முரண்பாடு

பிடித்தமான பாடலை மிதமாக வைத்து
பிடித்த கவிஞனின் நூலில் ஆழ்நிதிருக்கையில்
கதவுத் தட்டும் பொழுது சுர்ரென கோபம் வருகிறது
படிக்கும் கவிதை எண்ணவோ பொறுமையைப் பற்றி!
எப்படியாவது முதலிடம் பெறவேண்டும்…
நாளையக் கவிதைப் போட்டியில்
சகிப்புத்தன்மை என்ற தலைப்பில்…
தாத்தா! தள்ளிப் போய் இருமக்கூடாதா?
வயசான காலத்துல எதுக்கு கிடக்கிற!

பாஸ்டின் பிரிட்டோ
(தத்துவவியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் வழிகாட்டி --- திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.

எனது இனிய இளைய நண்பர்களே உங்களுக்கு நான் விடுக்கும் செய்தி ஒன்று உண்டு அதனை உங்கள் உற்றார் உறவினரோடு, குடும்ப கோத்தரத்தோடு, நண்பர்களோடு மற்றும் உங்களுக்கு செவிசாய்ப்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். அச்செய்தி யாதெனில், நான் உங்கள் மேல் அபார நம்பிக்கை வைத்துள்ளேன், இளைஞர்களாகிய நீங்களே எனது வலிமை, உங்களோடு எனது எதிர்காலக் கனவுகளையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசையாய் இருக்கிறேன்.
இது நமது மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இளைஞர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் இறுதி பகுதி.

பல திறமைகளைக் கொண்டு இறைவனின் ஆசீரோடு அகில உலகத் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ஒரு மாபெரும் மனிதர். இளைஞர்களோடு நெருங்கி பழகுவது என்பது அவரது சிறப்பியல்களில் ஒன்று. இவ்வியல்பே அவருக்கு இளைஞர்களின் திருத்தந்தை என்ற சிறப்பைத் தந்தது. இச் சிறப்புக்கு அவர் உரியவரே. ஏனெனில் அவர் இளையோர்கிளின் வாழ்க்கை இரகசியங்களையும் இதய நாதங்களையுமத் நன்களிந்தவர். அதோடு மட்டுமில்லாது அவர்களின் தந்தையாகவும் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் என்பது மிகையாகாது.

இளைஞர்கள் மீது திருத்தநதை நம்பிக்கை வைத்தற்கு காரணம் இளைஞர்கள் இயேசுவால், அன்பு செய்யப்பட்டதோடு அல்லாமல் அவரிடம் நம்பிக்கைகுரியவர்களாகவும் திகழ்ந்ததால்தான். எனவேதான் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுது வாழ்வில் உலகத்திருச்சபையின் வசந்த காலத்தை எதிர்நோக்கினார். இளைஞர்களை சந்திப்பதில் ஆர்வமும் மகிழ்ச்சியும் கொணட்டிருந்தார். அவர்களோடு பேசியும் அவர்கள் சொல்வதைக் கேட்டும், அவர்களின் மகிழ்ச்சி துக்கங்களில் பங்கு கொண்டார். அவர்களிடம் உலகை மனிதனுக்குதந்த வகையில் மாற்றவல்ல வலிமை இருப்பதை கண்டார்.

எனவே தான் இளைஞர்களிடம் “திருச்சபையில் கடவுளின் திட்டம் நிறைவேற்ற நீங்கள் தேவைப்படுகிறீர்கள் திருச்சபையின் எதிர்காலம் கடவுளுடைய ஆசீரோடு உங்களது தன்னார்வ ஒத்துழைப்பை பொறுத்து அமையும் என்று இறைஞர்களை உற்வாகப்படுத்தினார். மேலும் அவர்களிடம், “அன்பு இளைஞர்களே இவ்வுலகில் தலைவிரித்து தாண்டவமாடுகின்ற தீய நாட்டங்களைக் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள் அவைகளினால் நீங்களும் தீய வழியில் போகக்கூடும், இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்களுது மனசாட்சியை மழுங்கடித்து விட்டு உண்மையான மகிழ்ச்சியை போதைப் பொருட்களிலும் வன்முறைகளிலும் பொருளாசைகளிலும் தேடுகின்றனர்.”

“இச்சூழ்நிலையில் உங்களுக்கு உகந்த வழிகாட்டியாக ஒருவர் இருக்க முடியுமென்றால் அது இயேசு மட்டுமே. கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மகத்துவத்தையும் பெருந்தன்மையும் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் கண்டு கொள்ளலாம். உங்களது வினாக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடையளிப்பவர் இயேசு ஒருவரே. அவரே தந்தையிடம் உங்களை அழைத்துக்கொண்டு செல்ல இருக்கிறார். இவ்வாறு அழைக்கம் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து அவர்மேல் நம்பிக்கை கொண்டு வாழும் போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.”

ஜெரோம் பால்ராஜ்
(இறையியல் 2ம் ஆண்டு - 2005)

இளையோர் ஆன்மீகம்

இன்றைய இளைஞனின் ஆன்மீகத்திற்கு ஓர் சவால்

முன்னுரை

எது ஆன்மீகம்? என்ற கேள்விக்கு இன்றைய மனிதர்கள் தரும் பதில்கள்
ஆன்மீகம் என்பது வாழ்வின் இறுதிப் பெருள்சார்ந்த அனுபவ வெளிப்பாடு
ஆன்மீகம் என்பது அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசம்.
ஆன்மீகம் என்பது ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிகாரம்.
ஆன்மீகம் என்பது அடித்தள மக்களோடு கரையும் உப்பு.

மேலும் ஆன்மீகம் மானிடத்தை வாழவைக்கும் உந்து சக்தி. ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு ஆன்மீகம் என்னவெனில் வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று நம்மில் உடலெடுக்கச் செய்யும் வாழ்வு. இந்த வார்த்தைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்தியவர் அன்னை கன்னிமரியாள். இன்றைய இளைஞர்களின் ஆன்மீக வாழ்விற்கு இயேசுவே ஊற்று. அன்னை கன்னிமரியாள் இயேசு என்னும் ஆன்மீக ஊற்றுக்கு நம்மை அழைத்து செல்பவர்.

கிறிஸ்துவின் ஆன்மீகம்

இதோ உம் திருவுள்ளத்தை நிறைவேற்ற வந்து விட்டேன் (எபி 10,7)
என்று தன்னையே இறைவனுக்கும், மக்களின் விடுதலைக்கும் அர்பணித்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவின் ஆன்மீக வாழ்வில் மூன்று நிலைகளை நாம் பார்க்கலாம்.
1. அறிதல்: தனது திருமுழுக்கின் வாயிலாக தான் யார்? தனது பணி என்ன? என்று அறிந்து கொள்கிறார்
2. தெளிதல்: இசையால் இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளின் மூலம் தெளிவு பெற்றார்.
3. கையளித்தல்: தான் யார் என்று அறிந்த இயேசு இறைவாக்கினர் இசையாஸ் ஏட்டுச்சுருளில் மூலம் தெளிவுபெற்ற இயேசு தன் விருப்பப்படி அல்ல மாறாக வானத தந்தையின் விருப்பப்படி கையளிக்க வேண்டிய சூழ்நிலையிலும் இறைவனின் திருவுள்ளத்திற்கு கீழ்படிந்து தன்னையே சிலுவையில் பலியாக கையளிக்கிறார். இதுவே உண்மையான ஆன்மீகம்.

இயேசுவின் வாழ்வில் நாம் நான்கு வகையான ஆன்மீகத்தைப் பார்க்கலாம்.
1. மரபு ஆன்மீகம்: மறு உலக வாழ்வு மற்றும் தனிமனித வாழ்வை மையமாக கொண்டு வாழ்வது மரபு ஆன்மீகம். மறு உலக வாழ்வின் சொந்தக்கதரரான இயேசு, இவ்வுலக தனிமனித வாழ்வில் எல்லோரும் வியக்கதக்க வகையில் பாவம் செய்யாமல் வாழ்ந்தவர்.
2. போராட்ட ஆன்மீகம்: மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் தன்னையே அர்ப்பணிக்கும் செயல் தான் போராட்ட ஆன்மீகம். இதை இயேசுவின் பணிவாழ்வு மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
3. இறைவாக்கினன் ஆன்மீகம்: நீயும் வாழ்ந்திடு பிறரையும் வாழ விடு. இந்த இரண்டு நிலையிலும் தடையாக உள்ளவர்களை சின்னாபின்னமாக்கும் செயல் இறைவாக்கினன் ஆன்மீகம் இவ்வாறாக எல்லோரும் நலம் வாழ வழி வகுத்தவர் தான் இயேசு.
4. வாழ்வியல் ஆன்மீகம்: சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அறநெறி வேண்டியும், உண்மைக்காக தன் வாழ்வை பணயம் செய்து, தன்னுயிரையே தியாகம் செய்வதுதான் வாழ்வியல் ஆன்மீகம். இதை நிறைவேற்றியவர் கிறிஸ்து ஒருவரே. இன்றைய இளைஞர்கள் ஏதாவது ஒருவகையைத் தேர்ந்து தெளிந்து, சமுத்துவ சகோதரத்துவ சமுதாயம் உருவாக்க இறையாட்சியைக் கொணர தன்னையே தன்னுயிரயே கையளிக்க முயற்சி செய்யும் போது கிறிஸ்துவின் ஆனிமீகத்தில் நாம் பங்கு பெறலாம். இது இன்றைய இளைஞனுக்கு இயேசு அளிக்கும் சவால்? இளைய சமுதாயமே உனது பதில் என்ன?

கன்னி மரியாளின் ஆன்மீகம்

1. இறைவனின் வார்த்தையைக் கேட்டல்: வானதூதன் வழியாக வந்த இறைவார்த்தைக்கு செவிமடுத்தார்.
2. இறைவர்த்தையை கேள்வி கேட்டல்: தெளிவு பெற தைரியமாக இது எங்களம் நிகழும் என்று வினா எழுப்பியவர் அன்னை மரியாள்.
3. இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளல்: தன்னுடைய வினாவிற்கு விடைபெற்ற அன்னை மரியாள் இளைவார்தையை ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக இவ்வுலக மீட்பரை கருவில் தாங்க மடியில் சுமக்க, அவரது அரியணையில் விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூட்டப்பட தகுதி பெற்றார்.

இன்றைய இளைய சமுதாயமே, மரியாளின் ஆன்மீகம் நம்முடைய ஆன்மீக வாழ்விற்கு ஓர் சவால். நமது வாழ்வில் இறைவார்த்தைக்கு செவிமடுக்கிறோமா? இறைவார்த்தைய கேள்வி கேட்கிறோமா? இறைவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோமா?

அன்னை மரியாள் விடுக்கும் சவாலுக்கு உனது பதில் என்ன?

முடிவுரை

ஆன்மீகமா? வாழ்வின் இறுதிகட்டத்தில் தேட வேண்டிய ஒன்று என்று உலக இன்பங்களில் திளைசகக
முற்படும் போது நாம் பாவம் என்ற பாதாளத்தில் தள்ளப்படுகிறோம். ஆன்மீகம் மானிடத்தை வாழ வைக்கும் உந்து சக்தி. ஆகவே வரலாற்று இயேசுவின் ஆவியை இன்று மாறுவோம். அநீத அமைப்பு சித்தைகளை உடைக்கும் புதுரசமாக மாறுவோம். ஒடுக்கப்பட்ட மனித மாண்பை பொங்கி எழச்செய்யும் புளிக்காரமாக மாறுவோம். .ப்படிப்பட் ஆன்மீகம் நம்மில் உருவெடுத்தால் இறையாட்சி நம்மில் மலரும். அநீத அழியும். இயேசு நம் உள்ளங்களில் ஆட்சி செய்வார். அப்போது நமது ஆன்மீகம் இந்த மானுடத்தை வாழவைக்கும்.

2. இயேசுவின் வழியில் இளையோர் வழிகாட்டி

தனித்து வாழும் மனிதன் தன்னிறைவு அடைவதில்லை.
கிறிஸ்துவ மதிப்பீடுகளில், மனித உறவு நிலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு பல நிலைகளில் மாறபடுகின்றது. குழுக்களோடும் தனி மனிதர்களோடும் உறவு கொள்ளுதல் என்பது, கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஓர் கலை. உறவுநிலைகள் இப்படித்தாள் இருக்க வேண்டும் என அன்றே வாழ்ந்து காட்டியவர் இயேசு பிறருடன் நல் உறவை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு இறைமகன் இயேசு பின பற்றிய 10 வழிகாட்டுதல்கள்.
• இயேசு எப்போதும் உண்மையுடன் இருந்தார்.
• எல்லோருடனும் ஒத்திருந்தார்.
• எல்லோருக்கும் செவிமடுத்தார்.
• நம்பிக்கை இழந்தோருக்கு உறுதியூட்டினார்.
• பிறருடைய ஆலோசனையை வரவேற்றவர்.
• ஒவ்வொருவரையும் அன்பு செய்தார்.
• தேவையானதை கேட்க தறங்காதவர்.
• அன்பிற்காய் தன்னையே தந்தவர்.
• தற்பெருமைக்காக அல்ல பிறர் நலனுக்காய் வாழ்ந்தார்.
இயேசு இவ்வுலகில் வாழ்நத போது இறைவனோடும் மனிதனோடும் நல்லுறவுக் கொண்டிருக்க இந்த பத்து வழிகளையும் கையாண்டார். எல்லோருடனும் நாமும் நல்லுறவு வளர்த்துக் கொள்ள இயேசுவின் இந்த வழிகாட்டுதலை நம்வாழ்வில் செயல் படுத்துவோம்.

ஜோமிக்ஸ் - இறையியல் மூன்றாம் ஆண்டு -2005

இதோ உங்களுக்காக…..

இளையோரது பணி சிறக்க வேண்டுமெனில் - ஒவ்வொரு இளைஞனும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பிரியமானவர்களே!

இன்றைய இளைஞர்கள் நமது நாட்டின் ஏன் நமது திருச்சபையின் கண்களும் கூட மாறிவருகின்றன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கம் இளைஞர்களை என்றுமே மாறாத இறைவன் அருளிய வழியில் நடத்தி செல்வது நமது கடமை. இன்றைய உணர்வுகள், எண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்புகள், அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். திருப்பலி மற்றும் பங்கு பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுக்க முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் நமது பங்கு ஆன்மீகத்தில் மறுமலர்ச்சி அடையும். இளையோர் வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக இறைவன் விரும்பும் வாழ்வாக அமையும்.

இன்றைய இளைவோருக்கு நம் தத்தவங்கள் தேவையில்லை தேவையெல்லாம் நம் சக தோழமைதான். எனவே நமது தோழமையால் அவர்களை புரிந்துக்கொண்டு அவர்களை வழிநடத்த குருக்கள் மற்றும் குருமாணவர்களாகிய நாம் முன்வர வேண்டும்.
இந்தப்பணியில் எண்ணற்ற சவால்கள் நம்மை வசந்திக்கும், எண்ணற்ற சவால்களை நாமும் சந்திப்போம். இந்த தருணத்தில் உங்களுக்கு உதவிட இந்த “இளையோர் வழிகாட்டி” உங்களோடு இருக்க எங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து இந்த வார்த்தைகளை வாழ்வாக்கும் போது உங்கள்பணி சிறக்கும்.

இறுதியாக இந்த “இளையோர் வழிகாட்டி” நூல் வெளிவர உதவியாக இருந்த நம் மறைமாவட்ட ஆயர், இளங்குருமட அதிபர், அருட்தந்தையர்கள், சக சகோதரர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அமைதி அரசு
முதலாம் ஆண்டு இறையியல் - 2005

நித்திய இளைப்பாற்றியை...


மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா 

மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா
விண்ணில் தேவன் இன்பம் தருவார்
அன்று உன்னை அழைத்த தேவன்
இன்று உன்னை அழைக்கின்றார்

இன்று உறவு நாளை பிரிவு
மனிதன் வாழும் எட்டிலே
என்றும் அழியா உறவு உண்டு
இறைவன் வாழும் வீட்டிலே
-மண்ணில் வாழ்ந்து

படைப்பின் இறைவன் படைப்பைக் காண
கடைக்கண் ஒன்றைக் காட்டினான்
பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு
படைத்தவனில் மூழ்கினான்
-மண்ணில் வாழ்ந்து

நித்திய இளைப்பாற்றியை 

நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் - ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக
இறைவா சீயோனில் உமைப் பாடுதல் - ஏ...ற்றதாம்
யெருசலேமில் உமக்கு பொருத்தனை செலுத்தப்படும் - நீர்
எம் மன்றாட்டைக் கேட்டருளும் - மாந்தர் அனைவரும்
உம்மிடம் வருவார்.

நித்திய சாந்தி 

நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா
நீர் இவர் பரிசாய் இருந்தருளும்

1. உன் மகன் இவர்க்கென உயிர் துறந்தார்
தம் உதிரமும் உடலும் பலி ஈந்தார் - 2
இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர்
உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற
-நித்திய சாந்தி

2. செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே
யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற - 2
எம் பலிப்பொருள் இதை ஏற்றருளும்
எளியரெம் செபங்கள் கேட்டருளும்
-நித்திய சாந்தி

கருணைத் தெய்வமே 

கருணைத் தெய்வமே கண்பரும் - எங்கள்
பாவங்களை நீர் பொறுதருளும்

உடலும் அறிவும் மனமும் - ஒன்று
சேர்ந்து உம்மை எதிர்த்ததையா
தேவ கட்டளை வழியை - மனம்
பன்முறை அறிந்தே வெறுத்ததையா
பாவச் சேற்றை நாளும் - எம்
வாழ்வே கொண்டு நிறைந்ததையா
-கருணைத் தெய்வமே

பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப்
பார்த்து நாங்கள் நடக்கவில்லை
உண்மை விளக்கு எரிந்தும் - அதன்
ஒளியின் அருகே வாழவில்லை
இறைவன் அன்பை அறிந்தும் - அதை
உணர்ந்த பின்னும் திருந்தவில்லை
-கருணைத் தெய்வமே

அன்பு செய்யும் இறைவா - உனை
மறந்து சென்றதை எண்ணுகின்றோம்
நீதி நிறையும் தலைவா- எம்
பாவம் நினைந்தே கலங்குகின்ரோம்
தூய வாழ்வின் நிறைவே - உன்
மன்னிப்புத் தருவாய் உயிர் பெறுவோம்
-கருணைத் தெய்வமே

இறந்தோர் வாழ்வு

இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக - அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக - 2

1. நின் ஒளி அவர் மேல் ஒளிர்ந்திடுக
புவி நிதம் அவர் நினைவில் நிலைத்திடுக - 2
தீயவை யாவும் விலகிடுக - 2 அவர்
நிதம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே
நிதம் பண்ணால் உம் புகழ் அவர் இசைக்க - 2
புனித வான தூதருடன் - 2
உம்மை புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக

3. உலகில் அவர்கள் இறந்தாலும்-இறை
உம்மில் என்றும் வாழ வேண்டும்
சாவு கதவினை அடைந்தாலும்-2 உன்
சாந்நியின் வாயில் திறக்க வேண்டும்.

பாடல் - 2
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக

இறைவா சீயோனில் உம்மை பாடுதல் ஏற்றதாம்
எருசலேமில் உமக்கு புகழ்ச்சி பொறுத்தனை செலுத்தப்படும்
நீர் எம் மன்றாட்டை கேட்டருளும்
மாந்தர் அனைவரும் உம்மிடம் வருவர்

புகை மூட்டமும்



புகை மூட்டமும் பனிக்கூட்டமும்
சில நாழிகையில் பறந்தோடிடும்
நாம் வாழ்கையும் சில காலமே ஓ நெஞ்சமே
1.
மலை மீது பிறக்கின்ற நதிகள் கடலோ:டு உறவாடத் துடிக்கும்
கடல்மீது பறக்கின்ற அலைகள்
கரையோடு உறவாட முடியும்
கடலானது கரையானதும்-2 என் இயேசுவே
2.
ஓரு நூறு ஆண்டுகள் இன்று
ஓர் ஆண்டில் இறந்தவர் உண்டு
எதிர் காலம் நம் கையில் இல்லை
இறைவனே நிகழ்கால எல்லை
இறையோடு நாம் இணைந்தோடினால் ஓ…. இன்பமே


உத்தரிக்கும் தலத்தினிலே செய்த
கொடுமையான பாபங்களால்
நித்தமும் வேதனையால் துடித்து
சுத்தமும் ஆகும்வரை
அத்தனைப் பார்க்காது கொடுமை
அடைந்திடும் ஆன்மாக்கள்
நித்திய கதிசேர நாமும்
செபிப்போமே ஒறுத்தல்கள்
சுத்தமாய்ச் செய்துமே தினமும்
ஓயாது வேண்டுவோம்!
திருப்பலி செய்துமே நன்கு
வேண்டிடுவோம் மறவாது
வறுமையால் வாடிடும் ஏழைக்கு
வழங்குவோம் தானங்கள்
அருமையுடன் ஆன்மாக்களுக்குக் கொடுத்து
ஆண்டவரிடம் மன்றாடுவோம்
கருமம் பாவம் தோசம் நீங்கி மோட்ச
கதியிலே சேர துணைநிற்போம்!
செபமும் செபமாலை செபித்து
சிறப்பாக வேண்டுவோம்
உபரியாய் நாம் செய்யும் நல்ல
உதவிகளை மறக்கமாட்டார்.
எப்பவும் நினைத்தவர் மறுபடி
ஏழைகளுக்கு உதவிடுவார்.
இப்பொதும் எப்போதும் ஆன்மாக்களை
நினைத்துமே செபித்திடுவோம்!
உத்தரிக்கும் ஆன்மாக்கள்
உரியதண்டனை முடிந்துமே
ஆத்மாவின் முகம்பார்த்து
அக்களித்து உதவிடுவோம்.
உத்தமமாய் நாம்வாழ
உன்னத வழிகாட்டி
நித்தமும் வேண்டுவோர்
நினைவில் கொள்ளுவீர்!

Evolution Theory according to Tamil Grammar Tholkappiam


உயிரின் தோற்றத்தையும் அதன் பாகுபாட்டையும் பின்வருமாறு தொல்காப்பியர் சொல்வார்.

"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே."

(தொல். மரபியல் -1526)

  • உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். 
  • உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவுயிர்கள். 
  • உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூஅறி உயிர்கள். 
  • உடம்பு, நா, மூக்கு, கண், இவை நான்காலும் அறிவன நாலறி உயிர்கள்.
  • உடம்பு, நா, மூக்கு, கண், காது என்னும் ஐந்தால் அறிவன ஐவறி உயிர்கள்.
  • உடம்பு, நா, மூக்கு, கண், காது, மனம் இந்த ஆறோடும் அறிவன ஆறறி உயிர்கள். 

இவற்றைத் தெளிவாக உணர்ந்தோர் நெறி முறையாக உணர்த்தி உள்ளனர்.

ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களுக்கு எடுத்துக்காட்டு:

புல்லும், மரமும் ஓர் அறிவு,

சங்கு, நத்தை, சிற்பி ஈரறிவு,

கறையான், எறும்பு மூன்றறிவு,

நண்டும், தும்பியும் நான்கறிவு,

விலங்குகள், பறவைகள் ஐந்தறிவு,

மனித இனம் மட்டுமே ஆறறிவு,

அடக்கச் சடங்குமுறை


இறந்தவர் இல்லத்தில்

குரு: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவரர் இயேசுகிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம்.

(தீர்த்தம் தெளித்தபின், 130-ம் திருப்பாடல்)
குரு: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

1.ஒருவர்: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
2.ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பவர்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
3.ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன், என் நெஞ்சம் காத்திருக்கின்றது, அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4.விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம்,விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞசம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
5. இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலை மீட்பவர் அவரே.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: செபிப்போமாக.
ஆண்டவரே, உமது இரக்கத்தை கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டகன்ற உம் அடியார் (பெயர்) உடைய ஆன்மாவை அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதருடைய தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

ஆலயத்துக்குப் பவனி

(இத்திருப்பலியில் பங்கேற்பவர் ஏற்கெனவே வேறொரு திருப்பலியில் நன்மை வாங்கிருப்பினும், மறுமுறையும் இத்திருப்பலியில் நன்மை உட்கொள்ளலாம். நன்றி மன்றாட்டு முடிந்ததும், தொடர்ந்து குருவும் பணியாளரும் சவப் பெட்டி அருகே சென்று மக்களை நோக்கி நிற்கின்றனர்.)

குரு: விசுவாசிகளின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்றக் கூடியிருக்கும் நாம், இறைவனைப் பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலுவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்வதாலும், புனிதரின் வரிசையில் இது வல்லமையுள்ளதாக உயிர்த்தெழச்செய்வாராக. இவரது ஆன்ம புனிதரின் கூட்டத்திலே இடம்பெறக் கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும்போது இறைவன் இவருக்கு இரக்கம் காட்டுவதால் சாவே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. பிதாவிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் என்றென்றும் வாழும் மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும் புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.

பிரியாவிடை எதிர் பாடல்....
இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க.
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

(அல்லது கீழ்கண்ட பாடல்)

சென்று வா கிறிஸ்தவனே உலகை
வென்றுவிட்டாய் நீ விசுவாசத்தால்!
சரணங்கள்
உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப,
உற்ற துன்பத்தில் ஆறுதலாய்,
உதவும் திருச்சபை அருகிருக்க!
இறைவனின் புனிதரே துணைவருவீர்!
தேவனின் தூதரே வந்தழைப்பீர்!
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்!
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்!
படைத்த தந்தை உனை ஏற்பார்!
மீட்ட திருமகன் உனைக் காப்பார்!
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்!
அனைத்து புனிதரும் உனைச் சேர்வார்!
(பாடல் முடிந்ததும் குரு தொடர்ந்து செபிப்பார்.)

குரு: கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும் இவரும் இறுதி நாளில் உயிர்த் தெழுவார் என்னும் உறுதியான நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே, உம்முடைய கைகளில் எம் சகோதரரின் (சகோதரியின்) ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.
எனவே, ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்குத் தயவாய் செவி சாய்த்து, உம் அடியாருக்குப் பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்தருளும். மேலும், இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் கிறிஸ்துவை சந்தித்து, உம்மோடும் உம் சகோதரரோடும் (சகோதரியோடும்) எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்குமட்டும் விசுவாசம் நிறைந்த சொற்களால் ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(பிரியாவிடைச் சடங்கு முடித்து இறந்தவர் உடலைக் கல்லறைத் தோட்டத்திற்குத் தூக்கி செல்கையில் கீழ்வரும் பாடல் இடம்பெறலாம்.) 



இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)
தீயவை யாவும் விலகிடுக - 2 - அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)
புனிதர் வான தூதருடன் - 2 - உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி

இறைவா இவரது திருப்பயணம் 
இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம்!
சரணங்கள்
பாஸ்காப் பயணம் இதுவே தான்.
கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான்,
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு,
இசைந்து செல்லும் வழி இது தான்.
அடிமைத் தலையை அறுத்தெரிந்து,
ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள்,
உரிமை நாடு கடந்து சென்றார்,
உண்மை இங்கு நடப்பது தான்!
சிலுவை சுமந்த வழியினிலே,
சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே!
சிலுவை பதித்த சுவடுகளில்
சீடர் இருவரும் செல்கின்றார்!
துன்பத்தின் வழியாய் திருச்சபையும்,
தூரப் பயணம் போவது போல்,
பயணத்தின் முடிவில் இவ்வடியார்
பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!
விண்ணக விருந்து உண்டிடவே,
விரைந்து செல்லும் இவ்வடியார்,
திருமகன் வந்து பார்க்கையிலே,
திருமண உடையுடன் திகழ்ந்திடவே!
ஆண்டவர் அழைத்த நேரத்திலே,
அணையா விளக்குடன் ஆயத்தமாய்,
உடனே செல்லும் ஊழியராம்,
உண்மையில் பேறுபெற்றவரே!
அந்நிய நாட்டின் எல்லைதனை,
அடியார் இவரும் கடந்துவிட்டார்.
தாயகம் திரும்பும் பயணியிவர்,
தவறாது தன்வீடு சேர்ந்திடவே!
எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்!
என்றும் அவரோ டிருப்பதுதான்!
இழப்பு அனைத்தும் அவரின்றி
இறப்பு ஆதலின் ஆதாயம்!

கல்லறைத் தோட்டத்தில்

குரு: செபிப்போமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சிக்கின்றீர். எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும் உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே. உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(குரு கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம்காட்டுவார்) 

குரு: நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்றும் தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும் படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.

விசுவாசிகள் மன்றாட்டு

உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் என்று உரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுகிறோம். 
- இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே, எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- இறந்தோர் உயிர் பெற்றெழச் செய்தீரே, எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- மனந்திரும்பிய கள்ளனுக்கு நீர் வானகம் தருவதாய் உறுதியளித்தீரே, எங்கள் சகோதரரையும் (சகோதரியையும்) வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எங்கள் சகோதர ( சகோதரியை ) ஞானஸ்நான நீரினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திரு விருந்தாக அளித்தீரே, வானரவின் விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரரின் (சகோதரியின்) பிரிவாற்றமையால் துயருரும் நாங்கள் விசுவாசத்திலும், நித்திய வாழ்வின் நம்பிக்கையினாலும் ஆறுதல் பெற உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(அனைவரும் சேர்ந்து கர்த்தர் கற்பித்த செபம் சொல்ல, குரு இறந்தவரின் உடல்மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுகிறார்.)

செபிப்போமாக
ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீய செயல்களுக்குத் தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான விசுவாசம் இவ்வுலகில் இவருக்கு விசுவாசிகளின் கூட்டத்தில் இடம் அளித்தது போல், உமது இரக்கம் இவரை மறுவுலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

முதல்: ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
துணை: முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.
(இறந்தவரின் உடலை கல்லறையில் வைக்கும் போது அல்லது குழியை மூடும் போது கீழ்வரும் பாடல் பாடலாம்)

இறுதிப் பாடல்

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு ஓயாத்
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2

1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னை
துதித்திட அருள் செய்வாய் புரிந்து

2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்