இளைஞர்களும் உறவுகளும்

உறவின் முக்கியத்துவம்
வாழ்வென்பது உறவு கொண்டு வாழ்வது. நாம் கொண்டிருக்கம் உறவின் தன்மையில்தான் வாழ்வின் நிறைவும் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது. மனிதனின் துன்பமும் வெற்றியம் தோல்வியும் உறவின் தன்மையைப் பொறுத்தும் அதன் ஆழத்தைப் பொறுத்துமே அமைகிறது. மனித மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்ற உறவின் தன்மை மந்திரத்தால் வருவதல்ல மாறாக தெரிந்து புரிந்து பழகிக்கொள்வது. இரு ஒரு கல்வி.
இளைஞர்களும் உறவுகளும்
இளைஞர்களும் உறவுகளும் என்றவுடனே இயல்பாக நம் மனதில் தோன்றுவதெல்லாம் தவறான எண்ண ஓட்டம்தான். இந்த நிலைக்க இளைஞர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட்டு நாம் விலகிவிட முடியாது. ஏனென்றால் பல காரணிகள் அவர்களை இந்த நிலைக்க ஆளாக்கியுள்ளது என்பதில் சிறிதும் தவறில்லை.
இளைஞர்களை பாதிக்கும் காரணிகள்
1. குடும்பச்சூழல்2. நண்பர்கள் சூழல் 3. ஊடகதாக்கம் 4. சமூக அமைப்பு
1. குடும்பச்சூழல்
இளைஞர்களை பாதிக்கம் காரணிகளில் ஒன்றாக கருதப்படுவது குடும்பச் சூழல். இந்த குடும்பச் சூழலனது ஒவ்வொரு இளைஞனுக்கும் மாறுபட்டதாக அமைகிறது. பெரும்பாலும் எதிர்மறையான புரிதல் கொண்டதாகவே இருக்கிறது. பல குடும்பங்கள் இளைஞனில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. அந்நத்த பருவத்திற்கு முன்புவரை எதைக் கூறினாலும் சரி என்று ஏற்றுக்ககொண்டு திகழ்ந்தவன் திடீரென ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விக்கனைகளை தொடுக்கும்போத பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் இந்த இளைஞனின் வளர்ச்சியைப் பற்றி கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் தம் கடமையை தட்டிக் கழ்த்துவிடுகிறார்க்ள. அவனை கண்டுக்ககொள்ளாமல் விடுவதால் அவனை ஏற்றுக்கொள்ளும் உறவுமுறை எங்கே இருக்கிறது என்ற தேடலில் இறங்குகின்றான். இத்தேடலில் அவனுக்கு முதலில் ஆதரவு கொடுப்பது நண்பர்கள் சூழல். இச் சூழல் அவனது சுதந்தரத்தை மதிப்பதாக தோற்றமளிக்கம் கானல் நீராக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது.
2. நண்பர்கள் சூழல்
இளைஞனின் உறவுமுறைகளை பாதிக்கம் காரணிகளில் பெரிதும் பங்கு வகிப்பது நண்பர்கள் சூழல் எனலாம். ஏனென்றால் இந்த இளைஞனின் அனைத்துவிதமான தேடலுக்கு (குறிப்பாக தவறான தேடலுக்கு) துணை செல்லும் சாதனமாக அமைந்துவிடுகிறது. இதனால் குடும்ப உறவிலிருந்து விலகி, தன்னிச்சையாக செயல்படுபவனாக மாற்றிவிடுகின்றான். இந்தச் சூழலில் அவனுக்க குடும்ப உறுப்பினர்களின் வழியாக கூறப்படும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இந்த நிலை தம்மை விட்டுவிட்டு மாட்டின் வாலை பிடிக்கும்கதைக்கு ஒப்பாக அமைந்துவிடுகிறது. நண்பர்கள் சூழலில் பெரிதும் அவனை பாதிப்பதும் ஊடக தாக்கம்.
ஊடக தாக்கம்
இளைஞனை அவனது இலக்கினை மறக்கச் செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்றுதான் ஊடகம். தான் எந்த நிலையில் இருக்கிறோம்? எவ்வாறு செயல்படவேண்டும்? என்று சிந்திக்க எத்தணிக்கும் சமயத்தில் நீ இப்படித்தான் வாழ வேண்டும், செய்ய வேண்டும் என்ற தீர்வுகளை ஊடகங்கள் வழங்குகின்றன. இந்த ஊடகத்தின் தாக்கம் இளைஞனுக்கு மகிழ்ச்சியைத்தருவதால், அதன் தவறான வழிக்காட்டுதலை புரிந்து கொள்ளாமல் கண் இருந்தும் குருடனாக அதற்கு அடிமையாகி விடுகிறான். இதற்கெல்லாம் ஆணிவேர் என்னவென்று பார்க்கும்போது பல வேளைகளில் சமூக அமைப்புகளே திகழ்கின்றது.
நல் உறவுகளை வளர்த்துக்கொள்ள வழிமுறைகள்
இளைஞர்கள், தங்கள் நிலை உணரவேண்டும். நாளைய இந்தியாவின் தூண்கள் தாங்கள் என்ற உயர்ந்த உணர்வு வளர வேண்டும். இளைய தலைமுறையினரின் வழிகாட்டிகள் தாங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நல்லதொரு சமூகத்தின் உருவாக்கும் கடமை தங்களது என்ற எண்ணம் வரவேண்டும்.
இறுதியாக
நாளைய தலைவர்களை உருவாக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு என்று உணர்தல் வேண்டும். பெற்றோர்க்ள இளைஞர்களுக்க நண்பர்களாக இருந்து வழிக்காட்ட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்களின் சகொதர்கள் என்ற உணர்வுடன் தேவையான வழிக்காட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது எந்த ஒரு இளைஞனாலும் தன் இலக்கை உணர்ந்து சமூகத்தில் உள்ள நல்லவைகளை கண்டு தெளிந்து அதன் அடிப்படையில் தன்னை உருவாக்கிக்கொள்ள முடியும். நல் உறவுமுறையோடு வாழமுடியும்.

உறவு வாழ்வாகட்டும் வாழ்வு மகிழ்வாகட்டும்”.

கு. ஆரோக்கிய சாமி
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக