இளைஞர்களும் போதைப்பொருளும்
இன்றைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் வன்முறை, பசி, பஞ்சம், வறுமை, சாதியக் கொடுமைகள், லஞ்சம், வேலையின்மை மனித வாழ்வோடு ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கிறது. இக்கொடுமைகளுக்குள் அகப்பட்டுப் போயிருக்கின்ற மனிதன் தனது சுய மகிழ்ச்சிக்காக நாடுவது மது, மாது.,
மனிதனின் ஈடுபாடு எதில்?
நன்கு படிக்க வேணுடும், வேலைக்கு போக வேண்டும் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் உண்டு. வாழ்க்ககையில் எடுத்து வைக்கும் முதல் அடி தோல்வியாக அமைந்தல் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற எண்ணம் வரும், ஆனால் தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதை மறந்து போய்விடுகிறொம் இதனால் நாடுவது போதை. தக்க நேரத்தில் நிம்மதி சிடைப்பதால் இதுவே நிரந்தரமாக வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் நாடுவது போதை.
போதையின் பாதிப்பு
இந்த நிலை நீடித்தால் மனிதனின் வாழ்க்கை இளமையோடு முடிந்து விடும் முதுமை என்பதே இல்லாமல் போய்விடும் இதனால் நமது உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கிறது. சுய மரியாதை சுய மதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றான். இது அவனை மட்டுமல்ல அவனைச் சார்ந்த அவன் குடும்பத்தையும் பாதிக்கின்றது. இது பணக்காரக் குழந்தைகளிடம் மட்டுமல்ல ஏழைக் குழந்தைகளும் இப்போது 79% பேர் அடிமையாகியுள்ளனர்.
தற்போது இந்திய நிலை
- எட்டு இலட்சம் பேர் போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கதிற்கு அடிமையாகியுள்ளனர்.
- 1987-ல் பம்பாயில் 4000 கிலோ ஹசிஸ் கைப்பற்றப்பட்டது.
- தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் கஞ்சா வளர்க்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
- 65% கல்லூரி மாணவ, மாணவியர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
- சென்னையில் மட்டும் 1,00,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
- கிராமத்தை விட நகரங்களில் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
எப்படி விடுதலை?
நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. இதை பாதுகாத்து பல வித நல்லசெயல்களைச் செய்துஈ கடவுளுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கம் பெருமை சேர்ப்பது நமது கடமை. இவ்வாழ்க்கையை தற்கொலை வழியாக முடித்துக்கொள்வதற்கோ, போதைப் பொருட்கள் மூலம் அழித்துக்கொள்வதற்கோ நமக்க உரிமையில்லை. வாழ்க்கைப் பிரச்சினைகளிலும், தனிமையிலும், பாவப் பிடியிலும் சிக்குண்டு தவிக்கும் மனிதத்தை மீட்டு புது வாழ்வை முழுமையாக அளிக்கவே இளைவன் மனிதனாக உருவெடுத்தார். இந்த இயேசு நம்மைப் பார்த்து, “நானே உலகின் ஒளி என்னைப் பின்செல்பசன் இருளின் ஒளியைக் கொண்டிருப்பான்.”
வாழ்க்கையில், விழுவது இயற்கை. ஆனால் எழுவது இயற்கைக்கு அப்பாற்பட்டதல்ல. முதல் முறை விழுந்த இயேசு எழ முடியாது என்றிருந்தல் ஏது உயிர்ப்பு, மீட்பு. விழுந்த நாம் எழ வேண்டும் தோல்வியைக் கண்டு துவளாமல், முடியும் என்ற எண்ணத்தோடு வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும்.
தோல்வியிலிருந்து வெற்றிக்கு,
போதையிலிருந்து போட்டியான வாழ்வுக்கு,
துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கு
தூக்கத்திலிருந்து துடிப்புக்கு,
வீழ்ச்சியிலிருந்து வழுச்சிக்கு எழுப்ப வேண்டும்.
இதை நாம் மறந்தோமானால் இளமையோடு இளைஞர்கள் வாழ்வு முடிந்து போவதற்கு நாமும் துணை போகிறோம். இதை விட நாம் என்ன செய்யப் போகிறோம்?
அடைக்கலராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக