பொன் மொழிகள்



  1. கடந்தவை இறைவனின் இரக்கத்திலும், நிகழ்பவை இறைவனின் அன்பிற்கும், வருபவை இறைவனின் பராமரிப்பிற்கும் உரியவை – புனித அகுஸ்தினார்.
  2. துறவி தேனியைப் போல், நற்பண்புகளை சேகரிக்க வேண்டும் - புனித அந்தோணியார். 
  3. நம் ஆன்மாக்கள் கடவுளுடையவை, ஒரு போதும் அவை அலகையின் உடமையல்ல – புனித செபஸ்தியார். 
  4. அன்பில்லாமல் பேசப்படும் உண்மையைவிட அமைதியே மேலானது – புனித சலேசியார். 
  5. உன்னால் இயன்றதைச் செய், கடவுளும் அன்னை மரியும் மற்றனைத்தும் செய்து விடுவர் - புனித ஜான் போஸ்கோ. 
  6. நம்மை அழைத்தவரின் விருப்பத்தைவிட , நடக்க தகுந்த பாதை உண்டோ? – புனித அருளானந்தர்.
  7. ஆண்டவரே நமது இரகசிய சக்தி, திருத்தூதர்களை பெந்தகோஸ்தே நாளில் திடப்படுத்தியது போல் நம்மையும் திடப்படுத்துவார் - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 
  8. வாழ்வில் நிகழ்வன அனைத்திலும் அதை தாங்கும் சக்தி அடங்கியுள்ளது. – அன்னை தெரசா 
  9. உன் மகிழ்வின் அளவு உன் மனதில் இருக்கிறது – அபிரகாம் லிங்கன்
  10. கடவுளுடன் கொள்ளும் ஒப்புரவு மற்ற உறவனைத்தையும் புதுப்பிக்கிறது - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

சகோ. ஞா. எடிசன் சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக