நித்திய இளைப்பாற்றியை...
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா
விண்ணில் தேவன் இன்பம் தருவார்
அன்று உன்னை அழைத்த தேவன்
இன்று உன்னை அழைக்கின்றார்
இன்று உறவு நாளை பிரிவு
மனிதன் வாழும் எட்டிலே
என்றும் அழியா உறவு உண்டு
இறைவன் வாழும் வீட்டிலே
-மண்ணில் வாழ்ந்து
படைப்பின் இறைவன் படைப்பைக் காண
கடைக்கண் ஒன்றைக் காட்டினான்
பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு
படைத்தவனில் மூழ்கினான்
-மண்ணில் வாழ்ந்து
நித்திய இளைப்பாற்றியை
நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் - ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
இறைவா சீயோனில் உமைப் பாடுதல் - ஏ...ற்றதாம்
யெருசலேமில் உமக்கு பொருத்தனை செலுத்தப்படும் - நீர்
எம் மன்றாட்டைக் கேட்டருளும் - மாந்தர் அனைவரும்
உம்மிடம் வருவார்.
நித்திய சாந்தி
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா
நீர் இவர் பரிசாய் இருந்தருளும்
1. உன் மகன் இவர்க்கென உயிர் துறந்தார்
தம் உதிரமும் உடலும் பலி ஈந்தார் - 2
இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர்
உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற
-நித்திய சாந்தி
2. செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே
யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற - 2
எம் பலிப்பொருள் இதை ஏற்றருளும்
எளியரெம் செபங்கள் கேட்டருளும்
-நித்திய சாந்தி
கருணைத் தெய்வமே
கருணைத் தெய்வமே கண்பரும் - எங்கள்
பாவங்களை நீர் பொறுதருளும்
உடலும் அறிவும் மனமும் - ஒன்று
சேர்ந்து உம்மை எதிர்த்ததையா
தேவ கட்டளை வழியை - மனம்
பன்முறை அறிந்தே வெறுத்ததையா
பாவச் சேற்றை நாளும் - எம்
வாழ்வே கொண்டு நிறைந்ததையா
-கருணைத் தெய்வமே
பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை
உண்மை விளக்கு எரிந்தும் - அதன்
ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பை அறிந்தும் - அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை
-கருணைத் தெய்வமே
அன்பு செய்யும் இறைவா - உனை
மறந்து சென்றதை எண்ணுகின்றோம்
நீதி நிறையும் தலைவா- எம்
பாவம் நினைந்தே கலங்குகின்ரோம்
தூய வாழ்வின் நிறைவே - உன்
மன்னிப்புத் தருவாய் உயிர் பெறுவோம்
-கருணைத் தெய்வமே
இறந்தோர் வாழ்வு
இறைவா உம்மிடம் வந்தடைக - 2
1. நின் ஒளி அவர் மேல் ஒளிர்ந்திடுக
புவி நிதம் அவர் நினைவில் நிலைத்திடுக - 2
தீயவை யாவும் விலகிடுக - 2 அவர்
நிதம் உம் மகிழ்வில் நிலைத்திடுக
2. விண்ணக சீயோன் நகரினிலே
நிதம் பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க - 2
புனித வான தூதருடன் - 2
உம்மை புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
3. உலகில் அவர்கள் இறந்தாலும்-இறை
உம்மில் என்றும் வாழ வேண்டும்
சாவு கதவினை அடைந்தாலும்-2 உன்
சாந்நியின் வாயில் திறக்க வேண்டும்.
பாடல் - 2
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
இறைவா சீயோனில் உம்மை பாடுதல் ஏற்றதாம்
எருசலேமில் உமக்கு புகழ்ச்சி பொறுத்தனை செலுத்தப்படும்
நீர் எம் மன்றாட்டை கேட்டருளும்
மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவர்
புகை மூட்டமும்
புகை மூட்டமும் பனிக்கூட்டமும்
சில நாழிகையில் பறந்தோடிடும்
நாம் வாழ்கையும் சில காலமே ஓ நெஞ்சமே
1.
மலை மீது பிறக்கின்ற நதிகள் கடலோ:டு உறவாடத் துடிக்கும்
கடல்மீது பறக்கின்ற அலைகள்
கரையோடு உறவாட முடியும்
கடலானது கரையானதும்-2 என் இயேசுவே
2.
ஓரு நூறு ஆண்டுகள் இன்று
ஓர் ஆண்டில் இறந்தவர் உண்டு
எதிர் காலம் நம் கையில் இல்லை
இறைவனே நிகழ்கால எல்லை
இறையோடு நாம் இணைந்தோடினால் ஓ…. இன்பமே
உத்தரிக்கும் தலத்தினிலே செய்த
கொடுமையான பாபங்களால்
நித்தமும் வேதனையால் துடித்து
சுத்தமும் ஆகும்வரை
அத்தனைப் பார்க்காது கொடுமை
அடைந்திடும் ஆன்மாக்கள்
நித்திய கதிசேர நாமும்
செபிப்போமே ஒறுத்தல்கள்
சுத்தமாய்ச் செய்துமே தினமும்
ஓயாது வேண்டுவோம்!
திருப்பலி செய்துமே நன்கு
வேண்டிடுவோம் மறவாது
வறுமையால் வாடிடும் ஏழைக்கு
வழங்குவோம் தானங்கள்
அருமையுடன் ஆன்மாக்களுக்குக் கொடுத்து
ஆண்டவரிடம் மன்றாடுவோம்
கருமம் பாவம் தோசம் நீங்கி மோட்ச
கதியிலே சேர துணைநிற்போம்!
செபமும் செபமாலை செபித்து
சிறப்பாக வேண்டுவோம்
உபரியாய் நாம் செய்யும் நல்ல
உதவிகளை மறக்கமாட்டார்.
எப்பவும் நினைத்தவர் மறுபடி
ஏழைகளுக்கு உதவிடுவார்.
இப்பொதும் எப்போதும் ஆன்மாக்களை
நினைத்துமே செபித்திடுவோம்!
உத்தரிக்கும் ஆன்மாக்கள்
உரியதண்டனை முடிந்துமே
ஆத்மாவின் முகம்பார்த்து
அக்களித்து உதவிடுவோம்.
உத்தமமாய் நாம்வாழ
உன்னத வழிகாட்டி
நித்தமும் வேண்டுவோர்
நினைவில் கொள்ளுவீர்!
மரித்த விசுவாசிக்களின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய இந்த பாடல் பாடி ஆண்டவரிடம் ஜெபிப்போம்....... ஆமென் 🙏🙏🙏🙏🙏
பதிலளிநீக்கு