இளைஞர்களும் உணர்வுகளும் (உளவியல் பார்வை)
உட்புகுமுன்
இன்றைய சமூகம் இளைஞர்களின் தகுதி குறைவுகளைச் சுட்டிக்காட் தாயராக இருக்கிறதே ஒழிய அவர்களை தகுதி படுத்த உயர்வுகளை புரிந்துகொளள் தயாராக இல்லை. காரணம் இளைஞர்கள் இறிவைத்தாண்டி உயர்வுகளின் கட்டுபாட்டுக்கள் முடங்கி போவதுதான் காரணம். இவர்களுக்கு தேவையான ஒன்று தமது உணர்வுகளைப் பற்றிய விழிப்பு. இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
உணர்வுகள் உயிருள்ளவை
இளைஞனின் வாழ்க்கையை அழகூட்டும் வண்ணங்கள் அவனது உணர்வுகளே. மனிதனின் உணர்வுதான் மற்ற உயிரினங்களில் இருந்த மனிதனை பிரித்துக்காட்டுகிறத. அப்படிப்பட்ட உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் அதன் விளைவாக உணர்வுகளை உரியமுறையில் உணரவும் வெளிப்படுத்தவும் இன்றைய இளைஞர்களை நமது கலாச்சாரம் அனமதிப்பதில்லை, இளைஞர்கள் தங்களத உணர்வு மாற்றங்களையோ சிக்கல்களையோ மனம் விட்டு பேசாமல் இருப்பதால் தேவையான விழிப்புணர்வும் அறிவும் வழிக்காட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது.
இந்நிலையில் இளைஞர்கள் தடம்மாறி போவதுண்டு, அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடிய பருவம் இளைமைபருவம். பயம், கோபம், மகிழ்ச்சி, கவலை என நான்கு உணர்ச்சிகளை தாய் உணர்வுகளை இன்றைய உளவியலார் குறிப்பிடுகின்றனர். இளைஞர்களைப் பொறுத்த மட்டில் போதிய அளவு முதிர்ச்சி இல்லாததால் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாகவும் சில வேளைகளில் வெளிப்படுத்தப்படாமல் உணர்வுகள் இருக்க வாய்ப்புண்டு. எ.கா. பாலுணர்வு, நமது தமிழக பண்பாடு கற்றுக்கொடுத்த சில தவறான மதிப்பீடுகளால் இளைஞர்கள் பாலுணர்வு குறித்து சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது, பார்ப்பது போன்ற செல்பாடுகள் தவிர தங்களை தாங்கள் கட்டுப்படுத்தி பின்பு அதன் எதிர்விளைவுகளை சந்திக்கின்றனர். இவை இளைமைப்பருவத்தில ஏற்படும் இயற்கையான உணர்வு என்பதையும் உயர்வுகள் உயிருள்ளவை என்பதையும் உணர்தல் அவசியம்.
இளைஞர்கள் ஏன் உணர்வுகளை வெளிப்படத்த வேண்டும்?
இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் மூன்று விதமான பாதிப்புகளை சந்திக்க கூடும்: 1. உடல் ரீதியான பாதிப்ப 2. மன ரீதியான பாதிப்பு
3. குடும்பம் மற்றும் சமூக உறவில் பாதிப்பு.
இளைஞர்கள் உணர்வுகளை ஏன் வெளிப்படுத்தவதில்லை?
இளைஞர்களின் உள்மனத்தின் இருண்டபகுதியில் பல நிகழ்வுகள் ஏக்கங்கள் எண்ணங்கள் பதிந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த விரும்பாததற்கு காரணங்கள் பல
• குற்றப்பழி உணர்வுகள் சில அந்தரங்க நிகழ்வுகள்
• கடந்தகால தவறுகள், இன்னும் பல…
இளைஞர்கள் உணர்வுகளை கையாள வழிமுறைகள்
இளைஞர்கள் உணர்வுகளை தகுந்த முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாத உணர்வுள் இளைஞர்களுக்கு எதிராக செயல்படும். இளைஞர்களின் வளர்ப்பு முறையாலும் கல்வி முறையாலும் உணர்வுகள் ஏற்றுக்கொள்ளபடாமல் போக ஏதுவாய் அமைகின்றன. இளைஞர்கள் உணர்வுகளை உண்மையாக உள்ள படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1. அடக்கி வைத்தல்: கோபப்படாதே! என்ற வார்த்தையும் இளம்பெண்கள் சத்தமாக சிரிக்கக் கூடாது, இளைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது போன்ற பெரியவர்கள் கண்டிப்ப இன்றைய இளைஞர்கள் மனத்தில் ஆழப்பதிந்து கோபப்பட வேண்டிய ஒரு சூழலில் கோபத்தை அடக்குவதும் அதனால் வரும் விளைவுகளை எண்ணி கட்டுப்படுத்துவதும் காணப்படுகிறது. இத்தகைய மனநிலை தவறு என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்களை வர வேண்டும். உணர்வுகளை தேவையான இடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
2. முழுமையாக வெளிப்படுத்துதல்: இளைஞர்கள் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்து சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டம்.
3. பொறுப்படன் வெளிப்படத்துதல்: கோபத்தை உரிய முறையில் பொறுப்புடன் வெளிப்படத்துதல். இளைஞன் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அவனுக்கும், வெளிப்படுத்தக்கூடிய நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்கவேண்டும். சூழ்நிலையை மனதில் கொண்டு விவேகத்துடன் செயல்படவேண்டும். இதுவே மற்ற இரண்டைகாட்டிலும் சிறந்தது.
4. இளைஞர்களுக்கு தேவையான மனநிலை
• உறவுகளை வளர்க்கம் உணர்வுகளைப்ற்றி ஆழமாக அறிதல் இளைஞனுக்கு அவசியம். வெளிப்படுத்தகூடிய உணர்வுகள், வெளிப்படுத்தகூடாத உணர்வுகள் பற்றிய புரிதலும் அவற்றிலிருந்து விடுதலை பெற வழிவகுத்தலும் இளைஞனுக்கு அவசியம்.
• இளைஞன் தன்னை பற்றி முழுமையாக அறிந்து நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை தேவை.
• உணர்வுகளை நல்லது கெட்டது என பிரிக்கமுடியாது மாறாக அவை இளைஞனின் உள்ளிருக்கும் மனநிலைகளின் வெளிப்பாடே. நடிப்பதை கைவிட்டு இயல்பாக செயல்பட வேண்டும்.
• எனது உணர்வுகள் எனக்குத் தெளிவாகும் போத பிறரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும். உணர்வுகள் பாதிக்கப்படும் போது பிரச்சனைகள் பிளவுகள் ஏற்பட ஏதுவாகின்றது.
முதலும் முடிவுமாக
இன்றைய இளைய சமதாயம் பொய்யுணர்ச்சியைக் காதல் என்று காட்டும் மாயஉலகில் இருந்து விடுபட்டு வாழ முயல வேண்டும். காரணம் உணர்ச்சிகளில் ஆரம்பித்து உணர்ச்சிகளிலேயே முடிந்துவிடுகின்றது. காதல் அதையும் தாண்டி உணர்வுளில் ஆரம்பித்து, அறிவு வந்து முடிந்து வைப்பதாக இளைஞனின் செயல்பாடுகள் இருத்தல் அவசியம். சீரானமுறையில் சிந்தித்து அறிவுத்தெளிவு பெற வெண்டியவர்களாய் இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
வில்லியம்ஸ்
(இறையியல் முதலாம் ஆண்டு - 2005)