வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
என் குரல் கேட்டு அருளாயோ தலைவா ...(2)

பகை சூழும் இதயத்தின் சுவரையெல்லாம்
என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் ...(2)
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதிலெல்லாம்
உன் பெயர் சொல்லி ஒழியேற்ற உனைகேட்கின்றேன்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
என் குரல் கேட்டு அருளாயோ தலைவா

நலமெல்லாம் எனகென்று தேடும் குணம்
இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் ...(2)
வலியவோ பிறர்கென்னை அழித்திட்ட பின்
என் பரிசாக உனைகேட்கும் மனம் கேட்கின்றேன்

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
என் குரல் கேட்டு அருளாயோ தலைவா

எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம்
என் இதயத்தை பிளக்கட்டும் எனக்கேட்கின்றேன்
ஒழியில்லா இல்லங்கள் இதயங்களில்
நல் ஒழியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
என் குரல் கேட்டு அருளாயோ தலைவா ...(2)

No comments:

Post a Comment