குழந்தை வளர்ப்பு
குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு கலை. ஆனால் பல பெற்றோர்கள் இதற்கு முக்கியதுவம் கொடுப்பது இல்லை என்பதுதான் வேதனை. “பல ஆயிரம் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கின்றேன். என் சக்திக்கு மீறி டியூசன் அனுப்புகிறேன். இதைவிட தகப்பன் என்ற முறையில் என்ன செய்துவிட முடியும்?” என்றுதான் பலர் கேட்கின்றனர். இது போதாது. குழந்தைகளுடன் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறார்கள்? எப்படி செலவு செய்கிறார்கள்? வீட்டிலிருக்கும் போது டீ.வியைப் போடாதே…. விளையாடப் போகாதே என ராணுவ அதிகாரியை போல குழந்தைகளுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் குழந்தைகள், “அப்பா, எப்படா வெளியே போய் தொலைவார். கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்” என நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் போதாது. பல அறிவுத்திறன்கள் தேவை. குழந்தைகள் சினிமா பாடல் காட்சிகளை டீ. வி யில் பார்த்துவிட்டு அதுபோல டான்ஸ் ஆடுகிறார்களா? “சனியனே என்ன கன்றாவி இது…?” என எரிந்துவிழாமல் முடிந்தால் நடனம் கற்றுக் கொடுங்கள். எவற்றில் எல்லாம் ஆர்வம் இருக்கிறதோ அதைக் கண்டுபிடித்து அவற்றை வளர்க்க உதவுங்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை கம்யூட்டர் இன்ஜினியராகவோ அல்லது ஏதோ ஒரு துறையில் வளர வேண்டுமென விரும்பலாம். உதாரணமாக சச்சின் டெண்டுல்கரை அவரது பெற்றோர், “என்னடா? எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட்னு சுத்திட்ருக்க! ஒழுங்கா படிச்சு முன்னேற வழியைப் பாரு! நீ திறமையான கம்யூட்டர் இன்ஜினியர்னு பேர் எடுக்கனும், தெரிஞ்சுக்கோ” என்று திட்டியிருந்தால் உலகம் புகழும் நம்பர் ஒன் கிரிகெட் வீரராக ஆகியிருக்க முடியுமா?
எனவே உங்கள் கனவை குழந்தைகள் மேல் சுமத்தக் கூடாது. படிப்பு மட்டும் வாழ்க்கையல்ல என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும். பெற்றோர்கள் ஜாலியாக டீ. வி பார்த்துக் கொண்டு பிள்ளைகளை படி, படி என்றால் எப்படி படிப்பார்கள். “நான் மட்டும் ஹோம் ஒர்க் பண்ணனும். ஆனா அம்மா டீ.வி பார்ப்பாங்க” என்றுதானே எண்ணத் தோன்றும். அதே நேரம் சீக்கிரம் படி, நான் ஒன்பது மணிக்கு சீரியல் பார்க்கனும்” என அவர்கள் தங்கள் அவசரத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டினால் எப்படி, நாம் படிக்கும் வேகத்தில் குழந்தையும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது, சரியா?
பிரமீடு பற்றி ஒரு விசயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுள் இருக்கும் எதுவும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடாது. சமீபத்தில் ஆராய்சியாளர்கள் சிலர் அதில் சில விதைகளை கண்டெடுத்து மண்ணில் விதைத்துப் பார்த்தார்கள். சில நாட்களில் அவை வீரியத்தோடு விளைந்தன. அதுபோல குழந்தைகளிடம் கூறும் நல்ல வி~யங்கள் உடனடியாக பயன்படாவிட்டாலும் அவை என்றாவது ஒருநாள் அவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
இறுதியாக குழந்தைகளை வளர்ப்பது என்பது, மண்ணில் இருந்து தங்கத்தை வெட்டியெடுப்பது மாதிரி. தங்கத்தை வெட்டிப் எடுப்பவர்கள் மண்ணில் தங்கத்தைதான் தேடுவார்களே தவிர, தூசியை அல்ல. அது போல குழந்தைகளிடம் உள்ள சின்னச் சின்னக் குறைபாடுகளையெல்லாம் பூதக்கண்ணாடிகொண்டு பெரிதாக்கிப் பார்க்காதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல வி~யங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவாருங்கள்.
சகோ. ஆல்பர்ட் புஸ்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக