இளையோர் ஆன்மீகம்

இன்றைய இளைஞனின் ஆன்மீகத்திற்கு ஓர் சவால்

முன்னுரை

எது ஆன்மீகம்? என்ற கேள்விக்கு இன்றைய மனிதர்கள் தரும் பதில்கள்
ஆன்மீகம் என்பது வாழ்வின் இறுதிப் பெருள்சார்ந்த அனுபவ வெளிப்பாடு
ஆன்மீகம் என்பது அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசம்.
ஆன்மீகம் என்பது ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிகாரம்.
ஆன்மீகம் என்பது அடித்தள மக்களோடு கரையும் உப்பு.

மேலும் ஆன்மீகம் மானிடத்தை வாழவைக்கும் உந்து சக்தி. ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு ஆன்மீகம் என்னவெனில் வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று நம்மில் உடலெடுக்கச் செய்யும் வாழ்வு. இந்த வார்த்தைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் அன்னை கன்னிமரியாள். இன்றைய இளைஞர்களின் ஆன்மீக வாழ்விற்கு இயேசுவே ஊற்று. அன்னை கன்னிமரியாள் இயேசு என்னும் ஆன்மீக ஊற்றுக்கு நம்மை அழைத்து செல்பவர்.

கிறிஸ்துவின் ஆன்மீகம்

இதோ உம் திருவுள்ளத்தை நிறைவேற்ற வந்து விட்டேன் (எபி 10,7)
என்று தன்னையே இறைவனுக்கும், மக்களின் விடுதலைக்கும் அர்பணித்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவின் ஆன்மீக வாழ்வில் மூன்று நிலைகளை நாம் பார்க்கலாம்.
1. அறிதல்: தனது திருமுழுக்கின் வாயிலாக தான் யார்? தனது பணி என்ன? என்று அறிந்து கொள்கிறார்
2. தெளிதல்: இசையால் இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளின் மூலம் தெளிவு பெற்றார்.
3. கையளித்தல்: தான் யார் என்று அறிந்த இயேசு இறைவாக்கினர் இசையாஸ் ஏட்டுச்சுருளில் மூலம் தெளிவுபெற்ற இயேசு தன் விருப்பப்படி அல்ல மாறாக வானத தந்தையின் விருப்பப்படி கையளிக்க வேண்டிய சூழ்நிலையிலும் இறைவனின் திருவுள்ளத்திற்கு கீழ்படிந்து தன்னையே சிலுவையில் பலியாக கையளிக்கிறார். இதுவே உண்மையான ஆன்மீகம்.

இயேசுவின் வாழ்வில் நாம் நான்கு வகையான ஆன்மீகத்தைப் பார்க்கலாம்.
1. மரபு ஆன்மீகம்: மறு உலக வாழ்வு மற்றும் தனிமனித வாழ்வை மையமாக கொண்டு வாழ்வது மரபு ஆன்மீகம். மறு உலக வாழ்வின் சொந்தக்கதரரான இயேசு, இவ்வுலக தனிமனித வாழ்வில் எல்லோரும் வியக்கதக்க வகையில் பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்.
2. போராட்ட ஆன்மீகம்: மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் தன்னையே அர்ப்பணிக்கும் செயல் தான் போராட்ட ஆன்மீகம். இதை இயேசுவின் பணிவாழ்வு மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
3. இறைவாக்கினன் ஆன்மீகம்: நீயும் வாழ்ந்திடு பிறரையும் வாழ விடு. இந்த இரண்டு நிலையிலும் தடையாக உள்ளவர்களை சின்னாபின்னமாக்கும் செயல் இறைவாக்கினன் ஆன்மீகம் இவ்வாறாக எல்லோரும் நலம் வாழ வழி வகுத்தவர் தான் இயேசு.
4. வாழ்வியல் ஆன்மீகம்: சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அறநெறி வேண்டியும், உண்மைக்காக தன் வாழ்வை பணயம் செய்து, தன்னுயிரையே தியாகம் செய்வதுதான் வாழ்வியல் ஆன்மீகம். இதை நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே. இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒருவகையைத் தேர்ந்து தெளிந்து, சமுத்துவ சகோதரத்துவ சமுதாயம் உருவாக்க இறையாட்சியைக் கொணர தன்னையே தன்னுயிரயே கையளிக்க முயற்சி செய்யும் போது கிறிஸ்துவின் ஆனிமீகத்தில் நாம் பங்கு பெறலாம். இது இன்றைய இளைஞனுக்கு இயேசு அளிக்கும் சவால்? இளைய சமுதாயமே உனது பதில் என்ன?

கன்னி மரியாளின் ஆன்மீகம்

1. இறைவனின் வார்த்தையைக் கேட்டல்: வானதூதன் வழியாக வந்த இறைவார்த்தைக்கு செவிமடுத்தார்.
2. இறைவர்த்தையை கேள்வி கேட்டல்: தெளிவு பெற தைரியமாக இது எங்களம் நிகழும் என்று வினா எழுப்பியவர் அன்னை மரியாள்.
3. இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளல்: தன்னுடைய வினாவிற்கு விடைபெற்ற அன்னை மரியாள் இளைவார்தையை ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக இவ்வுலக மீட்பரை கருவில் தாங்க மடியில் சுமக்க, அவரது அரியணையில் விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூட்டப்பட தகுதி பெற்றார்.

இன்றைய இளைய சமுதாயமே, மரியாளின் ஆன்மீகம் நம்முடைய ஆன்மீக வாழ்விற்கு ஓர் சவால். நமது வாழ்வில் இறைவார்த்தைக்கு செவிமடுக்கிறோமா? இறைவார்த்தைய கேள்வி கேட்கிறோமா? இறைவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோமா?

அன்னை மரியாள் விடுக்கும் சவாலுக்கு உனது பதில் என்ன?

முடிவுரை

ஆன்மீகமா? வாழ்வின் இறுதிகட்டத்தில் தேட வேண்டிய ஒன்று என்று உலக இன்பங்களில் திளைசகக
முற்படும் போது நாம் பாவம் என்ற பாதாளத்தில் தள்ளப்படுகிறோம். ஆன்மீகம் மானிடத்தை வாழ வைக்கும் உந்து சக்தி. ஆகவே வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று மாறுவோம். அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசமாக மாறுவோம். ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிக்காரமாக மாறுவோம். .ப்படிப்பட் ஆன்மீகம் நம்மில் உருவெடுத்தால் இறையாட்சி நம்மில் மலரும். அநீத அழியும். இயேசு நம் உள்ளங்களில் ஆட்சி செய்வார். அப்போது நமது ஆன்மீகம் இந்த மானுடத்தை வாழவைக்கும்.

2. இயேசுவின் வழியில் இளையோர் வழிகாட்டி

தனித்து வாழும் மனிதன் தன்னிறைவு அடைவதில்லை.
கிறிஸ்துவ மதிப்பீடுகளில், மனித உறவு நிலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு பல நிலைகளில் மாறபடுகின்றது. குழுக்களோடும் தனி மனிதர்களோடும் உறவு கொள்ளுதல் என்பது, கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஓர் கலை. உறவுநிலைகள் இப்படித்தாள் இருக்க வேண்டும் என அன்றே வாழ்ந்து காட்டியவர் இயேசு பிறருடன் நல் உறவை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு இறைமகன் இயேசு பின பற்றிய 10 வழிகாட்டுதல்கள்.
• இயேசு எப்போதும் உண்மையுடன் இருந்தார்.
• எல்லோருடனும் ஒத்திருந்தார்.
• எல்லோருக்கும் செவிமடுத்தார்.
• நம்பிக்கை இழந்தோருக்கு உறுதியூட்டினார்.
• பிறருடைய ஆலோசனையை வரவேற்றவர்.
• ஒவ்வொருவரையும் அன்பு செய்தார்.
• தேவையானதை கேட்க தறங்காதவர்.
• அன்பிற்காய் தன்னையே தந்தவர்.
• தற்பெருமைக்காக அல்ல பிறர் நலனுக்காய் வாழ்ந்தார்.
இயேசு இவ்வுலகில் வாழ்நத போது இறைவனோடும் மனிதனோடும் நல்லுறவுக் கொண்டிருக்க இந்த பத்து வழிகளையும் கையாண்டார். எல்லோருடனும் நாமும் நல்லுறவு வளர்த்துக் கொள்ள இயேசுவின் இந்த வழிகாட்டுதலை நம்வாழ்வில் செயல் படுத்துவோம்.

ஜோமிக்ஸ் - இறையியல் மூன்றாம் ஆண்டு -2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக