என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே

 என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே

என் நிறைகள் என் குறைகள்

பகிர்ந்து கொள்ளுமே

என் மனதில் என் நினைவில்

நிலைத்து நில்லுமே

என் அருகில் நிதம் இருந்து வழிநடத்துமே


இன்பம் பெருகும்போது

அதை பகிர்ந்துகொள்ள வா

துன்பம் வரும்போது நீ தோள் கொடுக்க வா

இனிமை பொங்கும்போது இணைந்து மகிழ வா

இன்னல் அணுகும்போது கைகொடுக்க வா

அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா

அன்பு வழியில் வா அயலான் வழியில் வா

அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா

அன்பு வழியில் வா அயலான் வழியில் வா


சோதனையின்போது சொந்தமாக வா

வேதனையின்போது தாங்கிக்கொள்ள வா

பாவம் செய்யும்போது தடுத்து நிறுத்த வா

பயந்து ஒளியும்போது பாதுகாக்க வா

அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா

அன்பு வழியில் வா அயலான் வழியில் வா

அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா

அன்பு வழியில் வா அயலான் வழியில் வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக