இளையோர் வழிகாட்டி --- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.
எனது இனிய இளைய நண்பர்களே உங்களுக்கு நான் விடுக்கும் செய்தி ஒன்று உண்டு அதனை உங்கள் உற்றார் உறவினரோடு, குடும்ப கோத்தரத்தோடு, நண்பர்களோடு மற்றும் உங்களுக்கு செவிசாய்ப்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். அச்செய்தி யாதெனில், நான் உங்கள் மேல் அபார நம்பிக்கை வைத்துள்ளேன், இளைஞர்களாகிய நீங்களே எனது வலிமை, உங்களோடு எனது எதிர்காலக் கனவுகளையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.இது நமது மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இளைஞர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் இறுதி பகுதி.
பல திறமைகளைக் கொண்டு இறைவனின் ஆசீரோடு அகில உலகத் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒரு மாபெரும் மனிதர். இளைஞர்களோடு நெருங்கி பழகுவது என்பது அவரது சிறப்பியல்களில் ஒன்று. இவ்வியல்பே அவருக்கு இளைஞர்களின் திருத்தந்தை என்ற சிறப்பைத் தந்தது. இச் சிறப்புக்கு அவர் உரியவரே. ஏனெனில் அவர் இளையோர்கிளின் வாழ்க்கை இரகசியங்களையும் இதய நாதங்களையுமத் நன்களிந்தவர். அதோடு மட்டுமில்லாது அவர்களின் தந்தையாகவும் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் என்பது மிகையாகாது.
இளைஞர்கள் மீது திருத்தநதை நம்பிக்கை வைத்தற்கு காரணம் இளைஞர்கள் இயேசுவால், அன்பு செய்யப்பட்டதோடு அல்லாமல் அவரிடம் நம்பிக்கைகுரியவர்களாகவும் திகழ்ந்ததால்தான். எனவேதான் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுது வாழ்வில் உலகத்திருச்சபையின் வசந்த காலத்தை எதிர்நோக்கினார். இளைஞர்களை சந்திப்பதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் கொணட்டிருந்தார். அவர்களோடு பேசியும் அவர்கள் சொல்வதைக் கேட்டும், அவர்களின் மகிழ்ச்சி துக்கங்களில் பங்கு கொண்டார். அவர்களிடம் உலகை மனிதனுக்குதந்த வகையில் மாற்றவல்ல வலிமை இருப்பதை கண்டார்.
எனவே தான் இளைஞர்களிடம் “திருச்சபையில் கடவுளின் திட்டம் நிறைவேற்ற நீங்கள் தேவைப்படுகிறீர்கள் திருச்சபையின் எதிர்காலம் கடவுளுடைய ஆசீரோடு உங்களது தன்னார்வ ஒத்துழைப்பை பொறுத்து அமையும் என்று இறைஞர்களை உற்வாகப்படுத்தினார். மேலும் அவர்களிடம், “அன்பு இளைஞர்களே இவ்வுலகில் தலைவிரித்து தாண்டவமாடுகின்ற தீய நாட்டங்களைக் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள் அவைகளினால் நீங்களும் தீய வழியில் போகக்கூடும், இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்களுது மனசாட்சியை மழுங்கடித்து விட்டு உண்மையான மகிழ்ச்சியை போதைப் பொருட்களிலும் வன்முறைகளிலும் பொருளாசைகளிலும் தேடுகின்றனர்.”
“இச்சூழ்நிலையில் உங்களுக்கு உகந்த வழிகாட்டியாக ஒருவர் இருக்க முடியுமென்றால் அது இயேசு மட்டுமே. கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மகத்துவத்தையும் பெருந்தன்மையும் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் கண்டு கொள்ளலாம். உங்களது வினாக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடையளிப்பவர் இயேசு ஒருவரே. அவரே தந்தையிடம் உங்களை அழைத்துக்கொண்டு செல்ல இருக்கிறார். இவ்வாறு அழைக்கம் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து அவர்மேல் நம்பிக்கை கொண்டு வாழும் போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.”
ஜெரோம் பால்ராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக