சிற்பிகள்

முடியும் என்று முனைந்தால்
முடியாது என்பது முடங்கிவிடும்!
பகற்கனவு பசிக்கு உதவாது
இலட்சியமே நம்மை இமயத்திற்கு அழைத்து செல்லும்!
தன்னம்பிக்கையைத் தாரகமந்திரமாக்கி
வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக மாறுவோம்.

இம்மானுவேல்
(இறையியல் 1ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் போதைப்பொருளும்


இன்றைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் வன்முறை, பசி, பஞ்சம், வறுமை, சாதியக் கொடுமைகள், லஞ்சம், வேலையின்மை மனித வாழ்வோடு ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கிறது. இக்கொடுமைகளுக்குள் அகப்பட்டுப் போயிருக்கின்ற மனிதன் தனது சுய மகிழ்ச்சிக்காக நாடுவது மது, மாது.,

மனிதனின் ஈடுபாடு எதில்?

நன்கு படிக்க வேணுடும், வேலைக்கு போக வேண்டும் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் உண்டு. வாழ்க்ககையில் எடுத்து வைக்கும் முதல் அடி தோல்வியாக அமைந்தல் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரும், ஆனால் தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதை மறந்து போய்விடுகிறொம் இதனால் நாடுவது போதை. தக்க நேரத்தில் நிம்மதி சிடைப்பதால் இதுவே நிரந்தரமாக வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் நாடுவது போதை.

போதையின் பாதிப்பு

இந்த நிலை நீடித்தால் மனிதனின் வாழ்க்கை இளமையோடு முடிந்து விடும் முதுமை என்பதே இல்லாமல் போய்விடும் இதனால் நமது உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கிறது. சுய மரியாதை சுய மதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றான். இது அவனை மட்டுமல்ல அவனைச் சார்ந்த அவன் குடும்பத்தையும் பாதிக்கின்றது. இது பணக்காரக் குழந்தைகளிடம் மட்டுமல்ல ஏழைக் குழந்தைகளும் இப்போது 79% பேர் அடிமையாகியுள்ளனர்.

தற்போது இந்திய நிலை
  • எட்டு இலட்சம் பேர் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கதிற்கு அடிமையாகியுள்ளனர்.
  • 1987-ல் பம்பாயில் 4000 கிலோ ஹசிஸ் கைப்பற்றப்பட்டது.
  • தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கஞ்சா வளர்க்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
  • 65% கல்லூரி மாணவ, மாணவியர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
  • சென்னையில் மட்டும் 1,00,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
  • கிராமத்தை விட நகரங்களில் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
எப்படி விடுதலை?

நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. இதை பாதுகாத்து பல வித நல்லசெயல்களைச் செய்துஈ கடவுளுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கம் பெருமை சேர்ப்பது நமது கடமை. இவ்வாழ்க்கையை தற்கொலை வழியாக முடித்துக்கொள்வதற்கோ, போதைப் பொருட்கள் மூலம் அழித்துக்கொள்வதற்கோ நமக்க உரிமையில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகளிலும், தனிமையிலும், பாவப் பிடியிலும் சிக்குண்டு தவிக்கும் மனிதத்தை மீட்டு புது வாழ்வை முழுமையாக அளிக்கவே இளைவன் மனிதனாக உருவெடுத்தார். இந்த இயேசு நம்மைப் பார்த்து, “நானே உலகின் ஒளி என்னைப் பின்செல்பசன் இருளின் ஒளியைக் கொண்டிருப்பான்.”

வாழ்க்கையில், விழுவது இயற்கை. ஆனால் எழுவது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்ல. முதல் முறை விழுந்த இயேசு எழ முடியாது என்றிருந்தல் ஏது உயிர்ப்பு, மீட்பு. விழுந்த நாம் எழ வேண்டும் தோல்வியைக் கண்டு துவளாமல், முடியும் என்ற எண்ணத்தோடு வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும்.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு,
போதையிலிருந்து போட்டியான வாழ்வுக்கு,
துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கு
தூக்கத்திலிருந்து துடிப்புக்கு,
வீழ்ச்சியிலிருந்து வழுச்சிக்கு எழுப்ப வேண்டும்.
இதை நாம் மறந்தோமானால் இளமையோடு இளைஞர்கள் வாழ்வு முடிந்து போவதற்கு நாமும் துணை போகிறோம். இதை விட நாம் என்ன செய்யப் போகிறோம்?
அடைக்கலராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் நட்பு

அன்பு என்ற சொல் நம்மை எப்படி அரவணைக்கின்றதோ அதே போல நட்பு என்று சொல்லும் மனதில் தெம்ப உண்டாக்குகிறது, மனத்திற்குள் கூடுதலாக வலு சேர்க்கிறது. நம்மில் யாரும் தனிமையில் வாழ விரும்புகிறது இல்லை. உடலளவிலும் மனதளவிலும் நமக்கு தோழமை தேவைப்படுகிறது. நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், மகிழ்ச்சிகள், ஆகியவற்றை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம்முடைய ஆபத்தான சூழ்நிலையில் பிறர் ஆதரவுக்காக ஏங்குகிறோம். மகிழ்ச்சியான வாழ்வுக்கு நட்பு அத்தியவசியமான ஒன்று.

நட்பே மகிழ்ச்சி

நட்பு நம் அனைவருக்கம் வேண்டிய மிக அவசியமான ஒன்று. வியந்து உயர்ந்த நட்பு தியாகத்தினாலும் பிநர்நல அக்கறையினாலும் ஏற்படுகிறது. நல்ல நட்பு எந்த வித பிரதிபலனையம் எதிர்பார்ப்பது இல்லை. பழம்பெரும் தத்துவ ஞானி செனக்கா, வாழ்க்கையில் கிடைக்க கூடிய சுகங்களிலேயே, உறுதியான, மென்னையான நட்பைப்போல் சிறந்தது ஏதுமில்லை. அது நமது கவலைகளை இனிமையாக்குகின்றது. துயரங்களை பொக்கிவிடுகின்றது. நல்ல நட்பு மரணத்தைக் கண்டும் பயப்படாத நிலையினை கொடுக்கும் என்கிறார. உண்மையான நண்பர்களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

நட்பில் பல வகை

எல்லோருக்கும் நண்பர்களாக நம்மோடு இருப்பது நமக்கு பலத்தையும் உற்சாகத்தையும் புது தெம்பையும் அளிக்கிறதுஇ. நல்ல நண்பர்களையுடையவர்கள்ஏழைகளுமல்ல கோழைகளுமல்ல தைரியம் உள்வர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு கலங்காதவர்கள் காரணம் நண்பர்கள் உடன் இருப்பதால். “வெற்றியின் இரகசியம் என்னவென்றால், பிறர் கண்ணோடத்தைப் புரிந்து கொள்வது உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்ல அடுத்தவர் நிலையிலிருந்தும் பார்ப்பது “என்கிறார் டோல் கானர்கி. நல்ல நண்பர்களைப் பெற நீங்கள் முதலில் நீங்கள் நல்ல நண்பர்களாக இருங்கள்.

நண்ர்களின் மனது புனிதமானது

“நம்பிக்கை இல்லாம் நட்பு இல்லை”. என்கிறார் கிரேக்க த்துவ ஞானி எபிக்யுரஸ்ஃ எப்படிப் நண்பர்கள் உங்கறுளுக்கு அமைய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட நண்பர்கள் நீங்கள் இருங்கள். நண்பர்களை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள். வேடிக்கையாகக் கூட நண்பர்களை புண்படுத்தாதீர்கள். கொடுப்பதும் பெறுவதும் நட்பில் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெற எதையாவது இழந்து தான் ஆக வேண்டும். அது அன்பாகவோ சேவையாகவோ இருக்கலாம்.

நல்ல நண்பர்களைப் பெற சில வழிமுறைகள்
  • மற்றவர்களிடம் நீங்கள் உண்மையான அக்கறை காட்டுங்கள்.
  • பிறரின் நட்பை உற்சாகத்துடன் வரவேற்கவும்.
  • பிறரிடம் புன்முறுவலுடன் பழகுங்கள்
  • பெயர் சொல்லி அழையுங்கள்
  • நட்புணர்வுடன் உதவுங்கள்
  • எதார்த்தமாய் வழகுங்கள்
  • உணர்ச்கிக்கு மதிப்பு கொடுங்கள்
  • உதவி செய்ய தயாராக இருங்கள்
  • விசுவாசமாக இருங்கள்
  • இரகசியத்தைக் காப்பாற்றுங்கள்
  • குற்றங்களொடு மதிப்பிடாதீர்கள், திறந்த மனதுடன் திருத்துங்கள்
  • நம்பங்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
  • நண்பர்கள் உங்களுடன் தொடர்ந்து நட்பு வைத்திருக்க வழிமுறைகள்
  • நண்பர்களின் இரகசியங்களை மூன்றாவது நபரிடம், அவர்கள் இல்லாத போது புறம் கூற வேண்டாம்.
  • புனைப் பெயர்களையோ கேலி பெயர்களையோ சொல்லி அழைக்க வேண்டாம்.
  • உடல் ஊணத்தை குறிப்பிட்டு பேசாதீர்கள்.
  • நண்பர்களின் பணிபாடு பழக்க வழக்கங்கள், இனம், மொழி, சாதி, மதம் குறித்து கேலி செய்யாதீர்கள்.
  • நீங்கள் உங்கள் நண்பர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரச்செய்யுங்கள்.
  • ஆம் நல்ல நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமே இல்லை.

ஜேம்ஸ்
(இறையியல் 3ம் ஆண்டு - 2005)

இளைஞர்களின் நேர்மறை சிந்தனை

இன்றைய இளைஞர்கள் கலாச்சார மாற்றத்தினால், வேளையில்லா திண்டாட்டத்தினால், திரைப்படம் ஆதிக்கத்தினால் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் தன் திறமைகளை புதைகுழியில் போட்டு புதைத்துவிட்டு சின்னாபின்னமாய் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் சுய மதிப்பு என்ன என்பதை மறந்து நடை பிணமாய் இருக்கிறார்கள். அவர்கள் உயிருள்ள இளைஞர்களாக வாழ தான் ஙார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு இயையோர் ஒருங்கினைப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஒரு சில நேர்மறையான சிந்தனைகள்.

1. உன் என்னமே நீ எண்ணங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. நம்முடைய எண்ணங்கள் தான் வாழ்க்கை. எண்ணத்தால் எல்லாவற்றிக்கம் ஆணிவேர். தோல்வி, வெற்றி, மகிழ்ச்சி, சோகம், இவை எண்ணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அவரவர் எண்ணமே வாழ்க்கை என்கிறார் மார்க்ஸ் ஆர்லியஸ். ‘எண்ணங்களைப் பற்றி கவனமாய் இருங்கள் ஏனெனில் அவைதான் செயல்களாக, பழக்கங்களாக மாறுகின்றன’ என்கிறார் எம்.எஸ்.உதயமூர்த்தி. ஆகவே இளைஞனே உன் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் வாழ்க்கயையே மாற்றி அமைக்க முடியும். உன்னுள் ஒரு குரல் ஒலிப்பதைக் கேள் நீ எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்லும். நீ ஒரு அழகான வீரம் மிக்க இளைஞன் சாதிக்கப் பிறந்தவன் திறமையானவன் என்பதைச் சொல்லும். அதுதான் மனசாட்சி அதுவே உன் எண்ணம். நீ எதைப்பற்றி எண்ணுகிறோயே, சிந்திக்கிறாயோ அதுவாகவே நீ மாறிவிடுகிறாய். எண்ணங்களை சற்று கவனித்துப்பார். நீ யார் என்று அது சொல்லும்.

2. உன்னை நீ அறிந்து கொள் முதலில் உன்னை நீ அறிந்து கொள். உன்னிடமுள்ள ஆற்றலைக் கண்டுபிடி அதை விடாமுயற்சியால் வளர்ந்துக்கொள். உனக்க முதலில் எது வேண்டும் என்பதை உன் மனதிடம் கேட்டு தெரிந்து கொள். அடிக்கடி அதை மனதில் கொண்டு செயல்படு உன்னுடைய ஆற்றலை பெருமையாக நினைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் “பத்து இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டகிறேன்” என்றார் விவேகானந்தர். எது அவரை இப்படி சொல்லத் தூண்டியது நீ எதையும் செய்யத் தயங்கமாட்டாய், எதற்கும் துணி;ந்தவன் நீ என்பதனால் தான். நீ நிமைத்தால் செய் முடியாதது ஒன்றுமில்லை. உன்னை நீ முழுமையாகத் தொரிந்துககொள் பின் உனக்கு தெரியாதது எதுவுமே இருக்காது.

3. மனவுறுதி அல்லது நம்பிக்கை “நீ சிறந்த இளைஞன் மட்டுமல்ல இரத்தவோட்டமுள்ள இளைஞன், உனக்கென்று சில ஆற்றல்களும் தனித்தன்மையும் உண்டு. உன்னுடைய ஆற்றலில் திறமையில் நீ நம்பிக்கை வைக்கும்போது உனக்குள் மறைந்திருக்கும் சிறப்பாற்றல்கள் கூட உனக்குத் தெரியும்.” என்கிறார் மேத்தா. நம்பிக்கையினால் உன் வாழ்வில் வெற்றியடையலாம். தோல்விகள் பல வந்தாலும் எதிர்த்துப் போராடலாம். உன் வாழ்க்கையை வழிநடத்தும் வழிகாட்டி நீயே. ஆம் உன் எண்ணங்களைப் புரிந்து கொண்டு வாழும் போது. இந்த இரகசநியத்தை இளையோர் ஒருங்கினைபாளார்கள் அறிந்து கொண்டால், இளைஞர்களின் இருண்ட காலத்தை ஒளிமயமாக்கலாம்.

சகோ.ஜான் போஸ்கோ
(மெய்யியல் 1ம் ஆண்டு - 2005)

இலட்சியம் செய்யுங்கள்

வாழ்வின் அனைத்து அனுபவங்களையும்
வளமான வகையிலே வார்க்கத் தெரிந்த நாம்
வரலாறு படைக்கும் கதாநாயகர்களே!

சீரழிந்திருக்கும் கூறுகள் மீது சினங்கொண்டெழுவோம்
எருசலேம் கோவிலில் நுழைந்த இயேசுவைப் போல
ஆதிக்கச் சக்திகளைப் பொசுக்கும்
அக்கினிச் சுவாலைகளாக மாறுவோம்!
வாருங்கள் புது உலகம் படைக்க புறப்படுவோம்
இலட்சியத்தை இதயத்தில் ஏந்தி!

ப. ராஜேந்திர சேகர்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் உறவுகளும்

உறவின் முக்கியத்துவம்
வாழ்வென்பது உறவு கொண்டு வாழ்வது. நாம் கொண்டிருக்கம் உறவின் தன்மையில்தான் வாழ்வின் நிறைவும் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. மனிதனின் துன்பமும் வெற்றியம் தோல்வியும் உறவின் தன்மையைப் பொறுத்தும் அதன் ஆழத்தைப் பொறுத்துமே அமைகிறது. மனித மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்ற உறவின் தன்மை மந்திரத்தால் வருவதல்ல மாறாக தெரிந்து புரிந்து பழகிக்கொள்வது. இரு ஒரு கல்வி.
இளைஞர்களும் உறவுகளும்
இளைஞர்களும் உறவுகளும் என்றவுடனே இயல்பாக நம் மனதில் தோன்றுவதெல்லாம் தவறான எண்ண ஓட்டம்தான். இந்த நிலைக்க இளைஞர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட்டு நாம் விலகிவிட முடியாது. ஏனென்றால் பல காரணிகள் அவர்களை இந்த நிலைக்க ஆளாக்கியுள்ளது என்பதில் சிறிதும் தவறில்லை.
இளைஞர்களை பாதிக்கும் காரணிகள்
1. குடும்பச்சூழல்2. நண்பர்கள் சூழல் 3. ஊடகதாக்கம் 4. சமூக அமைப்பு
1. குடும்பச்சூழல்
இளைஞர்களை பாதிக்கம் காரணிகளில் ஒன்றாக கருதப்படுவது குடும்பச் சூழல். இந்த குடும்பச் சூழலனது ஒவ்வொரு இளைஞனுக்கும் மாறுபட்டதாக அமைகிறது. பெரும்பாலும் எதிர்மறையான புரிதல் கொண்டதாகவே இருக்கிறது. பல குடும்பங்கள் இளைஞனில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அந்நத்த பருவத்திற்கு முன்புவரை எதைக் கூறினாலும் சரி என்று ஏற்றுக்ககொண்டு திகழ்ந்தவன் திடீரென ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கனைகளை தொடுக்கும்போத பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் இந்த இளைஞனின் வளர்ச்சியைப் பற்றி கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் தம் கடமையை தட்டிக் கழ்த்துவிடுகிறார்க்ள. அவனை கண்டுக்ககொள்ளாமல் விடுவதால் அவனை ஏற்றுக்கொள்ளும் உறவுமுறை எங்கே இருக்கிறது என்ற தேடலில் இறங்குகின்றான். இத்தேடலில் அவனுக்கு முதலில் ஆதரவு கொடுப்பது நண்பர்கள் சூழல். இச் சூழல் அவனது சுதந்தரத்தை மதிப்பதாக தோற்றமளிக்கம் கானல் நீராக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது.
2. நண்பர்கள் சூழல்
இளைஞனின் உறவுமுறைகளை பாதிக்கம் காரணிகளில் பெரிதும் பங்கு வகிப்பது நண்பர்கள் சூழல் எனலாம். ஏனென்றால் இந்த இளைஞனின் அனைத்துவிதமான தேடலுக்கு (குறிப்பாக தவறான தேடலுக்கு) துணை செல்லும் சாதனமாக அமைந்துவிடுகிறது. இதனால் குடும்ப உறவிலிருந்து விலகி, தன்னிச்சையாக செயல்படுபவனாக மாற்றிவிடுகின்றான். இந்தச் சூழலில் அவனுக்க குடும்ப உறுப்பினர்களின் வழியாக கூறப்படும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இந்த நிலை தம்மை விட்டுவிட்டு மாட்டின் வாலை பிடிக்கும்கதைக்கு ஒப்பாக அமைந்துவிடுகிறது. நண்பர்கள் சூழலில் பெரிதும் அவனை பாதிப்பதும் ஊடக தாக்கம்.
ஊடக தாக்கம்
இளைஞனை அவனது இலக்கினை மறக்கச் செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றுதான் ஊடகம். தான் எந்த நிலையில் இருக்கிறோம்? எவ்வாறு செயல்படவேண்டும்? என்று சிந்திக்க எத்தணிக்கும் சமயத்தில் நீ இப்படித்தான் வாழ வேண்டும், செய்ய வேண்டும் என்ற தீர்வுகளை ஊடகங்கள் வழங்குகின்றன. இந்த ஊடகத்தின் தாக்கம் இளைஞனுக்கு மகிழ்ச்சியைத்தருவதால், அதன் தவறான வழிக்காட்டுதலை புரிந்து கொள்ளாமல் கண் இருந்தும் குருடனாக அதற்கு அடிமையாகி விடுகிறான். இதற்கெல்லாம் ஆணிவேர் என்னவென்று பார்க்கும்போது பல வேளைகளில் சமூக அமைப்புகளே திகழ்கின்றது.
நல் உறவுகளை வளர்த்துக்கொள்ள வழிமுறைகள்
இளைஞர்கள், தங்கள் நிலை உணரவேண்டும். நாளைய இந்தியாவின் தூண்கள் தாங்கள் என்ற உயர்ந்த உணர்வு வளர வேண்டும். இளைய தலைமுறையினரின் வழிகாட்டிகள் தாங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நல்லதொரு சமூகத்தின் உருவாக்கும் கடமை தங்களது என்ற எண்ணம் வரவேண்டும்.
இறுதியாக
நாளைய தலைவர்களை உருவாக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு என்று உணர்தல் வேண்டும். பெற்றோர்க்ள இளைஞர்களுக்க நண்பர்களாக இருந்து வழிக்காட்ட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்களின் சகொதர்கள் என்ற உணர்வுடன் தேவையான வழிக்காட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது எந்த ஒரு இளைஞனாலும் தன் இலக்கை உணர்ந்து சமூகத்தில் உள்ள நல்லவைகளை கண்டு தெளிந்து அதன் அடிப்படையில் தன்னை உருவாக்கிக்கொள்ள முடியும். நல் உறவுமுறையோடு வாழமுடியும்.

உறவு வாழ்வாகட்டும் வாழ்வு மகிழ்வாகட்டும்”.

கு. ஆரோக்கிய சாமி
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளைஞர்களும் உணர்வுகளும் (உளவியல் பார்வை)

உட்புகுமுன்

இன்றைய சமூகம் இளைஞர்களின் தகுதி குறைவுகளைச் சுட்டிக்காட் தாயராக இருக்கிறதே ஒழிய அவர்களை தகுதி படுத்த உயர்வுகளை புரிந்துகொளள் தயாராக இல்லை. காரணம் இளைஞர்கள் இறிவைத்தாண்டி உயர்வுகளின் கட்டுபாட்டுக்கள் முடங்கி போவதுதான் காரணம். இவர்களுக்கு தேவையான ஒன்று தமது உணர்வுகளைப் பற்றிய விழிப்பு. இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

உணர்வுகள் உயிருள்ளவை

இளைஞனின் வாழ்க்கையை அழகூட்டும் வண்ணங்கள் அவனது உணர்வுகளே. மனிதனின் உணர்வுதான் மற்ற உயிரினங்களில் இருந்த மனிதனை பிரித்துக்காட்டுகிறத. அப்படிப்பட்ட உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் அதன் விளைவாக உணர்வுகளை உரியமுறையில் உணரவும் வெளிப்படுத்தவும் இன்றைய இளைஞர்களை நமது கலாச்சாரம் அனமதிப்பதில்லை, இளைஞர்கள் தங்களத உணர்வு மாற்றங்களையோ சிக்கல்களையோ மனம் விட்டு பேசாமல் இருப்பதால் தேவையான விழிப்புணர்வும் அறிவும் வழிக்காட்டுதலும் இல்லாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் இளைஞர்கள் தடம்மாறி போவதுண்டு, அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடிய பருவம் இளைமைபருவம். பயம், கோபம், மகிழ்ச்சி, கவலை என நான்கு உணர்ச்சிகளை தாய் உணர்வுகளை இன்றைய உளவியலார் குறிப்பிடுகின்றனர். இளைஞர்களைப் பொறுத்த மட்டில் போதிய அளவு முதிர்ச்சி இல்லாததால் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாகவும் சில வேளைகளில் வெளிப்படுத்தப்படாமல் உணர்வுகள் இருக்க வாய்ப்புண்டு. எ.கா. பாலுணர்வு, நமது தமிழக பண்பாடு கற்றுக்கொடுத்த சில தவறான மதிப்பீடுகளால் இளைஞர்கள் பாலுணர்வு குறித்து சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது, பார்ப்பது போன்ற செல்பாடுகள் தவிர தங்களை தாங்கள் கட்டுப்படுத்தி பின்பு அதன் எதிர்விளைவுகளை சந்திக்கின்றனர். இவை இளைமைப்பருவத்தில ஏற்படும் இயற்கையான உணர்வு என்பதையும் உயர்வுகள் உயிருள்ளவை என்பதையும் உணர்தல் அவசியம்.

இளைஞர்கள் ஏன் உணர்வுகளை வெளிப்படத்த வேண்டும்?

இளைஞர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் மூன்று விதமான பாதிப்புகளை சந்திக்க கூடும்: 1. உடல் ரீதியான பாதிப்ப 2. மன ரீதியான பாதிப்பு

3. குடும்பம் மற்றும் சமூக உறவில் பாதிப்பு.

இளைஞர்கள் உணர்வுகளை ஏன் வெளிப்படுத்தவதில்லை?

இளைஞர்களின் உள்மனத்தின் இருண்டபகுதியில் பல நிகழ்வுகள் ஏக்கங்கள் எண்ணங்கள் பதிந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த விரும்பாததற்கு காரணங்கள் பல

குற்றப்பழி உணர்வுகள் சில அந்தரங்க நிகழ்வுகள்

கடந்தகால தவறுகள், இன்னும் பல

இளைஞர்கள் உணர்வுகளை கையாள வழிமுறைகள்

இளைஞர்கள் உணர்வுகளை தகுந்த முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாத உணர்வுள் இளைஞர்களுக்கு எதிராக செயல்படும். இளைஞர்களின் வளர்ப்பு முறையாலும் கல்வி முறையாலும் உணர்வுகள் ஏற்றுக்கொள்ளபடாமல் போக ஏதுவாய் அமைகின்றன. இளைஞர்கள் உணர்வுகளை உண்மையாக உள்ள படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1. அடக்கி வைத்தல்: கோபப்படாதே! என்ற வார்த்தையும் இளம்பெண்கள் சத்தமாக சிரிக்கக் கூடாது, இளைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது போன்ற பெரியவர்கள் கண்டிப்ப இன்றைய இளைஞர்கள் மனத்தில் ஆழப்பதிந்து கோபப்பட வேண்டிய ஒரு சூழலில் கோபத்தை அடக்குவதும் அதனால் வரும் விளைவுகளை எண்ணி கட்டுப்படுத்துவதும் காணப்படுகிறது. இத்தகைய மனநிலை தவறு என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்களை வர வேண்டும். உணர்வுகளை தேவையான இடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

2. முழுமையாக வெளிப்படுத்துதல்: இளைஞர்கள் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்து சரியான நேரத்தில் உரிய முறையில் வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டம்.

3. பொறுப்படன் வெளிப்படத்துதல்: கோபத்தை உரிய முறையில் பொறுப்புடன் வெளிப்படத்துதல். இளைஞன் தன்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் அவனுக்கும், வெளிப்படுத்தக்கூடிய நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்கவேண்டும். சூழ்நிலையை மனதில் கொண்டு விவேகத்துடன் செயல்படவேண்டும். இதுவே மற்ற இரண்டைகாட்டிலும் சிறந்தது.

4. இளைஞர்களுக்கு தேவையான மனநிலை

உறவுகளை வளர்க்கம் உணர்வுகளைப்ற்றி ஆழமாக அறிதல் இளைஞனுக்கு அவசியம். வெளிப்படுத்தகூடிய உணர்வுகள், வெளிப்படுத்தகூடாத உணர்வுகள் பற்றிய புரிதலும் அவற்றிலிருந்து விடுதலை பெற வழிவகுத்தலும் இளைஞனுக்கு அவசியம்.

இளைஞன் தன்னை பற்றி முழுமையாக அறிந்து நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை தேவை.

உணர்வுகளை நல்லது கெட்டது என பிரிக்கமுடியாது மாறாக அவை இளைஞனின் உள்ளிருக்கும் மனநிலைகளின் வெளிப்பாடே. நடிப்பதை கைவிட்டு இயல்பாக செயல்பட வேண்டும்.

எனது உணர்வுகள் எனக்குத் தெளிவாகும் போத பிறரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியும். உணர்வுகள் பாதிக்கப்படும் போது பிரச்சனைகள் பிளவுகள் ஏற்பட ஏதுவாகின்றது.

முதலும் முடிவுமாக

இன்றைய இளைய சமதாயம் பொய்யுணர்ச்சியைக் காதல் என்று காட்டும் மாயஉலகில் இருந்து விடுபட்டு வாழ முயல வேண்டும். காரணம் உணர்ச்சிகளில் ஆரம்பித்து உணர்ச்சிகளிலேயே முடிந்துவிடுகின்றது. காதல் அதையும் தாண்டி உணர்வுளில் ஆரம்பித்து, அறிவு வந்து முடிந்து வைப்பதாக இளைஞனின் செயல்பாடுகள் இருத்தல் அவசியம். சீரானமுறையில் சிந்தித்து அறிவுத்தெளிவு பெற வெண்டியவர்களாய் இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

வில்லியம்ஸ்

(இறையியல் முதலாம் ஆண்டு - 2005)