இளைஞர்களின் நேர்மறை சிந்தனை
இன்றைய இளைஞர்கள் கலாச்சார மாற்றத்தினால், வேளையில்லா திண்டாட்டத்தினால், திரைப்படம் ஆதிக்கத்தினால் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் தன் திறமைகளை புதைகுழியில் போட்டு புதைத்துவிட்டு சின்னாபின்னமாய் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் சுய மதிப்பு என்ன என்பதை மறந்து நடை பிணமாய் இருக்கிறார்கள். அவர்கள் உயிருள்ள இளைஞர்களாக வாழ தான் ஙார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு இயையோர் ஒருங்கினைப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஒரு சில நேர்மறையான சிந்தனைகள்.
1. உன் என்னமே நீ எண்ணங்கள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. நம்முடைய எண்ணங்கள் தான் வாழ்க்கை. எண்ணத்தால் எல்லாவற்றிக்கம் ஆணிவேர். தோல்வி, வெற்றி, மகிழ்ச்சி, சோகம், இவை எண்ணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அவரவர் எண்ணமே வாழ்க்கை என்கிறார் மார்க்ஸ் ஆர்லியஸ். ‘எண்ணங்களைப் பற்றி கவனமாய் இருங்கள் ஏனெனில் அவைதான் செயல்களாக, பழக்கங்களாக மாறுகின்றன’ என்கிறார் எம்.எஸ்.உதயமூர்த்தி. ஆகவே இளைஞனே உன் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் வாழ்க்கயையே மாற்றி அமைக்க முடியும். உன்னுள் ஒரு குரல் ஒலிப்பதைக் கேள் நீ எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்லும். நீ ஒரு அழகான வீரம் மிக்க இளைஞன் சாதிக்கப் பிறந்தவன் திறமையானவன் என்பதைச் சொல்லும். அதுதான் மனசாட்சி அதுவே உன் எண்ணம். நீ எதைப்பற்றி எண்ணுகிறோயே, சிந்திக்கிறாயோ அதுவாகவே நீ மாறிவிடுகிறாய். எண்ணங்களை சற்று கவனித்துப்பார். நீ யார் என்று அது சொல்லும்.
2. உன்னை நீ அறிந்து கொள் முதலில் உன்னை நீ அறிந்து கொள். உன்னிடமுள்ள ஆற்றலைக் கண்டுபிடி அதை விடாமுயற்சியால் வளர்ந்துக்கொள். உனக்க முதலில் எது வேண்டும் என்பதை உன் மனதிடம் கேட்டு தெரிந்து கொள். அடிக்கடி அதை மனதில் கொண்டு செயல்படு உன்னுடைய ஆற்றலை பெருமையாக நினைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் “பத்து இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டகிறேன்” என்றார் விவேகானந்தர். எது அவரை இப்படி சொல்லத் தூண்டியது நீ எதையும் செய்யத் தயங்கமாட்டாய், எதற்கும் துணி;ந்தவன் நீ என்பதனால் தான். நீ நிமைத்தால் செய் முடியாதது ஒன்றுமில்லை. உன்னை நீ முழுமையாகத் தொரிந்துககொள் பின் உனக்கு தெரியாதது எதுவுமே இருக்காது.
3. மனவுறுதி அல்லது நம்பிக்கை “நீ சிறந்த இளைஞன் மட்டுமல்ல இரத்தவோட்டமுள்ள இளைஞன், உனக்கென்று சில ஆற்றல்களும் தனித்தன்மையும் உண்டு. உன்னுடைய ஆற்றலில் திறமையில் நீ நம்பிக்கை வைக்கும்போது உனக்குள் மறைந்திருக்கும் சிறப்பாற்றல்கள் கூட உனக்குத் தெரியும்.” என்கிறார் மேத்தா. நம்பிக்கையினால் உன் வாழ்வில் வெற்றியடையலாம். தோல்விகள் பல வந்தாலும் எதிர்த்துப் போராடலாம். உன் வாழ்க்கையை வழிநடத்தும் வழிகாட்டி நீயே. ஆம் உன் எண்ணங்களைப் புரிந்து கொண்டு வாழும் போது. இந்த இரகசநியத்தை இளையோர் ஒருங்கினைபாளார்கள் அறிந்து கொண்டால், இளைஞர்களின் இருண்ட காலத்தை ஒளிமயமாக்கலாம்.
சகோ.ஜான் போஸ்கோ
(மெய்யியல் 1ம் ஆண்டு - 2005)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக