இறைவனை நம்பி வாழும் அன்னை

தாத்தாவுக்கு 110 ஆவது வயது பிறந்த நாள். அவரோட பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, “தாத்தா! ஆண்டவன் புண்ணியத்துல அடுத்த வரு~மும் உங்க பிறந்தநாளுக்கு உங்க ஆசீர்வாதம் பெறக்கூடிய பாக்கியம் எங்களுக்கு கிடைக்கணும்” னு ரொம்ப பணிவா சொல்ல, உடனே தாத்தா, “கவலைப்படாதீங்க, நிச்சயமா அது நடக்கும். ஏன்னா… நீங்களெல்லாம் சின்ன பிள்ளைதானே. அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது” ன்னாராம். நம்பிக்கைதான் வாழ்க்கை.
“யானைக்குப் பலம் தும்பக்கையில், மனிதனுக்குப் பலம் நம்பிக்கையில்” என்று ஆன்றோர் கூறுவது முற்றிலும் உண்மை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்று நம்பிக்கைகள் இருக்கவேண்டும். அவை தம் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, கடவுள் மீது நம்பிக்கை. தன்னம்பிக்கையில்லாதவர்கள் இருபது வயதில் அறுபதைக் கண்டு விடுவார்கள். மரணம் அவர்களை அடைவதற்கு முன் அவர்களே மரணத்தைச் சந்திப்பார்கள். மேலும் இத்தகையோர் தினந்தோறும் செத்து செத்து வாழ்வார்கள். அவர்கள் வாழ்வோ ஐயோ பரிதாபம்!
ஒருவனுக்கு தன்னம்பிக்கையைக் கொடுப்பது இறை நம்பிக்கையாகும். முனிதனாகப் பிறந்த ஒவ்வொரு மனிதனும் முழு நிறைவை தம்மிலே காணமுடியாது. ஆனால் இறைவனில் நிறைவு காணமுடியும். ஏனென்றால், நாம் நிலையாக இம்மண்ணில் நிலைத்திருப்பதில்லை. ஒருநாள் முடிவு வரும். இறைவன் குறைகளே இல்லாதவர், என்றும் வாழ்பவர். ஆவரில் தான் நாம் நிறைவுகாண முடியும். எனவே அவரில் நாம் நம்பிக்கைக் கொள்ளவேண்டும்.
எவனொருவன் கடவுள் மீது நம்பிக்கையற்றவனாக இருக்கிறானோ அவன் நிச்சயமாக தன்மீது முழு நம்பிக்கைக் கொள்ளவும் மாட்டான், பிறர்மீதும் நம்பிக்கைக் கொள்ளமாட்டான். அத்தகையதோர் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாக மாறும்.
ஆனால் ஒரு கன்னி ஓர் ஆணின் (கணவனின்) துணையின்றி குழந்தையைப் பெறுவது இயலாத காரியம். எனவேதான் மரியாவோ வானதூதரிடம், ‘இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே’ என்று கேட்டார் (லூக். 1:34). சூசையின் துணையின்றியே தூய ஆவியினால் மரியா கன்னிமையில் இயேசுவை ஈனறெடுக்க முடியும்: ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற வானதூதரின் வார்த்தையை விசுவசத்து, ‘ஆகட்டும்’ என்று கூறி மரியா மீட்பின் தாயானார் (லூக். 1:35-38).
“கன்னி விசுவசத்தார்: கன்னி விசுவசித்துக் கருத்தரித்தார். உடலால் கருத்தரிக்குமுன் உள்ளத்தால் கருத்தரித்தார்” என்று அழகாகக் கூறியுள்ளார் புனித அகுஸ்தினார்.
மரியன்னையின் உண்மையான பேறு என்ன என்பதை எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அறிவிக்கின்றார். “ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும என்று விசுவசித்தவர் பேறு பெற்றவரே” (லூக். 1:45). மரியாவின் வாழவு முழுவதுமே ஒரு விசுவாசத் திருப்பயணம். இதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பேரிய சனிக்கிழமையன்றும் தனது நம்பிக்கையை இழக்காமல் இறைவன் மீது கொண்டிருந்த விசுவாசத்தில் அன்னை உறுதியாக இருந்தாள். இதற்காகவே கப்பூச்சின் சபையில் சொல்லப்படுகிற அன்னையின் மன்றாட்டு மாலையில் பெரிய சனிக்கிழமையன்றும் நம்பிக்கையோடு இருந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று சொல்கிறார்கள்.
“தூய கன்னியும் விசுவாசத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார்: தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பைச் சிலுவைவரை விடாது காத்து வந்தார்: இறைவனின் திட்டத்திற்கேற்பச் சலுவயின் அருகே நின்றார் (அரு. 19-25): தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற்றார்: தாம் பெற்றெடுத்த மைந்தனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார். தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் விசுவாச ஒளியில் நடந்து, விசுவாசத்திற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். மரியாவின வாழ்வை நிர்ணயித்த இறையியல் சூத்திரம்: “கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை” (லூக்;.1:37).
இறைவனைவிட மேலானதும் உயர்வானதும் எதுவும் தன்னுடைய வாழ்வில் இல்லை என்று செயல்படுவதே உண்மையான விசுவாசம். ஆபிரகாம் தன் உயிரை விட மேலாகக் கருதி அன்பு செய்தது தன் தகன் ஈசாக்கை. ஆனால் அந்த மகனையும கடவுளின் சொற்படி எரிபலியாக்க முனைந்தது கடவுள் மீது அவர் கொண்ட விசுவாசத்தைக் காண்பிக்கிறது. எனவே தான் ‘விசுவாசத்தின் தந்தை’ என அழைக்கப்படுகின்றார்.
• இறைநம்பிக்கை கொண்டோர் நிறை உதவி பெற்று வாழ்வில் உயர்ந்துள்ளனர். “அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழுநம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும் அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை” (2அரச.18:5) என்று எசேக்கியா மன்னர் பற்றித் திருநூல் கூறுகிறது.
• அசீரிய படைத்தலைவன் தனது படைபலத்தை நம்பி அழிந்தான். எசேக்கியாவோ இறைநம்பிக்கை கொண்டிருந்ததால் அவனும் அவனுடைய நாடும் காப்பாற்றப்பட்டன. ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி ஒரே இரவில் ஓர் இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் அசீரிய படையினரைக் கொன்று குவித்தார்(2அரச. 19:35).
• நெடிதுயர்ந்து நின்ற கோலியாத்து தனது உடல் பலத்தையும் படைபலத்தையும் நம்பினான். தோல்விகண்டான். இளைஞன் தாவீதோ இறைவனில் நம்பிக்கை வைத்து மலைபோல் நின்ற கோலியாத்தை வீழ்த்தினான், நிலைகுலையச் செய்தான்.
எங்கெல்லாம் மக்களிடத்தில் விசுவாசம் இருந்ததோ அங்கெல்லாம் இயேசு புதுமை செய்தார். விசுவாசமில்லாத இடத்தில் அவரால் புதுமை செய்ய முடியவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள் பெரும்பாட்டினால் வருந்திய பெண் இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டுக் குணமடைந்தார். இயேசு அவரிடம், மகளே தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று’ என்றார்.(மத்.9:22)
புற இனத்தைச் சார்ந்த கனானனேயப் பெண்ணின் விசுவாசத்தைப் புகழ்ந்து, ‘அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்’ என்றார். அந்நேரமுதல் அவர் மகள் குணமாயிருந்தாள். (மத்.15:28).
இயேசுவைப் போல் கடலில் நடக்க முயன்ற இராயப்பர் கடலில் மூழ்கப்போகும் தருணத்தில் இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, ‘குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய்?” என்று அவரைக் கடிந்து கொண்;டார் (மத்.14:31).
இயேசு தமது சொந்த ஊராகிய நாசரேத்தில், “பிணியாளர் ஒரு சிலர் மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர, ஒரு வல்ல செயலையும் செய்ய முடியவில்லை, அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். (மாற்.6:5-6).
ஒர் ஊரில் ஒரு பெரியவா இருந்தார். ஒரு நாள் அவரைத்தேடி ஒருவர் வந்தார். வந்தவர் ‘ஐயா… நான் கடவுளை முழுமையாக நம்புகிறேன என்றார்’. ‘அந்த நம்பிக்கை எப்படி வந்தது?’ என்ற பெரியவர்கேட்டார். அதற்கு அவர் ‘எனக்கு 10 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தினமும் கடவுளிடம் செபித்தேன். இறைவனுடைய அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆதனால் கடவுளை நம்புகிறேன்’ என்றார்.
பெரியவர் அவரைப்பார்த்து ‘இருந்தாலும் உன்னுடைய நம்பிக்கை முழுமையான நம்பிக்கையாக தெரியவில்லையே’ என்றார். ‘எப்படி சொல்றீங்க?’ என்று கேட்டார். அந்த மனிதர் ‘மறுபடியும் இன்னொரு குழந்தை பாக்கியம் கேட்டு கடவுளிடம் செபியுங்கள்’ என்று கூறினார் பெரியவ். அவரும் அப்படியே செய்து பத்து மாதங்கள் கழித்து வந்தார். அவரிடம், ‘என்ன கடவுளை நம்புறீங்களா?’ என்று கேட்டார் பெரியவர்.
‘சும்மா இருங்க, கடவுளாவது, கத்திரிக்காயாவது! நூன் கடவுளை நம்பமாட்டேன்’ என்றார். ‘ஏன் கடவுளை நம்ப மறுக்கிறீங்க?’ என்று பெரியவர் கேட்க, நான் இரண்டாவது குழந்தையை கேட்டேன். கொடுக்கவே இல்லையே என்று கூறினார் அந்த மனிதர்.
‘கடவள் மீது நம்பிக்கை’ என்பது எதிர்பார்ப்புகளை மையமாக வைத்து அமைவது அல்ல. அது உள்ளத்தின் தேவையாக இருக்க வேண்டும். இயல்பாகவே இருக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு மனிதன் கடவுளிடம் ஒரு பூவையும் ஒரு வண்ணத்துப்பூச்சியையும் கேட்டான். ஆனால் கடவுள் ஒரு கள்ளிச் செடியையும், ஒரு கம்பளிப் புழுவையும்; தந்தார். கடவுள் ஏன் தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கவலை ஒரு பக்கம் அவனுக்கு இருந்தாலும் பொறுத்துக்கொண்டான். சிறிது நாட்கள் கழித்து கடவுள் கொடுத்த இரண்டையும் பார்க்க நினைத்தான். என்ன ஆச்சரியம்! கள்ளிச்செடியிலிருந்து ஓர் அழகான பூ பூத்திருந்தது. கம்பளிப் புழு அழகான வண்ணத்துப் பூச்சியாக உருவெடுத்திருந்தது.
அன்புக்குரியவர்களே! எதைத்தர வேண்டுமென்று இறைவனுக்குத் தெரியும். இன்றைய முட்கள் தான் நாளைய பூக்கள். நமக்கு என்ன தேவை என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை இறைவனிடம் கையளிப்பவர்களுக்கு சிறந்தவற்றை இறைவன் தருவார். இதுவே இறை திட்டத்திற்கு நம்மை கையளிப்பதன் தாரக மந்திரம்.
நம்பிக்கை என்பது ஒரு கொடை. இது வளர்க்கப்பட வேண்டும். இறைப்பற்றுடையவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், கல்வியறிவு அற்ற மக்களுக்கும் இறைவன் பால் நம்பிக்கையைத்தூண்ட வேண்டும். எடுத்துச் சொல்லாமல் தானே இது வராது. திருத்தூதர்கள் சாதாரண மீனவர்கள். இயேசு அவர்களைத் தெரிந்தெடுத்து, அநேக நற்செய்தி போதனையாலும்;, அருங்குறிகளாலும் அவர்களிடையே நம்பிக்கையை வளர்த்தார். அப்படி இருந்தும் ஒருவர் காட்டிக்கொடுத்தார். மற்றவர் மறுதலித்தார். மூன்றாமவர் கண்ணால் காணாமல் நம்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். அப்படிப்பட்ட சிலர் இன்றும் உள்ளனர்.
இன்றைய முதல் வாசகத்தில் முதல் கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஒரு மனப்பட்டு விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் இறை வேண்டலிலும் அப்பம் பிட்குதலிலும் பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்தனர் என்பதை அறிகிறோம். எனவே தான் இன்றைய திருச்சபைகளில், அன்பியங்கள் உருவாக்கப்பட்டு ஆதிக்கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையினை கைக்கொண்டு வாழ திருச்சபை அழைக்கிறது.
திருமணமான மூன்று குடும்பத்தலைவர்கள் திருமண வாழ்க்கை அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். மூவரும் தத்தம் மனைவியருடன் பார்த்த திரைப்படக் காட்சிகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். கர்ப்பிணி பெண்கள் பார்க்கும் திரைப்படங்கள் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
முதல் நபர் இருவரைப் பார்த்து, “நானும் என் கற்பிணி மனைவியும் “இரு மலர்கள்” என்ற திரைப்படத்திற்குச் சென்றிருந்தோம். என் மனைவிக்கு மலர்கள் போன்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன” என்றார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த இரண்டாவது நபர். “நான் கர்ப்பிணியாக இருந்த என் மனைவியை அழைத்துக்கொண்டு போய் “அம்பா, அம்பிகா, அம்பாலிகா” என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன், என் மனைவி மூன்று அழகிய பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்” என்றார்.
இரண்டு நபர்களும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது நபர் மயக்கமுற்றுக் கீழே விழுந்தான். மூச்சு தெளிந்து எழுந்தபோது, “என் மனைவி ஐந்து மாத கர்ப்பிணயாக இருந்தபோது நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு , ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்;’என்ற படத்தைப் போய் பார்த்தேன்’ என்றான். இதைக் கேட்டபோது மற்ற இருவரும் எவ்வளவு அதிர்ச்சியுற்றிருப்பர்?
ஒரு பாட்டி மிக்கேல் வானதூதரையும் தொட்டு வணங்குவார், அவருக்கு அடியில் இருக்கும் லூசிப் பேயையும் தொட்டு வணங்குவார். அவர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்டதற்கு, அவர், “நான் செத்த பிறகு எங்கே போவேன் என்று எனக்குத் தெரியாது. மோட்சத்துக்குப் போனால் மிக்கேல் சம்மனசு கவனித்துக் கொள்வார். நரகத்துக்குப் போனால் லூசிப் பேய் கவனித்துக்கொள்ளும். இரண்டு பேரையும் கையிலே போட்டுக்கிறது நல்லது” என்றாராம்.
இஸ்ரயேல் மக்களிடம் இத்தகைய இருமனப்பட்ட நிலை குடிகொண்டிருந்தது. யாவே என்ற உண்மையான கடவுளையும் வழிபட்டனர். அதே நேரத்தில் பாகால் என்ற போலியான கடவுளையும் வழிபட்டனர். எனவே. இறைவாக்கினர் எலியா அவர்களிடம், “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால் அவரைப் பின்பற்றுங்கள். பாகால் கடவுள் என்றால் அவன் பின்னே செல்லுங்கள்” (1 அர 18:21) என்றார். சிலைவழிபாட்டைத் ‘தீட்டு’ என்றழைக்கிறார் கடவுள். “நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்” (எசேக் 36:25). கடவுள் அத்தகைய மூட நம்பிக்கைகளை ‘அருவருப்பான செயல்கள்;’ என்று கூறி அவற்றை வன்மையாகக் கண்டித்தார்.
சோனியா பிரதமர் ஆவார், வாஜ்பாய் பிரதமர் ஆவார் என்று நாட்டிலுள்ள சோதிடர்கள் ஒவ்வொரு விதமாக சோதிடம் சொன்னார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் சுத்தமான மன்மோகன்சி;ங் பிரதமரானார். இதற்குப் பின்னும் சோதிடத்தை நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் நெஞ்சுப் பொறுக்குதில்லையே!
ஒரு சோதிடர் ஒருவரிடம் “உங்கள் ஜாதகத்தில் தோ~ம் இருக்கிறது. உங்களுக்குத் திருமணம் நடந்தால் அந்தத் தோ~ம் போய்விடும்” என்றார். அவரும் திருமணம் செய்தார். சில மாதங்கள் கழித்துச் சோதிடர் அவரைப் பார்த்தபோது “உங்கள் தோ~ம் போய் விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆம் , சந்தோ~ம் போய்விட்டது” என்றார். தோ~த்திற்கு மாற்று மருந்து கடவுள் நம்பிக்கையே! “ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்: உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது” (திபா 91:9-10).
காதலர்கள் இருவர் நடந்து சென்றபோது, காதலியின் காலில் ஒரு முள் தைத்துவிட்டது. காதலன் அம்முள்ளைப் பிடுங்கி “சனியன் பிடிச்ச முள்ளே! உனக்குக் கண் இல்லையா? எப்படி நீ என் காதலியின் பூப்போன்ற காலில் குத்தலாம்?” என்று கூறிக் கோபத்துடன் அம்முள்ளை வீசி எறிந்தான். அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றதும், மூன்று மாதம் கழித்து அன்றைய காதலர்களான, இன்றைய கணவனும் மனைவியும் நடந்து சென்றனர். மனைவியின் காலில் முள் ஒன்று தைத்துவிட்டது. கணவன் மனைவியைப் பார்த்து, “சனியன் பிடிச்சவளே! உனக்குக் கண் இல்லையா? வழியிலே கிடக்கிற முள்ளைப் பார்த்து நடக்கத் தெரியலை?” என்று கோபத்துடன் திட்டினான். திருமணத்திற்குப் பின் இடம் பெயர்ந்து மனைவியிடத்தில் புகுந்துவிட்டது. இதுதான் சனி பெயர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு! மனிதர்கள் தான் மனிதர்களுக்குச் சனியன்கள்: சூலம் , இராகு காலம், எமன்கள்! நமது மனம் தூய்மையாக இருந்து நாம் அடுத்தவர்களுக்கு எப்போதும் நன்மை செய்தால் நமக்கு ஆயுள் முழுவதும் முகூர்த்தநாள்: சுபதினம்.
ஒருவர் நடந்து சென்றபோது அவரது வலது காலின் பெருவிரல் ஒரு கல்லின் மீது மோத அவ்விரலிருந்து இரத்தம் வந்தது. அவர்தன் தலைமீது அடித்துக்கொண்டு “எல்லாம் என் தலைவிதி” என்றார். அவ்வழியே வந்த மற்றொருவர் அவரிடம், “ஐயா! ஊங்கள் காலின் விரல் மிகவும் மென்மையானது: கல்லோ கடினமானது. மேன்மையான பொருள் ஒன்று கடினமான பொருள் ஒன்றி;ன் மீது மோதினால் மென்மையான பொருள் சேதமடையும். இது இயற்பியல் விதி. துலைவிதியல்ல” என்றார். இயற்பியல் விதிப்படி நடப்பதையெல்லாம் தலைவிதி என்று கூறுவது பகுத்தறிவாகாது. விதியையும் மதியால் வெல்லலாம்: முயற்சி திருவினையாக்கும்.
இன்ற பலரும் பல்வேறு மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாயிருக்கின்றனர். இன்றைய சமுதாயத்தில் மூட நம்பிக்கைகளிலும் குருட்டு மனப்பான்னையிலும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுகிறான். முகூர்த்தம்;, சகுனம், பதின்மூன்றாம் எண், எதிர் காலத்தைக் கணிக்க ஜோதிடம், நாடி ஜோதிடம் ,கை ரேகை பார்த்தல், வாரபலன் வாசித்தல், ஜாதகம் பார்த்தல், கிளிஜோதிடம் கேட்டல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வரிசையும் நீண்டு கொண்டே போகும். இவை அனைத்தும் குழப்பங்களையே அதிகரிக்கச் செய்யும். எதிர்காலத்தை முழுமையாக தெரிந்தவர் கடவுள் மட்டுமே. கடவுளே காலத்தை வென்றவர். காலத்துக்குமேற்பட்டவர்.
ஒரு சிலர் கடவுளின் மீது மிதமிஞ்சிய நம்பி;க்கை வைக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார் என்னும் அசட்டுத் தைரியத்துடன் வாழ்கின்றனர். இத்தகையவர்கள் கடவுளைச் சோதிக்கின்றனர்.
கிறிஸ்துவை அலகை கோபுர உச்சியிலிருந்து கீழே குதிக்கும்படி கேட்டபோது அதனிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என எழுதியுள்ளது” என்றார் (மத் 4:7), மருத்துவர் உதவியின்றிச் செபத்தினால் மட்டுமே நோயாளியைக் குணப்படுத்த முடியும் என்றால் எதற்காகக் கிறிஸ்து “{நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை” (மத் 9:12) என்று கூறினார்? ஏதற்கெடுத்தாலும் புதுமைகளை எதிர்பார்ப்பது விசுவாசக் குறைவே அன்றி, விசுவாச நிறைவு ஆகாது.
பலர் அகலக் கால் வைக்கின்றனர். வரவுக்குமேல் செலவழிக்கின்றனர். பேரிய தொழில் ஆரம்பிக்கின்றனர். கந்து வட்டிக்குக் கடன் வாங்குகின்றனர். ஆதன்பிறகு அவர்களால் வாழ்க்கையில் எழுந்து நிமிர முடிவதில்லை. கடவுள் அவர்களைச் சோதித்து விட்டதாகக் குறை கூறுகின்றனர். கடவுளா அவர்களைச் சோதித்தார்? இல்லை அவர்கள் தான் கடவுளைச் சோதித்தனர். மிதமிஞ்சிய நம்பிக்கை.
கடவுள் நம் வாழ்வில் துன்பமே வராமல் தடுக்கமாட்டார். மாறாகத் துன்பத்தின் நடுவிலும் நமது கரம் பிடித்து கரையேற்றவார். சுமைகளையும சுகமான சுமைகளாக மாற்றுவார் என்பது உறுதி. வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு தந்துள்ள மிகப் பெரிய கொடை. உலக முடிவைப் பற்றி கவலைப்படாமல் நமது வாழ்வின் முடிவை மனதில் வைத்து வாழ்வதற்குள் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்தால் நன்மை பயக்கும்.

6. அன்னையும் செபமும்
ரயிலில் நான்கு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டே~னில் ஒரு வயதான பெரியவர் ஏறினார். நான்கு நண்பர்கள் இருந்த பெட்டியில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவர் செபமாலையை எடுத்து செபிக்க ஆரம்பித்தார். இதைக்கண்ட இளைஞர்கள் ‘இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு ஆசாமியா?’ என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த பெரியவரிடம் “பெரியவரே! காலம் மாறிப் போச்சு! இது அறிவியல் காலம். கடவுளால் முடியாததுகூட மனுசன் செய்றான். இப்படிப்போய் நீங்க அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, சும்மா செபமாலை சொல்றீங்களே! உங்க அட்ரசை கொடுங்க. நாங்க நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு புத்தகமெல்லாம் அனுப்பி வைக்கிறோம்” னு சொல்லி அந்த பெரியவரை கேலி பண்ணுனாங்க.
அந்த பெரியவர் தனது முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தார். அதைப்படித்து பார்த்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “டாக்டர் லூயி பாஸ்டர், அறிவியல் ஆய்வு மையம், பாரீஸ்” னு எழுதியிருந்தது. இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
1208 ஆம் ஆண்டில் புனித தோமினிக் திருச்சபைக்கு தினமும் செபமாலை செபிக்கும் முறையை முதன முதல் கற்பித்தார். லூர்து நகரிலும், பாத்திமாவிலும் முக்கியமாக செபமாலை செபிப்பதை பரிந்துரைக்கவே அன்னை மரி காட்சிகளும் செய்திகளும அருளினார். அன்னைமரி புனித தோமினிக்கிடம் “செபமாலை உத்தரியம் இவைகளைக் கொண்டு நான் ஒருநாள் உலகைக் காப்பாற்றுவேன்” என்று வாக்களித்தார். அன்னைமரி புனித தோமினிக்கிடமும், முக்தி ஆலனிடமும் “தேவ இரகசியங்களை தியானத்துப் பக்தி உருக்கத்துடன் செபமாலை செபிப்பவர் துர்பாக்கியத்தால் மேற்கொள்ளப்படமாட்டார். இறைவன் அவரை தண்டிக்கமாட்டார். அகால மரணத்திற்கு ஆளாகமாட்டார். அருள் நிலையில் வாழ்ந்;து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவார்” என்று வாக்களித்திருக்கிறார். இறைவனின் சினத்தைத் தணித்து இரக்கத்தை இறக்கிக் கொள்ள செபமாலை ஒன்றே வழி.
தாவீது, குருவிடம் “உண்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்க, “தூய அப்பமே”என்று குரு பதிலளிக்க தாவீது மீண்டும் குருவிடம் “ஈட்டியோ, வாளோ உள்ளதா?” என்று கேட்க தன் கவணைக்கொண்டு கொன்று போட்ட பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள் இருப்பதை குரு சுட்டிக்காட்டினார். அதற்கு தாவீது “அவ்வாளுக்கு நிகரானது வேறல்ல. அதை எனக்குத் தாரும்” என்று கேட்டார். பழைய ஏற்பாட்டின் இந்நிகழ்வு செபமாலை பக்திக்கு ஒப்பிடப்படுகிறது. நாம் சோதனைகளை வல்லமையுடன் எதிர்கொள்ள ஈட்டியோ, வாளோ உள்ளதா என்று அன்னை மரியாவிடம் கேட்கிறோம். அன்னை மரி “அலகையின் தலையை தம் குதிங்காலால் நசுக்கிய பெண்ணின் வாள் இதோ” என்று செபமாலையை நமக்கு அளிக்கிறார்.
நரக சக்திகளின் தாக்குதல்களிலிருந்து போராடி வெற்றி பெற அன்னையின் பிள்ளைகளி;ன் கரங்களில் ஏந்த வேண்டிய வல்லமையான ஆயுதம்-செபமாலை என்ற வாள்தான்.
+ செபமாலையின் திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் செபமாலையைப் பற்றி 9 திருமடல்கள் எழுதினார்.
+ திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர் 2002-2003ஐ செபமாலை ஆண்டாக பிரகடணம் செய்து ‘கன்னிமரியின் செபமாலை’ என்ற ஒப்பற்ற திருமடல் எழுதினார்.
+ தினமும் 15 செபமாலை செபிக்கும் பழக்கம் உள்ள திருத்தந்தை 23ஆம் அருளப்பர் 38 முறை அன்னை மரியைப் பற்றியும் செபமாலையைப் பற்றியும் மறையுரையாற்றியுள்ளார்.
+ உங்கள் உள்ளங்களில் இல்லங்களில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் எனில் தினமும் மாலையில் ஒன்றுகூடி செபமாலை செபிக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர்.

செபமாலை சமாதானத்துக்கான செபம் என்று திருத்தந்தையர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இப்போது உலகெங்கும் பயங்கரவாதமும் இரத்தம் சிந்தி மானிடர் மடிவதும் அன்றாட நிகழ்வுகள். செப்டம்பர் 11,2001 முதல் அலகையின் தீவரவாதம் அதிகரித்து புதிது பதிதாக வன்முறைகள் வெடித்து உலகம் அழிவை நோக்கி விரைந்து செல்கிறது. செபமாலை செபிக்கும் பழக்கம் திருச்சபையில் குறைந்துவிட்டது என்பதை சுட்டிக்காடடிய திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் திருச்சபை மீண்டும் செபமாலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். செபமாலை தேவ இரகசியங்களில் இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு, விண்ணேற்றம், இறையன்னையின் வாழ்வு, இறப்பு, விண்ணேற்பு இவற்றை தியானிக்கிறோம்.
ஆலயத்தின் பக்கம் அதிகம் செல்லாத கிறிஸ்தவ மீனவர் ஒருவர், ஒருமுறை மற்ற மதத்தைச் சார்ந்த தம் நண்பர்களோடு மீன்பிடிக்கச் சென்றார். கடலுக்குள் படகு சென்ற வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், பெரும் புயல் காற்றும் வீச ஆரம்பித்தது. படகில் பயணம் செய்தவர்கள் உயிருக்குப் பயப்பட ஆரம்பித்தனர். தங்கள் கடவுளை நோக்கி செபிக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தக் கிறிஸ்தவரோ செபிக்கத் தெரியாததன் காரணமாக அமைதியாக இருந்தார். மற்ற மதத்தவர்கள் கிறிஸ்தவரைப்பார்த்து “நீயும் உன் கடவுளிடம் செபி, ஏதாவது உதவி கிடைக்கும்” என்றனர். அவரோ “எனக்கு செபித்துப் பழக்கமில்லை” என்றபோது மற்றவர்கள், “இது உயிருக்குப்போராடும் நேரம்: எதையாவது சொல்லிச்செபி” என்றனர். அவரும் “கடவுளே கடந்த பல ஆண்டுகளாக உம்மிடம் எதையும் கேட்டு நான் தொந்தரவு செய்ததில்லை. இந்தப் புயலை மட்டும் அடக்கிவிட்டீர் என்றால் அடுத்து வருகிற ஆண்டுகளிலும் நான் உம்மை தொந்தரவு செய்யமாட்டேன் என்று வாக்குறுதி தருகிறேன். எனவே, இந்தப் புயலை அடக்கும்” என்று செபித்தாராம்.
இந்த மீனவரைப்போலத்தான் நம்மில் பலரும்! துன்ப துயர நேரங்களில் தான் இறைவனை அதிகமாகத் தேடுகிறோம். ஓவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனிடம் செபிக்க தயங்குகிறோம். காலையிலும் மாலையிலும் தினந்தோறும் இயேசு செபித்தார். லூக்கா நற்செய்தியின்படி இயேசுவினுடைய பணி வாழ்வின் முதல் நிகழ்வும் (திருமுழுக்கு பெறுதல் லூக்கா 3:21) கடைசி நிகழ்வும் (“தந்தையே, உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” லுக் 23:46) செபம்தான். தொடக்கக் கிறிஸ்தவர்கள் தவறாது கோவிலில் கூடி இறைவேண்டலில் நிலைத்திருந்தனர் (திப 2:42, 46). புனித வின்சென்ட் தே பவுல் ஒவ்வொரு நாளும் காலையில் நான்கு மணி முதல் ஏழு மணி வரை செபித்தார். இவர்களைப்போல நாமும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செபிக்கத் தயாராக இருக்கிறோமா?
கிறிஸ்துவைப்போல் நமது வாழ்வையும் செப வாழ்வாக மாற்ற வேண்டும். இறைவனுடன் என்றும் உரையாடி இன்பகானம் எழுப்பும் இனிய வாழ்வாக மாற்ற வேண்டும். செபவாழ்வு என்பது ஏதோ சில குறிப்பிட்ட செபங்களைக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்வதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. செபவாழ்வு என்பது நமது இதயத்தை இறைவன் பால் எழுப்புவது. எந்நேரமும் இறைவன் முன்னிலையில் வாழ்வது. இறைவனுடன் என்றும் உரையாடுவது.
உருக்குலைய உழைக்கும் போதும் உறங்கும் போதும், நண்பர்களோடும் அன்பர்களோடும், உரையாடும் போதும் ஓய்வுபெறும் போதும் மகிழ்ச்சிக் கடலில் மகிழ்ந்தாடும்போதும் அமைதியற்றுத் தவிக்கும்போதும் கூட செபவாழ்வு வாழமுடியும். ஏன் நம் அன்றாட அலுவலுக்கிடையிலும் செபிக்கமுடியும். புனித பவுல் கூறுவது போல், ‘நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிமைக்காகவே செய்யுங்கள’ -1கொரி 10:31. அவ்விதம் செய்யும் போது உண்மையில் நாம் செபவாழ்வு வாழ்கிறோம். இறைவன் பால் நம் இதயத்தை எழுப்புகிறறோம்.
நமக்கு வேண்டிய வரங்களைக் கேட்பதுதான் செபம் என்பதல்ல, செபம் என்பது ஆண்டவரைப் புகழ்வதில் அவருக்கு நன்றி சொல்வதில், பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதில் அடங்கியிருக்கிறது. மன்றாட்டு முயற்சி செபத்தின் இறுதிப்படியே ஒழிய அதுதான் செபம் என்பதல்ல. வார்த்தைகள் இன்றிகூட செபிக்கமுடியும்.
ஆர்ஸ் நகர் பங்குக் கோவிலுக்கு ஒருவர் வழக்கமாக வந்து கோவிலில் திவ்ய நற்கருணைப் பேழைக்கு முன் நெடுநேரம் அசைவின்றி அமர்ந்திருப்பது வழக்கம். இதைக் கண்ணுற்ற பங்குத்தந்தை ஜான் மரிய வியான்னி அடிகளார் அம்மனிதனை நோக்கி இவ்வளவு நீண்ட நேரம் கோவிலில் என்ன செய்கிறீhகள் என்று கேட்டார். அம்மனிதன் கூறுவார், ‘நான் சேசுவை நோக்குகிறேன். சேசு என்னை நோக்குகிறார்’ என்று. வார்த்தைகள் எதுவுமின்றி தன் இதயத்தை இறைவன் பால் எழுப்பினார் அந்த எளிய மனிதர். இதுதான் உண்மையான உயர்வான செபவாழ்வு.
வுhயவ ளை றால வை ளை ழகவநn ளயனை வாயவ in pசயலநச வை ளை டிநவவநச வழ hயஎந hநயசவள றiவாழரவ றழசனள வாயn வழ hயஎந றழசனள றiவாழரவ hநயசவள.
கடவுளைவிட சக்தி வாய்ந்த மனிதரை எனக்கு தெரியும் - வியான்னி. அவர்தான் செபிக்கத்தெரிந்த மனிதர்.
தொடக்க கிறிஸ்தவர்கள் குழுக்களாகவும், தனித்தனியாகவும் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்ததை லூக்கா ஆங்காங்கே எடுத்துரைக்கிறார். காரணம், முழுமையான கிறிஸ்தவ வாழ்விற்கு இவையிரண்டுமே அவசியமானவை. ஆலயத்தில் குழுவாகச் செபித்துவிட்டு வீட்டில் தனியாக செபிக்க மறுப்பதும், அல்லது வீட்டில் தனியாக செபிக்கிறேன் என்று சொல்லி ஆலயத்தில் மற்றவர்களோடு சேர்ந்து செபிக்க மறுப்பதும் சரியல்ல. எனவே தொடக்கக் கிறிஸ்தவர்களைப் போல இறைவேண்டலின் முக்கியத்துவத்தை நம் வாழ்வில் உணர்ந்து அதில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல: அவசியமானதும் கூட! ஒரு மனிதன் வேலைசெய்யும்போது அவன் மட்டுமே வேலை செய்கிறான். ஆனால் அதே மனிதன் செபித்துவிட்டு வேலைசெய்யும் போது கடவுளும் அவனோடு வேலை செய்கிறார் என்பதை உணர வேண்டும். அதுமட்டுமல்லாமல் செபிக்கின்றபோது வாழ்வின் துன்பங்களையும் துயரங்களையும் வெற்றி கொள்வதற்கான வழியைக் கண்டு கொள்கிறோம்.
மார்க்கோனி கடவுள் நம்பிக்கையில்லாதவராக வாழ்ந்த சூழ்நிலையில் செபிப்பவர்களை கேலி செய்வாராம். “எங்கேயோ இருக்கிற கடவள் நீங்கள் முணுமுணுக்கிற செபங்களை எவ்வாறு கேட்க முடியும்?” என்று சொல்வாராம். சிறிது காலம் கழித்து வானொலிப்பெட்டியை அவர் கண்டுபிடித்தார். பல மைல் தூரத்திற்கு அப்பால் அவர் பேசிய பேச்சை மக்கள் கேட்டனர். அப்போது தான் அவருக்கு ஓர் உண்மை உதயமாயிற்று. சாதாரண மனிதனாகிய தான் உருவாக்கிய இந்த வானொலிப்பெட்டி வழியாக பல மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களோடு உறவாட முடிகிறதென்றால் கடவுளும் மக்களுடைய செபத்தைக்கேட்கிறார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? ஷநமது செபம் கேட்கப்படுகின்றதா, இல்லையா என்ற சந்தேகத்தோடு செபிப்பவர்களுக்கு மார்க்கோனியின் நிகழ்வு ஒரு பதிலாக அமைகிறது.

No comments:

Post a Comment