவர்களுக்காக நாங்கள் புரியும் வேண்டுதல்களைக் கேட்டருளும். இவர்கள் உம்மீதும் ஒருவர் ஒருவர்மீதும் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையால், தங்களது அன்பை இன்று ஒருவர் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறார்கள். இவர்களது வாழ்வு அந்த அன்பின் பேருண்மைக்குச் சான்று பகர்வதாய் அமைவதாக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்.

முதல் வாசகம்:

குரு: மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் இருக்க, அவனது விலாவெலும்பிலிருந்தே முதல் பெண்ணைப் படைத்தார். இதனால் அவர் மனிதனின் அன்புக்குரியவர் ஆகிறார் என்பதை தொடக்க நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

தெடக்க நூலிலிருந்து வாசகம். அதிகாரம் 2, இறைவசனங்கள் 18 முதல் 24 வரை

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான் தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் : சங். 32

ஆண்டவருடைய திருவருளால் 
அவனியெங்கும் நிறைந்துள்ளது!

அவரை இறையாய்க் கொள்ளும் மக்கள் 
அவர் பொருளாய்த் தேர்ந்தோர் பேறுபெற்றோர்,
தமக்கஞ்சிடுவோரைப் பார்க்கிறார் ஆண்டவர்
தம் அருளை நம்பினோரைக் கண்நோக்குகிறார் (ஆண்)

நம் ஆன்மா காத்திருப்ப தவர்க்காக 
நமக்குதவி கேடயமும் அவரே!
மகிழ்கின்ற தவரில் நமது உள்ளம்,
வைக்கிறோம் திருப்பெயரில் நம்பிக்கை (ஆண்)

இரண்டாம் வாசகம் இரண்டாம் வாசகம் (1 இரா 3  1-9) 
அப்போஸ்தலரான புனித பேதுரு முதல் திருமுகத்திலிருந்து வாசகம், அதிகாரம் 3 இறைவார்த்தைகள் 1 முதல் 9 வரை.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள் தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள். அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள் மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

வாழ்த்தொலி:
  
அல்லேலூயா (1அரு.4  8,11) 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! 
அனை: உம்மோடும் இருப்பாராக!

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:6-9
ஆண்டவரே உமக்கு மகிமை.

அக்காலத்தில் படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
மக்கள்: கிறிஸ்துவே உம்மைப் புகழ்கின்றோம்.

மறையுரை :

திருமணச்சடங்கு

அறிவுரை

குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திருமுழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருள்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.

(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)

குரு: (பெயர்...பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?
மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.

குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?
மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.

குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.

மன ஒப்புதல்:

குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)

மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மக்கள்: ஆமென்.

மாங்கலியம் அணிவித்தல்:

குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) ... என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)

12. விசுவாசிகளின் மன்றாட்டு 

(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்களின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட்டாகச் சொல்வது நல்லது.)

குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

நற்கருணை வழிபாடு
அனைவரும் அமர, மணமக்கள் அப்பத்தையும் இரசத்தையும் ஏந்தி பீடத்திற்கு கொண்டு செல்லலாம். வேறு காணிக்கைப் பொருள்கள் கொண்டு வந்திருந்தால், மணமக்களோடு பவனியாக எடுத்துச் செல்லவும்.(பாடல் குழுவினர் காணிக்கைப் பாடல் பாடுவர்.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக்கள் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:
குரு : (காணிக்கை மீது மன்றாட்டு)
அன்புமிக்க இறைவா, இன்று திருமணத்தால் இணைக்கப்பெற்ற ........க்காக நாங்கள் மகிழ்ச்சியுடன் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும். உமது அன்பினாலும் பராமரிப்பினாலும் நீர் இவர்களை இன்று ஒன்றாக இணைத்துள்ளீர். இவர்களுக்குத் தொடர்ந்து உம் ஆசியை வழங்கி, இவர்கள் தங்கள் மணவாழ்க்கை முழுவதும் மகிழ்ந்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் : ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்கள் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

திருமண உடன்படிக்கையை நீர் ஏற்படுத்தி, மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும், 
அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் மணமக்களை இணைத்தருளினீர். 
இதனால், திருமணவாழ்வு மக்கள் பேற்றினால் வளமையுற்று, 
உமக்குப் புதிய அன்பு பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. 
ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளாலும் 
திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர், 
பிறப்பினால் உலகம் அணி செய்யப்படுகின்றது, 
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்மு வழியாக வரும் மறுப்பிறப்பினால் 
திருச்சபை வளர்ச்சி பெறுகிறது.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். 
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, 
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. 
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், 
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன 
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா. 

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் 
வானமும் வையமும் யாவனும் மாட்சிமை யால்நிறைந் துள்ளன. 
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே 
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
இ) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்:

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : 
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் 
ஏனெனில் இது உங்களுக்காக 
கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் 
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். 
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் 
எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள் :ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இககுடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய தக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்கள் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, 
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

சிறப்பு ஆசீர் :

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவில் மணமுடித்த இம்மணமக்களை ஆண்டவர் தம் அருளின் ஆசியால் நிரப்பவும், திருமணத்தில் இணைந்த இவ்விருவரையும் நற்கருணை வழியாக அன்பினால் ஒன்றுபடுத்தவும் வேண்டுn;மன்று மன்றாடுவோம்.

(எல்லாரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிக்கின்றனர்.)

தூய தந்தையே, நீர் எமது சாயலாக மனிதரைப் படைத்த போது, ஆண், பெண் எனப் படைத்தீர். இவ்வாறு, கணவனும் மனைவியும் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றுபட்டு இவ்வுலகில் தங்கள் பணியை நிறைவேற்றச் செய்கின்றீர்.

இறைவா, உமது அன்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும், உம் மக்களோடு நீர் செய்தருளிய உடன்படிக்கையை நினைவூட்டவும், மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை ஓர் அடையாளமாகத் தந்தருளினீர், இந்த அடையாளம் திருவருள்சாதனமாக நிறைவு பெற்றதால், உம்முடைய விசுவாசிகளின் திருமண இணைப்பில் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையே உள்ள மண உறவாகிய மறைபொருள் விளங்கச் செய்கின்றீர். (;---பெயர்-- -) என்னும் உம் பிள்ளைகள் இவர்கள் மீது இரங்கி , உமது வல்லமையால் இவர்களைக் காத்தருளும்.

இறைவா, இத்திருவருள்சாதனம் அருளிய உறவினால் இவர்கள் உமது அன்பின் கொடைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாக, மேலும் நீர் இவர்களோடு இருக்கிறீர் என்பதற்கு ஒருவருக்கொருவர் அடையாளமாய் விளங்கி , ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உடையவர்களாய்த் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் இருவரும் ஒன்றாய் உருவாக்கும் குடும்பத்தை தம் உழைப்பால் பேணிக்காப்பார்களாக, தம் மக்களை நற்செய்தி நெறியில் பழக்கி, உமது வானக அரசின் குடும்பத்தில் வந்து சேர்க்க ஆவன செய்வார்களாக.

உம் மகள் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இதனால், இவர் மனைவிக்கும் அன்னைக்குமுரிய பணிகளை நிறைவேற்றி, தூய அன்பினால் குடும்பத்தைப் பேணி, இனிய பண்பினால் அதை அணி செய்வாராக.

உம் மகன் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இவர் உண்மையுள்ள கணவராகவும், முன்மதியுள்ள தந்தையாகவும் தம் கடமைகளை நிறைவேற்றுவாராக.

தூய தந்தையே, உம் திருமுன் மணம் புரிந்து கொண்ட இவர்கள் உமது திருப்பந்தியில் அமர விரும்புகிறார்கள், ஒரு நாள் இவர்கள் விண்ணக விருந்திலும் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. 
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)

(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எமக்கு அமைதி அருளும்.

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(மணமக்களுக்கு திவ்ய நன்மை அப்ப இரச குணங்களில் வழங்கப்படலாம்.)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடலைப் பாடுக.

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

குரு : ஜெபிப்போமாக ! 
வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா, உமது பராமரிப்பினால் நடந்தேறிய இத்திருமணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம். இம்மால் ஒரு புனித குடும்பமாக இணைக்கப்பெற்று, ஒரே அப்பத்தாலும் ஒரே பானத்தாலும் நிறைவடைந்துள்ள (பெயர்...பெயர்...) இவர்கள், அன்பினால் கருத்தொருமித்து வாழ்ந்து, உம் திருவுளத்திற்கேற்ப ஓர் இல்லத் திருச்சபையை ஏற்படுத்தி மகிழ்ந்திருக்க அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
அனை: -ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : என்றும் வாழும் தந்தையாகிய இறைவன், நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி , கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் என்றும் குடிகொள்ளச் செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

இறுதி ஆசீர்

குரு : உங்கள் மக்களால் ஆசியும், நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று, அனைவரோடும் நல்லுரவுடன் வாழ்வீர்களாக.
எல் : ஆமென்.

குரு : உலகிலே நீங்கள் இறையன்புக்குச் சாட்சிகளாய்த் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும், இறைவனின் வீட்டில் உங்களை ஒருநாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.
எல் : ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று 
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.

ஒப்புரவு அருட்சாதனம்

ஒப்புறவு - மறையறிவு

முன்னுரை: திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வழியாக நாம் கடவுளின் அருளைபெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள்,பேராசை, சுயநலம் ஆகியவை மனிதரை பாவத்தில் விழத்தாட்டுகின்றன. ஆனால் இறைமகன் இயேசு நம்மை ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக பாவத்திலிருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். ஒப்புரவு அருள்சாதனம் பாவசங்கீத்தனம், பச்சாதாபம், என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவார்த்தையில் ஒப்புரவு:  "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்!" (மாற்.1 : 15) எனும் முழக்கத்தோடு இயேசு தம் மீட்புப் பணியைத் தொடங்கினார். உயிர்த்தபின், தம் சீடர்களின் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா!" (யோ. 1 : 22-23) என்று கூறி ஒப்புரவு அருளடையாளத்தை ஏற்படுத்தினார்.

இறைவனின் இரக்கப் பெருக்கால் நாம் ஒப்புரவைப் பெறும்போது, நம்மை முதலில் அன்பு செய்தவரான பரம தந்தையிடம் திரும்புகிறோம். (1யோ. 4 : 19) நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடம் திரும்பி வருகிறோம். (கலா.2 : 20, எபே. 5 :25), நம் மீது ஏராளமாய்ப் பொழியப்படும் தூய ஆவியிடம் திரும்பி வருகிறோம். (தீத்து 3 : 6) இவ்வாறு, இறைவனோடு ஒப்புரவாகும் நாம், திருச்சபையோடும் அதன் உறுப்புகளான நம் சகோதரர்களோடும் ஒப்புரவாகின்றோம்.

முக்கிய கூறு: ஒப்புரவு அருள்சாதனத்தின் மையக்கூறு பாவத்திற்காக மனம் வருந்துதல். மனம் வருந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. பாவங்களை மன்னிப்பது கடவுளே. குருவானவர் இங்கே கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். நாம் மனமுவந்து இவ்வருள்சாதனத்தை பெற செல்வதே நாம் நம் பாவங்களுக்காக வருந்தும் ஒரு அடையாளமாக இருந்தாலும் குருவிடம் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவதாக அறிக்கை இடுவது போற்றுதற்குறிய செயல். நாம் குருவிடம் அறிக்கையிட்ட பாவங்களை அவர் நினைவில் கொள்வதுமில்லை, அடுத்தவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதுமில்லை என்பது நிச்சயம்.

பாவம் என்பது என்ன? கடவுளின் அன்பைப் புறக்கணிப்பது பாவம். கடவுளின் அன்பை நாம் எவ்வாறு புறக்கணிக்கமுடியும்? கடவுள் அன்பே வடிவானவர். அந்த அன்பின் வெளிப்பாடு இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களான நாமும் அதே அன்பில் வாழ அழைக்கப்படுகிறோம். இத்தகைய அன்பில் வாழாமல் சுயநலத்திலும், உலக இன்பத்திலும் முழ்கி, கடவுள் நமக்கு கொடுத்த அன்புக் கட்டளைக்கு எதிராக செயல்படும்போது கடவுளின் அன்பைப் புறக்கணிக்கிறோம். நம்மை அன்பு செய்யும் கடவுளுக்கு எதிராகவும், அன்புசெய்து வாழவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம். 

பாவத்தில் கனாகனம் உண்டா?  உண்டு. அற்ப காரியத்திலோ அல்லது முழு ஈடுபாடில்லாமலோ, அல்லது அறியாமையிலோ நாம் செய்யும் தவறுகள், குற்றங்கள் அற்ப பாவம். எடுத்துக்காட்டு -நமது சௌகரியத்திற்காக சிறு பொய் சொல்லுதல்(அடுத்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது). கடவுளின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் எழிதாக மீண்டும் அன்புறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.

கனமான காரியத்தில், மனம் பொருந்தி, முழு ஈடுபாட்டுடன், பாவம் என அறிந்தும் அதைச் செய்வது சாவான பாவம். எடுத்துக்காட்டு: மனமறிந்து மோக பாவம் செய்வது, கொலை செய்வது, போன்றவையாகும். (அடுத்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய செயல்கள் அனைத்தும்) இவை நமது ஆன்மாவை முற்றிலுமாக சாவுக்கு இட்டுச் செல்லும் காரியங்கள். கடவுளோடு உள்ள அன்புறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையை ஏற்படுத்துகிறது. 

எவ்வாறு இந்த அருள்சாதனத்தை பெறுவதற்கு தயாரிப்பது?  சரியான ஆன்ம சோதனை செய்து பார்த்து அப் பாவங்களுக்காக மனம் வருந்தவேண்டும்.
ஆன்ம சோதனை இரு முறைகளில் செய்யலாம்:
  1. பத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து பாவங்களை நினைவிற்கு கொண்டு வருதல்.
  2. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்: அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்: தன்னிலை செயல்களை ஆராய்ந்து பார்த்தல்.
ஒப்புரவு பெறும் முறை என்ன?
  1. செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல்.
  2. அவற்றிற்காக மனம் வருந்துதல்.
  3. இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல்.
  4. குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல்.
  5. நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.
மாதிரி ஆன்ம சோதனை:
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை 
  • எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முதலிடம் தந்தேனா?
  • பிற தெய்வங்களுக்குத் துதி பாடினேனா? வணங்கினேனா?
  • மாந்தரீகம், மூட நம்பிக்கை, ஜோதிடம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தேனா?
  • என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை பிறர் முன் காட்டத் தயங்கினேனா?
  • துன்ப நேரத்தில் கடவுளுடைய அன்பு, பராமரிப்பில் நம்பிக்கை இழந்தேனா? 
2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே. 
  •  கடவுளுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லியிருக்கிறேனா?
  •  இறைவனின் ஆலயத்தை புனிதமாக மதிக்கத் தவறிஇருக்கிறேனா?
3. கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி. 
  • ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் குறைந்த பட்ச முயற்சியாக திருப்பலி, திருவிருந்தில் பங்குகொள்ளத் தவறினேனா?
  • தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு கடவுளுக்கும், ஜெபிப்பதற்கும் அதிக நேரத்தை செலவுசெய்யத் தவறினேனா? 
4. தாய், தந்தையை மதித்துப் பேணு. 
  • என்னுடைய பெற்றேர்களுக்குத் தக்க மரியாதையை கொடுக்கத் தவறினேனா? பணிந்து நடக்காமல் இருந்தேனா? 
  • அவர்களை மதித்து நடந்தேனா? எக்காரியத்திலாவது நான் அவர்களை மனம் நோகச் செய்தேனா?
  • பெற்றோர்களின் வயதான காலத்தில் அல்லது அவர்களின் முடியாத காலத்தில் அவர்களை மாண்புடனும் என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு சௌரியங்களைச் செய்து கொடுத்து அன்புடன் நடத்தத் தவறியிருக்கிறேனா? கனிவுடன் பேசத் தவறியிருக்கிறேனா?
  • என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்து கரிசனையோடு நடக்கத் தவறினேனா?
  • என்னுடைய அலுவல் மட்டில் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு மதிப்புகொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்ப அளவிலும் அலுவலக அளவிலும் என்னுடைய கடமையை செய்யத் தவறினேனா?
5. கொலை செய்யாதே. 
  • வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கு செய்தேனா?
  • பிறருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினேனா?
  • பிறரைப் பற்றி அவதூறு கூறினேனா?
  • பிறர் மனம் நோகும் படியாக தீய சொற்கள் பேசினேனா? 
  • யாரையாவது நான் வெறுத்து அவர்களுக்குத் தீயது நடக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  • யார்மீதாவது பகைமையும் வஞ்சினத்தையும் நெஞ்சில் கொண்டு மன்னிக்க முடியாமல் இருக்கிறேனா? 
  • நேரடியாகவோ மறைமுகமாகவோ கருக்கலைப்புக்கு ஈடுபட்னேனா? உதவிசெய்தேனா?
  • தற்கொலை முயற்சி அல்லது எண்ணம் போன்றவற்றில் ஈடுபட்டேனா?
  • பிறருக்குத் துர்மாதிரியாக செயல்பட்டேனா? 
  • பிற உயிரினங்களை வதைத்தேனா? கொடுமையுடன் நடந்துகொண்டேனா?
6. மோக பாவம் செய்யாதே. 
  1. என்னுடைய நடை உடை பாவனைகளில் வீண் கவர்ச்சியைத் தேடியிருக்கிறேனா?
  2. தீய படங்களையோ, புத்தகங்களையோ படித்தேனா? பார்த்தேனா? 
  3. தீய எண்ணங்கள் தானாக மனத்தில் தோன்றியபோது அதை உடனடியாக விலக்கமல் இன்பம் அடைந்தேனா?
  4. என்னுடைய சொல்லாலும் செயலாலும் துர்மாதிரியாக நடந்தேனா? 
  5. என்னுடைய உடலை தூய ஆவியின் ஆலயம் என மதிக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேனா? 
  6. பிறரை தவரான நோக்கோடு பார்த்தேனா? மனத்தில் எண்ணினேனா? பழகினேனா?
  7. பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசினேனா? நடந்தேனா? பழகினேனா?
  8. திருமணம் ஆவதற்கு முன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  9. திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துகிறேனா? 
7. களவு செய்யாதே. 
  • பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா? எடுத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை இன்னாரது பொருள் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை உரியவரிடம் சேர்க்க தக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • பிறருடைய பொருள்களையோ சொத்துக்களையோ வேண்டுமென்று சேதப்படுத்தியிருக்கிறேனா?
  • பிறருக்கு கொடுக்கப்பட வேண்டிய அல்லது சேர வேண்டிய பொருளையோ பணத்தையோ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறேனா?
  • சூதாட்டத்தில் ஈடுபட்டேனா?
  • களவு செய்யபட்ட பொருள் என்று தெரிந்தும் குறைந்த விலை என்பதற்காக வாங்கி களவு செய்தலை உற்சாகப்படுத்தினேனா?
8. பொய் சாட்சி சொல்லாதே. 
  • என்னுடைய சுயநலத்திற்காக பொய் சொல்லியிருக்கிறேனா?
  • பொய் என்று தெரிந்தும் அது உண்மை என்று வாதிட்டிருக்கறேனா? சாட்சி கூறினேனா?
  • பிறரைப்பற்றி புறணி பேசினேனா? 
  • அடுத்வர்களை கேலி, பரிகாசத்துக்குள்ளாக்கி இருக்கிறேனா? 
  • இரகசியம் காக்கப்படவேண்டிய உண்மைகளை தீய உள்ளத்துடன் வெளிப்படுத்தினேனா?
  • பிறர் செய்த குற்றத்தை அல்லது பாவத்தை பறைசாற்றினேனா? 
  • அடுத்தவர்களை தீர்ப்பிட்டேனா?
9. பிறர் தாரத்தை விரும்பாதே. 
  • திருமணத்திற்குப் பின் என் அன்பை வெளிப்படுத்த தவறிஇருக்கிறேனா?
  • மனைவியை வெறும் போகப் பெருளாக நடத்துகிறேனா?
  • கணவர் அல்லது மனைவிக்கு தக்க அன்பையும மரியாதையையும உரிமையையும் கொடுக்கத் தவறிஇருக்கிறேனா?
  • திருமண உறவிற்கு அப்பாற்பட்டு எனது சிந்தனைகளை வேறு ஒருவரிடம் செலுத்துகிறேனா?
  • என்னுடைய கணவர் அல்லது மனைவி தவிர்த்து பிறருடன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  • என்னுடைய திருமண உடன்படிக்கையை மீறி வேறு நபருடன் உறவு வைத்துள்ளேனா?
  • தாம்பத்திய உறவில் திருச்சபையின் போதனையை மீறி நடந்திருக்கிறேனா?
10. பிறர் உடைமையை விரும்பாதே. 
  • அடுத்தவரிடம் காணப்படும் திறமைகளையும், செல்வத்தையும், நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டேனா?
  • பிறரை ஏமாற்றி அல்லது நேர்மையற்ற முறையில் பணமோ பொருளோ சம்பாதித்தேனா?
  • பிறருடைய அறிவுசார்ந்த (காட்சி, இசை, மென்பொருள்) உடமையை தவரான முறையில் பயன்படுத்தினேனா? 
பொதுவானவை:
  • என்னுடைய ஆன்மீக வாழ்விற்குத் தேவையான ஜெபம் என்வாழ்வில் முக்கிய இடம் பெறாமல் இருக்கின்றதா?
  • கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்ட கடவுளிடன் அருளைக் கேட்காமல் இருந்தேனா?
  • கிறிஸ்துவ வாழ்வில் துன்பம் வருகின்ற வேளைகளில் அதை தாங்கிக்கொள்ள இறைவனிடம் சக்தியை கேட்காமல் இருந்திருக்கிறேனா? 
  • பிறரை மன்னிக்கின்ற நற்குணம் இல்லாமல் இருக்கிறேனா?
  • என்னை பகைவர் என்று நினைப்பர்களுக்காக ஜெபம் செய்கிறேனா? 
  • என்னுடைய தேவைகளில் பிறர் உதவியை நாடாது தற்பெருமை கொண்டுள்ளேனா?
  • கடவுள் எனக்கு கொடுத்திருக்கின்ற திறமைகளையும் செல்வத்தையும் பிறறோடு பகிர்ந்து கொள்வதில் தாராளமுடன் இருக்கிறேனா?
  • உதவி செய்ய வசதியும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்தபோது சுயநலத்தோடு நடந்துகொண்டேனா?
  • உலக சமாதானத்திற்காகவும் மனித நேயத்திற்காகவும் ஜெபம் செய்ய மறந்திருக்கிறேனா?
  • நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு பரந்த மனத்துடன் அனைவருக்காகவும் உதவி தேவைப் படுவோர்காகவும் உதவிசெய்ய, ஜெபம் செய்ய தயாராய் இருக்கிறேனா? 
  • என்னுடைய ஞான மேய்ப்பர்களுக்கு என்னாலான உதவியைச் செய்கிறேனா?
  • எந்த அளவுக்கு கடவுள் எனக்கு திறமைகளையும், அருட்செல்வத்தையும், பொருட்செல்வவத்தையும் கொடுத்திருக்கிறாறோ அந்த அளவுக்கு அதிகமாக என்னிடம் பிறரன்புச் சேவையும் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து பிறரன்புச் சேவையிலும், திருச்சபைக்கும் என்னால் இயன்ற பொருளுதவியைச் செய்வதிலும், நேரத்தையும், சக்தியையும் கொடுப்பதில் தாராளமாய் இருக்கின்றேனா?
ஒப்புரவு வழிபாடு:
  1. பாவங்களை நினைத்துப் பார்த்தல் (ஆன்ம சோதனை)
  2. பாவங்களுக்காக மனம் வருந்துதல்
  3. பாவ அறிக்கையிடல்.
(குருவிடம் சென்றதும் ,சிலுவையடையாளம் இட்டு )
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.

சுவாமி நான் பாவியாய் இருக்கிறேன். நான் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறேன். நான் இந்த அருட்சாதனத்தைப் பெற்று ...நாட்கள் அல்லது ....வாரங்கள் அல்லது ....மாதங்கள் ஆகின்றன.

(ஒவ்வொரு பாவத்தையும் எத்தனை தடவை செய்தோம் என்பதைத் தாழ்ச்சியுடன் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லவும். ,இறுதியில் :)

இந்தப் பாவங்களுக்காகவும் மறந்துபோன எல்லா பாவங்களுக்காகவும் என் கடந்த கால வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களுக்காகவும் மனம் வருந்துகிறேன். எனக்குப் பாவ மன்னிப்பு அளித்தருளும்.

4.அறிவுரையும் பாவப் பரிகாரமும்:

(குரு கூறும் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கவும். அவர் கொடுக்கிற பரிகாரம் மனத்துயர் ஜெபத்திற்குப் பின் செய்யவேண்டும்.)

5.குருவின் பாவப் பொறுத்தல் ஆசீர்

குரு : இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன், தம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், பாவ மன்னிப்புக்காகத் தூய ஆவியைப் பொழிந்தருளிய இறைவன், திருச்சபையின் திருப்பணி வழியாக உமக்கு மன்னிப்பும் சமாதானமும் அருள்வாராக. நானும் பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் உம் பாவங்களிலிருந்து உம்மை விடுவிக்கிறேன். சமாதானத்துடன் செல்லுங்கள்.

பெறு : நன்றி. (எழுந்து இருப்பிடம் செல்க. மனத்துயர் செபம் முடிக்கவிலை என்றால் தொடரவும்.)

மனத்துயர் செபம் 

(குரு பொறுத்தல் ஆசீர் வழங்கும் போதே கீழ்கண்ட மனத்துயர் செபம் சொல்லுக.)

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்துக்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.

உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

பின்னர் குரு கொடுத்த பரிகாரத்தை ஜெபிக்கவேண்டும் அல்லது செய்ய வேண்டும்.