இளைஞர்களுக்காக ...

மாதுளையை பிளந்தால்தான் முத்துக்கள் உண்டு
மனவலிமையை நீ அளந்தால்தான்
முன்னேற்றம் உண்டு.

முட்டாளின் கையில் மோதிரமாய்
இருப்பதைவிட புத்திசாலி
போட்டுக்கொள்ளும் கால்
செருப்பாய் இருப்பது மேல் அல்லவா?

அடுத்தடுத்து வெட்ட வெட்டத்தான் வாழைமரம் கூட துளிர்க்கிறது
அடுத்தவன் மட்டம் தட்டதட்டத்தான்
வளர வேண்டுமென்ளு மனம் துடிக்கிறது. அப்படி
திட்டும்போதெல்லாம் உன்
அறிவை பட்டை தீட்டிக்கொள்
எதிரிகள் வார்த்தைகளை
கொட்டும்போதெல்லாம் காதில்
வாங்காதது போல காட்டிக்கொள்

எரிகின்ற விறகுகூட எரிந்துக்கொண்டே இருப்பதில்லை
அணைந்தால் அது சாம்பலாகிவிடுகிறது
எதிரிகள் படும் எரிச்சலைக்கண்டு
அஞ்சிவிடாதே!
எதிர்நீச்சல் அடித்தால் கரையேறிவிடலாம் மறந்துவிடாதே!

நம்மால் முடியுமா என்று முனக ஆரம்பித்தால்
மூட்டை பூச்சியை அடிப்பதுகூட கஷ்டம்தான்
நம்மால் முடியும் என்று நம்ப ஆரம்பித்தால்
வீரமற்றவன் கையில் வில்லே வைத்திருந்தாலும் கூட
விவேகம் உள்ளவன் கையில்
வில் இல்லாவிட்டாலும் கூட
சொல்லை வைத்தே வென்று விடுவான்.

ஆ. டோனி (இறையியல் 2ம் ஆண்டு - 2005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக