இளைஞர்களின் உளவியல்
ஏன் முன்னுரை?
இளைஞர்கள் ரொம்ப மோசம், பெரிசுகளை மதிப்பதே கிடையாது. ஏண்டா அம்பி, பொம்நாட்டிகளை கிண்டல் பணிறேலே- நீயெல்லாம் அக்கா? தங்கையொட பொறக்கலையா? மாடு மாதிரி வளர்திருகியென்னோ, னோக்கு அறிவில்லையா? என்று இறைஞர்களை பற்றி வசைபாடும் பழக்கம், இந்த காலத்து பிள்ளையாண்டாவை பார்த்து பாடிய பாடல் அல்ல. மாறாக, சாக்ரடீஸ் காலத்திலிருந்தே சொல்லப்படுகின்ற பல்லவிகள். இவையெல்லாம் உண்மையா? உண்மை எனில் என்னிடம் பத்து இளைஞர்களை தாருங்கள், நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறென் என்று சொன்ன விவேகானந்தரின் கூற்று பொய்யா? தன்னிடம் இருந்த அறிவை விட அன்பைக் கொண்டு உலகத்தை வென்ற 33-வயது வாலிபன் (இயேசு) சாதித்தது சாதனை இல்லையா? பிரான்ஸ் தேசத்தின் மகுடம் சாக்கடையில் கிடந்தது, அதை என் வாளால் வெற்றிக் கொண்டேன் என்று சென்ன இளைஞன் நெப்போலியன் வீரன் இல்லையா? அல்லது வெற்றிதான் பெறவில்லையா? இளமைப் பருவம் புரியாத புதிர் பருவம் என்று புரிந்து கொண்டால் போதும், “ஏன் இந்த முன்னுரை? என்ற உங்களில் பலர் முணுமுணுக்கத் தோன்றும்.
இளைஞர்கள் யார்?
உனக்கு 18 எனக்கு 20, கிச்சா வயசு-16, பிப்ரவரி-14, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், காதல், கடிதம், முகத்தில் அடிப்பட்ட விதையின் முதல் வார வளர்ச்சி, படியில் சாகசம், துவைக்க கூடாத ஜூன்ஸ், தன் தோழியிடம் மற்றவர் பேசினால் புகை வரும் காதுக்கள்… இரவு நேர பட்டாம் பூச்சி இதயத்தில். இன்னும் பல, பல, சேர்ந்த கூட்டு வடிவம் தான் நாம் கேட்கும் யார் இந்த இளைஞர்கள்? யார் வாலிபர்கள்? யார் காளையர்கள்?
என்ன எதிர்பார்க்கிறார்கள்?
“உன்னை பாடச் சொன்னதுக்கு, ஒரு கழுதையை பாடச் சொல்லியிரக்கலாம்”- என்று தலைமை ஆசிரியர் திட்டினாலும், தாய் தந்த உற்சாகத்தால் வானுயர வளர்ந்தவர்தான் இசைஞானி இளையராஜா. கல்லூரியில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்த போதும் பெற்றொரின் அன்பான அணுகுமுறையால் உருவெடுத்தவர் தான் கவியரசு வைரமுத்து. ‘மண்டு, மக்கு’ என்று மார்க் அட்டை வந்த போதும் நம்பிக்கையோடு படிக்கவைத்தனர் பெற்றோர்கள். அதன் விளைவுதான் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தோன்றினார். வணிகவியல் பாடத்தில் தேர்ச்சியரடயவில்லை, படிக்க அனுப்புவது வீண் என்று அவருடைய பெற்றோர்கள் நினைத்திருந்தால் இன்று The Father of Economics என்று அழைக்கப்படும் Keynes ஏது?
பெற்றோர்கள் மேற்பட்ட இந்த அன்பான அணுகுமுறை அவர்களுக்கு மட்டுமல்ல, நம் இளைஞர்களுக்கம் இன்று மிக, மிக அவசியம். இப்படிப்பட்ட அன்பை தான் பெற்றோர்களிடமும், சக நண்பர்களிடமும் அதிகமாய் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று சொல்லி அவனை சிறிது தூரத்திலேயே வைத்துப் பார்த்து மகிழ்கின்றோம். பத்து வயதில் சாதித்த போது கிடைத்த பாராட்டுகள் காளைப் பருவத்தில் சாதிக்கும் போது கிடைப்பதில்லை. இப்படி திறமைக்கு ஏமாற்றம் வரும் போது அதைக் கொடுக்கும் மற்றவர்களிடம் போகிறான். அதுதான் பின்பு காதல் கலாட்டா கல்யாணம் என்று முடிகிறது. அல்லது காதல்… கடற்கரை… கயிறு… கடைசி மூச்சு என்று தொடர்கிறது.
எப்படியும் வாழலாமா?
வாழலாம் என்று வாழ்பவர்கள் உலகத்தில் இருத்தல் என்ற நிலையில் இருந்து ‘இறந்து’ விடுகிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டால், ஏதோ ‘இருக்கிறேன்’ என்பார்கள் உலகத்தில் வாழ்கல் என்ற நிலையிலிருந்து வளர்ந்து காண்ப்படுகிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையோடு. ஆன்ம பலத்தோடும் இருப்பார்கள்.
எது கைகாட்டி?
“இருத்தல்” நிலையில் உள்ளவர்களுக்கு இன்று கைகாட்டியாக இருப்பது ‘திரைப்படம்’. இவர்கள் வெறும் கண்ணுக்கு மட்டும் தெரியும் காணல் நீpரை நம்பி., கையில் இருக்கும் சோடாவை உடைத்துவிடுவார்கள். உன்னையே நீ அறிந்து விடு – சாக்ரடீஸ், உன்னையே நீ மறந்து விடு (தாகூர்), உன்னையே நீ இழந்து விடு (இயேசு), போன்ற வார்த்தைகளையெல்லாம் கிடப்பல் வைத்து விட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என்று துதி பாடுவார்கள். இப்பழப்பட்ட இளைஞர்களிடம் உயர்ச்சி மேலோங்கி நிற்குமே தவிர மனித உயர்வு இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். எப்படி இறந்து போனவனின் செருப்புக்காக காத்திருப்பவன் வெறும் காலுடன் நடக்க வேண்டி வருமோ, அதே போல் தான் இருத்தல் நிலையில் உள்ளவர்களின் வாழ்வும் இருக்கும்.
‘வாழ்தல்’ நிலையில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையே வழிகாட்டி. தோல்வி என்பது முடிவு அல்ல மாறாக வெற்றியின் ஆரம்பம். இவர்கள் முயற்சியை முதுகில் கட்டிக்கொண்ட முயல்பவர்கள். வீட்டில் வளர்க்கும் தென்னை மரம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போனால் தான் தோல்வியே தவிர, இடி இடித்து கருகினால் தோல்வி அல்ல என்று புரிந்து வைத்திருப்பவர்கள் தோல்வி நிலையென நினைத்தால் கஜினி முகமது, தாமஸ் ஆல்வா எடிசன், போன்றவர்கள் சாதித்திருக்க முடியுமா? தென்னைமரத்திலிருந்து ஒரு கீற்று விழுந்தால் அது தளர்ச்சியல்ல மாறாக வளர்ச்சியே ஆகும். எனவே தன்னம்பிக்கையெ இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும். அவ்வாறு வாழும் போது காகித கப்பல் கூட இவர்களை கரைசேர்க்கம் என்று வாழ்த்துவோம்.
வரப்புயர நீர் உயருமா?
ஒரு முறை புனித ஜான் போஸ்கோவின் தாய் தன் மகனிடம், உன்னைச் சுற்றி எப்போதுமே கெட்ட நண்பர்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள், எனவே நீ அவர்களோடு சேரக்கூடாது என்றார்கள். அதற்கு போஸ்கோ, “அம்மா நான் அவர்களோடு இருக்கும் போது அவர்கள் எந்த தவறும் செய்வதில்லை” என்றார். இங்கு நான் வரப்புயர நீர் உயர்ந்ததைக் காண்கிறேன். மாற்றம் என்பது மானிட தத்தவம். மாற்றத்தை புதுமையை விரும்பாத யாரையும், எதையும் கணக்கில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.
“ஒரு இலையுதிர் காலத்திற்கு பின்பு தன்னை மாற்றிக் கொள்ளாத புதுப்பித்துக்கொள்ளத் தெரியாத மரத்தை, வானம் தன் எண்ணகையில் வைப்பது கிடையாது. அற்று நீராலும் மழை நீராலும், ஊற்று நீராலும் தன்னை புதுப்பிக்கத்தெரியாத நதியை மனிதன் பிளாட் போட்டு விற்று விடுகிறான். இதில் இளைஞனான நீயும் நானும் என்ன விதிவலக்கா? எனவே இளைஞர்களே உங்கள் மனத்தை நன்கு ஆராய்ந்து, அறிந்து மாற்றுங்கள், அப்போது தான் பூவோடு சேர்நத நாரும் மணக்கும் என்பது போல், உன்னோடு சேர்ந்த இளைஞர்கள் வாழ்வ மணம் வீசும். ஒரு முறை தோன்றினாலும் மின்னலாகத் தோன்றாமல் இடியாகத் தோன்றுவோம். இமயத்தைத் தொடுவோம். இறுதிவரை இளமையோடு வாழ்வோம். தாழ்வு மனப்பான்மையை களைந்து விட்டு தன்னம்பிக்கையோடு வாழ்வோம்.
ஆரோக்கிய தாஸ்
(இறையியல் முதலாம் ஆண்டு - 2005)