பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 23-10-2011


முன்னுரை:
பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, மன்னிப்பு ஆகிய அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் இணைத்து நிறைவுறச் செய்யும். மனித வாழ்வின் அச்சாணி அன்பு. ஒவ்வொரு மனிதனும் அன்புக்காக ஏங்கி தவிக்கிறான. அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல், அடுத்தவர்களின் பெயரை கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும். இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரது பிரசன்னம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் வெளிப்படுகிறது. எனவே நம்மை சூழ்ந்து வாழும் ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழக் கூடிய தியாக உள்ளத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று தொடரும் கல்வாரிப் பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: வி.ப.22:20-26
ஏழை எளியவர்களுக்கும, விதவை அனாதைகளுக்கும, தீங்கிழைக்காமல் நற்செயல்கள் செய்வதற்கான அழைப்பை யாவே இறைவன் நமக்கு முன்வைக்கிறார். எனவே நற்செயல் புரிவதற்கென்றே நம்மை இறைவன் படைத்திருக்கிறார்,அழைத்திருக்கிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1தெச1:5-10
புனித பவுல் தெசலோனிக்க நகர் மக்களைப்பற்றி பெருமையாகப் பேசுகின்றார். எதற்காக என்றால, அவர்கள் தங்கள் நம்பிக்கையின் வழியாக கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழ்ந்ததற்காக. ஆண்டவரின் வார்த்தை அவர்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தது மாசிதோனியாவிலும, அக்காயாவிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பரவியது. நம்பிக்கையினால் ஆட்கொள்ளப்படும் மக்கள் நற்செய்திப் பணியின் தூதுவர்களாக மாற ஆரம்பிக்கின்றனர் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்
  1. அன்பின் இறைவா, உம் அன்பு திருச்சபையை காத்து வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், அனைவருக்கும் உடல் உள்ள சுகத்தை தந்து திருச்சபையை திறம்பட வழிநடத்த தூய ஆவியானவரின் அருட்கொடைகளை நிறைவாகப் பொழிந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்பிலும், விசுவாசத்திலும், ஞானத்திலும், ஆன்மீகத்திலும் அழைத்து செல்ல வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. வழியும் உண்மையுமான இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். பணம், பட்டம, பதவி என்று தங்களுடைய விருப்பத்தை தேடாமல், மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி நாட்டில் பல்வேறு நலன்களை அவர்களுக்கு கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அடையவும, அன்பு செய்து வாழ வேண்டிய நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பு இறைவா, எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து இறைபக்தியில் சிறந்து விளங்கிட தூய ஆவியை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் என்கே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும்,  இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

என் நெஞ்சம் இனிதாகப் பாடும்

கார்மேகம் காணும் மயிலாக நானும்

என் நாவில் ஆனந்த ராகம்

உணவாய் வந்த தெய்வம் - என்

உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்

உணவாய் வந்த தெய்வம்


1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண

விளக்கோடு உனைத் தேடினேன்

விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள

நான் இங்கு உளம் வாடினேன்

வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ

உனக்காக நான் வாழ்கிறேன்

உன் அன்பில் ஒன்றாகிறேன்


2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்

நான் என்னை அழகாக்கினேன்

மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள

உனக்காக யாழ் மீட்டினேன்

வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ

உம் மாண்பு நிறைவானது

உம் மாட்சி நிலையானது

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

1.

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

2.

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

3.

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

உனக்கென நான் தரும் காணிக்கையை

 உனக்கென நான் தரும் காணிக்கையை

உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2

பலியென எனை நான் தருகின்றேன் - 2 - உன்

பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2


1. உழைப்பின் கனி இது உனக்காக

உன்னருள் கொடைகளின் பலனாக - 2

படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 - உன்

படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2


2. உடல் பொருள் ஆவி உனக்காக

உன் பணி புவிதனில் நிறைவாக - 2

மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 - நான்

மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே Lyrics

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அன்பே தூய்மையானது என்வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாதது
உனக்காக நான் என்றும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து 
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார். 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே