நிலத்தின் விளைவும் - Offertory

நிலத்தின் விளைவும் மனித உழைப்பும் சேரும் நேரமிது
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்

1
அப்பமும் இரசமும் மாறும் வேளை
உமது பிரசன்னம் ஆகுமே
அமைதி இழந்த எனது வாழ்வில்
அதிசயங்கள் காணுமே
உம்மையே அறிந்தேன் என்னையே கொடுத்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய்
பலியாய் மாற்றிடுவாய்
2
உடலும் உள்ளமும் உயர்ந்த பலியாய்
உமது பாதம் படைக்கின்றேன்
உமது வழியில் உவகை காண
உள்ளது அனைத்தும் இழக்கின்றேன்
உம்மையே அறிந்தேன் என்னையே கொடுத்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய்
பலியாய் மாற்றிடுவாய்

2 comments:

  1. Please do add the songs' Font.This site is very very useful for me. Thanks a lot.

    ReplyDelete
  2. You have added the offertory song's font.So thank you very much.

    ReplyDelete