எனது விழியில் உனது பார்வை

 எனது விழியில் உனது பார்வை 

எனது நாவில் உனது மொழிகள் 

எனது நெஞ்சில் உனது கனவு இறைவா  - 2


எனது வழியில் உனது பயணம் 

எனது வார்த்தை உனது வாழ்வு 

எனது வாழ்க்கை உனது வழிகள் தலைவா - 2


உனது நினைவில் நாளும் வளர்ந்தேன் இறைவா 

உனது உருவில் நானும் கலந்தேன் தலைவா - 2

உனது உறவில் என்னை இழந்து 

உனது உறவில் என்னில் கரைந்து  - 2

உனது நினைவில் வாழ செய்தாய் தலைவா  - 2


என்னை காக்கும் அரனும் நீ

என்னை தேற்றும் தாயும் நீ 

என்னை ஆளும் தெய்வம் நீ 

என்னில் வாழும் தெய்வம் நீ 


எனது பலமும் பலனும் நீயே இறைவா 

எனது நெஞ்சில் நண்பன் நீயே தலைவா - 2

எனது துயரம் எனது அழுகை 

எனது  சுமைகள் மாற்றும் உன்னை  - 2

எனது தோழன் ஆக்கி கொண்டேன் 

எனது ஜீவன் ஆக்கி கொண்டேன் 

என்னை காக்கும் அரனும் நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக