இறையாட்சியின் மனிதர்களே

இறையாட்சியின் மனிதர்களே
மரி மைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைகின்றார்
புது உலகொன்றை படைத்திட வாருங்களே
1.
நாம் வாழும் இந்த பூமி
நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி
நின்று நிலைத்திட வேண்டாமா(2)
இயேசுவே காட்டிய வழியுண்டு
இயங்கிட நமக்கொரு நெறியுண்டு
எதிர் நோக்குடன் வாருங்கள்
கதிர் விளைந்திடும் காணுங்கள்

2.
இன்று மானிட இதயங்களெல்லாம்
ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறை மாட்சியின் மாற்றங்கள் எங்கும்
நிறைவேறிட வேண்டாமா(2)
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன் பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம்

கடவுளே நாங்கள் வருகின்றோம்
கவினூறு உலகம் படைத்திடவே
கரம் கோர்த்தே சென்றிடுவோம்
கருத்துடன் செயல்படவே(2)

No comments:

Post a Comment