இளையோர் நட்பு
அன்பு என்ற சொல் நம்மை எப்படி அரவணைக்கின்றதோ அதே போல நட்பு என்று சொல்லும் மனதில் தெம்ப உண்டாக்குகிறது, மனத்திற்குள் கூடுதலாக வலு சேர்க்கிறது. நம்மில் யாரும் தனிமையில் வாழ விரும்புகிறது இல்லை. உடலளவிலும் மனதளவிலும் நமக்கு தோழமை தேவைப்படுகிறது. நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், மகிழ்ச்சிகள், ஆகியவற்றை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். நம்முடைய ஆபத்தான சூழ்நிலையில் பிறர் ஆதரவுக்காக ஏங்குகிறோம். மகிழ்ச்சியான வாழ்வுக்கு நட்பு அத்தியவசியமான ஒன்று.
நட்பே மகிழ்ச்சி
நட்பு நம் அனைவருக்கம் வேண்டிய மிக அவசியமான ஒன்று. வியந்து உயர்ந்த நட்பு தியாகத்தினாலும் பிநர்நல அக்கறையினாலும் ஏற்படுகிறது. நல்ல நட்பு எந்த வித பிரதிபலனையம் எதிர்பார்ப்பது இல்லை. பழம்பெரும் தத்துவ ஞானி செனக்கா, வாழ்க்கையில் கிடைக்க கூடிய சுகங்களிலேயே, உறுதியான, மென்னையான நட்பைப்போல் சிறந்தது ஏதுமில்லை. அது நமது கவலைகளை இனிமையாக்குகின்றது. துயரங்களை பொக்கிவிடுகின்றது. நல்ல நட்பு மரணத்தைக் கண்டும் பயப்படாத நிலையினை கொடுக்கும் என்கிறார. உண்மையான நண்பர்களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
நட்பில் பல வகை
எல்லோருக்கும் நண்பர்களாக நம்மோடு இருப்பது நமக்கு பலத்தையும் உற்சாகத்தையும் புது தெம்பையும் அளிக்கிறதுஇ. நல்ல நண்பர்களையுடையவர்கள்ஏழைகளுமல்ல கோழைகளுமல்ல தைரியம் உள்வர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டு கலங்காதவர்கள் காரணம் நண்பர்கள் உடன் இருப்பதால். “வெற்றியின் இரகசியம் என்னவென்றால், பிறர் கண்ணோடத்தைப் புரிந்து கொள்வது உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்ல அடுத்தவர் நிலையிலிருந்தும் பார்ப்பது “என்கிறார் டோல் கானர்கி. நல்ல நண்பர்களைப் பெற நீங்கள் முதலில் நீங்கள் நல்ல நண்பர்களாக இருங்கள்.
நண்பர்களின் மனது புனிதமானது
“நம்பிக்கை இல்லாம் நட்பு இல்லை”. என்கிறார் கிரேக்க த்துவ ஞானி எபிக்யுரஸ்ஃ எப்படிப் நண்பர்கள் உங்கறுளுக்கு அமைய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படிப்பட்ட நண்பர்கள் நீங்கள் இருங்கள். நண்பர்களை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள். வேடிக்கையாகக் கூட நண்பர்களை புண்படுத்தாதீர்கள். கொடுப்பதும் பெறுவதும் நட்பில் முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெற எதையாவது இழந்து தான் ஆக வேண்டும். அது அன்பாகவோ சேவையாகவோ இருக்கலாம்.
நல்ல நண்பர்களைப் பெற சில வழிமுறைகள்
- மற்றவர்களிடம் நீங்கள் உண்மையான அக்கறை காட்டுங்கள்.
- பிறரின் நட்பை உற்சாகத்துடன் வரவேற்கவும்.
- பிறரிடம் புன்முறுவலுடன் பழகுங்கள்
- பெயர் சொல்லி அழையுங்கள்
- நட்புணர்வுடன் உதவுங்கள்
- எதார்த்தமாய் வழகுங்கள்
- உணர்ச்கிக்கு மதிப்பு கொடுங்கள்
- உதவி செய்ய தயாராக இருங்கள்
- விசுவாசமாக இருங்கள்
- இரகசியத்தைக் காப்பாற்றுங்கள்
- குற்றங்களொடு மதிப்பிடாதீர்கள், திறந்த மனதுடன் திருத்துங்கள்
- நம்பங்கள், நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
- நண்பர்கள் உங்களுடன் தொடர்ந்து நட்பு வைத்திருக்க வழிமுறைகள்
- நண்பர்களின் இரகசியங்களை மூன்றாவது நபரிடம், அவர்கள் இல்லாத போது புறம் கூற வேண்டாம்.
- புனைப் பெயர்களையோ கேலி பெயர்களையோ சொல்லி அழைக்க வேண்டாம்.
- உடல் ஊணத்தை குறிப்பிட்டு பேசாதீர்கள்.
- நண்பர்களின் பணிபாடு பழக்க வழக்கங்கள், இனம், மொழி, சாதி, மதம் குறித்து கேலி செய்யாதீர்கள்.
- நீங்கள் உங்கள் நண்பர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரச்செய்யுங்கள்.
- ஆம் நல்ல நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமே இல்லை.
ஜேம்ஸ்
(இறையியல் 3ம் ஆண்டு - 2005)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக