எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, – எந்நா

1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. – எந்நா

2. எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். – எந்நா

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை@
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். – எந்நா

No comments:

Post a Comment